Published:Updated:

இண்டஸ்ட்ரி - தொட்டப் பயிர்

இண்டஸ்ட்ரி - தொட்டப் பயிர்

இண்டஸ்ட்ரி - தொட்டப் பயிர்

இண்டஸ்ட்ரி - தொட்டப் பயிர்

Published:Updated:
பங்குகள்
இண்டஸ்ட்ரி - தொட்டப் பயிர்
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இண்டஸ்ட்ரி - தொட்டப் பயிர்

சிக்கல் இருந்தாலும் ஸ்ட்ராங்தான்!

இண்டஸ்ட்ரி - தொட்டப் பயிர்

வரெஸ்ட் மலை உச்சியில் ஏறிய டென்சிங்கும், ஹில்லாரியும் அங்கேயும் ஒரு டீக்கடை இருப்பதைப் பார்த்து அதிர்ந்துவிட்டார்களாம். நம் ஊர் மக்களின் டீ தாகத்தை மிகைப்படுத்திச் சொல்லப்படும் நகைச்சுவை இது! ஆனால், நம் மக்களுக்கு டீ மீது இருக்கும் மோகத்தைப் பார்க்கும்போது, இதில் மிகைப்படுத்தல் ஏதுமில்லை என்றுதான் தோன்றுகிறது.

தேயிலைப் பயன்பாட்டில் மட்டுமல்ல... உற்பத்தியிலும் உலக அளவில் முன் வரிசையில் இருக்கிறது இந்தியா. குளிர்ந்த சீதோஷ்ண நிலைகொண்ட மலைப்பகுதிகளில்தான் தேயிலை பயிரிட முடியும். காபி, ரப்பர், மிளகு, ஏலக்காய் போன்ற இன்னும் சில தோட்டப் பயிர்களும் இதே சீதோஷ்ண நிலையில் விளைகின்றன. எனவே, தேயிலைத்துறை என்றாலே இவற்றையும் உள்ளடக்கியதுதான்! பொதுவான சில குணங்கள் இருப்பதால் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் பல நிறுவனங்கள், மற்ற தோட்டப் பயிர் வளர்ப்பிலும் ஈடுபடு கின்றன.

இந்திய தேயிலைச் சந்தையின் ஆண்டு சராசரி மதிப்பு 10 ஆயிரம் கோடி ரூபாய் என்கிறது ஒரு புள்ளி விவரம். ஆண்டுக்கு சுமார் 7.5 லட்சம் டன் தேயிலை, உள்ளூர் தேவைகளுக்காகப் பயன்படுத்தப் படுகிறது... கணிசமாக ஏற்றுமதியும் ஆகிறது.

செடிகளை வளர்த்து, சரியான பருவத்தில் இலை பறித்து, பதப்படுத்தி, உதிரித் தேயிலையாக மொத்தமாக ஏலத்தில் விற்பது, பதப்படுத்திய தேயிலையை அழகாக பேக் செய்து நேரடியாக விற்பது என்று இந்தியச் சந்தையில் இரண்டு பெரிய பிரிவுகள் உள்ளன.

முன்னால் சொன்ன சந்தைக்கு ஹாரிசன் மலையாளம், ஜெயஸ்ரீ போன்ற நிறுவனங்கள் உதாரணம் என்றால்... பின்னதற்கு டாடா டீ போன்றவற்றைச் சொல்லலாம். பணத்தின் மொத்த மதிப்பு ரீதியில் முந்தையது பெரியது என்றால், லாப விகிதத்தில் முன்னிலை பெறுவது இரண்டாவதுதான். இதனால், இரண்டாம் வகை பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள்தான் பொதுவாக பங்கு முதலீட்டாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதாக உள்ளன.

தேயிலையைப் பொறுத்தவரை, ஒரு தோட்டத்தில் வளரும் செடிகளின் முதிர்ச்சியைப் பொறுத்து அறுவடை அளவு மாறுபடும். செடிகளின் வயது ஏற... ஏற விளைச்சல் குறையும். இந்தியாவில் உள்ள பல தோட்டங்களின் செடிகள் தாத்தா, பாட்டி ரகத்தைச் சேர்ந்தவைதான். டார்ஜிலிங் மலைத்தோட்டத்தின் பெரும்பாலான தேயிலைச் செடிகள் 80 வயதைக் கடந்துவிட்டதால், விளைச்சல் குறைந்துகொண்டே வருகிறது. 1991-ல் 14,600 டன் தேயிலை தந்த டார்ஜிலிங் தோட்டங்கள், இப்போது 9,600 டன் அளவுக்குத்தான் அறுவடையைத் தந்துள்ளன.

‘‘இப்படிப் பல தோட்டங்களின் நிகர அறுவடை குறைவதால், புதிய இளஞ்செடிகள் நடப்படவேண்டும். அப்போதுதான் வரும் நாட்களிலாவது நல்ல அறுவடையைப் பெறவும், தேயிலைத் தோட்டங்களை லாபகரமானதாக மாற்றவும் முடியும்’’ என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள். இவ்வாறு புதிய செடிகள் ஹெக்டேர் கணக்கிலான தோட்டங்களில் நடப்படும் நிலையில் அதற்கான செலவு கணிசமானதாக இருக்கும். இதனால், தேயிலை நிறுவனங்களின் நிதிச்சுமை அதிகரிக்கும். செடிகள் ஓரளவு முதிர்ச்சியடைந்து எதிர்பார்த்த லாபத்தைத் தரத் தொடங்க சில ஆண்டுகள் ஆகும். தேயிலை மற்றும் தோட்டப் பயிர் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்பவர்கள் இதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அதேசமயம், புதிய செடிகளை நடும் செலவுகளுக்கு கணிசமான வங்கிக் கடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது கொஞ்சம் ஆறுதல்!

இந்த வகை கடன்கள் அநேகமாக அடுத்த ஆண்டு ஜனவரி வாக்கில் தயாராகிவிடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் புதிய மிளகு பயிர் வளர்க்க 400 கோடி ரூபாயும், 90 ஆயிரம் ஹெக்டேரில் காபி பயிரிட 600 கோடி ரூபாயும், 50 ஆயிரம் ஹெக்டேரில் ரப்பர் செடி வளர்க்க 500 கோடி ரூபாயும் தேவைப்படுமாம். இதுதவிர, ஏற்கெனவே ‘ ஸ்பெஷல் பர்ப்பஸ் டீ ஃபண்ட் ( Special purpose tea fund )’ எனப்படும் 4,760 கோடி ரூபாய் மதிப்பிலான நிதித் தொகுப்பு ஒன்றை, தேயிலைத் தோட்டங்கள் மறு சீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கும் அறிவிப்பைச் செய்திருக்கிறது மத்திய அரசு.

இண்டஸ்ட்ரி - தொட்டப் பயிர்

ஆனால், பல்வேறு காரணங்களால் நடப்பு ஆண்டுக்காக கடந்த பட்ஜெட்டில் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது என்னவோ வெறும் 100 கோடி ரூபாய்தான். வங்கிகள் 500 கோடி ரூபாயை ஒதுக்கும் எனத் தெரிகிறது. ஆனால், இது ஒரு சில தேயிலைத் தோட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க மட்டுமே பயன்படும். இதுதவிரவும் தோட்டப் பயிர் களுக்கு வங்கி மூலம் வழங்கப்படும் கடன் களில் 40% வரை மானியம் வழங்கும் நடை முறை ஒன்று உண்டு. 1968 முதல் இருந்துவந்த இம்முறை, 1990-களில் 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுவிட்டது. இதை மீண்டும் 40% அளவுக்கு அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. எஸ்.பி.டீ.எஃப் திட்டத்தின்படி தரப்படும் 30% மானியம் கவர்ச்சியான விஷயம். இதற்குப் பலன் கிடைத்தால் புதிய செடிகள் நடுவதற்குப் பல தேயிலைத் தோட்டங்களும் தயாராகும்.

அடுத்து, தேயிலை நிறுவனங்களின் லாப விகிதத்தைப் பாதிக்கும் இன்னொரு முக்கிய அம்சம் தேயிலை மீதான வரி விகிதம். பொதுவாகவே அடிக்கடி ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும் விஷயமாக உள்ளது. இதனால், நடைமுறையில் இருக்கும் வரி விகிதத்தைப் பொறுத்து தேயிலை நிறுவனங்கள் தங்களது திட்டங் களை வகுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

நாட்டில் தேயிலை மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படும் அஸ்ஸாம் மாநிலத்தில், அண்மையில் பொது ஏலம் மூலம் அல்லாமல், தனிப்பட்ட வகையில் விற்பனை செய்யப்படும் தேயிலை மீதான வரியை அரசு அதிகரித்துள்ளது. 1% என இருந்த இந்த வரி, 2% அளவுக்கு உயர்த்தப்பட்டது.

இன்னொருபுறம் உதிரி தேயிலைத் தூள் மீதான வரி 12.5% என்ற ‘வாட் வரி’ லிமிட்டில் இருந்து 4% என்ற அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல கடந்த வாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டிலும்கூட தேயிலை மீதான விற்பனை வரி குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விஷயங்களும் டீ விற்பனையை, அதையட்டி தேயிலை நிறுவனங்களின் லாப நஷ்டங்களைப் பாதிக்கும் அம்சமாக உள்ளது.

உள்நாட்டுச் சந்தை நிலவரம் இப்படியிருக்க, ஏற்றுமதியிலும்கூட குறிப்பிடத்தக்க பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது தேயிலை! உலகச் சந்தையில் இந்தியாவுக்குப் போட்டியாக நிற்பது சீனா, இலங்கை, கென்யா போன்ற நாடுகள்தான். தரத்திலும் உற்பத்தி அளவுகளிலும் கடந்த சில ஆண்டுகளாக இலங்கைத் தேயிலை உயரத்தில் நிற்கிறது.

முஸ்லிம் நாடுகளில்தான் கணிசமான தேயிலை பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் உலகில் இரண்டாவது அதிக தேயிலை பயன்படுத்தும் நாடு. ஆனால், அங்கு தேயிலை உற்பத்தி குறிப்பிடும்படி இல்லை. எனவே, அங்கிருக்கும் வாய்ப்புகளை இலக்காக வைத்து, ஆர்வத்தோடு செயல்பட்டுவருகிறார்கள் இந்தியத் தேயிலை விற்பனையாளர்கள்.

இருந்தாலும் அரசியல் சிக்கல்களால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான சூழல் இல்லை. உலகச் சந்தையில் இவர்கள் சந்திக்கும் இன்னொரு பிரச்னை ‘நான்-டாரிஃப்’ தடைகள். இந்தியாவிலிருந்து டீ இறக்குமதி செய்வதைத் தடுக்க விரும்பும் நாடுகள், அதன்மீது நேரடியாக இறக்குமதி வரி விதிக்காமல், உள்ளூர் உற்பத்திக்கு அதிக மானியம் வழங்குவது, ‘ஆன்டி டம்பிங் டூட்டி’ என்ற பெயரில் வரி விதிப்பது, உற்பத்தி சூழல் குறித்து நிபந்தனை விதிப்பது போன்ற மறைமுக மாற்று வழிகளைக் கையாள்கின்றன.

இண்டஸ்ட்ரி - தொட்டப் பயிர்

தேயிலைக்கு மட்டுமின்றி, உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படும் மற்ற தோட்டப்பயிர் வகைகள், மற்ற பழ வகைகள் பலவற்றிலும் இந்தச் சிக்கல் தொடர்கிறது. உலக வர்த்தக அமைப்பு போன்ற சர்வதேச அரங்குகளில் இந்தியாவுக்குக் கிடைத்துவரும் வலு போன்றவற்றால் வரும் நாட்களில் இந்தப் பிரச்னைகளில் இருந்து தீர்வுகிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்து, இந்தியத் தேயிலை தோட்ட நிர்வாகம் இன்னொரு மிகப் பெரும் தலைவலி! பொதுவாக மற்ற நாட்டு தேயிலைத் தோட்டங்களோடு ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் தொழிலாளர் செலவு மிக அதிகமாக உள்ளது. இதை சமாளிக்க டாடா நிறுவனம் ஒரு யுக்தி யைக் கையாளத் தொடங்கியது. இதன்படி நிர்வாகத்தை, அதன் தொழிலாளர்களிடமே ஒப்படைத்தது. நிர்வாகத் தில் பங்களித்தால் ‘தொழிலாளர்களின் மெத்தனப் போக்கு, திறமையின்மை, பொறுப்பின்மை போன்ற வற்றால் ஏற்படும் நஷ்டங்களைத் தவிர்த்துவிடலாம்’ என்பது அவர்களது திட்டம். இப்போது பல தேயிலைத் தோட்டங்களில் இந்த அணுகுமுறை தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. இது நாளடைவில் லாபத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தோட்டப் பயிர் நிறுவனங்களைப் பாதிக்கும் இன்னொரு விஷயம் பருவ மழை. இவை பெரும்பாலும் இயற்கை மழையை நம்பித்தான் இருக்கின்றன. சமவெளிப் பகுதிகளில்போல மாற்று நீர்ப்பாசன வசதிகள் செய்வது இப்பிரதேசங்களில் எளிதானதல்ல! எனவே, பருவமழை பொய்க்கும் காலங்களில் இந்த நிறுவனங்கள் சிரம திசையைச் சந்திக்க வேண்டிவரும். இதுதவிர, இத் துறையின் வலிமையான நிறுவனங்கள் சில மற்றவர் களது தேயிலைத் தோட்டங்களை வாங்க முனைவதும் இப்போது இயல்பான விஷயமாக மாறிவருகிறது.

அவ்வகையில் ஜெயஸ்ரீ டீ நிறுவனம் அஸ்ஸாமில் சில தோட்டங்களை வாங்க முயல்வதைக் குறிப்பிடலாம். இப்படிச் சிறு நிறுவனங்களிடம் இருக்கும் தோட்டங்கள் பெரிய நிறுவனங்களின் கைக்கு மாறும் போது, ஒட்டுமொத்த உற்பத்தித்திறன் அதிகரித்து இதனால் நிறுவனங்களின் லாபமும்கூடும் எனச் சொல்லலாம்.

மொத்தத்தில் டீ இண்டஸ்ட்ரி ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism