Published:Updated:

தொடர்: சிகரம் தொடுவோம்!

தொடர்: சிகரம் தொடுவோம்!

தொடர்: சிகரம் தொடுவோம்!

தொடர்: சிகரம் தொடுவோம்!

Published:Updated:
பங்குகள்
தொடர்: சிகரம் தொடுவோம்!
 

சிகரம் தொடுவோம்!

புத்திசாலிகளின் காலம் இது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்: சிகரம் தொடுவோம்!

‘நீ ங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார்’\ இதுதான் ராமனாதனின் செல்லுக்கு தொடர்பு கொண்ட செந்திலுக்குக் கிடைத்த பதில். காலையில் இருந்து நாலைந்துமுறை முயற்சித்துப் பார்த்தும் இதுபோன்ற பதிலே கிடைத்தது. அலுவலகத்தில் விசாரித்தபோது, ‘‘சார் இன்னைக்கு லீவு’’ என்றார்கள்.

மாலையில் வீட்டிலேயே போய்ப் பார்த்துவிடுவது என்ற முடிவோடு ராமனாதனின் வீட்டுக்கே சென்றார் செந்தில். ஹால் முழுக்க பேப்பர்களை பரப்பி வைத்துக்கொண்டு சீரியஸாக குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார் ராமனாதன். ‘‘இந்தச் சரிவு நிலையை எப்படி சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது என்பதைத் திட்டமிடுவதற்காக இன்னிக்கு லீவு போட்டுட்டேன். மிட்டாய் கடைக்குப் போன குழந்தை மாதிரி இருக்கிறது பங்குச் சந்தையை, பார்த்த என் நிலைமை! தொந்தரவு ஏதும் இருக்கக் கூடாதென்றுதான் செல்போனையே ஆஃப் செய்துவிட்டேன்’’ என்றபடி வரவேற்றார் ராமனாதன்.

‘எல்லோருக்குமே மிகப்பெரிய அடியைத் தந்த பங்குச் சந்தை இவருக்கு மட்டும் எப்படி உற்சாகத்தைத் தருகிறது?’ என்று மனதுக்குள் எழுந்த கேள்வியை ராமனாதனிடமே கேட்டுவிட்டார்.

‘‘செந்தில், பங்குச் சந்தையின் வீழ்ச்சியினால், நீங்கள் வாங்கிய பங்குகள் குறைந்த விலைக்குக் கிடைக்கும். இப்போது வாங்கி, பங்கு விலை சராசரியை குறைவாக்கிக்கொள்வது புத்திசாலித்தனம். உதாரணத்துக்கு, ஏப்ரல் மாதத்தில் ‘யூகோ வங்கி’யின் பங்குகளை 26.50 ரூபாய் வீதம் 100 வாங்கியிருப்பீர்கள். அது இந்த வாரம் 18.35 ரூபாய்க்கு வந்துள்ளது. இப்போது 100 பங்குகளை வாங்குங்கள்.

இப்போது உங்கள் கையில் 200 யூகோ பங்குகள் இருக்கும். ஒரு பங்கின் மதிப்பு ரூபாய் 22.40 ஆக இருக்கும். இப்படி ஆவரேஜ் செய்வதால், இழப்பைக் குறைத்து லாபத்தைப் பெருக்கமுடியும். நல்ல தரமான பங்குகள் குறைவான விலைக்குக் கிடைக்கும்போது, வாங்கிப் போட்டுவிடவேண்டும். சென்ற தடவை நீங்கள் வாங்கிய பங்குகள், இப்போது விலை குறைவாகக் கிடைக்கின்றன. ஒவ்வொன்றையும் 25 லிருந்து 50 பங்குகள் குறைந்த விலையில் வாங்கிப்போடுங்கள்” என்றார்.

தொடர்: சிகரம் தொடுவோம்!

செயில் நிறுவனப் பங்குகளை செந்தில் 82 ரூபாய்க்கு வாங்கியிருந்தார். அது 93 ரூபாயைத் தொட்டபோது, கிடைத்த லாபம் போதும் என்று முடிவெடுத்து விற்றுவிட்டார். அதில் செந்திலுக்கு நல்ல லாபம் கிடைத்தது. அதை நினைவுபடுத்திய ராமனாதன், ‘‘நீங்கள் 93 ரூபாய்க்கு விற்ற செயில் பங்குகள் இப்போது 67 ரூபாய்க்கு வந்திருக்கிறது. மீண்டும் ஏன் செயில் பங்குகளை வாங்கிப்போடக்கூடாது? இந்த காலக்கட்டத்தில் செயில் நிறுவனத்தின் செயல்பாடுகளிலோ, லாப நஷ்டங்களிலோ பெரிதாக எந்த மாற்றமுமில்லை. பங்குச் சந்தையின் மொத்தமான இறக்கத்தின் பிரதிபலிப்பாகத்தான் செயில் பங்குகளும் இறங்கியுள்ளன. அதனால், இந்தப் பங்கை, இப்போது வாங்குவதில் தவறில்லை. ஏற்கெனவே இப்பங்கின் மூலம் நீங்கள் சம்பாதித்துள்ள லாபத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்தப்பங்கின் அடக்க விலை 56 ரூபாய்க்கும் குறைவாகத்தான் வரும். செயிலில் புதிய கணக்கைத் தொடங்குங்கள்’’ என்றார்.

‘‘இது நல்ல யோசனையாக இருக்கிறதே...’’ என்ற செந்தில், ஏப்ரலில் வாங்கிய பங்குகளில் மிகக்குறைந்த விலையை அடையும்போது, ஒவ்வொன்றிலும் 25 பங்குகளை வாங்கப் போவதாகக் கூறினார். ‘‘அப்படியே பங்குகளை வாங்கும்போது அடிப்படையாக என்னென்ன விஷயங்களைக் கவனிக்கவேண்டும் என்றும் சொல்லித்தந்தால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

‘‘அடடே... முக்கியமான ஏரியாவுக்குள் நுழையத் தயாராகிட்டீங்க போலிருக்கே... சபாஷ்... அதற்கான சூத்திரங்களைச் சொல்றேன். கவனமாகக் கேட்டுக்கங்க...’’ என்றபடி சொல்ல ஆரம்பித்தார் ராமனாதன்.

£சகர்களே, இது நல்ல நேரம், ஏப்ரல் மாதத்தில் உங்களை வாங்கச் சொன்ன பங்குகளின் விலை, இன்று குறைவாக கிடைக்கிறது.

1. ராமா நியூஸ்பிரின்ட்: நீங்கள் வாங்கியதைவிட இப்போது விலை குறைந்துள்ளது. இப்போது 25 பங்குகளை வாங்குங்கள். மேலும் குறைந்தால் இன்னும் 25 பங்குகளை வாங்குங்கள்.

2. இந்திரப்ரஸ்தா மெடி: ராகுல் மகாஜன் வழக்கில் இந்த மருத்துவமனை குளறுபடி செய்துள்ளதாக ஒரு சாரார் நினைக்கின்ற னர். இதனால் இதன் விலை தற்காலிகமாக ஏறாமல் போக சாத்தியமுண்டு. கடந்த காலத்தில் பெரிய மருத்துவமனைகள் இதுபோன்ற சூழலை எதிர்நீச்சல் போட்டுச் சமாளித்துள்ளது. தைரியமிருந்தால், குறைந்த விலையில் 25 பங்குகளை வாங்குங்கள்.

3. செயில்: இந்த குறைந்தவிலையில் 10 பங்குகளை வாங்குங்கள்.

4. யூகோ வங்கி: இந்த விலையில் 25 பங்குகளை வாங்குங்கள்.

5. டாடா டெலி: இந்தப் பங்கு நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சியடையக் கூடிய வாய்ப்புள்ளது. இந்த குறைந்த விலையில் 25 பங்குகளை வாங்குங்கள்.

இப்போது உங்கள் பங்குகளின் சராசரி விலை முன்பு வாங்கியதைவிட குறைவாக இருக்கும். பங்குச் சந்தையில் ஈடுபாடுள்ளவர்களுக்கு இது வழக்கமான செயல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism