பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி அலசல்


1938-ல் ஒரு டிரேடிங் கம்பெனியாகத்தான் தனது இன்னிங்ஸை தொடங்கியது இந்த நிறுவனம். இன்றோ எலெக்ட்ரிக்கல் அப்ளையன்ஸ் துறையில் ஏகப்பட்ட வெரைட்டிகளோடு வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. வாட்டர் ஹீட்டர், மிக்ஸி, ஃபுட் பிராஸசர், மைக்ரோவேவ் அவன், டோஸ்டர், ஏர்கூலர், அயர்ன்பாக்ஸ், எலெக்ட்ரிக் கெட்டில், வாட்டர் ஃபில்டர், குக்கர், சிம்னி, கேஸ் ஸ்டவ் என இந்த நிறுவனம் தனது தயாரிப்புகளை பக்காவான பிராண்ட்-ஆக மார்க்கெட்டில் நிலைநிறுத்தி இருப்பதோடு, போட்டிகள் நிறைந்த எலெக்ட்ரிக்கல்ஸ் மார்க்கெட்டில் தனி அடையாளம் பெற்று நிற்கிறது.

##~##
ந்த நிறுவனத்தைக் கிட்டத்தட்ட முழுமை யான மார்க்கெட்டிங் நிறுவனம் என்றே சொல்லலாம். எலெக்ட்ரிக்கல் அப்ளையன்ஸ் பொருட்களை அவுட்சோர்ஸ் செய்து தனது பிராண்ட் பெயரில் விற்கும் புத்திசாலித்தனமான பாணியும், லாபம் தரும் விற்பனை யும், இந்நிறுவனத்தின் சாதகமான அம்சங்கள். அவுட்சோர்ஸிங்கில் விலையைக் குறைத்து வாங்குவதும் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான எலெக்ட்ரிக்கல் கன்ஸ்யூமர் பொருட்கள் தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகள், சில பகுதிகளில் மட்டுமே அதிகமாக இருப்பதால் 'பல்க்’-ஆக ஆர்டர் கொடுத்து வாங்குவது இந்த நிறுவனத்துக்கு சுலபமானதாக இருக்கிறது. இதுவே லாபத்திற்கும் வழி வகுக்கிறது. மின்சாரத்தைப் பயன் படுத்தி இயங்கும் நுகர்பொருள் சந்தையில் கிட்டத்தட்ட 15 சதவிகித மார்க்கெட் ஷேரை தன்வசத்தில் வைத்துள்ளது. போட்டிகள் அதிகம் நிறைந்த இந்த துறையில், பெரிய அளவில் லாபம் பண்ண முடியாது என்றாலும், அதிக மார்க்கெட் ஷேர் வைத்தி ருப்பதால் பயமில்லை.

2003-ம் ஆண்டு வரை சிறிய பட்ஜெட் ரக பொருட்களை  மட்டுமே விற்றுவந்த இந்த நிறுவனம், பிரீமியம் ரேஞ்ச் மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களை மார்க்கெட் செய்வதற்காக மர்பி-ரிச்சர்ட்ஸ் என்ற இங்கிலாந்து நிறுவனத்துடன் தொழில்நுட்ப ரீதியான மற்றும் பிராண்ட் ரீதியான ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது.

மார்க்கெட்டின் நிலைமை!

இந்திய நுகர்பொருள் சந்தையின் மதிப்பு ரூபாய் கிட்டத் தட்ட 6,000 கோடிகளாகும். இதில் சாதாரண வெரைட்டியில் 70 சதவிகித மார்க்கெட் ஷேர், பெரிய கம்பெனிகள் என்று சொல்லப் படுகிற 'ஆர்கனைஸ்டு பிளேயர் கள்’ கையில் இருக்கிறது. பிரீமியம் செக்மென்டில் பஜாஜ்-ன் கூட்டாளியான மர்பி-ரிச்சர்ட்ஸ் தவிர, பிளாக் அண்ட் டெக்கார், பிலிப்ஸ் மற்றும் ப்ரான் போன்ற எம்.என்.சி. பிராண்டுகள் போட்டி போடுகின்றன. என்றாலும், இந்த சந்தை போட்டியில் 25,000-த் திற்கும் மேற்பட்ட ரீடெய்ல் டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க்கை கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

கடந்த நான்கு ஆண்டுகளின்  வளர்ச்சி கிட்டத்தட்ட 30 சதவிகிதமாக உள்ளது. அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்கும் இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கலாம். சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் நடக்கும் டீலர் விரிவாக்கம்,பிரீமியம் செக்மென்ட்டில் புதிய பொருட்களை அறிமுகம் செய் வதன் மூலம் அதிகரிக்கும் விற்பனை, தற்சமயம் புதிதாக நுழைந்திருக்கும் தண்ணீர் சுத்தி கரிப்பு இயந்திர விற்பனை ஆகியவை அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

முக்கிய பிஸினஸ் செக்மென்ட்கள்!

நுகர்பொருள் துறை, லைட்டிங், லூமினரீஸ் மற்றும் என்ஜினீயரிங் புராஜெக்ட்கள் என நான்கு முக்கிய பிஸினஸ் செக்மென்ட்களை கொண்டுள்ளது.

அப்ளையன்ஸ்!

அப்ளையன்ஸ்களில்  அயர்ன்பாக்ஸ் மற்றும் வாட்டர் ஹீட்டர் மார்க்கெட்டில் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந் தின் நம்பர் ஒன் பிராண்டான மர்பி-ரிச்சர்ட்ஸுடனும், ஜெர்மன் கம்பெனியான நார்டியுடனும் கூட்டு ஒப்பந்தங்களைச் செய்து அவர்களது தயாரிப்புகளையும் பிரிமீயம் செக்மென்ட்டில் விற்பனை செய்கிறது பஜாஜ். இந்த பிரிவில் மஹாராஜா, உஷா, மார்லோனி, இனல்சா, பிரெஸ்டீஜ், ஹாக்கின்ஸ் போன்றவை மட்டுமே போட்டி கம்பெனிகள்.

கம்பெனி அலசல்

 ஃபேன்கள்!

சீலிங் ஃபேன், டேபிள் ஃபேன், பெடஸ்டல் ஃபேன், வால் மவுண்ட் ஃபேன், எக்ஸாஸ்ட் ஃபேன், ஃப்ரெஷ் ஏர் ஃபேன் என எல்லா வகையான ஃபேன்களையும் விற்பனை செய்கிறது. கிட்டத்தட்ட 50,000-த்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள். இதில் 20% விற்பனையாளர்கள் கிராமப் புறங்களில் உள்ளனர் என்பது சிறப்பான விஷயம். எட்டு லட்சம் ஃபேன்கள் வரை தயாரிப்பதற்கான திறனைக் கொண்டுள்ளது. உள்நாட்டில் நொய்டா, டெல்லி மற்றும் இமாச்சலப் பிரதேசத் திலிருந்தும், சீனாவிலிருந்தும் ஃபேன்களை அவுட்சோர்ஸ் செய்கிறது. கிட்டத்தட்ட 80% அவுட்சோர்ஸிங்கில்தான் நடக்கிறது. இந்த  செக்மென்டில் 16% மார்க்கெட் ஷேர் உள்ளது.

சீனாவின் மைடியா என்ற முன்னணி ஃபேன் தயாரிக்கும் நிறுவனத்துடனும், குழந்தைகளுக்காக ஃபேன்களைத் தயாரித்து விற்க அமெரிக்காவின் டிஸ்னி நிறுவனத்துடனும் புதிதாக ஓப்பந்தம் செய்துள்ளது.   இதில் நேரடி போட்டியாக  கிராம்ப்டன் க்ரீவ்ஸ், உஷா மற்றும் ஓரியண்ட் போன்ற நிறுவனங்கள் உள்ளன.

லூமினரீஸ் (லைட்டிங்)

கம்பெனி அலசல்

இந்த பிஸினஸ் பிரிவில் கமர்ஷியல், இண்டஸ்ட்ரியல், ஃப்ளட் லைட்டிங், போஸ்ட் லேம்ப் லைட்டிங் என பல உள்பிரிவுகள் உள்ளன. லைட் டிங்கில் சி.எஃப்.எல்., எஃப்.டி.எல்., ஹெச்.ஐ.டி. என பலவிதமான பிரிவுகளிலும் பங்களிப்பு உள்ளது. அரசு சம்பந்தப்பட்ட கான்ட்ராக்ட்களில் ஏஜென்டுகள் மூலமாகவும், தனியார் சம்பந்தப்பட்ட கான்ட்ராக்ட் களில்  நேரடியாகவும் பங்கேற்கிறது. பிலிப்ஸ், கிராம்ப்டன், விப்ரோ என சில பெரிய  போட்டியாளர்கள் இருந்தாலும், பஜாஜ் இரண்டாவது இடத்தில் உள்ளது.

டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் குரூப், எல் அண்ட் டி, ஆதித்யா பிர்லா, சீமென்ஸ், ரான்பாக்சி போன்ற பெரிய நிறுவனங்கள்  பஜாஜின் பொருட்களையே வாங்குகின்றன. அரசு நிறுவனங் களில் ஏர்போர்ட் அத்தாரிட்டி, கான்கார், எலெக்ட்ரிசிட்டி போர்டுகள், என்.டிபி.சி. போன்ற நிறுவனங்களும், முனிசிபல் கார்ப்பரேஷன்களும் பஜாஜின் பொருட்களையே விரும்புகின்றன. செக்யூரிட்டி அலாரம்களுக்காக அமெரிக்க மற்றும் ஜெர்மானிய கம்பெனி களுடன் செய்துகொண்ட ஒப்பந்தம்  இவையெல்லாம் எதிர் காலத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட வைக்கும்.

 என்ஜினீயரிங் புராஜெக்ட்ஸ்!

டிரான்ஸ்மிஷன் லைன் டவர் பிஸினஸில் 2001-ல் இறங்கியது. இந்த பிஸினஸிற்கு தேவை யானப் பொருட்களைத் தயாரிக்க புனேவுக்கு அருகே ஒரு தொழிற் சாலையையும் நிறுவியுள்ளது. டிரான்ஸ்மிஷன் லைன் தொழிலில் நல்ல வளர்ச்சிக்கு வாய்ப்பு இருக்கிறது.

ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

சில்லறை வர்த்தகம், ஹெல்த்கேர் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி பிரிவுகளின் வளர்ச்சிகளால் லாபம் அதிகரிக்ககூடும். நல்ல டைவர்சிபைட் பிஸினஸ் மாடலைத் தன்வசத்தே கொண்டி ருப்பதால் ரிஸ்க்குகள் குறைவு. அரசாங்கத்தின் மின்சாரச் செலவு குறைப்பு நடவடிக்கைகளால்  சி.எஃப்.எல். பல்புகளுக்கானத் தேவை அதிகரிக்கும். என்ஜினீயரிங் புராடக்ட்ஸ் பிரிவிலும் ஆர்டர் புக்  நிலவரமும் நன்றாக உள்ளதால்  நிலையான வளர்ச்சிக்கு உத்தரவாதம்.  

ரிஸ்க் எப்படி?

புதுப்புது அல்லது மாறுபட்ட தயாரிப்புகளை அவ்வப்போது சந்தையில் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் புதுத் தயாரிப்புகளைத் நோக்கி கஸ்டமர்கள் திரும்பக்கூடும்.இதன் மூலப்பொருள்கள் இரும்பு சம்பந்தப்பட்டதாக இருப்பதால் வேகமான விலை மாறுதல்கள் பஜாஜின் லாபத்தைக் கொஞ்சம் பதம் பார்க்க வாய்ப்பிருக்கிறது.  பொதுவான பணவீக்கமும் விற்பனையைக் கொஞ்சம் பாதிக்கலாம்.

தற்சமயம் 250 ரூபாய்க்கு டிரேடாகும் இந்த பங்கு இரண்டு வருட முதலீட்டிற்காக (330 வரை உயரலாம் என்ற எதிர்பார்ப்பில்) வாங்கலாம்.

- நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு