Published:Updated:

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!
 

 

அப்பத்தாவுக்கு அது... மாமாவுக்கு இது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!
உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

ள்ளிக்கூடத்தில் ரிவிஷன் டெஸ்ட் நடப்பது போல, இதுவரை கற்ற பாடங்களை ரிவைஸ் செய்து கொண்டிருந்தாள் என் மனைவி. அடிப்படை பற்றிய தெளிவு இருந்தாலும் பலவிதமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பற்றியும் அவற்றுக்கு இடையிலான வித்தியாசங்களைப் பற்றியும் சின்னச் சின்னதாகச் சந்தேகங்கள் இருந்தன. தோழியுடன் அவள் போனில் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அந்தத் திட்டங்களைப் பற்றிய குறிப்புகளை கட்டிலில் சரிந்து உட்கார்ந்தபடி எழுத ஆரம்பித்தேன்.

செய்யப்படும் முதலீட்டின் அடிப்படையில் ‘முழுவதும் பாதுகாப்பான கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்வது, முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, இரண்டும் கலந்தவை’ என மூன்று வகையாகத் திட்டங்களைப் பிரிக்கலாம்.

‘கில்ட் ஃபண்ட்’ போன்ற அரசு கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யும் திட்டம், தேவைப்படும்போது உடனடியாக காசாக்கக் கூடிய வகையில் குறுகிய கால கடன் சந்தையில் முதலீடு செய்யும் திட்டம், வங்கிகளுக்கு இடையிலான ‘கால்மணி மார்க்கெட்’ ( Call money Market ) உட்பட கடன் சந்தையில் முதலீடு செய்யும் லிக்விட் ஃபண்ட் திட்டம் போன்றவை முதலாவது வகையைச் சேர்ந்தவை. பொதுவாக இம்மாதிரி திட்டங்களில் ரிட்டர்ன் குறைவாகவே இருக்கும். அதேசமயம் எந்தவித சேதமும் இல்லாமல் முதலீடு செய்த தொகை மிகமிகப் பாதுகாப்பாக இருக்கும். வங்கிகளில் போடும் ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு ஒரு நல்ல மாற்றாக இது அமையும். அதே பாதுகாப்புடன் அதைவிடச் சற்றுக் கூடுதலான வரிச் சலுகையுடன் கூடிய வருமானம் கிடைக்கும். (அன்பு மனைவியே... சீனியர் சிட்டிசன்களுக்கு ஏற்ற திட்டம் இது. அடுக்குப் பானைக்குள் பணம் போட்டுவைக்கும் உன் அப்பத்தாவை இதில் முதலீடு செய்யச் சொல்!)

முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது இரண்டாவது வகை. அதாவது, திரட்டிய மொத்த நிதியில் 80 சதவிகிதத்துக்குக் குறையாமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். அதிக ரிஸ்க், அதிக பலனைக் கொடுக்கும் என்ற அடிப்படையில் அமைந்தவை இந்தத் திட்டங்கள். அதிக வரிச் சலுகைகளும் இவற்றுக்கு உண்டு. (வருஷத்துக்கு 25 ஆயிரம் டேக்ஸ் கட்டும் உங்க மாமாவுக்கு இதை ரெக்கமண்ட் செய்!)

இந்தத் திட்டங்களில் பலவகை இருக்கிறது.

ஒரே ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டுமே ஈடுபட்டுவரும் நிறுவனங்களின் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும் செக்டோரல் ஃபண்ட்ஸ்! ( sectoral Funds ) ஆட்டோ, வங்கித்துறை, நுகர்வோர் பொருட்கள், டெக்னாலஜி போன்ற செக்டோரல் ஃபண்ட்களில் ரிஸ்க் அதிகமாக இருப்பதுபோல வருமான வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது!

மேலே சொன்னமாதிரி இல்லாமல் பல துறைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் டைவர்சிஃபைட் ஃபண்ட் ( Diversified Fund ). இதில் ரிஸ்க் குறைவு, வருமானம் ஓகே!

Nifty, SENSEX போன்ற பங்குச் சந்தைக் குறியீட்டில் இடம் பெற்றுள்ள பங்குகளில் மட்டுமே முதலீடு செய்வது இண்டெக்ஸ் ஃபண்ட்ஸ்! ( Index Funds ). பங்குச் சந்தையின் போக்கைப் பின்பற்றியே இவை அமையும்.

அளவில் பெரிய நிறுவனங்களின் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும் லார்ஜ் கேப் ஃபண்ட்ஸில் ( Large-Cap Funds ) பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளில் அதிக முதலீட்டில் உள்ள பங்குகளை மட்டுமே வாங்குவார்கள். பெரிய நிறுவனங்கள் பாதுகாப்பானவை எனும் அடிப்படையில் இயங்கு பவை. முதலீட்டில் அதிக வளர்ச்சி இல்லாவிட்டாலும் ஓரளவு பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு உருவாக்கப் பட்ட திட்டம் இது!

மேலே சொன்னதற்கு முற்றிலும் நேர்மாறானது இத்திட்டம். நாளை பெரிய நிறுவனங்களாக மாறக்கூடிய சாத்தியமுள்ள சிறு முதலீட்டு நிறுவனங்களை முன்பே குறிவைத்து வளைத்துப் போடுவது ஸ்மால் கேப் ஃபண்ட் ( Small-Cap Funds ). கொஞ்சம் ரிஸ்க் என்றாலும் நல்ல வருமானத்துக்கான வாய்ப்பும் உண்டு.

இவை இரண்டுக்கும் இடையில், எதிர்காலத்தில் பெரிய நிறுவனமாக வளரக்கூடிய, ஓரளவு நடுத்தர முதலீட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது மிட் கேப் ஃபண்ட்ஸ் ( Mid-Cap Funds ). நடுத்தர வர்க்கம் மாதிரி! மிகச் சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்வது மைக்ரோ கேப் ஃபண்ட்ஸ்! ( Micro-Cap Funds ).

வரிச் சேமிப்பை அடிப்படையாகக் கொண்ட ஈ.எல்.எஸ்.எஸ் திட்டம் ( ELSS - Equity Linked Savings Scheme ) ஒன்று இருக்கிறது. டிவிடெண்ட் போன்ற வருமானத்துக்கு மட்டுமல்லாமல், இத்திட்டத்தில் செய்யும் ஒரு லட்ச ரூபாய் வரையிலான முதலீட்டுக்கும் வரி விலக்கு உண்டு என்பதால் இதுதான் இப்போது பிரபலம்! இந்த மாதிரி வரி சேமிப்புத் திட்டங்களுக்கு மூன்று ஆண்டுகள் ‘லாக் இன் பீரியட்’ உண்டு. அதாவது போட்ட பணத்தை மூன்றாண்டுகளுக்கு வெளியில் எடுக்கமுடியாது.

ஒருவழியாக போன் அரட்டையை முடித்துக் கொண்டு வந்த என் மனைவி, நான் எழுதிய குறிப்புகளை எடுத்துப் படித்தாள்.

‘‘இத்தனை பட்டியல் போட்ட நீங்க தங்கத்தில் மட்டுமே முதலீடு செய்யும் ஃபண்ட், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் ஃபண்ட் மாதிரி விஷயங்களைச் சொல்லலையா..?’’ என்றாள்.

‘‘ஆகா... விஷயங்களைத் தெளிவாகப் பிடிக்க ஆரம்பிச்சுட்டியா? இந்த இரண்டும் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை...’’ என்று நான் சொல்லும்போதே,

‘‘சக்கர வியூகம் கத்துக்கிட்ட அபிமன்யூ மாதிரி, மியூச்சுவல் ஃபண்ட் உள்ளே போகக் கத்துக்கிட்டு வெளியில் வரத் தெரியலைன்னா எப்படி... இதில் போட்ட பணத்தை எப்படி வெளியில் எடுப்பது? அதைச் சொல்லுங்க..!’’ என்றாள்.

‘‘சொல்றேன்...’’ என்றேன். \ இன்னும் கொழிக்கும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism