Published:Updated:

பங்குப் பரிந்துரை

பங்குப் பரிந்துரை

பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்
பங்குப் பரிந்துரை
 

 

52 வாரம் அமோக லாபம்!

ந்தப் பங்குகள் 11\ம் தேதி பங்குச் சந்தை வணிகம்
முடிந்தநிலையில் உள்ள நிலவரப்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இங்கே பரிந்துரைக்கப்படும் விலையைவிட குறைவான
விலையிலும் இந்தப் பங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதனால் விலை குறைந்திருந்தால்,
அதைக் கவனித்து முதலீடு செய்யுங்கள்.

பங்குப் பரிந்துரை
பங்குப் பரிந்துரை

மு ருகப்பா குரூப்பில் இப்போது இருக்கும் ஈ.ஐ.டி.பாரி, 200 வருடங்களுக்கு முந்தையது. 1842\ல் இந்தியாவின் முதல் சர்க்கரை உற்பத்தி ஆலையை தமிழகத்தின் நெல்லிக்குப்பத்துக்கு அருகில் உள்ள வண்டிபாளையத்தில் தொடங்கியது. 1981\ல் முழுமையாக முருகப்பா குழுமத்தின் கட்டுப் பாட்டுக்கு வந்த ஈ.ஐ.டி பாரி, 1997 முதல் நெல்லிக்குப்பத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் கரும்புச் சக்கையில் இருந்து மின்உற்பத்தி செய்யும் பணியையும் தொடங்கியது.

புதுக்கோட்டையில் ஒரு சர்க்கரை ஆலை, பெங்களூரில் அதிநவீன ஆராய்ச்சிக் கூடம், ராணிப்பேட்டையில் சானிட்டரி வேர்ஸ் உற்பத்தி, எண்ணூரில் உர உற்பத்தி என்று கிடுகிடுவென்று வளர்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கியது. இன்றைய நிலையில் தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த சர்க்கரையில் சுமார் 20% இந்த நிறுவனத்தால்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்றுமதியிலும் ஈடுபட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ‘பாரிவேர்’ எனப்படும் சானிட்டரிவேர்ஸ் தயாரிப்புப் பிரிவை தனியாகப் பிரித்துவிட்டது. இப்போது நாளன்றுக்கு 8 லட்சம் டன் கரும்பு உற்பத்தியுடன், 240 கிலோலிட்டர் ஆல்கஹால் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. ஓராண்டு அடிப்படையில் இந்தப் பங்குகளில் முதலீடு செய்வது மிக நல்ல வளர்ச்சி பெறும் என உறுதியாகச் சொல்லலாம்.

இந்திய சர்க்கரை நிறுவனங்களின் சராசரி பி/இ விகிதமான 15 என்ற அளவோடு ஒப்பிடும்போது இந்தப் பங்குகள் இன்னும் நல்ல விலை உயர்வைத் தொட வாய்ப்புள்ளது.

பங்குப் பரிந்துரை
பங்குப் பரிந்துரை

ட்டல் லீலா வென்ச்சர் மும்பை, கோவா, பெங்களூர், கோவளம், உதய்ப்பூர் போன்ற இடங்களில் பிரமாண்ட 5 நட்சத்திர ஓட்டல்களைக் கொண்டுள்ளது. இவைதவிர கேரளாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக வளர்ந்துவரும் குமரகத்தில் கூட்டு அடிப்படையில் ஓர் ஓட்டலை நடத்தி வருகிறது. வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்க, கனடா நாட்டின் ஃபோர் சீஸன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.

இப்போது இந்தியாவில் காணப்படும் தொழில்துறை வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆர்வத்தால் இந்த ஓட்டல் அனைத்தும் தொடர்ந்து நல்ல விருந்தினர் வருகையைக் கண்டுவருகிறது. ‘விஷன் ஓட்டல் அண்ட் ரிசார்ட்ஸ்’ என்ற தன் துணை நிறுவனத்தை 2004\ல் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதே ஆண்டில் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக 180 கோடி ரூபாய் வரை திரட்டும் நோக்கத்தோடு பங்குகளாக மாற்றத்தக்க கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது.

இதுதவிர 2005-ல் சென்னை, ஹைதராபாத் மற்றும் பூனா ஆகிய முக்கிய நகரங்களில் புதிய ஓட்டல் அமைக்கும் பணிகளைத் தொடங்கியது. இவைதவிர, டெல்லிக்கு அருகில் உள்ள குர்கானிலும் ஒரு ஓட்டலின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ளது.

இன்றைக்கு சுற்றுலாத்துறையில் காணப்படும் சுறுசுறுப்பு, இந்நிறுவனத்தின் இடத்தேர்வு, பிஸினஸ் ஒப்பந்தங்கள் போன்றவற்றின் பின்னணியை வைத்துப் பார்க்கும்போது இந்நிறுவனம் வரும் நாட்களில் இன்னும் சிறப்பாகச் செயல்படும். ஓராண்டு அடிப்படையில் இந்நிறுவனத்தில் செய்யப்படும் முதலீடு, மிக நல்ல வருவாயை ஈட்டித் தரும் என நம்பலாம்.

பங்குப் பரிந்துரை
பங்குப் பரிந்துரை

ர்க்கிட் கெமிக்கல்ஸ் 100 சதவிகித ஏற்றுமதி அடிப்படையிலான மருந்துகளின் மூலப்பொருள் உற்பத்தி நிறுவனமாக 1992-ல் தொடங்கப்பட்டது. இன்று இந்தியாவின் 11-வது பெரிய மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனமாக திகழ்கிறது. சர்வதேச அளவில் தரத்துக்காகவும், புதுமைக்காகவும் நன்கு அறியப்பட்ட மூலப் பொருள் உற்பத்தியாளராக இருக்கிறது.

அதுமட்டுமின்றி, மருந்து மாத்திரைகள் உற்பத்தி செய்யும் பணியையும் தொடங்கிவிட்டது. இதுதவிர புதிய மருந்துப் பொருள் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிப் பணிகளில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

மூல மருந்து பொருள் உற்பத்திக்காக சென்னையை அடுத்த ஆலத்தூர் மற்றும் ஒளரங்காபாத்தில் இரண்டு ஆலைகளும், நேரடியாக உள்கொள்ளும் வகை மருந்து உற்பத்திக்கு ஆலந்தூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டையில் தொழிற்கூடங்களையும், புதிய மருந்துப் பொருள் ஆராய்ச்சிக்கு சோழிங்கநல்லூர் மற்றும் இருங்காட்டுக் கோட்டையில் அதிநவீன சோதனைச் சாலைகளும் கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவிலும் இந்நிறுவனத்தின் கூட்டு ஆராய்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன.

இப்படிப் பல ஆராய்ச்சிகளில் வெற்றிகண்டு, பல புதிய மருந்துப் பொருட்களுக்கு சர்வதேச பேட்டன்ட் பெற்றுள்ளது. இதுவரை பேட்டன்ட் உரிமை கேட்டு விண்ணப்பித்துள்ள 360 மருந்துகளில் 42-க்கான காப்புரிமையைப் பெற்றுள்ளது. மற்றவை பரிசீலனையில் உள்ளன.

இந்நிறுவனம் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளையும், சர்வதேச சந்தையில் இதன் பொருட்களுக்கு இருக்கும் தேவைகளையும் கருத்தில் கொண்டு பார்க்கையில், அடுத்த ஓராண்டில் இந்நிறுவனப் பங்குகள் நல்ல வளர்ச்சி காணும் எனச் சொல்ல முடிகிறது.

பங்குப் பரிந்துரை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு