தங்கத்தில் போட்டால் பங்கம் வராது!

உச்சத்தில் போய்கொண்டிருக்கும்போது கால்தடுக்கி விழுந்ததுபோல ஆகிவிட்டது அமெரிக்காவின் நிலை. அதன் பொருளாதார வீழ்ச்சி பற்றி சாதாரண அமெரிக்க மக்களும் பேசுகின்றனர். கடந்த பிப்ரவரியில் பியூ ரிசர்ச் (Pew Research) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மையோர், மோசமாகிவிட்ட தங்கள் நாட்டுப் பொருளாதாரம் பற்றி மட்டுமில்லை... சராசரி வாழ்க்கைக்கான செலவுகளும் கூட அதிகரித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

பெட்ரோலிய எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து வாராவாரம் உயர்கிறது. விளைவு... பணவீக்கமும் அதிகரிக்கிறது. சர்ச்சைக்குள்ளான அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீட்டு எண் (Consumer Price Index)-ன்படி, பணவீக்கம் 4% ஆக உள்ளது. ஆனால், வட்டி விகிதம் 3% ஆக இருக்கிறது. இதன் காரணமாக வங்கி டெபாசிட்டின் மீதான வருமானத்தில் 1% இழப்பு ஏற்படும் நிலை. அமெரிக்கப் பங்குச் சந்தை இந்த ஆண்டு மட்டும் இதுவரை 10% வீழ்ச்சி அடைந்துள்ளது.

சேமிப்பை ஊக்கமூட்டும் சூழ்நிலை அங்கில்லை. ஆனால், 'அமெரிக்கர்கள், தங்களின் சேமிப்பை அதிகரிக்கவில்லையெனில், அவர்கள் தொடர்ந்து மற்ற நாடுகளிடம் நிதி உதவி கோரவேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்படுவார்கள்' என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். சாதாரண சூழ்நிலையில் இதுபோன்றவை ஆரோக்கியமானதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வர்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்தல்) தனியார் துறையின் நிதி பங்களிப்பினால் சரிசெய்வது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படலாம். மேலும், அந்நிய அரசுகள் அல்லது அரசு நிறுவனங்கள் ஒருவருடைய சொத்துக்களை வாங்குவது குழப்பத்தையே ஏற்படுத்தும். வேறுசில காரணங்களால் இவை அரசியல் குழப்பங்களுக்கான ஆயுதங்களாகவும் மாறலாம். இதற்கு நீண்டகாலத் தீர்வு, அமெரிக்கர்கள் அவர்களுடைய சேமிப்பைப் பெருக்குவதுதான்.

கடந்த 15 ஆண்டுகளாக இவர்கள் சேமிப்பை மறந்துவிட்டார்கள். அந்தப் பொறுப்பை சொத்தை உருவாக்கும் நிறுவனங்களின் வசம் விட்டுவிட்டனர். 1990-களில் அமெரிக்கப் பங்குச் சந்தை அபரிமிதமான வளர்ச்சி அடைந்ததால் சேமிப்பு அவர்களுக்குத் தேவையற்ற ஒன்றாக இருந்தது. இந்த 10 ஆண்டுகளில் வீடுகட்டும் துறை வளர்ச்சி அடைந்து வீட்டின் மதிப்பு பன்மடங்கு கூடியதால், வீடுகளின் மதிப்பை வைத்து கடன்வாங்கி செலவு செய்ய ஆரம்பித்தனர். இம்மாதிரியான வாழ்க்கைமுறை அவர்களின் கடனை மேலும் உயர்த்திவிட்டது. இந்தக் காலகட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் அமெரிக்கா பலவீனம் அடைந்தது. அதன் 50 ஆண்டு கால வரலாற்றில் மிக பலவீனமான வேலைவாய்ப்புச் சூழல் நிலவிய காலம் என்றால், அது 2001-07 வரையிலான காலகட்டம்தான். மேலும் வீடுகளின் விலைமதிப்பு உயர்வதும் நின்றுபோய், எதிர்மறையான வளர்ச்சியே காணப்-படுகிறது.

ஆகவே, அமெரிக்கா இப்போது தன் சேமிப்பை அதிகப்படுத்தியே தீர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கர்களின் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டுமானால், சேமிப்பு என்பது இப்போது உள்ளதைவிட அதிகப்படியான வருவாய் ஈட்டித் தருவதாக இருக்கவேண்டும். அப்படி என்றால் பணவீக்கம் குறைவாகவும், வட்டி விகிதம் அதிகமாகவும் இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்கா இதன் எதிர்விகிதத்தில்தான் சென்றுகொண்டிருக்கிறது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்து வருகிறது. இன்னொருபுறம் உலக சூழல்கள் காரணமாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அமெரிக்காவில் சேமிப்பு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. காரணம் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டிவிகிதக் குறைப்பினால் எதிர்மறையான நிலையே நிலவுகிறது. ஆனால் மத்திய வங்கி, நிதிநிலையைச் சீர்செய்யவே இதையெல்லாம் செய்வதாகக் கருதுகிறது. இது, ஓர் அறுவை சிகிச்சை நிபுணரின் செயலாக மட்டுமே உள்ளது. திடமான ஆரோக்கியத்துக்கு அதனிடம் எந்த மருந்தும் இல்லை.

உலகில் உள்ள மத்திய வங்கிகள், அமெரிக்க டாலரை வாங்கிவருவது அந்த மருந்தாக இருக்கலாம். ஆனால், அந்த மருந்தும் நிரந்தரமில்லை. எப்போது வேண்டுமானாலும் அமெரிக்க டாலர்களை வாங்குவது நிறுத்தப்படலாம். இதர நாடுகள் அமெரிக்காவுக்கு வழங்கும் கடன்கள், மார்க்கெட்டுகளில் வாங்கிய டாலர்களில் இருந்தே கொடுக்கப்படுகிறது. இது அந்தந்த நாட்டின் நாணய மதிப்பு உயர்வதைத் தடுப்பதற்காகவே செய்யப்படுகிறது. இதனால் பணப் புழக்கம் அதிகரிப்பதோடு பணவீக்கமும் உயர்கிறது. ஆனால், இதுபோல் எவ்வளவு நாட்களுக்குச் செய்யமுடியும் என்பது பெரிய கேள்விக்குறி. சீனாவும் இப்போது இதே போன்ற-தொரு பிரச்னைக்குள் சிக்கியிருக்கிறது. இதி-லிருந்து விடுபடுவதற்கு அமெரிக்காவும் தங்க-ளுக்குக் கைகொடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பக்கூடும். அடுத்த சில ஆண்டுகளில், உலக அரசியல்நிலைதான் உலகப் பொருளாதாரத்தை செம்மைப்படுத்தும் சக்தியாக இருக்கும். அதனால், தற்போது அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி கையாளும் வழிமுறைகள், நீண்டகால சீர்-திருத்-தத்துக்கு உதவாது. மேலும் பணவீக்கம் சூழ்நிலையை இன்னும் சிக்கலாக்கும்.

எதிர்பாராதவிதமாக கடந்த எட்டு மாதங்களாக மேற்கூறியவைகள் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பாதிப்பின் சதவிகிதம் மற்ற நாடுகளை விட இந்தியாவுக்குத்தான் அதிகம். இதற்கு, அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஈட்டிய லாபத்தை, சுலபமாக வெளியே எடுத்துச்செல்ல முடிந்ததே காரணம். மேலும் கடந்த சில ஆண்டுகளாக இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களே அதிகப்படியான மூலதனம் செய்திருந்தன. அவர்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன் குறையும்போது, வளரும் நாடுகளில் தங்களுடைய முதலீட்டினை குறைத்துக்கொள்கின்றனர்.

இந்திய அரசின் சமீபத்திய பட்ஜெட், அயல்நாட்டு முதலீடுகளை எந்தவிதத்திலும் ஊக்குவிப்பதாக இல்லை. ஆளும் காங்கிரஸ் அரசுக்கு வேண்டுமானால் இந்த பட்ஜெட் தேவையானதாக இருக்கலாமே தவிர, இந்தியாவுக்கு இவ்வளவு அதிகப்படியான சலுகைகள் தேவையா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. விவசாயக்கடன் ரத்து செய்யப்பட்டிருப்பதும் ஆரோக்கியமானதல்ல. இது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதுள்ள பொருளாதாரச் சூழ்நிலை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக இல்லை என்றே தெரிகிறது. இதுவே அவர்கள் கடந்த சில வருடங்களாக தாங்கள் செய்த முதலீட்டையும், அதனால் தாங்கள் அடைந்த லாபத்தையும் வெளியே எடுத்துச் சென்றதற்கான காரணம். அடுத்து வரும் சில மாதங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரும் வாய்ப்புகளே அதிகம் உள்ளது.

இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்கள் இந்தத் தருணத்தில் பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட்டைத் தவிர்த்து வேறு வகையான முதலீடுகளுக்கு மாறவேண்டும். தங்கத்தில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டிருக்கும் அபரிமிதமான விலை ஏற்றம் தொடருமா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. பங்கு மற்றும் ரியல் எஸ்டேட் மூலதனத்தைத் தவிர, மற்ற சொத்துக்களின் மீது இம்மாதிரியான சந்தேகங்கள் எழுவது கேலிக்குரியதுதான். பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள அளவுக்கு, தங்கம் மற்றும் விவசாய விளைபொருட்களில் அப்படியன்றும் வீழ்ச்சி ஏற்பட்டுவிடவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் நாஸ்டாக் சந்தையின் வளர்ச்சியையும், தற்போதைய 10 ஆண்டுகளில் தங்கத்தின் வளர்ச்சியையும் ஒப்பிடும்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு (28.34 கிராம்-24 கேரட்) 1,500 முதல் 2,000 அமெரிக்க டாலர்கள் வரை விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. விவசாய விளைபொருட்களின் விலை குறைவாகவே இருப்பதால், அவை தொழில்நுட்ப பங்குகளைப்போல் வளர்ச்சியடைய இன்னும் நெடுந்தூரம் உள்ளது.

அமெரிக்க டாலர் தொடர்ந்து இதர நாடுகளின் நாணயங்களைவிட பலவீனமடைவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் தென்படுகின்றன. இந்த வருடத்தின் கடைசி அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில், அமெரிக்க மத்திய வங்கி, தனது வட்டிவிகிதத்தை 1% அல்லது அதைவிட குறைவான அளவுக்கு குறைப்பதற்கு வாய்ப்புள்ளது. பண வீக்கத்துக்கு எதிரான சரி செய்யப்பட்ட வட்டிவிகிதமும் தொடர்ந்து எதிர்மறையாகவே இருந்துவரும். இது அமெரிக்க டாலர் வைத்திருப்பதற்கும் எதிராகவே செயல்படும்.

இந்த வகை நெகட்டிவ் காரணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான முதலீட்டுக்கே முன்னுரிமை கொடுப்பதே முதலீட்டாளர்களின் மனநிலையாக இருக்கிறது. அந்தப் பாதுகாப்பு தங்கத்தில்தான் உண்டு.