Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

Published:Updated:
டிரேடர்ஸ் பக்கங்கள்
##~##
'ச

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ந்தையில் பாசிட்டிவ்வான செய்திகள் ஒன்றும் பெரிதாக இல்லாத பட்சத்தில் குறுகிய அளவிலான ரேஞ்சிலேயே சந்தை செல்லலாம்; சந்தைசார் செய்திகள் பாசிட்டிவ்வாக இல்லாத பட்சத்தில் சந்தை இறங்கும் மூடில் இருந்து மாற பெரிய வாய்ப்பு இன்றைய சூழ்நிலையில் இல்லை’ என்ற இரண்டு கருத்துக்களை சொல்லியிருந்தோம்.

கடந்த ஐந்து டிரேடிங் நாட்களில் இரண்டு நாட்கள் மிகச்சிறிய அளவில் இறங்கியது. ஒரு நாள் 78 புள்ளிகள் இறங்கியது. மீதி இரண்டு நாட்கள் சுமாரான ஏற்றத்தை சந்தித்த நிஃப்டி, கடந்த வெள்ளியைவிட ஆறே பாயின்டுகள் குறைந்து முடி வடைந்தது.

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்

இந்த ஐந்து நாட்களிலும் வால்யூம் சற்று குறைவாகவே நடந்து வந்ததும் டிரெண்டை நிர்ணயம் செய்ய உதவுவதாக இல்லை.

டெக்னிக்கலாகப் பார்த்தால் சென்ற வார இறுதியில் இருந்த நிலைமைக்கும் இந்த வார இறுதி யில் இருக்கின்ற நிலைமைக்கும் பெரியதொரு வித்தியாசம் ஏதுமில்லை.

5600-க்கு மேலே செல்லாதவரை புல்லிஷ் ஆக சந்தை மாறிவிட்ட தென்று சொல்லவே முடியாது. அதேபோல் 5475-ல் சிறியதொரு சப்போர்ட்டையும், 5450-ல் பெரியதொரு சப்போர்ட்டையும் கொண்டிருக்கின்ற நிஃப்டி, 5450-ஐ தாண்டி குளோஸாகி வால்யூமுடன் இறங்கினால், அதிகபட்சமாக 5150 புள்ளிகள் வரை செல்ல வாய்ப்புள்ளது.

மொத்தத்தில் இப்போதைய சூழ்நிலையில் டெக்னிக்கலாக பெரிய அளவில் ஏறமுடியாத அளவிலேயே நிஃப்டி இருக்கின்றது. எனவே அன்றாட சூழ்நிலைகளையும் செய்தி களையும் வைத்தே டிரேடர்கள்  சந்தையில் செயல்பட வேண்டும். ஷார்ட் பொசிஷன் களை கண்டிப்பான ஸ்டாப் லாஸை வைத்துக் கொண்டும், லாங் பொசிஷன்களை மாறித் தொடரும் ஸ்டாப் லாஸ்களை வைத்துக் கொண்டும் குறைந்த அளவில் வியாபாரம் செய்யவும்.

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism