நடப்பு
Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: வேகமான ஏற்றம் வந்து ஏமாற்றிவிடலாம் !

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: வேகமான ஏற்றம் வந்து ஏமாற்றிவிடலாம் !

##~##

டெக்னிக்கலாக மீண்டும் ஒரு 100-125 பாயின்ட் ஏற்றத்திற்கு வாய்ப்பு உருவாவதைப்போல் தெரிந்தாலும் செய்திகள் சந்தையின் போக்கை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடக்கூடும் என்றும், இப்போதைக்கு ஷார்ட் சைடு வியாபாரம் செய்யாமலிருப்பது நல்லது என்றே தோன்றுகின்றது என்றும் சொல்லியிருந்தோம். திங்களன்று பெரிய மாறுதலைச் சந்திக்காத நிஃப்டி படிப்படியாக மேலே ஏறி வெள்ளியன்று வாராந்திர ரீதியாக 188 பாயின்ட் ஏற்றத்தில் குளோஸானது.

வரும் வாரத்தில் ரிசல்ட்களும் அமெரிக்க நடவடிக்கைகளும் சந்தையை எடுத்துச் செல்வதாக இருக்கும். டெக்னிக்கலாக எந்த அளவுக்கு ஏறவேண்டுமோ, அந்த அளவுக்கான ஏற்றம் கிட்டத்தட்ட தொடப்பட்டுவிட்டது. இனி செய்திகளின் வீரியமே சந்தையை எடுத்துச் செல்லும்.

திங்களன்று இந்திய டேட்டாக்களும், வாரம் பூராவுமே ரிசல்ட்களும், வெள்ளிக்கிழமைக்குள் அமெரிக்க அரசாங்க முடிவுகளின் போக்கும் தெரியவரும். நான்கு டிரேடிங் தினங்களைக் கொண்ட வாரம் என்பதையும், மிக முக்கிய அமெரிக்க முடிவு வெளிவரப்போகும் வாரம் என்பதையும் நினைவில் வைத்து வியாபாரம் செய்யுங்கள்.

ஓவர்நைட் மற்றும் அதிக எண்ணிக்கையில் பொசிஷன் வேண்டாம். புதிய டிரேடர்கள் டிரேடிங்கைத் தவிருங்கள். அமெரிக்க முடிவு தெரியும் வரை ஷார்ட் சைடு வியாபாரம் கூடவே கூடாது என்பதை நினைவில் வையுங்கள். கவனம் தேவை!

11.10.13 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: வேகமான ஏற்றம் வந்து ஏமாற்றிவிடலாம் !

மிகவும் வாலட்டைலான சூழ்நிலையில் சந்தை இருக்கின்றது. எனவே, மிகவும் கவனத்துடன் வியாபாரம் செய்யவேண்டும். எந்த நிமிடமும் வேகமான ரிவர்ஸல்கள் (ஏற்றமோ/இறக்கமோ) வந்துவிடலாம் என்பதை எப்போதும் மனதில்கொண்டே வியாபாரம் செய்யவேண்டிய நேரமிது.

டெக்னிக்கல்

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்:- டிவி18 பிராட்காஸ்ட்(21.60), அதானி போர்ட்ஸ்(150.40), டிஷ் டிவி(54.25), பி.எஃப்.சி(137.25), எம் அண்ட் எம்(872.500), டைட்டான்(237.80), ஐ.ஓ.பி(49.45), சம்பல் ஃபெர்டிலைஸர்(37.50), ஜி.எஸ்.எஃப்.சி(54.55), டி.சி.பி(49.10), யூ.ஜே.எ.எ.எஸ்(23.20), சி.யூ.பி(45.75), கெயில்(336.30), எம்கோ(14.75), ஆன்மொபைல்(24.90), ரசோய் பி.ஆர்(15.20), மாருதி(1464.00), பாரத் ஃபோர்ஜ்(271.15), அட்லஸ் சைக்கிள்(256.50) - குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்:- ஐ.எஃப்.சி.ஐ(24.50), ஐ.வி.ஆர்.சி.எல். இன்ஃப்ரா(12.55), தேனா பேங்க்(49.75), செயில்(76.15), பெட்ரோ நெட்(126.40), டெக் மஹிந்திரா (1549.85), ஆப்டோ சர்க்யூட்(22.15), ஓரியன்ட் பேங்க்(160.40), பி.டி.சி(54.65) - நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்கிற்கு வாட்ச் செய்ய உகந்தது): யூனிடெக்(19.30), அதானி போர்ட்ஸ் (150.40), டி.ஹெச்.எஃப்.எல்(134.65), ஹெச்.சி.எல். டெக் (1157.45), போலாரிஸ்(136.40), சி.யூ.பி. (45.75), ஃபெடரல் பேங்க் (326.30), எம்கோ (14.75), ஆன்மொபைல் (29.40), ஐ.டி.ஐ (16.30), தாமஸ் குக் (65.00), எஸ்.கே.எஸ். மைக்ரோ (148.40), பிரஸ்டீஜ் (139.80), ஜே.கே. லஷ்மி (78.00), சிட்டி கேபிள் (20.10) - குறைந்த எண்ணிக்கையிலும் மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்கிற்கு வாட்ச் செய்ய உகந்தது): பவர் கிரீட்(98.95), ஹிந்த் யூனிலீவர் (603.90), சென்ட்ரல் பேங்க் (52.50) -இவை சற்று வால்யூம் குறைந்து நடக்கும் கம்பெனிகள், எச்சரிக்கை.

சற்று பாசிட்டிவ் டிரெண்டிற்கு மாறிய ஸ்டாக்குகள் (லாங் சைடிற்கும் ரிவர்ஸலுக்கும் வாட்ச் செய்யலாம்): டிவி18 பிராட்காஸ்ட் (21.60), சின்டெக்ஸ் (23.85), ஹெச்.சி.எல்டெக் (1157.45), வெல்கார்ப் (34.15), டி.சி.பி (49.10), சி.யு.பி (45.75), ரோல்டா(61.10), மார்க்சன்ஸ் (10.05), எம்கோ(14.75), ஏசியன் பெயின்ட் (485.05).

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: வேகமான ஏற்றம் வந்து ஏமாற்றிவிடலாம் !

சற்று நெகட்டிவ் டிரெண்டிற்கு மாறிய ஸ்டாக்குகள் : (ஷார்ட் சைடிற்கும் ரிவர்ஸலுக்கும் வாட்ச் செய்யலாம்):- ஹிண்டால்கோ (114.25), ரான்பாக்ஸி(399.10), ரேணுகா (19.45), ஹெச்.சி.சி (11.80), எல் அண்ட் டி எஃப்.ஹெச் (76.15).

டேட்டா

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): யுனிடெக்(19.30), டாடா மோட்டார்ஸ் (385.30), அசோக் லேலாண்ட்(17.00), ஹிண்டால்கோ (114.25), டி.எல்.எஃப் (154.70), ஐ.டி.எஃப்.சி (97.85), எஃப்.எஸ்.எல்(19.45), ரான்பாக்ஸி (399.10), டிவி18 பிராட்காஸ்ட் (21.60), என்.சி.சி (21.95), ஐ.வி.ஆர்.சி.எல். இன்ஃப்ரா (12.55), அதானி போர்ட்ஸ் (150.40), இன்ஃபி (3274.50) - தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டிற்கு ஏற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள்- (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): ஜே.பி.அசோசியேட்(39.75), யெஸ் பேங்க் (347.55), ஹெச்.டி.ஐ.எல் (42.75), ஐ.எஃப்.சி.ஐ (24.50), ஆர்.காம் (150.55), ஜே.பி.பவர்(17.95) இவற்றை வியாபாரத்திற்கு தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்:  யூனிடெக் (19.30), எஃப்.எஸ்.எல் (19.45), என்.சி.சி(21.95), எஸ் கார்ட்ஸ் (97.05), டி.ஹெச்.எஃப்.எல் (134.65), சி.யு.பி(45.75), ஐ.பி. செக்(12.55), ரோல்டா(61.10), எம்கோ (14.75), ஹெச்.எம்.டி(28.65), ஷியாம் டெல் (46.65) - இவை வியாபார எண்ணிக்கையிலும், விலையிலும் நன்கு அதிகரித்த ஷேர்கள் இவை. கவனமாகவும் இருக்கவேண்டும். பாப்புலரில்லாத ஸ்டாக்குகள். கவனம் தேவை.

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.