Published:Updated:

இன்டஸ்ட்ரி: ஓட்டலுக்கு ‘ஓ’ போடலாம்!

இன்டஸ்ட்ரி: ஓட்டலுக்கு ‘ஓ’ போடலாம்!

இன்டஸ்ட்ரி: ஓட்டலுக்கு ‘ஓ’ போடலாம்!

இன்டஸ்ட்ரி: ஓட்டலுக்கு ‘ஓ’ போடலாம்!

Published:Updated:
பங்குகள்
இன்டஸ்ட்ரி: ஓட்டலுக்கு ‘ஓ’ போடலாம்!
 

ஓட்டலுக்கு ‘ஓ’ போடலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்டஸ்ட்ரி: ஓட்டலுக்கு ‘ஓ’ போடலாம்!

பங்குகளில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா?
உங்களுக்காக துறைவாரியான அலசல் இங்கே...

ட்சத்திர ஓட்டலில் ஒருநாள் தங்கும் வாடகை, வெறும் 45 ரூபாய்! ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறதா..? இந்த கவர்ச்சிகரமான கட்டணம் இங்கு இல்லை, நேபாளத் தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில்! நேபாள அரசுக்கு எதிரான தீவிரவாத அமைப்பு களின் அச்சுறுத்தல் உள்ள ஓட்டலில் கட்டணத்தைக் குறைவாக வைத்தாலாவது டூரிஸ்ட்கள் வரமாட்டார்களா? என்ற எண்ணம்தான்.

ஆனால், இந்திய ஓட்டல்துறை, குறையேதும் இன்றி கொடிகட்டிப் பறக்கிறது.

எல்லாத் துறையிலும் சம வளர்ச்சி அடைந்துவரும் இந்தியா போன்ற நாட்டில் சுற்றுலாத் துறைக்கான வாய்ப்புகள் பற்றிக் கேட்கவேண்டுமா? கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்திய சுற்றுலாத் துறையும், இதனால் ஓட்டல் துறையும் பிரமாத வளர்ச்சி கண்டுள்ளது.

இப்போது தொடங்கியுள்ள வளர்ச்சி, அடுத்த சில ஆண்டுகளிலும் தொடர்வது மட்டுமின்றி, வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்பது கவனிக்கத்தக்கது. ஐ.டி மற்றும் அதைச்சார்ந்த சேவைத்துறை, ஃபார்மா, ஆட்டோ மற்றும் அதன் உதிரி பாகங்கள், டெக்ஸ்டைல்ஸ், ரீடெய்ல் போன்ற துறைகள் கடந்த சில ஆண்டுகளாகக் கண்டுவரும் வளர்ச்சியும், வரும் ஆண்டுகளில் பெற இருக்கும் வாய்ப்புகளும் ஓட்டல் மற்றும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக இருக்கிறது.

இன்டஸ்ட்ரி: ஓட்டலுக்கு ‘ஓ’ போடலாம்!

மத்திய மற்றும் மாநில அரசுகள், அடிப்படை கட்டமைப்புத் துறை களில், குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களை வலுப்படுத்துவதிலும் விரிவாக்குவதிலும் காட்டும் தீவிர அக்கறை, புதிய சிறு விமான நிலையங்களை அமைப்பதில் காட்டும் முனைப்பு போன்றவை இந்திய ஓட்டல் துறை வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கிறது.

இதுதவிர, அண்மையில் மத்திய அரசு பல நாடுகளிலும் தொடங்கியுள்ள, இந்திய சுற்றுலா பற்றிய விழிப்பு உணர்ச்சித் திட்டங்கள் வரும் நாட்களில் மிகப்பெரிய அளவு சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சில் ( World Travel & Tourism Council ) அமைப்பு தரும் தகவல்படி, மிக வேகமாக வளர்ந்துவரும் சுற்றுலா வாய்ப்புள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2020-ல் ஒரு கோடியைத் தாண்டும் என்கிறது உலக வர்த்தக அமைப்பு. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 39 லட்சம்தான். இதுவே முந்தைய ஆண்டைவிட 23 % கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் மட்டும் கடந்த ஆண்டில் 2,600 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைத்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங் களும் சுற்றுலாத் துறையின் வாய்ப்பு களை இன்னும் அதிகரிக்கின்றன. இதனால், வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமின்றி, உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. வரும் ஆண்டில் சுமார் 30-40 கோடி இந்தியர்கள் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வார்கள் என்கிறது இன்னொரு புள்ளிவிவரம். பொதுவாக, கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்திருக்கும் இந்தியர்களின் சம்பளம், மாறிவரும் வாழ்க்கைமுறை போன்றவை இதற்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகிறது.

நாட்டின் நான்கு திசைகளை இணைக்கும் தங்க நாற்கரச் சாலை மற்றும் நாட்டின் மற்ற பகுதிகளை இந்தச் சாலைகளோடு இணைப்பது போன்ற அரசின் திட்டங்கள் எளிதான போக்குவரத்துக்கு வழி செய்வ தால், பயணிகளின் சிரமங்கள் வெகுவாகக் குறைகின்றன.

செலவுகள் மீதான வரியை (10%) நீக்கியிருப்பதும், உள்நாட்டு பயண வரியை (15%) நிறுத்தி வைத்திருப்பதும் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும். இது ஓட்டல் செலவுகளைக் குறைத்து, நிறுவன வருமானத்தைப் பெருக்கப் பயன்படும்.

இப்படிச் சுற்றுலாவுக்கு பலவிதங்களிலும் ஏற்றதாக வளர்ந்து வருவதால்தான், இந்தியாவின் பல ஓட்டல் குழுமங்களும் முக்கிய நகரங்களிலும் கிளை பரப்ப முனைகின்றன. அதோடு, பல பன்னாட்டு ஓட்டல் குழுமங்களும் இந்தியாவில் கால்பதிக்கத் தொடங்கியுள்ளன. உதாரணமாக, ஹில்டன், ஹயட் போன்ற குழுமங்கள் இந்தியாவின் ஈஸ்ட் இந்தியா ஓட்டல் மற்றும் ஏஷியன் ஓட்டல் போன்றவற்றோடு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. ஃபோர் சீசன்ஸ் போன்ற இன்னும் சில ஓட்டல் குழுமங்கள், பொருத்தமான வேறு பார்ட்னர்களைத் தேடி வேட்டையில் இறங்கியுள்ளன.

இன்டஸ்ட்ரி: ஓட்டலுக்கு ‘ஓ’ போடலாம்!

பல புதிய ஓட்டல் கம்பெனிகள் திட்டமிடும் விரிவாக்கம், அதன்மூலமான புதிய அறைகளின் எண்ணிக்கை உயர்வு எல்லாம் 2008-ம் ஆண்டில்தான் முழுவடிவம் பெறும் எனத் தெரிகிறது. அதனால், இப்போது அதிகரிக்கும் தேவை, ஓட்டல் நிறுவனங் களின் அறை வாடகை நிர்ணயத்தில் இன்னும் கூடுதலான வருமானத்தைப் பெற்றுத்தரும் என நம்பலாம். நாட்டின் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு ஏற்ப ஓட்டல் நிறுவனங்களின் வளர்ச்சியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஒரு நாட்டின் நாணய மதிப்பின் நிலைத்தன்மை, ஓட்டல் ஒன்றின் நிகர வருமானத்தை, அதில் ஏற்ற இறக்கங்களை நிர்ணயிக்கும் விஷயங்களில் முக்கிய அம்சமாக இருக்கிறது. இது ஒருவகையில் நாட்டின் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்து வதால், இத்தகைய சூழல் ஓட்டல் துறையைப் பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு.

சில மாதங்களுக்கு முன் ‘கட்டுப்பாடற்ற முழு நாணயப் பரிமாற்ற முறை’க்கு மாறிக்கொள்ள இந்தியா திட்டமிடுவதாகச் சொல்லப்பட்டது, எல்லோராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது. காரணம், அந்த முறைக்கு மாறும் நாடுகள் அடிப்படை பொருளாதார வலுப்பெற்ற நாடுகளாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை! இது பல வழிகளில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் காந்தமாகக் கருதப்படுகிறது.

ஓட்டல் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் அம்சங்களாக இவை எல்லாம் இருக்க, இந்தத் துறைக்கே உரிய சில சிக்கல்களும் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை ஓட்டல் அறையின் சராசரி வருமானமும், எத்தனை அறைகள் நிரம்பியுள்ளன என்பதும்! இவை ஒன்றை ஒன்று சார்ந்த விஷயங்கள். பெரும்பாலான ஓட்டல்கள் டிமாண்டையும் சீசனையும் பொறுத்துதான் வாடகையை நிர்ணயம் செய்கின்றன. இதுதவிர, ஒரு இடத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு நிலவரங்களைப் பொறுத்தும் கால சூழ்நிலைக்கு ஏற்பவும் வாடகை மாறுபடும். இந்த ஏற்ற, இறக்கங்கள் ஓட்டல் வருமானத்தில் நிச்சயமாக எதிரொலிக்கும்.

அதேபோல, ஓட்டல் நிறுவனங்களின் செலவு சார்ந்த அம்சங்களும் பாதிப்பை உண்டாக்குவதாக இருக்கின்றன. ஐந்து நட்சத்திர அந்தஸ்தில் ஒரு ஓட்டல் அறை அமைக்க நிலம், கட்டுமானச் செலவு, அறை அலங்காரங்கள், பிற வசதிகள் எல்லாம் சேர்ந்து பல கோடி ரூபாய் முதலீட்டைக் கேட்கிறது. இவ்வளவு பெரிய தொகை முதலீடு செய்ய பல நிறுவனங்களும் கடன் வசதியை பயன்படுத்தித்தான் ஆக வேண்டியிருக்கிறது. இந்தக் கடனுக்கு வட்டி, பணியாளர் ஊதியம், மின்சார கட்டணம் போன்ற பலவும் ஓட்டல் நிறுவனங்களின் நிரந்தரச் செலவுகள். இதுதவிர, மற்ற மாறுபடும் செலவுகள் என்பவை அறையில் தங்கும் நபர்களின் எண்ணிக்கை சார்ந்தே அமைகின்றன.

இன்டஸ்ட்ரி: ஓட்டலுக்கு ‘ஓ’ போடலாம்!

மற்ற துறைகளைப் போல, பயிற்சி பெற்ற ஆட்கள் பற்றாக்குறை, இந்தத் துறையிலும் இருப்பது பெரும் பிரச்னைதான். அதிலும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வரவை எதிர்பார்க்கும் ஓட்டல்கள் அந்தத் தரத்துக்கு ஈடு கொடுக்க, தேர்ந்த பணியாட் களைப் பெற சிரமங்களைச் சந்திக்கின்றன.

இதுதவிர, ஓட்டல் துறை நிறுவனங்கள் அரசிடம் எதிர்பார்க்கும் சில கோரிக்கைகள், சலுகைகளும் உண்டு. ஓட்டல் அமைக்க கட்டடங்கள் எழுப்பும்போது, ஒரு கிரவுண்ட் நிலத்தில் எவ்வளவு பரப்புக்கு அறைகள் அமைக்கலாம் என்பதை நிர்ணயிக்கும் உள்ளாட்சி அமைப்பு சட்டங்களில் மாற்றம் வேண்டும். இந்த விஷயத்தில் ஐ.டி நிறுவனங்கள் பெற்றுள்ளதைப் போல, கூடுதல் சலுகையை தங்களுக்கும் வழங்கவேண்டும் என்பது இவர்களுடைய கோரிக்கை. அதேபோல, தற்போது ஓட்டல் நடத்துவது ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், மற்ற தொழில்துறைக்கு மின் கட்டணங்களில் விதிக்கப்படும் கட்டணத்தைவிட கூடுதலாகத்தான் வசூலிக்கப் படுகிறது. இந்த கட்டணம் குறைக்கப்பட்டால், தங்கள் செலவுகளில் கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடியும்’’ என்கிறார்கள் தென்னிந்திய ஓட்டல்கள் சங்கத்தினர். இது கட்டாயமாக ஓட்டல் நிறுவனங்களின் லாபத்தில் பிரதிபலிக்கும்.

அடுத்து, கடந்த மாதத்தில் மத்திய அரசு வருமான வரிச்சலுகை அளிக்கும் அம்சங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்த யோசித்து வருகிறது. அதற்காக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வரைவுபட்டியலில், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை பயணச் செலவுக்கான சலுகை மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஆண்டு வரைகூட இந்தத் தொகை, வருமான வரிச்சலுகை பெற்று வந்தது. ஆனால், இது தொடர்ந்து கிடைப்பது அரசு எடுக்க இருக்கும் முடிவு களில்தான் உள்ளது. நேற்றுவரை இந்தச் சலுகையை பெற முடியும் என்ற காரணத்துக்காகவாவது குடும்பத் துடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது பயணம் சென்றவர்கள், இனி இந்தச் சலுகை இல்லை என்றால், தங்கள் பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வாய்ப்புகள் உண்டு! இது ஓட்டல் நிறுவனங்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்களில் ஒன்று.

பொதுவாக ஓட்டல் துறையில் ஒரே ஒரு லாஜிக் தான். அதிக அறைகளில் ஆட்கள் தங்கியிருந்தால் அந்த ஹோட்டலின் லாபம் அதிகரிக்கும். காலியாக இருக்கும் அறைகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க அந்த ஓட்டல் நிறுவனத்தின் செலவு விகிதம் உயர்ந்து, நஷ்டக் கணக்கும் அதிகரிக்கும். ஆனால், இன்றுள்ள நிலையில் இந்திய ஓட்டல் துறைக்கு இதுபோன்ற நஷ்டங்கள் வர வாய்ப்பில்லை.

சொல்லப்போனால், அடுத்த இரண்டு ஆண்டுகளும் லாபகரமானதாக இருக்கும். அதனால் ஓட்டல் நிறுவன பங்குதாரர்களுக்கு நல்ல வருமானத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism