சந்தையின் போக்கிலேயே சென்று லாபம் ஈட்டுங்கள்!

நதியின் ஓட்டத்திலேதான் படகைச் செலுத்தவேண்டும். அந்தத் திசையைப் புரிந்துகொள்ளாமல் எதிர் திசையில் படகைச் செலுத்துபவர்களால் வெற்றிகரமாகக் கரைசேர முடியாது. அதைப் போலத்தான் பங்குச் சந்தையும்! குறுகிய உயரங்களில் ஏறி, இறங்கிச் செல்லும் சந்தையின் போக்கைப் புரிந்து கொள்ள முடியாமல் முதலீட்டாளர்கள் திணறுகிறார்கள். இந்த நிலையில் எந்த மாதிரி-யான முதலீட்டுத் திட்டத்தை வைத்துக்கொள்ள வேண்டும்? எவ்வாறு பங்கு-களைத் தேர்வுசெய்வது? நஷ்டத்தில் இருக்கும் பங்குகளைச் சரிசெய்ய ஏதாவது வழி இருக்கிறதா? இவைதான் இன்றைய முதலீட்டாளர்களின் கேள்விகளாக இருக்கின்றன.

மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் 15536 புள்ளிகள் வரை இறங்கி, அடுத்த இரண்டு நாளில் ஐந்நூறு புள்ளிகள் வரை உயர்ந்தது மும்பை பங்குச் சந்தை. இது போன்ற நிகழ்வுகளாகவே கடந்த இரண்டு வாரங்கள் சென்றது. சந்தையின் இந்தப் போக்குக்கு சர்வதேச அளவிலான காரணங்கள்தான் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக அமெரிக்கப் பொருளாதாரப் பாதிப்புகளின் அடிப்படையில் சர்வதேசச் சந்தைகள் சரிகின்றன. அந்தச் சந்தைகளின் ஏற்ற, இறக்கங்களுக்கு ஏற்ப இந்தியச் சந்தை-யும் நடந்துகொள்கிறது.

கச்சா எண்ணெயின் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பேரல் 108 டாலராக உயர்ந்-துள்ளது. இந்தியாவின் பணவீக்கம் நான்கு சத-விகிதத்துக்கும் குறைவாக இருந்தது, இப்போது 5.01% அதிகரித்துள்ளது. இது போன்ற ஒட்டுமொத்தக் காரணங்களால் சந்தை தொடர்ந்து பாதித்துவருகிறது. எனவே நம்மால் மட்டும் சந்தையைத் தூக்கி நிறுத்தமுடியாது. மேலும் முதலீட்டில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தைச் சரிசெய்ய எந்த குறுக்கு வழியும் கிடையாது. ஆனால், சில பாதுகாப்பான வழி-முறைகள் உள்ளன. அதனைப் பின்பற்றி நடந்துகொண்டால் இனியாவது தப்பிக்கலாம்.

இந்தச் சமயத்தில் சந்தையில் நாம் கற்றுக்கொண்ட விஷயங்களையும், செய்யவேண்டியதையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஜனவரி 14-ம் தேதிக்கு முன்பு வரை சந்தையின் புள்ளிகள் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே சென்றது. பின்னர் அதன் போக்கு மாறத்தொடங்கி, மார்ச் இரண்டாவது வாரத்தில் 15357 புள்ளிகள் வரை இறங்கியது. இப்போதுள்ள சந்தை அதிகபட்சம் 18000 வரைதான் செல்கிறது. எப்போதும் சந்தை அதிகபட்ச உயரத்தைத் தொடுவதற்கு முன் அதன் கீழ்மட்டப் புள்ளிகள் உறுதியாக இருக்கிறதா என டெஸ்ட் செய்துகொள்ள கீழே இறங்கும். அந்த சப்போர்ட் லெவல் என்பது பல மட்டங்களில் இருக்கும். அதில் எந்த நிலை உறுதியானதாக உள்ளதோ, அதனை அடிப்படையாக வைத்து மேலே சென்று அதிகபட்ச உயரத்தைத் தொடும். அதுபோல் 21000 புள்ளிகளை முன்பு தொட்டது. ஆனால், அந்த சப்போர்ட் லெவல் உறுதியாக இல்லாதபோது புதிய உயரங்களைத் தொட்டாலும் நிலைத்து நிற்கமுடியாமல் கீழ் இறங்கிவிடும். அதைத்தான் இப்போதுள்ள சந்தை பிரதிபலிக்கிறது.

சந்தையில் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நிறுவனப் பங்குகள் விலை அதிகரிக்கும். முதலீடு செய்யும்போது எல்லா நிறுவனங்களுமே நல்ல-வையாகத் தெரியும். முதலீடு செய்துவிட்டு அவை எதிர்பார்க்கும் விலை வரும்வரை காத்திருக்க வேண்-டியதாகிவிடும். பலருக்கும் இந்த நிறுவனப் பங்கில் ஏன் முதலீடு செய்கிறோம் எனத் தெரியாமலே முதலீடு செய்கிறார்கள்.

நல்ல நிறுவனங்களைத் தேர்வுசெய்ய எளிமையான வழி இருக்கிறது. முதலில் எதிர்கால வாய்ப்-புள்ள துறைகளைத் தேர்வு செய்யுங்கள். அத்துறையில் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் எவையெனத் தேர்வு செய்யுங்கள். அதில் அடிப்படையில் உறுதியான நிறுவனங்கள் எவை, அவை தொடர்ந்து சிறந்த செயல்பாடுகளைக் கொண்டுள்ளதா எனக் கவனியுங்கள். இதைவிடச் சிறந்த வழி ஏதும் இருக்கமுடியாது. இனி பங்குகளை எப்-போது வாங்கலாம், எப்போது விற்க-லாம் என முடிவெடுங்-கள்.

எப்போதும் சந்தை ஒரே இடத்தில் நிரந்தரமாக இருப்பது இல்லை. அது புதிய கோணங்களில் பயணிப்பதும் இல்லை. மேலும், சந்தையின் புள்ளிகள் உயரே செல்வதற்கு முன்னும் பின்னும் எச்சரிக்கை செய்துவிட்டுத்தான் செல்லும். ஆனால், நாம்தான் அதைக் கவனிப்பதில்லை. ஜனவரி 14-க்கு முன்பு 20236 புள்ளிகள் வரை அதிகரித்த சந்தை, தொடர்ந்து மேலே செல்லமுடியாமல் திரும்பியது. அந்த ஏற்றத்தின் உறுதியில்லாத நிலையை சந்தை வெளிப்படுத்தியது. (இந்த எச்சரிக்கையை நாமும் முதலீட்டாளர்களுக்குச் சொல்லியிருக்கிறோம்.) ஆனால், அதனை உணர்ந்துகொள்ளாமல் அதிக புள்ளிகளில் முதலீடு செய்தவர்கள் இப்போது தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதன் சப்போர்ட் லெவல் உறுதியாக இல்லாமல் மேலும் கீழிறங்கி 15357 புள்ளிகளைத் தொட்டது. எனவே சந்தையின் போக்கு என்பது மிக முக்கியம். அதனை லைன்சார்ட் மூலம் பார்க்கமுடியும். அதற்குத் தொடர்ந்து சந்தையைக் கவனித்து வர-வேண்டும். சந்தையின் போக்கைத் தெரிந்து கொண்டு அதன் போக்கிலே சென்று லாபம் ஈட்டுவதுதான் இப்போதுள்ள சிறந்த வழி.

மூன்றாவதாக, சந்தையில் எப்போதும் 'ஷார்ட்' போகவேண்டாம் என்று சொல்வார்கள். ஆனால், இப்போதுள்ள சந்தையில் அது தவறில்லை என்றே தோன்றுகிறது. இப்போதுள்ள ஏற்ற, இறக்க நிலை எப்போது சரியாகி தொடர்ந்து உயரும் என்று கணிக்க முடியாது. எனவே இறங்கும்போது வாங்கிவிட்டு ஓரளவு லாபம் கிடைக்கும் என்று தோன்றினால் விற்றுவிடலாம். நீண்டகாலக் கனவுகளுடன் வாங்கிப்போட்டு காத்திருக்க வேண்டிய-தில்லை. டெக்னிக்கல் அனாலிசிஸ் முறையில் சார்ட்டைப் பயன்படுத்துங்கள். அவை தரும் சிக்னல்களைப் புரிந்துகொள்ளுங்கள். குறைந்த விலை-யில் வரும்போது வாங்குங்கள். அன்றே ஓரளவு லாபம் கிடைத்தால் விற்று-விடுங்கள். மறுபடியும் சந்தை இறங்கி வரும்போது மீண்டும் வாங்குங்கள் லாபம் பாருங்கள்.

சந்தையின் தற்போதுள்ள நிலையில் மார்ச் 13-ம் தேதி 770.63 புள்ளிகள் வீழ்ச்சி கண்டதால், அதன் சப்போர்ட் லெவலாக 15000 புள்ளிகள் உள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் அதற்கு அடுத்த சப்போர்ட் லெவலாக 14500 புள்ளிகள் உள்ளது. இதில் கொடுத்துள்ள இலக்குகளைக் கவனித்து முதலீடு செய்து லாபம் சம்பாதியுங்கள்.

-தொகுப்பு ஆர்.ரெங்கராஜ்