பங்குகள்

கம்பெனி அலசல் - சிப்லா

'இந்த ஒரு கம்பெனியின் தயாரிப்புகளை மட்டுமே நம்பி ஒரு மருந்துக் கடையைத் தொடங்கிவிடலாம்' என்று சொல்லும் அளவுக்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட வகையான மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்துகொண்டிருக்கிறது சிப்லா நிறுவனம். மனிதர்களுக்கான மருந்துகள் மட்டுமல்லாமல், விலங்குகளுக்கான மருந்துகளையும் தயாரித்து வரும் இந்த நிறுவனம், மேனி பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுவருகிறது. மருந்துகளைப் பொறுத்தவரை மருத்துவர் எழுதித் தரும் குறிப்புச் சீட்டைக் கொண்டு வாங்கும் மருந்துகள், மருந்துச் சீட்டு இல்லாமல் விற்கும் மருந்துகள் என இரண்டையும் தயாரித்து வருகிறது. கடந்த 75 ஆண்டுகளில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்த இந்த நிறுவனம், இன்றைக்கு ஆரோக்கியமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

மும்பையில் கார்ப்பரேட் அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்த சிப்லா (CIPLA- Chemical, Industrial & Pharmaceutical Laboratories) நிறுவனத்தை தேசியவாதியும் விஞ்ஞானியுமான கே.ஏ.ஹமீது ஆரம்பித்தார். ஆரம்பத்தில் மாதம் 350 ரூபாய் வாடகைக்கு ஒரு கட்டடத்தில் மத்திய மும்பையில் இயங்கியது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் மூலம் சொந்தமாக மருந்துகளைத் தயாரித்ததால் யாருக்கும் ராயல்டி கொடுக்கவேண்டிய தேவையில்லை. அதனால், இதன் ஆரம்பமே லாபமாக அமைந்தது.

இரண்டாவது உலகப் போரின் (1939) போது ஏராளமான மருந்துப் பொருட்களைத் தயாரித்துக் கொடுத்து நல்லபெயர் எடுத்துக்கொண்டது. போரின்போது செய்த தேச சேவைக்காக சிப்லா நிறுவனத்துக்கு நேரில் வந்து தேசத் தந்தை மகாத்மா காந்தி பாராட்டி இருக்கிறார். ஆனால், அதுவரை இல்லாத அளவுக்கு 1939-ல் சுமார் 68,000 ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தது இந்நிறுவனம். பின்னர் உயர் ரத்த அழுத்த மருந்துகளைத் தயாரித்து அமெரிக்கா மற்றும் ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியதும், லாபப் பாதைக்குத் திரும்பியது.

ஹமீதின் மகன் யூசுப் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பிஹெச்.டி. பட்டம் பெற்று 1960-ம் ஆண்டு சிப்லா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் ஓர் அதிகாரியாகச் சேர்ந்தார். இதன் பிறகு பல புதிய மருந்துகள் மளமளவென்று கண்டுபிடிக்கப்பட்டன. 1985-ல் இதன் மொத்த மருந்து உற்பத்திக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் அங்கீகாரம் கிடைத்தது. இந்நிறுவனத்துக்கு கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், கோவா போன்ற மாநிலங்களில் தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றன.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, கனடா, பிரேசில், ஜெர்மனி போன்ற நாடுகளின் மருந்துக் கட்டுப்பாடு துறைகளின் அங்கீகாரமும் இதற்குக் கிடைத்திருக்கிறது.

வணிக வளர்ச்சி

1972-ல் இதன் டேர்ன் ஓவர் 1.5 கோடி ரூபாயாக இருந்தது. இது 1998-ல் 500 கோடி ரூபாயாகவும், 2001-ல் 1,000 கோடி ரூபாயாகவும், 2004-ல் 2,000 கோடி ரூபாயாகவும் அதிகரித்து, இப்போது 5,270 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது.

2008 மார்ச் நிலவரப்படி கையிருப்பு சுமார் 3,600 கோடி ரூபாய். மருந்து தயாரிப்புக்கான தொழில்நுட்பத்தை பிற நிறுவனங்களுக்கு அளிப்பது மூலமும் லாபம் ஈட்டி வருகிறது. இதன் மூலம் மட்டுமே கடந்த 2008-09-ல் 220 கோடி ரூபாய் வருமானம் சம்பாதித்து இருக்கிறது.

இதன் மொத்த வருமானத்தில் 20% அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சார்ந்தும் மீதி 80% இந்தியா மற்றும் இதர நாடுகளையும் சார்ந்திருக்கிறது. அதேநேரத்தில், உள்நாட்டு விற்பனை 42% ஆகவும், ஏற்றுமதி 58% ஆகவும் இருக்கிறது. இதன் தயாரிப்புகள் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது. 2008-09 நிதி ஆண்டில் 2,750 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்திருக்கிறது.

