Published:Updated:

தரகர் டிப்ஸ் - ‘மந்தநிலை நீடிக்கும்

தரகர் டிப்ஸ் - ‘மந்தநிலை நீடிக்கும்

பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்
தரகர் டிப்ஸ் - ‘மந்தநிலை நீடிக்கும்
 

 

‘‘மந்தநிலை நீடிக்கும்!’’

தரகர் டிப்ஸ் - ‘மந்தநிலை நீடிக்கும்

ரா ன்பாக்ஸி குழுமத்தின் பங்குத்தரகு நிறுவனம் ரெலிகர். தென்னிந்தியாவில் சுமார் 79 கிளை அலுவலகங்கள் கொண்ட இந்த நிறுவனம், பங்கு வர்த்தகம், ஃபோர்ட் ஃபோலியோ மேனேஜ்மென்ட், மியூச்சுவல் ஃபண்ட், கமாடிட்டீஸ் டிரேடிங், ஃபியூச்சர் அண்ட் ஆப்ஷன் மார்க்கெட் போன்ற பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இதன் தென்னக பொறுப்பாளர் எஸ்.அமர்நாத் பேசுகிறார்.

தரகர் டிப்ஸ் - ‘மந்தநிலை நீடிக்கும்

‘‘அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் உட்பட, யாருக்குமே சந்தையின் திசையைக் கணிப்பது சுலபமாக இல்லை. அதற்கு உள்நாட்டு விஷயங்களில் தொடங்கி பல காரணங்கள்! மே மாதச் சரிவுக்குமுன் இந்தியாவில் பல அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பெருமளவு முதலீடு செய்திருந்தார்கள். அவர்களில் சுமார் 40% பேர் அதீத துணிச்சலுடன் கூடுதல் ரிஸ்க் எடுக்கும் ஹெட்ஜ் ஃபண்ட் வகையைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் நாட்டில் 4% வட்டியில் கிடைத்த பணத்தை வைத்து, இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்த்தார்கள். ஆனால், இப்போது அங்கே வட்டி 8% ஆக உயர்ந்துவிட்டது. அதை இந்தியாவுக்குக் கொண்டு வந்து முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றால், சுமார் 20 முதல் 22% ரிடர்ன் கிடைக்க வேண்டும். அந்த அளவுக்கு இன்றைய சந்தையில் பணம் பார்ப்பது இயலாத காரியமாக இருக்கிறது. இதுபோன்ற காரணத்தால்தான் இன்று இந்தியப் பங்குச் சந்தையில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு குறைவாக உள்ளது’’ என்ற அமர்நாத்,

தரகர் டிப்ஸ் - ‘மந்தநிலை நீடிக்கும்

‘‘இந்தியச் சந்தையில் மீண்டும் பழைய விறுவிறுப்பு ஏற்பட அடிப்படையிலேயே சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. உதாரணமாக, இந்தியாவில் மட்டுமின்றி பொதுவாக மற்ற நாடுகளிலும் வட்டி விகிதங்களில் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு தொடர்கிறது. அது தொடரும்வரை மந்த நிலை நீடிக்கத்தான் செய்யும்.

அடுத்து, சந்தை நிலையில் ஏற்றம் வர வேண்டுமெனில், பொருளாதாரச் சீர்திருத்தங்களில் அரசு இன்னும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அப்போது தான் பல தொழில்துறையிலும் அந்நிய நேரடி முதலீடுகள் இந்தியாவுக்குள் பெரிய அளவில் வரும். இந்தியாவை நம்பிக்கையுடன் பார்ப்பார்கள். தொழில்துறையில் தொடர் வளர்ச்சிக்கு உத்தரவாதமும் கிடைக்கும்.

அதன் எதிரொலியாக பங்குச் சந்தையும் மீண்டு எழும். மற்றபடி வேறெந்தக் காரணத்தாலும் இந்தியப் பங்குச் சந்தையில் குறுகியகாலத்தில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. இதேமாதிரியான நிலை தொடருமேயானால் விற்பனைக்கு வரும் பங்குகளை வாங்க அதிக ஆட்கள் இல்லாத சூழலால் சந்தை மேலும் கூடுதல் சரிவைத்தான் சந்திக்கும். அதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் அதிகபட்சமாக 8800 புள்ளிகள்வரைகூட வீழ்ச்சியடைய வாய்ப்புகள் உண்டு’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு