Published:Updated:

பங்குப் பரிந்துரை

பங்குப் பரிந்துரை

பங்குப் பரிந்துரை

பங்குப் பரிந்துரை

Published:Updated:
பங்குகள்
பங்குப் பரிந்துரை
 

 

பில்டிங், ரயில், பேங்க்...

வாங்க நல்ல பங்கு!

ந்தப் பங்குகள் ஜூன் 26\ம் தேதி, பங்குச் சந்தை வணிகம் முடிந்த நிலையில் உள்ள நிலவரப்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இங்கே பரிந்துரைக்கப்படும் விலையைவிட குறைவான விலையிலும் இந்தப் பங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கவனித்து முதலீடு செய்யுங்கள்.

இங்கர்சால் ராண்ட் (இந்தியா)

( INGERRAND ) ரூ 230.75

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குப் பரிந்துரை

ட்டுமானம் மற்றும் சுரங்கம் தோண்டும் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் பல்வேறு திறனில் கம்ப்ரஸர்கள் போன்றவை இங்கு தயாராகிறது. இன்று இந்திய கம்ப்ரஸர் சந்தையில் 35%-க்கும் மேலாக பங்கு வகிக்கும் மார்க்கெட் லீடர்! இதற்கு தற்போது 4 கம்ப்ரஸர் உற்பத்திக் கூடங்கள் உள்ளன. ஓ.என்.ஜி.சி, ஐ.பி.சி.எல், போன்ற பல முன்னணி நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்கள்.

பெங்களூரில் பதிவு அலுவலகம் கொண்டுள்ள அமெரிக்க நிறுவனத்தின் இந்திய கிளையாக 85 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. தற்போது, இதன் 74% பங்குகளை தாய் நிறுவனம் வைத்திருக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் இதன் பங்குகளைப் பொதுமக்களிடமிருந்து ரூ. 344.95-க்கு தாய் நிறுவனம் திரும்ப வாங்கியது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் குளிர்பதன சாதனங்கள் இறக்குமதி செய்து விற்கும் தொழிலை தன் துணை நிறுவனத்திடம் விற்பனை செய்துவிட்டு, முக்கியப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்த முடிவுசெய்தது.

இன்றைக்கு அடிப்படை கட்டமைப்புப் பணிகளில் காட்டப்படும் ஆர்வம், வேகம் போன்றவற்றைக் கவனித்துப் பார்த்தால்... இதன் விற்பனை, வரும் நாட்களில் நன்றாக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. ஓராண்டு அடிப்படையில் இந்தப் பங்குகள் நல்ல முன்னேற்றத்தைத் தரும்.

கலிந்தி ரயில் நிர்மான் இன்ஜினீயர்ஸ்

( BSE-KALINDRA ) ரூ. 83.10

பங்குப் பரிந்துரை

ந்திய ரயில்வே துறைக்கான சிக்னலிங் மற்றும் தொலைத் தொடர்பு வசதிகளை அமைத்துத்தரும் நிறுவனம் இது. இதன் தலைமையகம் புதுடெல்லி. நாடு முழுவதுமுள்ள மீட்டர்கேஜ் ரயில் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்றுவதில் தொடங்கி, புதிய ரயில் பாதை அமைத்துத் தருவதுவரை பல்வேறு பணிகளில் பங்களித்து வருகிறது.

ரயில் தண்டவாளங்களின் கீழ் கருங்கல் ஜல்லி கொட்டும் முறையை முற்றிலும் தவிர்க்கும் புதிய டெக்னிக்கை, மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே ரயில்பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது 551 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பணிகள் இந்நிறுவனம் வசம் உள்ளன.

தொலைத்தொடர்பில் ஆப்டிகல் ஃபைபர், ஒயர்லஸ் நெட்வொர்க்கிங் போன்றவற்றிலும் தன் திறமையை நிரூபித்துள்ளது.

இதுதவிர, சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுடன் சேர்ந்து 102.7 கோடி ரூபாய் பணிக்கான கான்ட்ராக்ட்டைப் பெற்றுள்ளது. இன்ஜினீயரிங் துறையைச் சேர்ந்த இந்தப் பங்கின் தற்போதைய பி/இ விகிதத்தை, இந்தத் துறைக்கான சராசரி பி/இ விகிதமான 18\உடன் ஒப்பிடும்போது இதன் விலை இன்னும் நல்ல முன்னேற்றம் காணலாம்.

5 கோடி ரூபாய் என்ற மிகச்சிறிய பங்கு மூலதனம் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் பங்குகள், பங்கு முதலீட்டாளர்களிடையே இன்னும் பிரபலம் ஆகவில்லை. அதோடு, மும்பை பங்குச் சந்தையில் மட்டுமே விற்பனையாகி வருகிறது. இதனால், நினைத்தபோது தேவையான அளவு பங்குகளை வாங்குவதிலோ, உடனடியாக அனைத்தையும் விற்பதிலோ சிரமம் இருக்கும். ஆனால், இந்நிறுவனம் கையில் வைத்திருக்கும் ஆர்டர்கள், சிறப்பான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ள துறையில் செயல்படுவது போன்றவற்றைக் கருத்தில்கொண்டு பார்க்கையில், நீண்டகால அடிப்படையில் இந்தப் பங்குகளை வாங்குவது நல்ல லாபத்தைப் பெற்றுத்தரும் என உறுதியாகச் சொல்லலாம்.

பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா

( MAHABANK ) ரூ. 19.70

பங்குப் பரிந்துரை

ந்தப் பங்குகளை வாங்கலாம் என்று, ஜனவரி 1-15 இதழில் பரிந்துரை செய்திருந்தோம். 2005 டிசம்பர் 27\ம் தேதி நிலவரப்படி ரூபாய் 31.10 என்ற விலை இருந்தது. அதன்பின் அதிகபட்சமாக ரூ. 40.65 வரை உயர்ந்திருந்தது. அதன்பிறகு மே மாதம் பங்குச் சந்தையில் வீசிய ‘சுனாமி’யின் தாக்கத்தால் ஜூனில் 20 ரூபாய் அளவில் விற்பனையாகிக்கொண்டு இருந்தது. அப்போது, ஜூன் 16-30 தேதி இதழில் இந்தப் பங்குகளை விற்றுவிடும்படி பரிந்துரைத்தோம்.

கடந்த மார்ச்சுடன் முடிந்த நான்காவது காலாண்டில் கூட நஷ்டத்தில் இருந்த இந்த வங்கி, கடந்த முழு நிதியாண்டில் இது 52.33 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. இப்போது ஜூன் 30 உடன் முடிந்த முதல் காலாண்டிலேயே லாபம் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளது. மூன்று மாத காலத்தில் 60.96 கோடி நிகர லாபம் பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட கடன் கொள்கை அறிவிப்பின்படி வரும் நாட்களில் வங்கிகள் இன்னும் அதிக லாபம் அடைய வாய்ப்புகள் உருவாகியுள்ளதால் இன்றுள்ள விலையில் இந்த வங்கிப் பங்குகள் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. இப்போதே இதை வாங்கிவைத்தால் லாபம் தரும்.

கடந்த நிதியாண்டின் நிகர லாபத்தைக் கணக்கில்கொண்டு பார்க்கும்போது இதன் ஒரு பங்கு லாபம் 1.22. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பெற்ற அதே அளவு லாபத்தை மீதியுள்ள 3 காலாண்டுகளிலும் ஈட்டுமானால், வரும் முழு நிதியாண்டுக்கு உத்தேசமாக 5.6 ரூபாயை பெறும் எனச் சொல்லலாம்.

வரும் நாட்களில் இந்த வங்கியின் பங்குகள் விலை உயர வாய்ப்புகள் இருப்பது நன்றாகவே தெரிகிறது. ஓராண்டு அடிப்படையில் இந்தப் பங்குகள் சிறப்பான லாபம் ஈட்டித்தரும் எனச் சொல்ல முடிகிறது.

பங்குப் பரிந்துரை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism