Published:Updated:

வளர வளர அறுவடை!

வளர வளர அறுவடை!

வளர வளர அறுவடை!

வளர வளர அறுவடை!

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
வளர வளர அறுவடை!
 

வளர வளர அறுவடை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வளர வளர அறுவடை!

து டிவிடெண்ட்களின் காலம்! மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை திடீர் ஸ்டாராக்கியிருக்கின்றன இந்த டிவிடெண்ட்கள். புதிது புதிதாக ஃபண்ட் திட்டங்கள் முளைப்பதைக்கண்டு பழைய திட்டங்களும் தங்கள் வளர்ச்சியை முதலீட்டாளர்களோடு பகிர்ந்துகொள்ளத் துவங்கியிருக்கின்றன டிவிடெண்ட்கள் மூலம்!

சமீபத்தில் சில திட்டங்கள் கொடுத்திருக்கும் டிவிடெண்ட் களைப் பார்த்தாலே புரியும். பிர்லா சன்லைஃப் பை இண்டியா, ரிலையன்ஸ் விஷன், ஹெச்.டி.எஃப்.சி டேக்ஸ் சேவர் போன்ற திட்டங்கள் 7.5 ரூபாயும், ஐஎன்ஜி வைஸ்யா டேக்ஸ்சேவிங் திட்டம் 8.10 ரூபாயும், பிரின்சிபல் பர்சனல் டேக்ஸ்சேவர் 10 ரூபாயும், எஸ்.பி.ஐ மேக்னம் டேக்ஸ் கெய்ன் ஸ்கீம் 15 ரூபாயும் டிவிடெண்ட்களாகக் கொடுத்து அசத்தியிருக்கின்றன. இவைதவிர, இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் கொடுத்த திட்டங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

உங்களிடம் இருக்கும் யூனிட்களின் எண்ணிக்கை யோடு இந்த டிவிடெண்டைப் பெருக்கினால் கிடைப்பதுதான் உங்கள் மொத்த டிவிடெண்ட் தொகை. பெரும்பாலான ஃபண்ட்கள், கிட்டத்தட்ட முதலீட்டில் 30% வருமானத்தை ஈட்டித் தந்திருப்பதைப் பார்க்கலாம். அந்த வருமானத்தில் இருந்துதான், டிவிடெண்ட் வழங்கப்பட்டிருக்கிறது. பல ஃபண்ட்கள், 80%, 110% எல்லாம் வருமானத்தை ஈட்டியிருக்கிறது.

பங்குச் சந்தை மின்னல் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருப்பது ஒருபக்கம் என்றால், திறமையான ஃபண்ட் மேனேஜர்களின் சாமர்த்தியமான முதலீடு இன்னொருபக்கம். இதெல்லாம் மகிழ்ச்சியான விஷயம்தான். அதையெல்லாம் விட மகிழ்ச்சிதரும் விஷயம் என்னவென்றால், டிவிடெண்டைக் கையில் வாங்குவது!

பெரும்பாலும், எப்போது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தாலும் ஒரு கேள்வி உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். டிவிடெண்ட் ஆப்ஷனில் போடுவதா, குரோத் (வளர்ச்சி) ஆப்ஷனில் போடுவதா? இரண்டிலேயும் அதற்கே உரிய சாதகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. என்றாலும், இந்த ஊசலாட்டம் மட்டும் நிற்பதே இல்லை. சொல்லப் போனால், குரோத் ஆப்ஷன் என்பது மறுமுதலீடு செய்வது மாதிரிதான். பணம் மேன்மேலும் குட்டி போட்டுக்கொண்டே போவதைக் கண்கூடாகப் பார்க்கமுடியும்.

டிவிடெண்ட் ஆப்ஷனில், ஈவுத்தொகை வழங்கப் பட்டவுடன், ஃபண்டின் நிகர சொத்து மதிப்பு (என்.ஏ.வி) டமால் என்று விழுந்துவிடும். நேற்று வரை கண்ணில் தெரிந்த அதன் பெருமதிப்பு, மறுநாளில், மறுபடி அடிமட்டத்தில் இருந்து தொடங்குவது போல் இருக்கும்.

ஆனால், உளவியல் ரீதியாகப் பார்த்தால், டிவிடெண்ட்தான் குரோத் ஆப்ஷனை விட அதிகம் மகிழ்ச்சியைத் தருகிறது. பொதுவாக, நாம் பணத்தை முதலீடு செய்துவிட்டு, வட்டியைப் பெறும் மனோபாவத்தில் வளர்ந்தவர்கள். மூலதனம் அப்படியே இருக்கும். அதோடு அது ஏற்படுத்தித் தரும் வருமானத்தை மட்டும் எடுத்துச் செலவு செய்யலாம் என்ற பழக்கம் நமக்குள் ஊறிக் கிடக்கிறது. அப்படிப்பட்ட நம் குணத்துக்கு, டிவிடெண்ட் ஆப்ஷன், பெரும் நிறைவை அளிக்கிறது.

வளர வளர அறுவடை!

மேலும், பங்குச் சந்தை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் இந்தக் கட்டத்தில், டிவிடெண்ட் வழங்கிய ஒரு சில நாட்களிலேயே மீண்டும் ஃபண்ட்டின் என்.ஏ.வி கிடுகிடுவென உயர்ந்து விடுகிறது. அதாவது மூலதனமும் பெருகுகிறது, கூடவே அதன் பலனையும் அறுவடை செய்து விட்டோம் என்ற நிம்மதியை பலருக்கு, இந்த டிவிடெண்ட் ஆப்ஷன் வழங்குகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும், சுந்தரம் செலக்ட் மிட்கேப் மூன்று முறையும், சுந்தரம் செலக்ட் ஃபோகஸ் இரண்டு முறையும், எஸ்.பி.ஐ மேக்னம் எமர்ஜிங் பிஸினஸ்சஸ் இரண்டு முறையும், ரிலையன்ஸ் குரோத் ஃபண்ட் மூன்று முறையும் டிவிடெண்ட் வழங்கியிருக்கின்றன.

ஒவ்வொருமுறை நீங்கள் டிவிடெண்ட் காசோலையை வாங்கும்போதும், உங்களுக்குக் கிடைக்கக்கூடிய பெருமிதத்துக்கு ஈடே இல்லை. புத்திசாலித்தனமான முதலீடு, வளர்ச்சியை நோக்கிய முதலீடு, காலத்திற்கேற்ற முதலீடு என்று ஒவ்வொரு காசோலையும் உங்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள வைக்கிறது.

டிவிடெண்ட்டைப் பொறுத்தவரை, உங்களிடம் வரும்போது, அதற்கு வரியும் இல்லை. அதைவிட முக்கியமாக, நாளையே பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டாலும் நீங்கள் பெற்ற டிவிடெண்ட் லாபமாக நிற்கும். வேண்டுமானால், வளர்ச்சி அதற்குப் பின்னால் கொஞ்சம் பாதிக்கப்படலாம். ஆனால், குரோத் ஆப்ஷனில் உள்ள சிக்கல் என்னவென்றால், இதுபோன்றதொரு பங்குச் சந்தை வீழ்ச்சியின்போது, அதன் நிகரச் சொத்து மதிப்பும் விழுந்துவிடும் என்பதுதான்.

வளர வளர அறுவடை செய்துகொள்வதில் உள்ள மகிழ்ச்சியே அலாதிதான். மியூச்சுவல் ஃபண்ட் அதற்கு விலக்கல்ல!

அசாதாரண சூழல்... அதுதான் விசேஷம்!

மா ர்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 26-ம் தேதி வரை பணம் செலுத்தும் வகையில் துவங்கப்பட்டுள்ள ‘ஃபிடிலிட்டி இந்தியா ஸ்பெஷல் சிச்சுவேஷன்ஸ் ஃபண்ட்’ திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு ஐயாயிரம் ரூபாய். ஆரம்பகால நுழைவுக் கட்டணம் 2.25%. முதல் அரையாண்டுக்குள் வெளியேறினால் 1% கட்டணம் வசூலிக்கப்படும். அதன்பிறகு என்றால் இந்தக் கட்டணம் கிடையாது. பெருமளவு தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். எந்தப் பங்குகள் என்பதுதான் விசேஷமே!

நஷ்டத்தில் இருந்து லாப திசை நோக்கி நகர்பவை, மற்ற நிறுவனங்களை வாங்கத் திட்டமிடுபவை போன்ற அசாதாரண சூழலை எதிர்கொள்ளும் கம்பெனிகளின் பங்குகளில் முதலீடு செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

ஆரம்ப முதலீட்டு காலம் தவிர எப்போது வேண்டுமானாலும் இந்த யூனிட்களின் நிகரச் சொத்து மதிப்பில் வாங்கலாம். எஸ்.ஐ.பி வசதியும் உண்டு.

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism