Published:Updated:

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!
 

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

வெங்கியின் மியூச்சுவல் ஃபண்ட் அனுபவ டைரி தொடர்கிறது. ‘‘அந்த கஸ்டடியன் பற்றிச் சொல்ல ஆரம்பிச்சீங்க... அதற்குள் பிரேக் விட்டாச்சு...’’ என்றபடி என் மனைவி மியூச்சுவல் ஃபண்டின் முந்தைய பேச்சை நினைவூட்டினாள்.

‘‘தங்கள் வாடிக்கையாளர்களிடம் பணத்தைத் திரட்டும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமே கஸ்டடி யனாகவும் இருந்து, பணத்தை கையில் வைத்துக் கொள்ளுமா..?’’ என்று சந்தேகம் கேட்டாள் என் மனைவி.

‘‘நல்லாயிருக்கே உன் கதை! பூனையைக் கொண்டு போய் யாராவது பாலுக்குக் காவல் வைப்பாங்களா? நான் எல்லா ஸ்பான்சர்களையும் தப்பு பண்றவங்கனு சொல்லலை! ஆனால், தங்களுடைய சுய தேவைகளுக்காக மியூச்சுவல் ஃபண்ட் பணத்தை எடுத்துப் பயன்படுத்தும் வாய்ப்பு இதில் இருக்கக் கூடாது என்பதால், இந்த நிறுவனத்தைச் சாராத ஆட்களைத்தான் கஸ்டடியனாக நியமிக்கவேண்டும் என்று செபி கண்டிஷன் போட்டிருக்கிறது.’’

‘‘அது சரி! மக்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கணுமே!’’

‘‘கரெக்ட்! ஆனால் ஸ்பான்சர்தான் இந்த கஸ்டடியன் யார் என்பதை முடிவு செய்வார்கள். அவர் கையில்தான் திரட்டப்பட்ட நிதி, அதைக்கொண்டு வாங்கப்பட்ட பங்குப் பத்திரங்கள், கடன் பத்திரங்கள் எல்லாம் இருக்கும். ஃபண்ட் மேனேஜர் வாங்கச் சொல்லும்போது வாங்குவதும், விற்கச் சொல்லும்போது விற்பதும் இவர்கள் வேலை’’ என்று சொல்லிவிட்டு, எழுந்து கிச்சனுக்குள் நுழைந்து காபி தயாரிக்க ஆரம்பித்தேன்.

‘‘அப்படியானால், இந்த ஸ்பான்சர்களுக்கு, அதான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு, எந்த பங்குகள் வாங்கப்படுகிறது, எதெல்லாம் விற்கப்படுகிறது என்பது தெரியவே தெரியாதா?’’ என்றபடி, ஃப்ரிஜ்ஜில் இருந்து பால் பாக்கெட்டை எடுத்துத் தந்தபடி கேட்டாள் என் மனைவி.

அவளுடைய ஆர்வத்தைப் பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

‘‘இவ்வளவு நுணுக்கமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டாயே... சபாஷ்’’ என்று அவள் முதுகோடு சேர்த்து மெல்ல அணைத்துவிட்டுச் சொன்னேன். ‘‘முன்பெல்லாம் பங்குப் பத்திரங்கள் சர்ட்டிஃபிகேட் வடிவத்தில் வழங்கப்படும். அந்தப் பத்திரங்களை வாங்கி வைத்து சரிபார்த்துக் கொள்வார்கள். இப்போது அப்படியில்லை, டெபாசிட்டரீஸ் எனப்படும் அமைப்பில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பெயரில் ஒரு டீமேட் கணக்கு துவங்கப்பட்டு, வரவு, செலவுகள் எல்லாமே அதில் குறித்து வைக்கப்படும். வங்கிக் கணக்குபோல செயல்படும் அதைப் பார்த்து ஸ்பான்சர்கள் அவ்வப்போது நிகர கை இருப்பைச் சரிபார்த்துக் கொள்ளலாம். ஃபண்ட் மேனேஜர், கஸ்டடியன் போன்றவர்களும் அதைப் பார்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது’’ என்று சொல்லிக்கொண்டே பால், டிகாக்ஷன் போன்றவற்றை சரிவிகிதத்தில் கலந்து, இரண்டு டம்ளர்களில் ஊற்றினேன். ‘‘ஷ§கர், அளவு பார்த்து போட்டுக்கொள்...’’ என்று சொல்லிவிட்டு கம்ப்யூட்டர் டேபிளில் உட்கார்ந்தேன்.

‘‘அப்போ அந்த ஸ்பான்சர்களுக்கு என்னதான் வேலை... முதலீடு செய்பவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு யூனிட்களைக் கொடுப்பதும், அவர்கள் யூனிட்களை விற்கும்போது பணத்தைத் திரும்பக் கொடுப்பதும் மட்டும்தானா..?’’ என்றபடி இரண்டு ஸ்பூன் சர்க்கரையை தன் டம்ளரில் போட்டுக்கொண்டு எதிரே உட்கார்ந்தாள்.

‘‘அந்த வேலையைச் செய்பவர்களுக்குப் பெயர் ரெஜிஸ்டிரார் அண்ட் ட்ரான்ஸ்ஃபர் ஏஜென்ட். இதைக்கூட பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தன்னிடம் வைத்துக்கொள்ளாமல் வெளிநிறுவனத்திடம் ஒப்பந்த முறையில் கொடுத்து விடுவார்கள். சில சமயங்களில் தங்களிடமே வைத்துக்கொண்டாலும், அதற்கென தங்களுக்குள் தனி நிறுவனத்தை உருவாக்கிக் கொள்வார்கள். அதோடு, திட்டங்களின் செயல்பாடு சம்பந்தமான தகவல்கள், ஆண்டு அறிக்கை முதலியவற்றை முதலீட்டாளர்களுக்கு அனுப்புவதும் இந்த ஏஜென்ட்களின் வேலைதான்!’’ என்று நான் சொன்னவுடன் என் மனைவியின் கண்கள் பிரகாசமாக ஒளிர்ந்தன.

‘‘அப்போ இந்த வேலைக்கு நாமகூட ஏஜென்ட் ஆக முடியுமா?’’ என்றாள்.

அவளுடைய ஆர்வக் கோளாறைப் பார்த்து எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. ‘‘அதெல்லாம் பெரிய பெரிய கம்பெனிகள் செய்யக் கூடிய வேலை. தனிநபர்களால் அது சாத்தியப்படாது. உன்னை மாதிரி ஆட்களுக்கு என்றே டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் என்ற வேலை இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் திட்டம் மட்டுமல்லாமல்... பல்வேறு நிறுவனத் திட்டங்களின் சாதக, பாதகங்களை முதலீட்டாளர்களுக்கு எடுத்துக்கூறி, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய உதவுவது டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் என்பவர்களின் வேலை. இதை தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், தேசிய பங்குச் சந்தை இதற்கென நடத்தும் பரீட்சையில் கட்டாயம் தேர்வு பெற்று ‘ஆம்ஃபி’யில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இவர்களுக்கு ‘ஆம்ஃபி சர்ட்டிஃபைடு ஏஜென்ட்’ என்று பெயர்’’ என்று நான் சொல்லி முடிக்கும் முன்னரே, ‘‘இதை... இதை... இதைத் தான் எதிர்பார்த்தேன்’’ என துள்ளிக் குதித்தாள் அவள்.

அந்த வேகத்தைப் பார்க்கும்போது, அபார்ட் மென்டில் இப்போதே சில முதலீட்டாளர்களைப் பார்த்து பேசி வைத்துவிட்டாள் என்பது போலத் தெரிந்தது. அவர்களும் ‘இதில் பங்குபெறுவது எப்படி... நீயே எங்களுக்கு பணம் போடச் சொல்லிக் கொடேன்’ என்றெல்லாம் துளைத்து எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. தங்களுக்குத் தெரிந்ததை பத்து பேரிடம் சொல்லிப் பெருமைப்படுவது பெண்களின் முக்கிய வேலையாயிற்றே! அதனால்தான், தானே ஏன் ஒரு ஏஜென்டாக ஆகக்கூடாது என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றி இருக்கவேண்டும்.

வருமானத்துக்கு வருமானம்... பெரிய அளவில் நேரத்தை அபகரிக்காத விஷயம். குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு இதிலும் கலக்கலாம் என்றெல்லாம் அவள் மனதில் திட்டம் உருவாகிவிட்டது. பரீட்சைக்கான விவரங்களை ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தாள். நெட்டில் விவரங்களைத் தேடி எடுத்துத் தர ஆரம்பித்தேன் நான்.

‘‘நிதி மற்றும் முதலீட்டுத் துறையில் முதலீட்டாளர் களுக்கு ஆலோசனை சொல்ல விவரமானவர்கள் போதுமான அளவில் இல்லை என்பதை உணர்ந்த தேசிய பங்குச் சந்தை, இதற்கென 1998\ம் ஆண்டு NSE’s Certification in Financial Markets (NCFM) என்ற கல்லூரி போன்ற அமைப்பைத் துவக்கியது. பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் கமாடிட்டீஸ் போன்ற துறைகளில் ஈடுபட விரும்புவோர், இந்த அமைப்பு நடத்தும் அந்தந்தத் துறைக்கான பரீட்சைகளில் பாஸ் செய்யவேண்டும்.

இதன் விளைவாக, முதலீட்டாளர்களுக்கு தங்கள் முதலீடு சம்பந்தமாக முடிவெடுப்பது சுலபமானது. யாரோ எங்கோ சொன்னதைக் கேட்டு, எதிலாவது பணத்தைப் போடாமல், இத்துறையில் படித்த, விவரமறிந்தவர்களின் ஆலோசனையைக் கேட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகள் பற்றி முடிவு எடுப்பது சாத்தியமானது. அதுபோல ஆலோசனை சொல்லும் வேலைக்குத்தானே நீ ஆசைப்படுகிறாய்?’’ என்றேன்.

‘‘ஆமாம்... இப்போது, சும்மா இலவச ஆலோசனை கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதையே ஒரு தொழிலாகச் செய்தால் நமக்கும் வருமானம்தானே! இதிலே பங்குச் சந்தை, கமாடிட்டீஸை எல்லாம் விடுங்கள். மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய பரீட்சையைப் பற்றி மட்டும் சொல்லுங்கள்’’ என்றாள்.

‘‘மியூச்சுவல் ஃபண்ட்டுக்கென இருவகையான பரீட்சைகளை நடத்துகிறது தேசியப் பங்குச் சந்தை. முதலாவது- அடிப்படையில் இருந்து மியூச்சுவல் ஃபண்ட் பற்றி எளிமையாகச் சொல்லிக்கொடுக்கும் ‘ஆம்ஃபி மியூச்சுவல் ஃபண்ட் பிகினர்ஸ் மாட்யூல்’ என்பது முதலாவது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களும், வேலையில் சேர விரும்புபவர்களும், ஏஜென்டாக விரும்புகிற வர்களும் மட்டுமல்லாது, மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருக்கும் முதலீட்டாளர்களும்கூட இதைக் கற்றுக் கொள்ளலாம்.

‘ஆம்ஃபி மியூச்சுவல் ஃபண்ட் \ அட்வைசர்ஸ் மாட்யூல்’ என்பது இரண்டாவது பரீட்சை. மியூச்சுவல் ஃபண்டில் விற்பனைத் துறையில் ஈடுபட்டு விநியோகஸ்தராகவோ, ஏஜென்டாகவோ அட்வைசராகவோ ஆக விரும்புபவர்களுக்கான பரீட்சை இது! இவர்கள் முதலாவது பரீட்சையையும் சேர்த்துதான் எழுதவேண்டும்’’ என்று சொல்லும் போதே இடைமறித்தாள் என் மனைவி. ‘‘எனக்கு பரீட்சை என்றாலே பயமாச்சே... இதற்கு நிறைய படிக்க வேண்டி இருக்குமா?’’ என்று குரல் நடுங்கக் கேட்டாள்.

‘‘பயப்படாதே... இதற்காக பெரிய படிப்பெல்லாம் அவசியம் இல்லை. ஆங்கிலத்தில் எழுதப் படிக்கவும், ஓரளவு அடிப்படை கணக்கும் தெரிந்திருந்தாலே போதும். இந்தப் பரீட்சைக்காக ஒரு வொர்க் புக் இருக்கிறது. அதைப் படித்தால் போதும். எப்படி பரீட்சை எழுத வேண்டும் என்பது தெரிந்துவிடும். 400 ரூபாய்க்கு Association of Mutual Funds of India என்ற பெயரில் டிடி எடுக்கணும். அதை இந்த அட்ரஸுக்கு அனுப்பணும். நோட் பண்ணிக் கொள்கிறாயா..?’’ என்றபடி விலாசம் சொன்னேன். ‘‘1218, ‘B’ Wing, Dalamal Towers, Nariman Point, Mumbai 400 021-க்கு டி.டி அனுப்பினால், அந்தப் புத்தகங்கள் வந்து சேரும்.

போன், இ-மெயில் கூட இருக்கிறது. அதையும் குறித்துக்கொள்! தொலைபேசி - 022 2232 4524/25, இ-மெயில்: amfi@ bom5.vsnl.net.in. இன்னும் தகவல் தேவை என்று நினைத்தால் new.nseindia.com, new.amfiindia.com போன்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்...’’ என்று நான் சொன்னதும், ‘‘எவ்வளவு ஃபீஸ்..?’’ என்றாள் என் மனைவி.

‘‘தேசிய பங்குச் சந்தை பெயரில் 1,000 ரூபாய் டி.டி. மூலம் கட்டணம் செலுத்தி பரீட்சை எழுதலாம். மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தேசியப் பங்குச் சந்தை அலுவலகத்துக்குப் போனால் விவரங்கள் கொடுப்பார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை, அலுவலக நேரத்தில் போய்ப்பார்!’’

‘‘அதுக்கு போன் நம்பர் இருக்கிறதா..?’’ என்றாள், பென்சிலை வாயில் வைத்துக் கடித்தபடியே!

‘‘ஓ! குறிச்சுக்கோ... 044 \ 28475100’’

குறித்துக் கொண்ட என் மனைவி அப்போதே மியூச்சுவல் பரீட்சைக்குத் தயார் ஆகிவிட்டது அவள் முகத்தில் தெரிந்தது.

முக்கியமான அந்தக் கேள்வியைக் கேட்டாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism