Published:Updated:

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்...
உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!
உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!
உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

வெ ங்கி... 39 வயதாகும் சாஃப்ட்வேர் ஆசாமி. அன்பான மனைவி, அழகான குழந்தை என்று அளவான குடும்பம். கைநிறையச் சம்பளம் கிடைப்பதால் முதலீடு செய்வதை ஹாபியாக வைத்திருக்கிறார். யார் எந்த முதலீட்டைப் பற்றிச் சொன்னாலும் உடனே அதில் முயன்று பார்க்கும் பழக்கமுடையவர். ஆனால், ஷேர் மார்க்கெட் பக்கம் மட்டும் யார் சொன்னாலும் போகமாட்டார். அதிலுள்ள ரிஸ்க்கை நினைத்து அவருக்கு பயம்.

சமீபத்தில் அவருடைய நண்பர் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிச் சொன்னபோது, ‘‘அதுவும் ஷேர் மார்க்கெட்டில் பணம் போடுவது போலத்தானே...’’ என்று அச்சம் தெரிவித்தார் வெங்கி. ‘‘ஆழம் பார்த்து காலை வைப்பவர்களுக்கு ஷேர் மார்க்கெட் லாபகரமான முதலீடுதான். இருந்தாலும் நீங்க ரொம்ப யோசிப்பதால் மியூச்சுவல் ஃபண்டில் முதலில் கால் வையுங்கள்’’ என்றபடியே நண்பர் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிச் சொல்லச் சொல்ல வெங்கிக்கு ஆர்வம் பற்றிக்கொண்டது. கொஞ்ச நாளிலேயே பலருக்கு டிப்ஸ் கொடுக்கும் அளவுக்கு வெங்கி மியூச்சுவல் ஃபண்ட் துறையில் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டார்.

மியூச்சுவல் ஃபண்ட் பற்றி எழுதுவதற்காக தனி டைரியே போட்டுவிட்டார் வெங்கி. அந்த டைரியைத்தான் உங்களுக்குப் படிக்கக் கொடுத்திருக்கிறார்.

வெங்கியின் டைரி இங்கே தொடங்குகிறது...

வெறும் 59 ரூபாய் முதலீடு செய்தால், ஒரே வாரத்தில் 15 ரூபாய் வருமானம் எங்கு கிடைக்கும்? என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. நான் மியூச்சுவல் ஃபண்டில் போட்ட பணத்துக்காக அன்றைய தபாலில் வந்த டிவிடெண்ட் வாரன்டைப் பார்த்ததும் எனக்குச் சொல்லமுடியாத மகிழ்ச்சி! ஒரு வாரத்துக்கு முன் எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டின் வரிச் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்தபோது பத்து ரூபாய் முக மதிப்புள்ள யூனிட் ஒன்றின் நிகர சொத்து மதிப்பு 58.50 ரூபாய். அதன் முக மதிப்பின் மீது 150% டிவிடெண்ட் வழங்கி யுள்ளதால் வந்த வரவுதான் இந்த 15 ரூபாய்! இனி வரும் ஆண்டு முழுவதும் மேலே டிவிடெண்ட் ஏதும் கொடுக்கப் போவதில்லை என வைத்துக் கொண்டால்கூட, ஆண்டுக்கு சுமார் 25 சதவிகித வருமானத்திற்கு ஈடாகும் இது.

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

இந்த வருமானத்துக்கு வருமான வரியும் கிடையாது. வேறு எங்கு கிடைக்கும் இத்தனை லாபம் என்று தோன்றுகிறதா..! மியூச்சுவல் ஃபண்டிலும் சின்னதாக ரிஸ்க் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அந்த ரிஸ்க் பெரிதாக பாதிக்காது என்பதால் தைரியமாக இருக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் என்பதும் ஷேர் மார்க்கெட் மாதிரிதானே என்று கேட்டபோது என் நண்பர் சொன்னது இதுதான்... ‘பங்கு முதலீடு என்பது நாமே கார் ஓட்டுவது மாதிரி, மியூச்சுவல் ஃபண்ட் என்பது டிரைவர் வைத்துக்கொண்டு கார் ஓட்டுவது மாதிரி’ (தத்துவத்தை எங்கே சுட்டாரோ தெரியவில்லை, ஆனால் நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து) அதிலும், திறமையான டிரைவர் கிடைத்துவிட்டால் பயணம் சுகமானதாகிவிடும். அதேசமயம் டிரைவரை ஒழுங்காகத் தேர்வு செய்யாவிட்டால், பதற்றத்தோடு பயணம் செய்வது மாதிரி ஆகிவிடும்.

தடாலடி ஏற்ற இறக்கங்களைத் தாங்கும் வலு என்னிடம் இல்லாததால் அதில் முதலீடு செய்யத் தயக்கமாக இருந்தது. இதற்கென்று அதிக நேரம் ஒதுக்கி அதன் போக்கைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. ஆரம்பத்தில் சிறிய அளவில் முதலீடு செய்து பார்த்தேன். விவரம் தெரியாமல் இழந்தவை ஒருபக்கம். பின்னர் விவரம் தெரிந்தாலும் கணிப்புகள் தவறியதால் வந்த நஷ்டம் வேறு. அதற்கான வேகமும், குறிப்பாக நேரமும் இல்லையே என்று தடுமாறி நின்ற நேரத்தில்தான் நண்பர் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிச் சொல்லி புதிய கதவுகளைத் திறந்துவிட்டார்.

மியூச்சுவல் ஃபண்ட் பற்றி என் நண்பர் சொன்னபோது நிறைய குழப்பத்தோடு இருந்தேன். யூனிட் என்றால் என்ன... முக மதிப்பு என்றால் என்ன... மியூச்சுவல் ஃபண்ட்களிலேயே மிக நல்ல திட்டத்தை எப்படித் தேர்ந்தெடுப்பது? இப்படி பல சந்தேகங்கள் மனதைக் குடைந்தன. அடிப்படையைத் தெரிந்து கொள்வதுதான் குழப்பத்தில் இருந்து மீள ஒரே வழி என்று முடிவெடுத்தேன். நீங்கள் முடிவெடுக்கவும் அதுதான் உதவியாக இருக்கும்.

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!
உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன... நாம் வங்கியில் போடும் ஃபிக்சட் டெபாசிட் போலவா? இல்லை. சிட்ஃபண்டு போலவா? அதெல்லாம் இல்லை. அப்படி என்றால் கடன் பத்திரங்களைப் போலவா.... அல்லது பங்குச் சந்தையைப் போலவா... என பல கேள்விகள் எழுவது இயல்புதான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இது ஒரு பார்ட்னர்ஷிப், கூட்டாக முதலீடு செய்வது எனச் சொல்லலாம்.

ஊர் கூடித் தேர் இழுப்பதுபோலத்தான் இதுவும். நம்மைப்போலவே பலர் சேர்ந்து இத்திட்டத்தில் செய்யும் முதலீட்டை, பத்து ரூபாய் முக மதிப்புள்ள யூனிட்டுகளாகப் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். இப்படித் திரட்டிய பணத்தை, திறமையான நிதி நிர்வாகிகளின் உதவியோடு பாதுகாப்பான கடன் பத்திரங்களிலும், பங்குச் சந்தையிலும் முதலீடு செய்வார்கள். இந்த முதலீட்டின் மீது வரும் வருமானத்தை, பின்னர், நம் கையில் இருக்கும் யூனிட்களின் அடிப்படையில் பகிர்ந்து கொடுப்பார்கள். இந்தத் தொகை, டிவிடெண்ட் என அழைக்கப்படும்.

உதாரணமாக, சென்ற ஆண்டு புதிதாக வெளியான ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் 5,000 ரூபாய் முதலீடு செய்தேன். அதற்கான நுழைவுக் கட்டணமாக 2% தொகையான 100 ரூபாயைக் கழித்துக்கொண்டு மீதம் 4,900 ரூபாய்க்கு, 10 ரூபாய் முகமதிப்புள்ள 490 யூனிட்களை என் பெயரில் வரவு வைத்தார்கள். அதற்கான அக்கவுன்ட் ஸ்டேட்மென்டும் ஓரிரு வாரங்களில் எனக்கு அனுப்பப்பட்டது. என்னைப் போலவே பலர் இந்தத்திட்டத்தில் முதலீடு செய்தார்கள். இந்தத் திட்டத்தில் திரட்டிய மூலதனத்தை, பங்குச் சந்தையிலும் ஓரளவு கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்தார்கள்.

உங்கள் கனவுகள் இங்கே காசாகும்!

கடந்த ஓராண்டில் முதலீடு வேகமாக வளர்ந்தது. பன்னிரண்டு மாதங்களுக்கு முன் பத்து ரூபாய் முகமதிப்பில் நான் வாங்கிய யூனிட் ஒன்றின் இன்றைய விலை ரூபாய் 18.50 அதுமட்டுமல்ல... இந்த யூனிட்களின் மீது 20 சதவிகித டிவிடெண்டும் கொடுத்திருக் கிறார்கள்! தபாலில் வந்த 980 ரூபாய்க்கான டிவிடெண்ட் செக்கைப் பிரித்த என் மனைவி, சந்தோஷத்தில் இரண்டு ஸ்பூன் சர்க்கரையை காபியில் கூடுதலாகப் போட்டுக் கொடுத்தாள்.

‘பாதுகாப்பாக வங்கியில் பணத்தைப் போடாமல் ஏதேதோ திட்டங்களில் பணத்தைப் போட்டு, முதலும் போய்விடுமோ’ என்று ஆரம்பத்தில் கவலைப்பட்டவள் அவள்தான். இப்போது, ஐயாயிரம் ரூபாய்க்கு கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் டிவிடெண்ட் கிடைத்ததும் அவளுக்கு மியூச்சுவல் ஃபண்ட் மீது காதலே வந்துவிட்டது. ‘‘ச்சோ ஸ்வீட்...’’ என்றபடி குளித்து முடித்த தலையை ஈரத் துண்டால் கொண்டை போட்டுக்கொண்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பற்றி என்னிடம் துருவித் துருவி விசாரிக்க ஆரம்பித்தாள்.

இதே ஐயாயிரத்தை வங்கியிலோ, அஞ்சலக முதலீட்டிலோ போட்டிருந்தால் அதிகபட்சம் 8% வட்டி கிடைத்திருக்கும். அதாவது, 400 ரூபாய்க்கு மேல் வந்திருக்காது என்பது அவளுக்குத் தெரியும். அதனால்தான் இத்தனை குஷியாகிவிட்டாள்.

‘‘இந்த அஞ்சலக சேமிப்புத் திட்டங்களோடு மியூச்சுவல் ஃபண்டை ஒப்பிடுவதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது தெரியுமா... அதிலெல்லாம் போட்ட முதலுக்கு என்றுமே மோசமில்லை. வட்டி குறைவாக இருந்தாலும் முதலுக்கு உத்தரவாதமுண்டு. ஆனால், மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை வருமானத்துக்கோ மூலதனமாகப் போட்ட பணத்துக்கோ எந்த கேரன்டியும் கிடையாது’’ என்று சொன்னதும் என் மனைவிக்கு அதிர்ச்சி. கொடுத்த காபியைத் திரும்ப வாங்கிவிடுவாளோ என்று தோன்றிவிட்டது.

“நீ அதிர்ச்சி அடைவாய் என்பதற்காக இந்த உண்மையை மறைப்பதில் பிரயோசனமில்லை, நீ யதார்த்தத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சொன்னேன். அதேசமயம், இன்று முக மதிப்புக்குக் கீழ் நிகர சொத்து மதிப்புள்ள ஃபண்ட்கள் மிக மிகக் குறைவு என்பதையும், பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட்கள் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நல்ல டிவிடெண்ட் வழங்கி வருவதையும் புரிந்துகொள்’’ என்றதும்தான் அவள் முகத்தில் திருப்தி!

உண்மை அதுதான்... மியூச்சுவல் ஃபண்டில் தவறு நடக்கவே நடக்காது எனக் கூறமுடியாது. அனுபவஸ்தர்கள், திறமையாளர்கள் நிர்வகிப்பதால், தவறுகள் நிகழ்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. இதை ஒன்றைப் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

என் மனைவிக்கு மியூச்சுவல் ஃபண்ட் மீது காதல் பிறந்துவிட்டது என்று சொன்னேனில்லையா... அதனால், இப்போது அடிப்படையில் இருந்து அவளுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். நீங்களும் கலந்து கொள்ளலாமே!

700-க்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நடத்தி வருகின்றன. இவற்றில் 75 சதவிகிதத்திற்கு மேல் தனியார் நிறுவனங்கள்.

பிப்ரவரி 2006 வரை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள மொத்தத் தொகை ரூ.2,17,471 கோடி!

பிப்ரவரி மாதத்துக்கும் மார்ச் மாதத்துக்கும் இடையில் மட்டும் இந்த முதலீடு ஈட்டியுள்ள வருமானம் 6.15% முழுஆண்டுக்கு எனக் கணக்கிட்டால், 72 சதவிகித ஆதாயம்!

பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 25 புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism