Published:Updated:

இல்லத்திற்கே வரும்..!

இல்லத்திற்கே வரும்..!

பிரீமியம் ஸ்டோரி
இல்லத்திற்கே வரும்..!


இது கம்ப்யூட்டர் யுகம். சினிமா டிக்கெட் எடுப்பது முதல் ரெயில் டிக்கெட் புக் பண்ணுவது வரை எல்லாமே ஆன்லைனிலேயே செய்து முடித்துவிட, மியூச்சுவல் ஃபண்டில் நாம் செய்திருக்கும் முதலீடு பற்றிய தகவல்கள் மட்டும் இன்னும் கூரியர் தபாலில்தான் வருகிறது.

இல்லத்திற்கே வரும்..!

தனால், நம்மிடமிருக்கும் யூனிட்களின் எண் ணிக்கை என்ன, அதன் மதிப்பு எவ்வளவு என்பது பற்றிய குழப்பம் பல முதலீட்டாளர் களுக்கும் வந்துவிடுகிறது.

இந்த குழப்பங்களுக்கெல்லாம் இப்போது சிம்பிளான தீர்வை கண்டு சொல்லி இருக்கிறது 'கேம்ஸ்’ (CAMS) என சுருக்கமாக அழைக்கப்படும் கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட். இதன் இணையதளத்துக்குச் சென்று ஒரே ஒருமுறை உங்கள் பெயரை பதிவு செய்து, உங்கள் இ-மெயில் முகவரியைக் கொடுத்தால் போதும், மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் செய்திருக்கும் முதலீடு பற்றிய அனைத்துத் தகவல்களும் உங்கள் இ-மெயிலுக்கு வந்துவிடும். இதில் முக்கியமான விஷயம், இந்த சர்வீஸ் நமக்கு பைசா செலவில்லாமல் ஃப்ரீயாக கிடைப்பதுதான்.

##~##
இதுபற்றி இந்நிறுவனத்தின் பொதுமேலாளர் கமலா ராதா கிருஷ்ணன் மேலும் பேசும்போது, ''இதற்காக நாங்கள் 17 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். பாஸ்வேர்ட் போன்ற வசதிகள் இருப்பதால் இது நூறு சதவிகிதம் பாதுகாப்பானது. எங்கள் நெட்வொர்க்கில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் இருக்கும் அனைத்து ஃபண்டுகளின் என்.ஏ.வி.யையும் எங்கள் இணையதளத்திலேயே பார்க்கலாம்.

முகவரி மாற்றுதல், தொலைபேசி எண்ணை மாற்றுதல் போன்ற விஷயங்களை எங்களிடம் தெரிவித்தாலே போதும், நாங்களே அதை மாற்றி விடுவோம். கே.ஒய்.சி.

விண்ணப்பங்களைக்கூட எங்களிடம் கொடுக்கலாம். உங்கள் முதலீடுகளை 'எக்ஸெல்’ வடிவத்தில் கூட கேட்டுப் பெறலாம்.

கடன் திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு, எவ்வளவு லாபம் கிடைத்திருக்கிறது, அதற்கு நீண்ட கால மூலதன ஆதாயவரி செலுத்த வேண்டுமா என்பதுபோன்ற தகவல்களை யும் தருகிறோம். இந்த சேவைகள் அனைத்துக்கும் வாடிக்கையாளர் களிடமிருந்து நாங்கள் எந்தக் கட்டணத்தையும் வாங்குவதில்லை'' என்றார்.

நல்லாதான் இருக்கு!

-வா.கார்த்திகேயன்.
படம்: சொ.பாலசுப்ரமணியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு