Published:Updated:

‘‘மிக நல்ல வாய்ப்பு இது!’’

‘‘மிக நல்ல வாய்ப்பு இது!’’

‘‘மிக நல்ல வாய்ப்பு இது!’’

‘‘மிக நல்ல வாய்ப்பு இது!’’

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
‘‘மிக நல்ல வாய்ப்பு இது!’’
 

‘‘மிக நல்ல வாய்ப்பு இது!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘மிக நல்ல வாய்ப்பு இது!’’

‘டா ர்லிங்’ எனச் செல்லமாக மடியில் வைத்து பங்குச் சந்தையைக் கொஞ்சிக்கொண்டிருந்த சிறுமுதலீட்டாளர்கள் குப்புறக் கவிழ்ந்து கிடக்கிறார்கள்... ‘பங்குச் சந்தை பாதிப்புகள் மியூச்சுவல் ஃபண்டிலும் விளைவை ஏற்படுத்துமா?’ என்ற அச்சம் பரவலாக எழுந்திருக்கிறது.

‘‘மிக நல்ல வாய்ப்பு இது!’’

இந்தச் சூழ்நிலையில் எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் முதன்மைச் செயல் அதிகாரி யான, மும்பையில் இருக்கும் மோகன்ராஜிடம் சில கேள்விகளை வைத்தோம்.

‘‘சிமென்ட், ஆட்டோ, எஃப்.எம்.சி.ஜி என பல துறை பங்குகளும் இறக்கம் கண்டுள்ள நிலையில் இன்றைய சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் நிலை என்ன?’’

‘‘சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் சிறுமுதலீட்டாளர்களுக்கு கிடைப்பதில் பல சிரமங்கள் உள்ளன. அப்படியே கிடைத்தாலும் அதை பகுத்துப் பார்த்து சரியான முடிவுகளை எடுக்கமுடியாமல் தவிக்கிறார்கள்.

இதுபோன்ற முதலீட்டாளர்கள் நேரடியாக பங்குச் சந்தையில் இறங்காமல் மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக முதலீடு செய்யலாம். அதுதான் ஆரோக்கியமானது, பாதுகாப்பானது.

ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்திருப்பவர்கள் இப்போது பதற்றப்படாமல் இருக்கவேண்டும். அவசரப்பட்டு கையில் இருக்கும் யூனிட்களை விற்க வேண்டியதில்லை. அப்படி விற்றால் நஷ்டம்தான் வரும். இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவற்றை விட்டு வையுங்கள். சில மாதங்களில், அவை மீண்டும் முன்னேற்றம் காணத் தொடங்கிவிடும். இரண்டு, மூன்று ஆண்டுகளில் நல்ல வருமானத்தைப் பெற்றுத்தரும்.

புதிதாக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கும், மேலும் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர் களுக்கும் இன்றைய சூழல் மிக நல்ல வாய்ப்பு.’’

‘‘உலோகச் சந்தையில் இருந்துதான் இந்தச் சரிவு தொடங்கியது என்கிறார்கள். ஆனால், உலோகங்களின் தேவை எந்த நாளிலும் குறையப் போவதில்லை என்பதால், இனிவரும் நாட்களில் இந்தத் துறைகளை நம்பி முதலீடு செய்வது லாபகரமாக இருக்குமா?’’

‘‘தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, அலுமினியம் என எதை எடுத்துக்கொண்டாலும், இந்திய உலோகச் சந்தை, உலக சந்தையைத்தான் சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது. நம் தேவைக்கு பெருமளவு உலோகத்தை இறக்குமதிதான் செய்கிறோம். இன்றைய நிலையில் மின்துறை, தொலைத் தொடர்புத்துறை போன்றவற்றின் தொடர்ந்த வளர்ச்சியால் தாமிரம், அலுமினியம் போன்ற உலோகங்களின் தேவை இன்னும் அதிகரிக்கும். அதனால் நீண்ட கால அடிப்படையில் கட்டாய மாக உலோகத்துறை லாபகரமாகத்தான் இருக்கும்.’’

‘‘தங்கம், வெள்ளி போன்ற வற்றில் நேரடியாகவே முதலீடு செய்ய, சிறு முதலீட்டாளர் களுக்கும் ஏற்ற தனியான மியூச்சுவல் ஃபண்ட்கள் பற்றி பேசப்படுகிறதே?’’

‘‘இந்த வகைத் திட்டங்கள் இன்னும் இந்தியாவில் உருவாகவில்லை. ஆனால், அவற்றை அனுமதிக்க அரசு கொள்கை அளவில் முடிவுசெய்துள்ளது. வழிகாட்டு நடைமுறைகளை அறிவித்தால், உடனடியாக இதைத் தொடங்கப் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். நாங்களும் இதில் இறங்க விரும்புகிறோம். அறிவிப்புக்காகத்தான் காத்திருக்கிறோம்.’’

‘‘இதேபோல, ரியல் எஸ்டேட் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களும் ஆர்வத்தைத் தூண்டிவருகிறதே?’’

‘‘ரியல் எஸ்டேட் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுவிட்டாலும் இன்னும் சிறு முதலீட்டாளர்களைச் சென்று எட்டவில்லை. அவை பெருமுதலீட்டாளர்களுக்கும், நிறுவனங்களுக் குமான திட்டமாகவே இன்னும் இருக்கின்றன. எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் இந்தத் துறையில் இன்னும் இறங்கவில்லை.’’

‘‘அஞ்சல்துறை மூலமான ஆயுள் காப்பீடு திட்டத் தில் திரட்டப்பட்ட பிரீமியத்தின் ஒருபகுதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அரசு திட்டமிட்டு வருகிறதே?’’

‘‘கூடுதல் வருமானம் பெறலாம் என்ற நம்பிக்கையில் அரசு இப்படித் திட்டமிடுகிறது. ஏற்கெனவே இந்தத் துறையில் ஈடுபட்டு வரும் மற்றவர்களின் உதவியை இந்த விஷயத்தில் நாடப்போவதாகத் தெரிகிறது. இதுகுறித்த வழிமுறைகள், சட்ட திட்டங்கள் என்ன என்பது குறித்து இன்னும் தெளிவான அறிக்கைகளை அரசு வெளியிடவில்லை. அப்படி வெளியிட்டால் அதற்கு முதலீட்டு ஆலோசனை சொல்ல... அவர்களுக்கு ஃபண்ட் மேனேஜராக இருக்கும் வாய்ப்பைப் பெற, நாங்களும் முயற்சி செய்வோம். இதுபோன்ற உள்நாட்டு முதலீடுகள் இன்னும் பெரிய அளவில் பங்குச் சந்தைக்கு வருவது, அந்நிய முதலீட்டாளர்கள் நம் சந்தை மீது ஏற்படுத்தும் பாதிப்புகளைச் சமாளிக்க பெருமளவு உதவும்.’’

‘‘புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கான ஆரம்பச் செலவுத் தொகையை, அடுத்த 5 ஆண்டு களுக்குப் பிரித்துக்கொள்ளலாம் என்றிருந்ததை செபி தடை செய்திருக்கிறதே..?’’

‘‘மியூச்சுவல் ஃபண்ட் துறையில், சில இடங்களில் நடந்து வந்த விரும்பத்தகாத செயல்களைக் கட்டுப் படுத்த கொண்டுவரப்பட்ட நடவடிக்கை இது. எல்லா மியூச்சுவல் ஃபண்ட்களும் செபியின் இந்தக் கட்டளைக்குக் கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும்! சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்’’ என்றார் மோகன்ராஜ் உற்சாகமான சிரிப்போடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism