Published:Updated:

பங்குப் பரிந்துரை - கிடுகிடு வளர்ச்சிப் பங்குகள்!

பங்குப் பரிந்துரை - கிடுகிடு வளர்ச்சிப் பங்குகள்!

பங்குப் பரிந்துரை - கிடுகிடு வளர்ச்சிப் பங்குகள்!

பங்குப் பரிந்துரை - கிடுகிடு வளர்ச்சிப் பங்குகள்!

Published:Updated:
பங்குகள்
பங்குப் பரிந்துரை - கிடுகிடு வளர்ச்சிப் பங்குகள்!
 

ஏப்ரல் 11 அன்று, பங்குச் சந்தை விலைகளின் அடிப்படையிலான பரிந்துரைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குப் பரிந்துரை - கிடுகிடு வளர்ச்சிப் பங்குகள்!
பங்குப் பரிந்துரை - கிடுகிடு வளர்ச்சிப் பங்குகள்!

டெ ல்லியில் உள்ள டி.சி.எம் சில்க் மில்ஸ் மற்றும் சுதந்திரா பாரத் மில்ஸ் போன்ற நிறுவனங்களோடு 1991-ம் ஆண்டு டி.சி.எம் நிறுவனத்தில் இருந்து பிரிந்து, தனி நிறுவனமாக உருவான டி.சி.எம் ஸ்ரீராம் கன்சாலிடேட்டட், இப்போது சர்க்கரை, சிமென்ட் என்று பல துறைகளிலும் கால் பதித்திருக்கிறது. யூரியா, காஸ்டிக் சோடா மற்றும் சர்க்கரைதான் இதன் முக்கிய தயாரிப்புகள்!

தனியாக பிரிந்தபிறகு, இதன் டெக்ஸ்டைல்ஸ் தொழிற்கூடம் டெல்லியிலிருந்து ராஜஸ்தானுக்கு இடம் மாறியது. அதேபோல குஜராத்தில் உள்ள புரூச் காஸ்டிக் சோடா தொழிற்கூடமும் விரிவு செய்யப்பட்டது.

வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பயோசீட்ஸ் துறையில் ஈடுபடும் மொரீஷியஸ் நாட்டு நிறுவனத்தில் 51 % பங்கையும் இந்நிறுவனம் வாங்கியது. அத்துடன் கோட்டா என்ற ஊரில் உள்ள யூரியா தொழிற்சாலை உற்பத்தியில் நாப்தாவுக்குப் பதில், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை பயன்படுத்தத் திட்டமிட்டு வருகிறது.

அதோடு, ரியல் எஸ்டேட் உட்பட வேறு சில வர்த்தக நடவடிக் கைகளிலும் தற்போது ஈடுபட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் இது 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்கியதுடன் 10 ரூபாய் முகமதிப்பிலான தன் பங்கை 2 ரூபாய் பங்குகளாகவும் மாற்றிவிட்டது. நாளன்றுக்கு 8 ஆயிரம் டன் கரும்பைப் பிழிந்து சர்க்கரை உற்பத்தியைத் தொடங் கும் வகையில் புதிதாக இரண்டு ஆலைகளை அக்டோபர் மாதத்தில் தொடங்க இருக்கிறது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை நான்காகிறது.

இப்படிப் பல்வேறு காரணங்கள் இருப்பதாலும் சர்க்கரை, காஸ்டிக் சோடா, யூரியா போன்ற பொருட்களுக்கு அதிகரித்துவரும் தேவையாலும், இந்த நிறுவனம் முன்னேற்றப் பாதையில் செல்லும் என்பது எதிர்பார்ப்பு.

பங்குப் பரிந்துரை - கிடுகிடு வளர்ச்சிப் பங்குகள்!
பங்குப் பரிந்துரை - கிடுகிடு வளர்ச்சிப் பங்குகள்!

ருத்தி நூல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழிலில் இருக்கும் அம்பிகா காட்டன் மில்ஸ் கோவை யில் உள்ள முன்னணி நிறுவனம். உற்பத்தியைப் பெருக்குவதற்காக நவீன தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி, ஸ்பிண்டல்களின் எண்ணிக் கையை அதிகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது. இதனால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஏற்றுமதி மூலமான வருமானம் கணிசமாக அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

சர்வதேச வர்த்தகத்தில் ஆடை ஏற்றுமதிக்கு இருந்து வந்த கோட்டா முறை நீக்கப்பட்டிருப்பதால், இந்திய நிறுவனங்கள் முழுவேகத்தில் ஆடை தயாரிப்பில் இறங்கும் சூழல் உருவாகி இருக்கிறது. அப்படி இருக் கும்போது நூலிழைகளுக்கான தேவையும் அதிகமாகி இருக்கிறது.

கடந்த ஆண்டில் பருத்தி சந்தையில் ஏற்பட்ட சில சிக்கல்கள் தீர்க்கப்பட்டு வருவதால் தாராளமாக உற்பத்தி செய்யும் சாத்தியங்கள் இருக்கின்றன.

அதோடு, கடந்த பட்ஜெட்டில் டெக்ஸ்டைல் துறைக்கு அறிவிக்கப் பட்ட சலுகைகளின் பலன்கள் இனிதான் தெரியவரும்.

இதுபோன்ற சாதகமான சூழ்நிலை இருப்பதால் இந்நிறு வனத்தின் எதிர்காலம் நம்பிக்கை தருவதாக உள்ளது.

இன்னொருபுறம் அம்பிகா காட்டன் நிறுவனம் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதால், மின் கட்டண செலவுகள் குறைந்து லாபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காற்றாலைக்கான முதலீட்டையும் அதிகரித் துள்ளது இந்நிறுவனம்.

இதெல்லாமே இந்த நிறுவனத்தின் மீது நம்பிக் கையை அதிகரித்து, நீண்டகால அடிப்படையில் நல்ல வருமானம் தரும் பங்குகளாக இவை இருக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

பங்குப் பரிந்துரை - கிடுகிடு வளர்ச்சிப் பங்குகள்!
பங்குப் பரிந்துரை - கிடுகிடு வளர்ச்சிப் பங்குகள்!

பே ட்டரிச் சந்தையில் பாதிக்கும் மேல் தன் கையில் வைத்திருக்கிறது எவரெடி நிறுவனம். வில்லியம்சன் மகார் குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் ‘யூனியன் கார்பைட்’ என்ற பெயரில் முன்பு இயங்கி வந்தது.

சென்னை, ஹைதராபாத், டெல்லி போன்ற இடங்களில் பேட்டரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் ஃபிளாஷ் லைட் மற்றும் தொடர்புள்ள பல பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்கத் தயாரிப்பான ‘எனர்ஜைசர்’ பேட்டரிகள், சார்ஜ் செய்து பயன்படுத்த ஏற்ற இன்னும் சிலவகை பேட்டரிகள் போன்றவற்றை விநியோகமும் செய்து வருகிறது. இந்தியச் சந்தையில் மட்டுமல்லாது முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலும் விற்பனை செய்யும் நோக்கத்துடன், 1,000 தடவை வரை ரீ சார்ஜ் செய்வதற்கு ஏற்ற பேட்டரிகளையும், அதற்கான சார்ஜர்களையும் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

அத்துடன், அறுபது கோடி ரூபாய் முதலீட்டில், உத்தராஞ்சல் மாநிலத்தில் ஆண்டுக்கு 40 கோடி பேட்டரிகள் தயாரிக்கும் புதிய ஆலையை நிறுவ முடிவு செய்துள்ளது. இன்னும் 6 மாதங்களில் இந்த ஆலை உற்பத்தியைத் தொடங்கும். கடந்த செப்டம்பரில் பி.பீ.எல். நிறுவனத் தின் ஒரு பிரிவான சாஃப்ட் எனர்ஜி சிஸ்டத்தை வாங்கியிருக்கிறது.

சென்னை கிண்டியில் 2 லட்சத்து 20 ஆயிரம் சதுர அடி பரப்பில் கட்டும் ஐ.டி பார்க்கை கிவிராஜ் குழுமத்துக்கு இப்போதே 72 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டது. மார்ச்சில் மொத்த தொகை கைமாறும். வரும் காலாண்டு அறிக்கையில் அது பிரதிபலிக்கும்.

அத்துடன் இது அண்மையில் ரூம் ஃப்ரஷ்னர், ஏர் ப்யூரிபையர், கொசு விரட்டி போன்றவற்றையும் அறிமுகம் செய்து பெரிய அளவில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இப்படி பல வாய்ப்புள்ள திட்டங்கள் உள்ளதால் எவரெடி நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற பங்கு என்பதில் சந்தேகமில்லை.

பங்குப் பரிந்துரை - கிடுகிடு வளர்ச்சிப் பங்குகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism