பங்குகள்

ஏறும் மார்க்கெட்... ஐ.பி.ஓ. உஷார்!

சந்தையில் பச்சை முளைகள் பளிச்சென்று தெரிய ஆரம்பித்துள்ளன... இனி மார்க்கெட் மெதுவாக மேலே ஏறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றன. மார்க்கெட் ஏற ஆரம்பித்தால் கேட்கவே வேண்டாம், பல நிறுவனங்கள் ஐ.பி.ஓ. வர ஆரம்பித்துவிடும்... கூரை மேல் சோறு போட்டால் ஆயிரம் காகம்... இங்கேதான் நாம் கவனமாக இருக்கவேண்டும்... கடந்த காலங்களில் சந்தை உச்சத்தில் உட்கார்ந்திருந்த சமயத்தில் பல நிறுவனங்கள் ஐ.பி.ஓ. வந்து அள்ளிய வரலாற்றை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்... இருந்தாலும் சில விஷயங்களை நம் மக்களுக்கு அவ்வப்போது நினைவுபடுத்திக் கொண்டே இருக்கவேண்டும்!

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்த அனில் அம்பானி குழுமத்தைச் சார்ந்த ரிலையன்ஸ் பவர் வெளியீட்டை ஐ.பி.ஓ-க்களின் உச்சகட்டம் என்றே கூறலாம். அன்று திரட்டிய பல்லாயிரக்கணக்கான கோடிகளை இன்றுவரை அந்த நிறுவனம் உபயோகத்துக்குக் கொண்டு வரவில்லை. டிசம்பர் 2008 நிலவரப்படி சந்தையில் திரட்டிய பணத்தில் 79%-ஐ (9,000 கோடி ரூபாய்க்கும் மேல்) கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளது. இதிலிருந்து என்ன விளங்குகிறது? சந்தையின் உச்சத்தைப் பயன்படுத்தி பங்கை விலை உயர்த்தி நிறுவனம் விற்றுவிட்டது! இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் காற்றுள்ள போதே தூற்றிக்கொண்டது. பல வருடங்கள் கழித்துத் தேவைப்படப்போகும் நிதியை, சந்தையை உயர்த்தி தமது பங்குகளை அதிக விலைக்கு விற்றுவிட்டது. ஆம், டிசம்பர் 2007 - ஜனவரி 2008 சமயங்களில் சந்தை வெகுவாக உயர்ந்ததற்கு அப்பங்கு வெளியீடு ஒரு முக்கிய காரணம் என்றே கூறவேண்டும். அதன் பிறகு நடந்தது ரத்த களம்!

தனியார் நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் தத்தமது பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் விலைகளை எப்போதாவது ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அல்லது அவ்வாறு சமீபகாலங்களில் வெளியிடப்பட்ட பங்குகளின் விலை கரடிச் சந்தையில் எவ்வாறு செயல்பட்டுள்ளன என்று ஆய்வு செய்திருக்கிறீர்களா? அந்த ஆய்வை நோக்கித்தான் இக்கட்டுரை..

சட்டம் என்பது வேறு. நியாயம் (ethics) என்பது வேறு. 'போட்டிகள் நிறைந்த இந்த உலகில், சட்டத்தைப் பின்பற்றுவதே கடினமாக உள்ளது. அதற்கும் மேலாக இருக்கும் நியாயத்தைப் பற்றிப் பேசுகிறீர்களே' என்று கேட்கிறீர்களா? டாடா குழுமத்தை இன்று அரசாங்கங்களும், தொழிலாளர்களும், ஏன் அனைத்து மக்களுமே மதிப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் நியாயமான செயல்பாடுகள்தான். நியாயம் என்பது சட்டத்துக்கும் ஒருபடி மேல். நாம் குறிப்பிடும் இந்த நியாயத்தை தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சமீபத்தில் (2007 முதல் இதுநாள் வரை) வெளிவந்த பங்கு வெளியீடுகளில் எந்த அளவு கடைபிடித்துள்ளன என்பதுதான் நமது அலசல்.

2007 முதல் இதுநாள்வரை வெளிவந்த பங்கு வெளியீடுகளை இக்கட்டுரைக்காக அலசினோம். இந்த ஆய்வில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் (பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மட்டும் 997 கோடி ரூபாய்) நிதி திரட்டிய நிறுவனங்களை மற்றும் ஓரளவு மக்களுக்குத் தெரிந்த நிறுவனங்களை மட்டுமே எடுத்துக்கொண்டோம். இக்கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் அட்டவணை பங்குகள் நியாயமான விலையில் விற்கப்பட்டனவா அல்லது அதிக விலையில் விற்கப்பட்டனவா என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காண்பிக்கும். நாம் எடுத்துக்கொண்டுள்ள வரையறையில் முன்னணியில் (முதலீட்டாளர்களுக்கு ஈட்டிக் கொடுத்த வருமான அடிப்படையில்) நிற்கும் முதல் மூன்றும் பொதுத்துறை நிறுவனங்களே!

அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களுக்கிடையே பொதுத்துறை நிறுவனங்கள் எப்படி இந்தளவுக்குச் சாதித்துள்ளன என்ற சந்தேகம் எழுகிறதா? நமது நாட்டில் சாதாரண மனிதர் ஒருவர் வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம்... அவர் தனியார் வங்கியிலும் கணக்கைத் தொடங்கலாம்; அல்லது பொதுத் துறை வங்கியிலும் ஆரம்பிக்கலாம். ஆனால், பெரும்பாலான மக்களின் தேர்வு எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் - பொதுத்துறை வங்கியாகத்தான் இருக்கும்! நமது நாட்டில் அனைத்து வங்கிகளுமே மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. இருந்தபோதிலும், மக்கள் பொதுத்துறை நிறுவனங்களை நோக்கிச் செல்வதற்குக் காரணம், பொதுத்துறை நிறுவனங்கள் மீது அவர்கள் வைத்துள்ள அபாரமான நம்பிக்கை. அந்த நம்பிக்கை இன்றுவரை எள்ளளவும் வீண் போனதில்லை. ஒரு சாதாரண மனிதன் அசௌகரியங்கள் பல இருந்தாலும் பொதுத்துறை வங்கியில் ஏன் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்கிறான் என்பது இப்போது புரிகிறதா? அதே நம்பிக்கையைத்தான், நியாயத்தைத்தான் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது பங்கு விற்பனையிலும் காண்பிக்கின்றன.

இதைவைத்து, பொதுத்துறை பங்குகள் நஷ்டத்தையே தராது என்று நாம் கூறவில்லை. சில சமீபத்திய வெளியீடுகளான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பி.இ.எம்.எல். போன்ற நிறுவனப் பங்குகள் விற்ற விலையில் இருந்து தற்போது குறைவாக இருந்தபோதிலும், அவை நியாயமான மதிப்பில் விற்கப்பட்ட பங்குகள். முதலீட்டாளர்கள் தொழில் மற்றும் சந்தை ரிஸ்க்கை தெரிந்துதான், பங்குகளில் முதலீடு செய்கிறார்கள். ஆனால், நாம் இங்கு சொல்ல வருவது சில பெரிய தனியார் நிறுவனங்கள்கூட சந்தை உச்சத்தைப் பயன்படுத்தி அதிக விலையில் தங்களது பங்குகளை விற்று, முதலீட்டாளர்களை நோகடிக்கச் செய்கின்றன என்பதுதான்.

டூத் பேஸ்ட், சோப் விற்பது போல் விளம்பரங்களைக் கொடுத்து பங்குகளை விற்கின்றன. அந்த கம்பெனி பங்குகளை வாங்குவதற்காக, கடன் கொடுப்பதற்கு பல புரோக்கர்களும், இந்தியா புல்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு நிற்கின்றன. வாரன் பஃபெட் இவ்விஷயத்தைக் கேட்டிருந்தால் கண்ணீர் விட்டிருப்பார்! பங்கு வெளியிடும் தனியார் நிறுவனத்துக்கும் இவ்வாறு கடன் கொடுக்கும் நிறுவனங்களுக்கும் உறவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை உங்களின் ஊகத்துக்கே விட்டுவிடுகிறோம். இன்னும் சில நிறுவனங்கள் ரிலையன்ஸ் பவர் வெளியீட்டில் விண்ணப்பித்தால், இலவசமாக டிரேடிங்/ டீமேட் கணக்கைத் திறந்து கொடுத்தன.

ரிலையன்ஸ் பவர் ஒன்றை மட்டும் கூறுவதாக எடுத்துக்கொள்ளாதீர்கள் - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முதல், டி.எல்.எஃப், மற்றும் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வரை இதனுள் அடக்கம்.

வாசகர்களே! நாம் கூறுவதெல்லாம் இதுதான் இனி புதிய வெளியீடுகள் வரும்போது அந்நிறுவனங்களுக்கு முன் அனுபவம் உள்ளதா என்று பாருங்கள், செயல்பாட்டில் இருக்கும் தொழிலில் இருக்கிறதா என்று கவனியுங்கள், பி/இ விகிதம் 7, 8, 9, 10 அல்லது அதற்கும் குறைவாக உள்ளதா என்று பாருங்கள், புத்தக மதிப்பைக் காணுங்கள் - இது போன்ற பல விகிதாசாரங்களைப் பாருங்கள். உங்களது புரோக்கர் கூறுகிறார் என்பதற்காக அல்லது இலவசமாக டீமேட் கணக்கு திறந்து தருகிறார்கள் என்பதற்காக அல்லது ஒரு நிறுவனம் கடன் தருகிறது என்பதற்காக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யாதீர்கள். மீண்டும் ஒருமுறை இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையைப் பாருங்கள். உங்களுக்கு உண்மை புரியும்!