Published:Updated:

ஆர்.காம்: அடிக்குமா யூ டர்ன்?

ஆர்.காம்: அடிக்குமா யூ டர்ன்?

பிரீமியம் ஸ்டோரி
ஆர்.காம்: அடிக்குமா யூ டர்ன்?


பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த செல்போனை 500 ரூபாய்க்கு கொடுத்து பாமரர்களையும் பயன்படுத்த வைத்த பெருமை ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு உண்டு. இவ்வளவு ரிஸ்க் எடுத்து பிஸினஸை வளர்த்த இந்த நிறுவனத்தின் பங்குகள் இப்போது 100 ரூபாய்க்கும் கீழே வர்த்தகமாகிறது.  

ஆர்.காம்: அடிக்குமா யூ டர்ன்?

ந்நிறுவனத்தின் லாபம் 2008-09-ல் 4,802 கோடி ரூபாயாக இருந்தது. தவிர, ரிசர்வ்ஸ் மட்டுமே 50 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் இருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியாகி இருக்கும் 2010-11-ம் நிதியாண்டு முடிவுகளின்படி இந்நிறுவனத்துக்கு நஷ்டம் மட்டுமே 757 கோடி ரூபாய். மேலும் கடன் 32 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலே போயிருக்கிறது.

எதனால் இப்படி ஆனது என்ற ஆராய்ச்சிகள் ஒருபுறம் இருந்தாலும் இந்த பங்கினை இப்போதுள்ள விலையில் புதிதாக வாங்கலாமா? ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கிறவர்கள் தொடர்ந்து வைத்திருக்கலாமா அல்லது விற்றுவிடலாமா என பங்குச் சந்தை ஆலோசகர் விக்னேஷிடம் கேட்டோம். அவர் விளக்கமான பதிலைத் தந்தார்.  

##~##
''இந்நிறுவனத்தைப் பொறுத்த வரை முதலீட்டாளர்கள் இதைவிட மோசமான முடிவைத்தான் எதிர்பார்த்தார்கள். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மோசமான முடிவு இல்லை என்பதால், இப்போது அந்த பங்கின் விலை மெள்ள ஏறத் தொடங்கி இருக்கிறது. இந்நிறுவனத்தின் முக்கியமான பிரச்னையே அதிகளவு கடன் வைத்திருப்பதுதான். காரணம், 3ஜி லைசென்ஸ் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பத்துக்கு நிறைய செலவு செய்திருக்கிறது. அதன் மூலமான வருமானம் இனிமேல்தான் கிடைக்கும்.

அதேசமயம், குறைந்த அளவே லாபம் கிடைக்கும் தொழில்களை குறைத்து கொள்ள இந்நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. எனவே, இப்பங்கினை ஏற்கெனவே வாங்கியவர்கள் இப்போது விற்க வேண்டிய அவசியமில்லை. ஆவரேஜும் செய்ய வேண்டாம். இப்போதைக்கு இந்த பங்கு 'யூ டர்ன்’ அடிப்பதுபோல தெரிகிறது. அதனால், காத்திருந்து இன்னும் மேலே செல்லும்போது விற்று நஷ்ட விகிதத்தைக் குறைக்கலாம்.

ரிஸ்க்கே வேண்டாம் என்று நினைக்கும் முதலீட்டாளர்கள், இப்பங்கினைத் தவிர்த்து விடலாம். கொஞ்சம் ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள், சிறிதளவு தொகையினை இப்பங்கில் முதலீடு செய்யலாம்'' என்றார் விக்னேஷ்.

-வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு