Published:Updated:

கோடிகளைக் கையாள்பவர் கொடுக்கும் டிப்ஸ்!

கோடிகளைக் கையாள்பவர் கொடுக்கும் டிப்ஸ்!

கோடிகளைக் கையாள்பவர் கொடுக்கும் டிப்ஸ்!

கோடிகளைக் கையாள்பவர் கொடுக்கும் டிப்ஸ்!

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
கோடிகளைக் கையாள்பவர் கொடுக்கும் டிப்ஸ்!
 

கோடிகளைக் கையாள்பவர் கொடுக்கும் டிப்ஸ்!

தனியார் துறையில் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்று ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன். நாடு முழுக்க 33 நகரங்களில் கிளைகள் கொண்டுள்ள இந்த நிறுவனம், சுமார் 36 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தன் கைவசம் வைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோடிகளைக் கையாள்பவர் கொடுக்கும் டிப்ஸ்!

13 லட்சத்துக்கும் அதிகமான முதலீட்டாளர்களின், சுமார் 19,600 கோடி ரூபாய் இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வளவு பெரிய தொகையை நிர்வகித்து, முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு லாபத்தைப் பெற்றுத் தரும் இந்நிறுவனத்தின் சீஃப் இன்வெஸ்ட் மென்ட் ஆபீஸர் சுகுமார் ராஜா. இவர் இந்நிறுவனத்தின் இயக்குநரும் கூட! 10 ஆண்டுகளுக்கு மேல் இத்துறையில் செயல்பட்டு வரும் சுகுமார் ராஜா, அளித்த பேட்டியில் இருந்து...

‘‘சென்செக்ஸ் புள்ளிகள் ‘கிடுகிடு’வென ஏறிக் கொண்டிருக்கும் இன்றைய பங்குச் சந்தைச் சூழல் நம்பிக்கை அளிக்கும்படி இருக்கிறதா..?’’

‘‘இன்றைய நிலையில், இந்தியப் பங்குகளின் விலை குறைவாக இருப்பதாகச் சொல்லமுடியாது. ஆனால், நியாயமான ஒரு கட்டத்தில் இருப்பதாகச் சொல்லலாம். நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் பங்குச் சந்தை போகும் திசை நம்பிக்கையளிப்பதாகவே உள்ளது.

இப்போது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 7 முதல் 8% வரை என்று வைத்துக்கொண்டால், அடுத்த 5 ஆண்டுகளில் இது 12 முதல் 15% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இதனால், பொதுவாக எல்லா நிறுவனங்களுமே வரும் நாட்களில் நல்ல வளர்ச்சி பெறும் என நம்பலாம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, உற்பத்தி பொருட்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தின் மீது, குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இது அடுத்த பத்தாண்டுகளுக்கும் மேல் தொடரும் எனத் தோன்றுகிறது. இதனால் அவர்களது முதலீடுகள் தொடர்ந்து இந்தியாவுக்குள் சீராகவே பாய்ந்து கொண்டிருக்கிறது. கூடவே, உள்நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் சேர்ந்து பங்குச் சந்தையைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று சொல்ல முடிகிறது.’’

‘‘இந்த ஆண்டு பட்ஜெட்டில் (2006-07), நிதியமைச்சர் சிதம்பரம் அறிவித்திருக்கும் சில புதிய அம்சங்கள் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் என்ன மாற்றங்களை உண்டாக்கும்?’

கோடிகளைக் கையாள்பவர் கொடுக்கும் டிப்ஸ்!

‘‘பொதுவாகப் பார்த்தால், இந்த பட்ஜெட் பொருளாதாரத் துறைக்குச் சாதகமானதாக இருந்தது. முனைந்திருக்கும் சீர்திருத்தங்கள், அடுத்த கட்டத்தை நோக்கி நாட்டை அழைத்துச்செல்லும் என்ற நம்பிக்கை தருகிறது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட்கள் மற்ற நாடுகளிலும் முதலீடு செய்யலாம் என்ற அறிவிப்பு முக்கியமானது. இதனால், நமது முதலீட்டாளர்கள் பணம் இந்திய பங்குகளில் மட்டும் முதலீடு செய்யப்படாமல், மற்ற நாடுகளின் நம்பிக்கை தரும் பங்குகளின் பலன்களையும் சேர்த்து அனுபவிக்கலாம் என்ற நிலை உருவாகிறது. அவரவரது ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து அதற்கான பலன்களைக் காண வாய்ப்புகள் உருவாகின்றன. இந்தியாவில் மட்டுமே, என்று சுருங்கிக் கிடந்த பார்வை இப்போது சர்வதேச ரீதியில் பரவலாகி புதிய பல வாய்ப்புகள் கிடைத்திருப்பது நல்ல விஷயம்தானே!’’ என்ற சுகுமார் ராஜா, கடந்த பட்ஜெட்டில் இருந்த இன்னொரு நல்ல விஷயத்தையும் கோடி காட்டிப் பேசினார்.

‘‘கடந்த ஆண்டு (2005-06) பட்ஜெட்டிலேயே வருமான வரிச் சலுகை வழங்கும் செக்ஷன் 88 பிரிவை நீக்கிவிட்டு, புதிய அம்சங்களுடன் செக்ஷன் 80-சி என்ற பிரிவை சிதம்பரம் அறிமுகம் செய்தார். இது மற்றவர்களுக்கு எப்படியோ... ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் துறையைப் பொறுத்தவரை நல்ல விஷயமாக, ஏராளமான முதலீடு திரட்ட உதவுவதாக அமைந்துள்ளது. கூடவே சிறந்த வரி சேமிப்பு வழியாகவும் பயன்படுகிறது. முந்தைய செக்ஷன் 88-ன்படி, ஒரு முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்ட்களின் ஈ.எல்.எஸ்.எஸ் என்ற திட்டத்தில் முதலீடு செய்தால், அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரைக்கும்தான் வரிச்சலுகை பெற முடிந்தது. ஆனால், இப்போதுள்ள செக்ஷன் 80சி-யின்படி ஒரு லட்ச ரூபாய் வரைக்கும்கூட இந்த வகைத் திட்டங்களில் முதலீடு செய்துவிட்டு மொத்தத் தொகைக்கும் வரிச்சலுகை பெற்றுக்கொள்வது சாத்தியமாகிறது. முதலீட்டாளர் களுக்கு லாபம் தரும் இந்த அறிவிப்பு, எங்களுக்கும் மகிழ்ச்சி தந்தது!’’

‘‘பங்குச் சந்தையில் இருக்கிற பல துறைகளில் வருங்காலத்தில் எவையெல்லாம் நல்ல வருமானம் தரும் என்று நம்புகிறீர்கள்?’’

‘‘சேவைத் தொழில்களின் வளர்ச்சி, உற்பத்தித் தொழில்களின் மறுமலர்ச்சி, நுகர்வோர் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு, சுலப கடன் வசதிகள், அடிப்படை கட்டமைப்புப் பணிகளில் காட்டப்படும் அக்கறை போன்ற அனைத்தும் நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கிறது. அதனால் ரீ-டெய்ல், நுகர்வோர் பொருட்கள், ஆட்டோ, வங்கித்துறை போன்றவை நல்ல வளர்ச்சி காணும் என நம்ப முடிகிறது. இதுதவிர கம்ப்யூட்டர் தொடர்பான மற்ற சில துறைகளும், மருந்துப் பொருட்கள் தயாரிப்புத் துறையும் நம்பிக்கையளிக்கின்றன.

‘‘பல ஆயிரம் கோடி ரூபாய்களை நிர்வகிப்பவர் என்ற முறையில், இப்போது சிறு முதலீட்டாளர் களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?’’

‘‘முதலீடு செய்வதை, முடிந்தவரை விரைவாகத் தொடங்கிவிடுங்கள். நீண்டகாலத் திட்டமாக செய்யுங்கள். அத்துடன், ஒரு ஒழுங்குக்கு உட்பட்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாகச் சேமியுங்கள். இந்த மூன்றும் பொதுவாகவே சேமிப்புக்கான நடைமுறை என்றாலும், குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு இவைதான் அடிப்படையான அம்சங்கள்.

உங்களுக்கு எந்தெந்த காலத்தில், வயதில் உத்தேசமாக எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைக் கணக்கிட்டு, அதற்கு ஏற்ப வருமானம் வரக்கூடிய திட்டங்களாகப் பார்த்து தேர்ந்தெடுத்துச் சேமிக்கத் தொடங்குங்கள். எந்தவிதமான சந்தையாக இருந்தாலும், அவை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து ஒரு சுழற்சிக்குள் சிக்கித்தான் வெளியே வரும் என்பதை மனதில் கொள்ளுங்கள். நீண்டகால, தொடர்ச்சியான சேமிப்புமுறை இந்த ஏற்ற இறக்கங்களின் பாதிப்பில் நம்மைச் சிக்க வைக்காது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism