Published:Updated:

ஒரு சந்தேகம்... ஒரு விளக்கம்!

ஒரு சந்தேகம்... ஒரு விளக்கம்!

ஒரு சந்தேகம்... ஒரு விளக்கம்!

ஒரு சந்தேகம்... ஒரு விளக்கம்!

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
ஒரு சந்தேகம்... ஒரு விளக்கம்!
 

‘‘மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய தொடரின் முதல் வாரத்தில், ‘வெறும் 58.50 ரூபாய் முதலீடு செய்தால், ஒரே வாரத்தில் 15 ரூபாய் வருமானம் எங்கு கிடைக்கும்? என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை’ என்று வெங்கியின் டைரியில், வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு வாரத்தில் 15 ரூபாய் டிவிடெண்ட் தந்தபின், அவர் முதலீடு செய்த யூனிட்களின் நிகர சொத்து மதிப்பு 59 ரூபாயிலிருந்து 44 ரூபாயாகக் குறைந்திருக்கும். இதனால், அந்த டிவிடெண்ட், அவரது பணத்தில் இருந்துதான் தரப்பட்டுள்ளது என்பதாகத்தானே அர்த்தமாகும். ஆனால், கட்டுரையில் சொல்லியபடி பார்த்தால், ஒரே வாரத்தில் 58.50 ரூபாய் இந்த அளவுக்கு வளர்ந்து, அதன்மூலமான வருமானம் 15 ரூபாய் கிடைத்துவிட்டது போன்ற தோற்றம் வருகிறது. இது சரியா..?’’

- ஆர்.மனோகர், சென்னை-6.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு சந்தேகம்... ஒரு விளக்கம்!

பு திதாக ஆரம்பிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்தால் உடனடியாக வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. நாம் செலுத்தும் பணத்தை முதலீடு செய்வது முதற்கட்டம், அதன்மூலம் வரும் வருமானத்தையும் லாபத்தையும் சேர்த்து, அதில் நிர்வாகச் செலவுகள் போக கணிசமான ஒரு பகுதியைப் பிரித்து முதலீட்டாளர்கள் கையில் டிவிடெண்டாகக் கொடுப்பது அடுத்த கட்டம். சாதாரணமாக, இதற்கு திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமாவது ஆகும். திட்ட நிர்வாகத்தைப் பொறுத்து இது சற்றே முன்பின் இருக்கலாம்.

நன்கு லாபத்தில் இயங்கும் திட்டங்கள் ஒரே ஆண்டில் பல டிவிடெண்டுகள் வழங்கியுள்ளன. ஏற்கெனவே சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள திட்டத்தில் முதலீடு செய்தால், டிவிடெண்ட் உடனடியாகக் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. இப்படியான ஒரு வாய்ப்பைத்தான் நம் தொடரின் தொடக்கத்திலே குறிப்பிடிருந்தோம்.

அதில், எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டின் வரிச் சேமிப்புச் சலுகை உள்ள ‘மேக்னம் டேக்ஸ்’ கெயின் திட்டத்தில் மார்ச் மாதம் 2-ம் தேதி முதலீடு செய்தபோது யூனிட் ஒன்றின் விலை ரூ.58.50. வாங்கிய ஒரே வாரத்தில் 150% டிவிடெண்ட் (15ரூபாய்) கிடைத்ததாகக் குறிப்பிட்டிருந்தோம்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், டிவிடெண்ட்டுக்குப்பின், கிட்டத்தட்ட அதே அளவுக்கு யூனிட் ஒன்றின் சொத்து மதிப்பு குறைந்துவிடும். ‘மேக்னம் டேக்ஸ் கெயின்’ விஷயத்திலும் அது நடந்தது.

ஆனால், அதிலும் ஒரு சிறிய ஆதாயம்... யூனிட் ஒன்றுக்கு 15 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்பட்டபின் அதன் விலை ரூபாய் 43.50 ஆகத்தானே இருக்கவேண்டும்? உண்மையில், டிவிடெண்டுக்குப் பின் யூனிட் ஒன்றின் விலை ரூ.45.25 ஆக இருந்து (அதாவது ரூ. 1.75 உபரி ஆதாயம்) விரைவாக ஏறி, ஒரு மாதத்துக்குள்ளாகவே 50 ரூபாயைத் தாண்டியது.

கணக்குப்போட்டுப் பார்த்தால், ஒரே மாதத்தில் சுமார் 6% ஆதாயம். வருடத்துக்கு... பெருக்கிக் கொள்ளுங்கள்.

இதை இரண்டு விதமாகப் பார்க்கலாம். நாம் முதலீடு செய்த பணத்தையே நமக்கு டிவிடெண்டாகத் திருப்பித் தருகிறார்கள் என்றும் சொல்லலாம். அப்படியானால் இது எல்லாத்திட்டங்களிலும் சாத்தியமா எனப் பார்க்கவேண்டும். உதாரணமாக, புதிதாக வெளியான திட்டங்களில் முதலீடு செய்தால், என்னதான் அது நம்முடைய பணமாக இருந்தாலும், உடனடியாக டிவிடெண்ட் எதுவும் எதிர்பார்க்க முடியாது.

இதேபோல பங்குச் சந்தையுடன் ஓர் ஒப்பீடு செய்தும் பார்க்கலாம். டிவிடெண்ட் அறிவித்துள்ள ஒரு நிறுவனத்தின் பங்குகளை குறிப்பிட்ட தேதிக்கு முன் வாங்கினால், அந்த டிவிடெண்ட் நமக்குக் கிடைக்கும். அதற்குப்பின் பங்கின் விலை குறைய வேண்டும். ஆனால், நடைமுறையில் அது நடக்கிறதா? டிவிடெண்டுக்குப் பின் பங்கின் விலை ஏறவும் செய்யலாம், அல்லது கணிசமாகக் குறையவும் செய்யலாம். அது அன்றைய சந்தையின் சூழலைப் பொறுத்தது.

இப்படி டிவிடெண்ட் கிடைப்பதில் வேறொரு ஆதாயமும் உள்ளது. வருமான வரி இல்லாத வருமான மாக நம் முதலீடு மாற்றப்படுகிறது. ‘மேக்னம் டேக்ஸ் கெயின்’ திட்டத்தில் நாம் போட்ட பணம் முழுவதுமே வரிவிலக்குப் பெற்றது. ஒரு சிறு கணக்கு. இத்திட்டத்தில் நாம் செய்த முதலீடு ரூ.58,500 என வைத்துக்கொள்வோம். இதன் மீது நமக்குக் கிடைத்த அதிகபட்ச வரிச் சலுகை சுமார் ரூ.17,500க்கு மேல் (30% வரி சேமிப்பு). எனவே, நம் முதலீடு ரூ.41,000தான்.

வரிவிகிதத்தைப் பொறுத்து இந்தக் கணக்கு சற்றே மாறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism