அசோக் லேலண்ட்

இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றித் தெரிந்துகொள்ள புள்ளிவிவர புத்தகங்களைப் புரட்டத் தேவையில்லை. கதவைத் திறந்து சாலையை ஒரு நிமிடம் கவனித்தாலே போதும்... வீறிட்டுச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையே எல்லாவற்றையும் சொல்லிவிடும். தற்போது பயணிகளின் வாகனத்துக்கு இணையாக சரக்குகளுக்கான வாகனங்களும் அதிக அளவில் வலம் வந்து-கொண்டிருக்கின்றன. இந்த சரக்குப் போக்குவரத்துக்கான வாகனங்களைப் பொறுத்தவரை தவிர்க்கமுடியாத நிறுவனமாக இருக்கிறது அசோக் லேலண்ட்!

நிறுவனம் - ஒரு பார்வை

சுமார் 60 ஆண்டுகளைக் கடந்த அசோக் லேலண்ட், இந்திய வர்த்தக வாகனத் துறையில் முன்னணியில் இருக்கும் முக்கிய நிறுவனம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வர்த்தக வாகனப் பிரிவில் சுயதேவையை ஈடுகட்டும் விதமாக 1948-ல் சென்னையில், 'அசோக் மோட்டார்ஸ்' என்ற பெய-ரில் இந்நிறுவனம் உதய-மானது. 1955-ல் இதன் குறிப்பிட்ட அளவு பங்குகளை பிரிட்டிஷ் லேலண்ட் நிறுவனம் வாங்கியதைத் தொடர்ந்து, பெயர் 'அசோக் லேலண்ட்' ஆனது.

சர்வதேச நிறுவனங்களுடன் கைகோத்து நவீன தொழில்நுட்பங்களைப் பெற்றுவரும் இந்நிறுவனம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளின் மூலம் நாட்டின் வர்த்தக வாகன உற்பத்தியில் குறிப்பிட்ட இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. கூடவே 18 இருக்கைகள் கொண்ட சாதாரண பஸ்கள் முதல் 82 இருக்கைகள் கொண்ட டபுள் டக்கர் பஸ்கள்வரை பலவிதமான பயணிகள் வாகனங்களையும் தயாரித்து வருகிறது. 7.5 டன் முதல் 49 டன் திறன் கொண்ட வர்த்தக வாகனங்களை உற்பத்திசெய்வது இதன் சிறப்பு.

இந்தியாவில் ஓடும் அரசுப் பேருந்துகளில் 80% அசோக் லேலண்ட் தயாரிப்புகள்தான்! இவை நாள் ஒன்றுக்கு 6 கோடிக்கும் மேற்-பட்ட பயணிகளைச் சுமந்துசெல்கின்றன. இந்த எண்ணிக்கை இந்திய ரயில்களில் பயணிப்-பவர்களை விட அதிகம். இந்நிறு-வனத் தயாரிப்புகளில் சுமார் 5 லட்சம் வாகனங்-கள் இந்திய சாலைகளில் வலம் வந்து-கொண்டிருக்கின்றன.

தொழிற்பிரிவுகள் - துணை நிறுவனங்கள்

சென்னையில் பதிவு அலுவலகத்தைக் கொண்ட அசோக் லேலண்ட் நிறுவனத்துக்கு ஆறு தொழிற்சாலைகள் உள்ளன. இதில், முக்கியமானது சென்னை அருகே எண்ணூ-ரில் உள்ளது. ஓசூரில் மூன்றும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆல்வார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பந்த்ராவில் இரண்டும் இருக்கின்றன.

ஆட்டோமோடிவ் கோச்சஸ் அண்ட் காம்போனென்ட்ஸ், லங்கா அசோக் லேலண்ட், எண்ணூர் ஃபவுண்டரீஸ், இரிசார் - டி.வி.எஸ்., அசோக் லேலண்ட் பிராஜெக்ட் சர்வீஸஸ் ஆகிய ஐந்து துணை நிறுவனங்கள் இதற்கு இருக்கின்றன. இவை தாய் நிறுவனத்தின் வாகன உற்பத்திச் செலவைக் குறைக்கவும், விற்பனையை அதிகரிக்கவும் பல வகைகளில் உதவி வருகின்றன.

இந்துஜா குழுமம்

1987-ல் லேலண்ட் ரோவர் லேலண்ட் இன்டர்-நேஷனல் ஹோல்டிங் (எல்.ஆர்.எல்.ஐ.ஹெச். லிஸிலிமிபி) நிறுவனத்தின் வசம் இருந்த அசோக் லேலண்டின் ஒரு பகுதி பங்குகளை வாங்-கியதன் மூலம், இந்துஜா குழுமம் இந்த நிறுவனத்தின் உள்ளே வந்தது. 2006-ல் எல்.ஆர்.எல்.ஐ.ஹெச். நிறுவனத்தின் முழுப் பங்கு-களையும் இந்துஜா குழுமம் வாங்கியதை அடுத்து அசோக் லேலண்ட், இந்துஜா குழும நிறுவனங்களில் ஒன்றானது.

அதன்பிறகு, அசோக் லேலண்டின் மூலதனம் பலமடங்கு அதிகரிக்கப்-பட்டது. இதன்-மூலம் அந்நிறுவனம் விரிவாக்கத் திட்டங்-களுக்கு எளிதில் கடன் வாங்கமுடிந்தது. மேலும், ஆண்டுக்கு 25 ஆயிரம் வாகனங்களாக இருந்த உற்பத்தித் திறன் 84 ஆயிரமாக அதிகரிக்க இதுவும் ஒரு காரணமானது.

இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கல் அமலுக்கு வந்தபிறகு இந்நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தைக்கு ஏற்ப, வாகனங்களை உலகத்தரத்தில் தயாரிக்கத் தொடங்கி, அதை மேம்படுத்தி வருகிறது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பலமாக அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு இருக்கிறது.

''நுகர்வோரின் முழுத் திருப்தியைப் பெற எங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு பெரிதும் உதவிவருகிறது'' என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.சேஷசாயி குறிப்பிட்டிருப்பது, இங்கே கவனிக்கத்தக்கது. கரடுமுரடான சாலையில் பயணித்தாலும் வாகனத்தின் ஆயுள் நீண்டதாக இருக்கவேண்டும் என்பதுதான் வாடிக்கையாளர்கள் விருப்பம். அதற்கு ஏற்ப உறுதியான வாகனங்களைத் தயாரிப்பதை இந்நிறுவனம் குறிக்கோளாகக் கொண்டு இயங்கிவருகிறது.

இந்திய வாகனத்துறையில் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற்ற முதல் நிறுவனம் (1993) என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்நிறுவனம், தொடர்ந்து பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளையும் பெற்றுள்ளது.

மெகா திட்டம்

உத்ரகாண்ட் மாநிலத்தில் பந்த்நகர் (Pantnagar) தொழிற்பேட்டையில் அமையும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் விரி-வாக்கத் திட்டத்துக்கு அந்த மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழகம் ஒப்பு-தல் அளித்துள்ளது. அங்கு 175 ஏக்கரில் ஆயி-ரம் கோடி ரூபாய் முதலீட்டில் வர்த்தக வாகனங்-கள், இன்ஜின்கள் உற்பத்தித் தொழிற்சாலை அமைக்-கப்படுகிறது. முதலீடு இப்போது இரண்டாயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் இம்மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 2,200 பேர் புதிதாக வேலைவாய்ப்புப் பெறஇருக்கிறார்கள். அசோக் லேலண்டின் இந்தத் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வரி எதுவும் கிடையாது என்பதால், அதன் லாப வரம்பு அதிகரிக்கும்.

பங்கு - ஃபண்ட் முதலீடு

இந்நிறுவனப் பங்கு மூலதனத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் 38.61%, இன்ஷ¨ரன்ஸ் நிறுவனங்கள் 14.39%, பொதுமக்கள் 11.59%, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 1.38% முதலீடு செய்துள்ளன.

பிர்லா சன்லைப் (64.04 கோடி ரூபாய்), சுந்தரம் பி.என்.பி. பரிபாஸ் (14.34 கோடி ரூபாய்), டாடா (11.62 கோடி ரூபாய்), யூ.டி.ஐ. (7.49 கோடி ரூபாய்) போன்ற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிக முதலீட்டை இதில் செய்துள்ளன.

அண்மைக்காலத்தில் மெரில் லிஞ்ச், டாயிஷ் பேங்க் ரிசர்ச், ஏ.பி.என். ஆம்ரோ குளோபல் ரிசர்ச், ஹெச்.எஸ்.பி.சி., கிரெடிட் சூஸ்ஸி போன்ற நிறுவனங்கள் இந்-நிறுவனப் பங்கை பரிந்துரை செய்துள்ளன. கடந்த மூன்று மாதத்தில் சராசரியாக மாதம் ஒன்றுக்கு மூன்று தரகு நிறுவனங்கள், இந்நிறுவனப் பங்கை பரிந்துரை செய்-திருக்கின்றன.

சாதக - பாதகங்கள்..!

வாகனத் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் உருக்கின் விலை கட்டுப்பாட்டில் இல்லை என்பது இத்துறைக்குள்ள மிகப்பெரிய குறைபாடாக இருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்ததாக வர்த்தக வாகனத்துறை இருக்கிறது. இதனால், அரசின் கொள்கை முடிவுகள் இத்துறையில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. மேலும், சர்வதேச சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை உயர்வு வாகனப் பயன்-பாட்டைக் குறைக்கும் அம்சங்களில் ஒன்-றாக இருக்கிறது. அதேநேரத்தில் நாட்டில் சாலை-களின் தரம் மேம்படுத்தப்பட்டு வருவதால், இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

மொத்த சொத்தின் மூலமான வருமானம் 10.19% ஆக இருப்பது இதன் சாதகமான அம்சங்களில் ஒன்று. ராணுவத்துக்கு வாகன விநியோகம் என்பது அனைத்து நிறுவனங்களாலும் செய்யக்கூடியதல்ல. அதுவும், சுய சான்றிதழுடன் ராணுவத்துக்கு வாகன விற்பனை என்பது இந்நிறுவனத்தின் சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது.

இதன் விற்பனையில் உள்நாடு 90%, ஏற்றுமதி 10% ஆக இருக்கிறது. உள்நாட்டு விற்பனையை மட்டும் நம்பி இருக்கும் நிலையை மாற்ற புதிய சந்தைகளுக்கு ஏற்றுமதி நடவடிக்கையில் நிறுவனம் தீவிரமாகக் களமிறங்கி இருக்கிறது.

இந்தியாவின் சிறப்பான பொருளாதார வளர்ச்சி, வட்டி விகிதக் குறைப்பு போன்றவை வர்த்தக வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க உதவும் முக்கியக் காரணிகளாக இருக்கின்றன.

விரிவாக்கம்

மும்பை பங்குச் சந்தையின் 'ஏ' குரூப் நிறுவனமான இது, கூட்டுத் திட்டம், கையகப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் வளர்ச்சி கண்டுவருகிறது. இதை மெய்ப்பிக்கும் சமீபகால உதாரணங்களில் சில..! இலகு ரக வர்த்தக வாகனங்களின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்காக 2007, அக்டோபரில் ஜப்பானின் நிஸான் மோட்டார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த புதிய நிறுவனத்தில் அசோக் லேலண்ட் 51%, நிஸான் மோட்டார் 49% பங்கு மூலதனம் கொண்டிருக்கும். இதன் உற்பத்தி 2010-ல் தொடங்கும். இங்கு 2.5 டன் முதல் 8 டன் திறன்கொண்ட வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இங்கு தயாரிக்கப்படுபவை, ஏற்றுமதி செய்யப்படவும் இருக்-கிறது. இதன்மூலம் அசோக் லேலண்ட் ஓராண்டில் விற்பனை செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு ஆகஸ்டில்

ராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸூடன் வியாபார உத்தியாக கூட்டினை ஏற்படுத்தியது. வாகன வடிவமைப்பு, உருவாக்கம் தொடர்பான பணிக்காக ஜெர்மனியைச் சேர்ந்த சீமென்ஸ் வி.டி.ஓ. நிறுவனத்துடன் கூட்டு, பரிசோதனைக்காக அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் டி.டி.இ. (DTE) நிறுவனத்தை வாங்கி இருப்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இதன் உற்பத்தித் திறன் 30 ஆயிரம் வாகனங்களாக இருந்தது. இப்-போது இது 84 ஆயிரம் வாகனங்களாக அதிகரித்-திருக்கிறது.

வாகனத் துறை சார்ந்த வணிகம் தவிர, இதரவற்றிலும் இந்நிறுவனம் கவனம் செலுத்தத் தொடங்கி-யிருப்பது, நிறுவனத்தின் ரிஸ்க்கைக் குறைக்க உதவி வருகிறது. உதாரணத்துக்கு, ஃபின்லாந்தின்

அல் டீம்ஸ் (AL TEAMS) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து உயர் அழுத்த அலுமினியம் டை காஸ்டிங் வணிகத்தில் நுழைந்துள்ளதைச் சொல்லலாம்.

சென்ற 2006-07-ம் நிதி ஆண்டில் நிறுவனத்தின் டேர்ன் ஓவர் 200 கோடி டாலரைத் தாண்டியிருக்கிறது. மேலும், கடந்த இரு ஆண்டுகளாக வாகனத் துறையின் வளர்ச்சியை விட, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகமாக இருந்துவருகிறது.

இவை இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடையக்கூடிய விஷயங்கள்தான்!

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கே.

தரன்

''இந்திய வர்த்தக வாகனச் சந்தையில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்கு சுமார் 30%! ஏற்றுமதியை இருமடங்காக (20%) உயர்த்தத் திட்டமிட்-டுள்ளோம். செக் குடியரசில் நிறுவனம் ஒன்றை வாங்கி, அதன் மூலம் முதன்முதலாக ஐரோப்பியச் சந்தையில் நுழைந்துள்ளோம். ஐக்கிய அரபு நாட்டில் உள்ள ரஸ் அல் கெய்மா என்ற நிறுவனத்துடன் இணைந்து அசெம்பிளிங் பிரிவை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தியாவிலிருந்து வாகன உதிரிப் பாகங்களை கன்டெய்னர்களில் எடுத்துச்சென்று அங்கு வாகனமாக வடிவமைக்கிறோம். இதன்மூலம் அங்கு ஏற்றுமதி இரு மடங்குக்கும் அதிகமாகக் கூடியுள்ளது.

விற்பனை அதிகரிப்புக்கு நிறுவனத்தின், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்கு முன் வருமானத்தில் 1.5% தொகையை இப்பணிக்காகச் செலவிட்டோம். இப்போது அதை 2% ஆக அதிகரித்துள்ளோம். இப்பிரிவின் மூலம் மாசைக் குறைக்கும் தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களைச் சுயமாக உருவாக்கி இருக்கிறோம். இதற்கு முன் ஒரே லாரியை மண், சிமென்ட், நிலக்கரி எடுத்துவரப் பயன்படுத்தினார்கள். இந்நிலையை மாற்றி, ஒவ்வொரு தேவையையும் மிகச்சரியாகப் பயன்படும் விதமாகச் சிறப்பு வகை வாகனங்களைத் தயாரித்து அளித்து வருகிறோம். அடுத்த முக்கிய லாபம் எரிபொருள் சிக்கனம்'' என்றவர், நிறுவனத்தின் புதிய அறிமுகங்கள் பற்றிச் சொன்னார்.

''புதிதாக 49 டன் திறன் கொண்ட டிராக்டர் டிரெய்லரை அறிமுகப்படுத்தி உள்ளோம். இது சுரங்கப் பணிகளில் அதிக அளவில் பயன்பட்டு வருகிறது. இதை தனியார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்துவருகின்றன. லக்ஷூரா, செமி லோ ஃபுளோர் (எஸ்.எல்.எஃப்.) பஸ்களை அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் எஸ்.எல்.எஃப். பஸ்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழத்தில் சிறப்பாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனத்தைத் தயாரிக்கச் செலவு குறைவாகிறது. இதன்மூலம் எங்களுக்கு உற்பத்திச் செலவு குறைவதோடு, வாங்குபவருக்கு விலையும் குறைகிறது. இதுபோன்ற எஸ்.எல்.எஃப். பஸ்களைத் தயாரித்துத் தரச்சொல்லி மகாராஷ்டிரா அரசு கேட்டுள்ளது. இலங்கையில் இயங்கும் லங்கா அசோக் லேலண்ட், கடந்த ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இது தாய் நிறுவனமான அசோக் லேலண்டுக்கு 100% டிவிடெண்ட் வழங்கியுள்ளது. மேலும், இலங்கையில் 70% சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளது'' என்ற அவரே விரிவாக்கத் திட்டங்கள் குறித்து விவரித்தார்.

''உற்பத்தித் திறன் தற்போது ஆண்டுக்கு 84 ஆயிரம் வாகனங்களாக இருக்கிறது. வரும் செப்டம்பர் மாதத்துக்குள் எண்ணூர் தொழிற்சாலையின் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் உற்பத்தித் திறன் மேலும் 50 ஆயிரம் அதிகரிக்கும். இதையும் சேர்த்தால் மொத்த உற்பத்தித் திறன் 1,34,000 வாகனங்களாக உயர்ந்து-விடும். உத்தரகாண்டில் ஒருங்கிணைந்த தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இதன் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களாக இருக்கும். இதன்படி பார்த்தால் 2010 மார்ச்சில் உற்பத்தி திறன் 1,84,000 ஆக அதிகரித்திருக்கும். கிட்டத்தட்ட இரண்டாண்டு காலத்தில் திறன் இரு மடங்குக்கும் மேலாக உயர்த்தப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை வாகனத்துறை சன் ரைஸ் என்ற எழுச்சித் துறையாக இருக்கிறது. தங்க நாற்கரச் சாலை, வட கிழக்கு காரிடார் போன்-றவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் அம்சமாக இருக்கிறது. 1960-களில் அமெரிக்காவில் கிழக்கு மற்றும் கடற்கரைச் சாலைகள் இணைக்கப்பட்டன. இது அந்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உதவியது. இந்தியாவிலும் சாலை மேம்பாடு வளர்ச்சிக்கு அடிகோலும். அதன் மூலம் எங்களின் நிறுவனமும் வளர்ச்சி காணும்'' என்றார்.

- சி.சரவணன்
படம் விவேக்