2007-08 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிலிருந்து கமாடிட்டி விலை குறையத் தொடங்கியதால், சிப்லா நிறுவனத்தின் செலவு குறைந்தது. இதனால் குறுகிய மற்றும் நடுத்தர கால அளவில் சிப்லாவுக்கு லாபம் கிடைத்தது. அதேநேரத்தில் தற்போது மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால், லாபத்தைத் தக்க வைக்க இந்நிறுவனம் செலவுக் குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கிறது.

நிதி நிலை

கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நான்காவது காலாண்டில் விற்பனை 14% அதிகரித்து, 1,240 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், நிகர லாபம் எதிர்பார்ப்புகளையும் தாண்டி 179.45 கோடி ரூபாயிலிருந்து 252.92 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 40.94% அதிகமாகும். இதே காலத்தில் ஏற்றுமதி 11% உயர்ந்து 720 கோடி ரூபாயாகவும், உள்நாட்டு விற்பனை 16% உயர்ந்து 520 கோடி ரூபாயாகவும் அதிகரித்திருக்கிறது. கடந்த 2008-09-ல் இதன் நிகர லாபம் 9.6% அதிகரித்து, 767.83 கோடி ரூபாயாக உள்ளது. இது 2009-10-ல் 1,085 கோடி ரூபாயாகவும், 2010-11-ல் 1,245 கோடி ரூபாயாகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

பங்குச் சந்தை செயல்பாடு

பி.எஸ்.இ. பட்டியலில் ஏ குரூப் பங்கான இது நிஃப்டியில் இடம் பெற்றிருக்கிறது.

2009, மார்ச் நிலவரப்படி இதன் பங்குகள் எதுவும் அடமானம் வைக்கப்படவில்லை. பங்கு மூலதனத்தில் 38.39% புரமோட்டர், 22.07% பொதுமக்கள், 13.91% காப்பீடு நிறுவனங்கள், 13.54% எஃப்.ஐ.ஐ-க்கள், 4.59% மியூச்சுவல் ஃபண்டுகள் என இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் இந்நிறுவனம் சராசரியாக 120% டிவிடெண்ட் வழங்கி பங்கு முதலீட்டாளர்களை மகிழ்வித்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவசப் பங்குகளை அளித்து வந்திருக்கிறது. கடந்த 2006-ல் கடைசியாக 32 என்ற விகிதத்தில் இலவசப் பங்குகளை கொடுத்திருக்கிறது. பங்கின் முகமதிப்பு கடந்த 2004-ல் 10 ரூபாயிலிருந்து 2 ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவைச் சொந்தமாகக் கொண்டிருப்பதால் இதன் தயாரிப்புச் செலவு மிகவும் குறைவு. இதனால், இதன் லாப வரம்பு அதிகமாக இருக்கிறது. மேலும் கடந்த மூன்று காலாண்டுகளாக ஃபார்முலேஷன் ஏற்றுமதி 40% அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இதன் வருமான வளர்ச்சி ஆண்டுக்கு 23% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

புரோக்கர் என்ன சொல்கிறார்?

கே.ரமேஷ் பட் தலைமைச் செயல் அதிகாரி, அனிராம் நிறுவனம்

''ஆஸ்துமா, புற்றுநோய் தடுப்பு மருந்துகள், எய்ட்ஸ் சிகிச்சை என பல்வேறு முக்கிய மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அண்மையில் பன்றிகள் மூலம் பரவும் ஸ்வைன் ஃப்ளுவுக்கு டேமிஃப்ளு (Tamiflu) என்ற மருந்தை 15 லட்சம் டோஸ்களை இரு வார காலத்தில் சப்ளை செய்து சிப்லா நிறுவனம் சாதனை படைத்திருக்கிறது. இதன் 'ஆன்டிஃபுளு' மருந்து உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகரித்ததாக இருக்கிறது. இதன் வசம் பல்வேறு விதமான மருந்துகள் இருப்பதால் லாபம் என்பது இதனோடு ஒன்றியதாக இருக்கிறது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இதன் செயல்பாட்டு வருமானம் 1,222.10 கோடி ரூபாயிலிருந்து 1,366.74 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், அந்நியச் செலாவணி பரிமாற்ற விகிதம் இந்நிறுவனத்துக்குச் சாதகமாக இருந்ததால் மூலப்பொருட்கள் இறக்குமதி செலவு குறைந்தது. இதனால், இதன் நிகர லாபம் கடந்த காலாண்டில் 41% அதிகரித்திருக்கிறது. நிலையான வளர்ச்சிக்கு உதவும் ஃபார்முலேஷன் பிரிவில் சிப்லா கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து 100 சதவிகிதத்துக்குக் குறையாமல் டிவிடெண்ட் வழங்கி வருகிறது. இதன் பங்கின் விலை மூன்று மாத காலத்தில் 252 ரூபாய்க்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஓராண்டில் சுமார் 20-25% வருமானம் கிடைக்கும். சிப்லா பங்குகளில் மொத்தமாக முதலீடு செய்யாமல், முதலீட்டுத் தொகையை மூன்று அல்லது நான்காகப் பிரித்து வைத்துக்கொண்டு இடையே இறங்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவது லாபகரமாக இருக்கும்.''

- சி.சரவணன்
படம் கே.கார்த்திகேயன்