பங்குகள் |

அதிக கவனம் தேவை!
|
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அ டிமேல் அடிவாங்கி ரத்தக் களறியாக கிடக்கும் ஹீரோவுக்கு திடீரென்று ஒரு வீரம் வருமே... அதுபோல, ஜூன் 9\ம் தேதி, கீழ்நோக்கி இறங்கி கிழிந்து நாராக கிடந்த சென்செக்ஸ், கிடுகிடுவென்று 514 புள்ளிகள் ஏறியது. ‘‘எப்போதெல்லாம் மிக ஆழமான வீழ்ச்சி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இப்படியரு ஏற்றமும் இருக்கும். இதுதான் பங்குசந்தையின் இயல்பு. அதுதான் ஜூன் 9 அன்றும் நடந்திருக்கிறது’’ என்று உறுதியான குரலில் சொன்னார் ஐ.எல்-எஃப்.எஸ் இன்வெஸ்ட்மார்ட் நிறுவனத்தின் பங்கு ஆய்வு பிரிவுத் தலைவராக மும்பையில் இருக்கும் ஸ்ரீசங்கர். ‘‘இதை வைத்தே சந்தையில் இனி சுபயோக திருநாட்கள்தான் என்று சொல்லிவிட முடியாது. இன்னும் கொஞ்சம் கரெக்ஷன் பாக்கியிருக்கிறது’’ என்று எச்சரிக்கையுடன் ஆரம்பித்தார். |

‘‘நிறுவன முதலீட்டாளர்கள் பலரும் தங்களது பல்வேறு பணத்தேவைக்காக, இந்த மாதத்தின் ஆரம்ப நாட்களில் கணிசமாக பங்குகளை விற்றார்கள். உலக நாடுகள் பலவற்றில் தொடர்ந்து வட்டி விகிதங்களில் மாற்றங்கள் காணப்படுவதால், வரும் நாட்களில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் இருந்து, கடன் சார்ந்த திட்டங்களுக்கு மக்கள் கவனம் திரும்புமோ என்ற சந்தேகம் கூட எழத் தொடங்கியுள்ளது. இதன் போக்கைப் பொறுத்து தான் மியூச்சுவல் ஃபண்ட்களும், நிறுவன முதலீட்டாளர்களும் முடிவு எடுப்பார்கள். அதன் அடிப்படையில்தான் பங்குச் சந்தையின் போக்கு இருக்கும். சர்வதேச அளவில் பார்க்கும் போது, ‘பார்ட்டி டைம் ஓவர்’ என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்தியாவின் வலுவில் எந்த ஓட்டையும் இல்லை என்பதை யும் இங்கே சொல்லித்தான் ஆகவேண்டும். ஆனாலும், அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்கு சந்தையில் ஏற்றமும் சரிவும் இருந்துகொண்டேதான் இருக்கும். மற்ற பல வளர்ந்த பொருளாதார நாடுகளின் அடிப்படைகள் ஆட்டம் கண்டுள்ளதால், அவர்கள் தங்கள் நாட்டில் இருக்கும் நிறுவனங்களைவிட நமது நிறுவனங்களைத்தான் அதிகம் நம்ப வேண்டி உள்ளது. அதேசமயம், நமது நிறுவனங்கள் உள்நாட்டுத் தேவைகளை அதிகம் ஈடுசெய்யாமல், பிறநாட்டு நிறுவனங்களை, தேவைகளைச் சார்ந்தி ருந்தால், அதை இந்தச் சரிவுக்காலத்தில் தவிர்ப்பது நல்லது’’ என்ற ஸ்ரீசங்கர். ‘‘அடிப்படை வலுவுள்ளவற்றில் இந்தியத் தேவைகளுக்குப் பங்களிக்கும் நிறுவனப்பங்குகளை மட்டும் கவனித்து, நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்யலாம். இந்த நேரத்தில் நிறுவனங்கள் மற்றும் துறைகள், மிக அதிக ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும் நிச்சயமற்ற தன்மை இருப்பதால், பங்குகள் வாங்கு வதிலும் விற்பதிலும் சற்றே கூடுதல் கவனம் தேவை’’ என்றும் சொல்கிறார்.
|
