Published:Updated:

இண்டஸ்ட்ரி - பெயின்ட் பங்குகள்.. நம்பி வாங்கலாமா?

இண்டஸ்ட்ரி - பெயின்ட் பங்குகள்.. நம்பி வாங்கலாமா?

இண்டஸ்ட்ரி - பெயின்ட் பங்குகள்.. நம்பி வாங்கலாமா?

இண்டஸ்ட்ரி - பெயின்ட் பங்குகள்.. நம்பி வாங்கலாமா?

Published:Updated:
பங்குகள்
இண்டஸ்ட்ரி - பெயின்ட் பங்குகள்.. நம்பி வாங்கலாமா?
 

 

பெயின்ட் பங்குகள்... நம்பி வாங்கலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இண்டஸ்ட்ரி - பெயின்ட் பங்குகள்.. நம்பி வாங்கலாமா?

ண்ணங்கள் நம் வாழ்க்கைக்கும் வளம் சேர்க்கும். வீட்டிலும் சரி, நாம் உபயோகிக்கும் பொருட்களிலும் சரி நாம் தேர்வு செய்யும் வண்ணங்களே நம் குணத்தைச் சொல்லும். அப்படிப்பட்ட வண்ணங்களை உருவாக்கும் பெயின்ட் நிறுவனங்களும் நம் வாழ்க்கை ஏற்றத்துக்கு நல்ல செய்திகள் சொல்கின்றனவா என்பதை பார்ப்போமா..?

இந்திய பெயின்ட் துறையின் நிலையை நிர்ணயம் செய்வது 70% உற்பத்தியைச் செய்யும் ஆறே ஆறு பெரிய நிறுவனங்கள்தான். ஆனால், சுமார் 2,000-க்கும் அதிகமான சிறு சிறு பெயின்ட் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் தயாராகும் பெயின்டின் அளவு 10 லட்சம் டன். மொத்த மதிப்பு 7,740 கோடி ரூபாய் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 11% வளர்ச்சி கண்டுள்ள இத்துறை அடுத்த 5 முதல் 10 ஆண்டு களில் சராசரியாக 12-15% வளர்ச்சி பெறும் என நம்பப்படுகிறது. இந்த வளர்ச்சி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கிறது.

இந்தியாவில் இன்றைக்கு பயன்படுத்தப்படுவதில் டெக்கரேட்டீவ்ஸ் எனும் அலங்கார வகை பெயின்ட் (வீட்டுக்குப் பயன்படும்) அளவு 77%, ஃப்ரிஜ், வாஷிங்மெஷின் போன்ற தொழிற்சாலைகளில் பயன்படும் இண்டஸ்டிரியல் பெயின்ட் 23%.

பெயின்ட் உற்பத்திக்கான மூலப்பொருளில் பெரும்பகுதி பெட்ரோ கெமிக்கல் பொருட்கள். இதனால், பெட்ரோலிய மூலப்பொருட்களின் ஏற்ற இறக்கங்கள், பெயின்ட் துறையிலும் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. கடந்த ஆண்டு தொடக்கத்தில் 35%, ஆண்டு இறுதியில் மற்றொரு 5% என டர்பன்டைன் ஆயில் விலை அதிகரித்தது. ஆனாலும் பெயின்ட் கம்பெனிகளிடையே நிலவிய போட்டியால் யாருமே இந்த விலை உயர்வை பெயின்ட் விலையில் ஏற்றவில்லை. இந்த உற்பத்திச் செலவு உயர்வு என்பது லாபத்தையே விழுங்கிக் கொண்டிருந்தது.

இதுதவிர, பெட்ரோலிய மூலப் பொருட்களைப் பயன்படுத்துவதால் சுற்றுப்புற சூழல் பாதிப்புகள் அதிகரிக்கின்றன என்பதும் பரவலான கருத்து. ‘‘இதைத் தடுக்க பெட்ரோ ரசாயனப் பொருட்களுக்கு பதில் பெயின்டில் கரைப்பானாக தண்ணீரையே பயன்படுத்தும் வாய்ப்புகளைக் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன’’ என்கிறார் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான அஸ்வின் டானி. இதற்காக, சுற்றுப்புற சூழலுக்கு இணக்கமான பெயின்ட் உற்பத்தி செய்ய ‘பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ஸு’டன் இணைந்து முயற்சிகளில் ஈடுபடுவதாக சொல்கிறார் அவர். இதுதவிர இந்திய பெயின்ட் உற்பத்தியாளர்கள் சங்கம், ஜதவ்பூர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவின் முதல் பெயின்ட் ஆராய்ச்சி மையத்தை தொடங்கியுள்ளது. இது, தொழில் நுட்ப ரீதியில் இந்திய பெயின்ட் ஆலைகள் மேம்பட உதவும்... புதிய தொழில் நுட்பங்களை அமலாக்குவதை எளிதாக்கும்... என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் பெயின்ட்களின் மீதான உற்பத்தி வரி 40 %-ல் இருந்து 16 % வரை குறைந்துள்ளது. இது பெயின்ட் நிறுவனங்களின் செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இண்டஸ்ட்ரி - பெயின்ட் பங்குகள்.. நம்பி வாங்கலாமா?

இன்னொருபுறம் பெட்ரோலிய மூலப்பொருட்கள் இறக்குமதியிலும்கூட இன்று பெயின்ட் நிறுவனங்கள் சுமார் 5% வரி செலுத்தவேண்டியுள்ளது. இது கடந்த காலத்தில் இருந்த 15%லிருந்து படிப்படியாக குறைந்துள்ளதால் பெயின்ட் நிறுவனங்களின் லாபவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பெட்ரோலியம் சாராத சில மூலப் பொருட்களின் விலை கடந்த சில மாதங்களில் குறைந்து உள்ளதும் இந்த நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கும்.

இதுபோக, இந்தியாவில் தற்போது அடிப்படை கட்டமைப்பு பணிகள் வேகம் பெற்று வருவதால் பலரும் புதிய வீடு கட்டுவது... பழைய வீட்டைச் சீரமைப்பது என எப்படி செலவிட்டாலும் அது பெயின்ட் துறைக்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவுகிறது. இன்னொருபக்கம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலை வலுவடைந்து அவர்களும் கூடுதலான வசதி வாய்ப்புகளை தேட ஆரம்பித்திருக்கும் நிலையில், பெயின்ட் உபயோகம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை வருகிறது. இதற்காகவே பல நிறுவனங்களும், குறிப்பாக ஏசியன் பெயின்ட்ஸ் போன்றவை கிராம மக்களைக் கவரும் வகையில் பல புதிய விளம்பர யுக்திகளை கையாண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

டெக்கரேட்டீவ்ஸ் வகை பெயின்ட் தேவைகளுக்கு ஒருவகையான தேவை என்றால், இண்டஸ்ட்ரியல் பெயின்ட்களும் இதில் பின்தங்கிவிடவில்லை. இன்று இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பல வகையான ஆட்டோமொபைல்களின் உற்பத்தி... ஒயிட் குட்ஸ் உற்பத்தி... மின் உற்பத்தித் துறையிலும் கூட - அனல்மின் மற்றும் அணுமின் உற்பத்தி என பல புதிய திட்டங்கள் அதிகரித்து வருவதால் இங்கெல்லாம் இண்டஸ்ட்ரியல் பெயின்ட்டுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் ‘இண்டஸ்ட்ரியல் பெயின்ட்டைப் பொறுத்தவரை இன்னொரு சிக்கலும் உண்டு. அதன் ‘விற்பனை அளவுக்கு இருக்கும் அதே உத்தரவாதம், விற்பனை விலைக்கு இல்லை’ என்பது இந்தத் துறையின் ஏக்கம். காரணம், இவ்வகை பெயின்ட் பயன்படுத்துவோர் எதிர் பார்க்கும் நவீன தொழில்நுட்பத்தையும், குறைந்த விலையையும் பல பன்னாட்டு நிறுவனங்கள் உடனடியாகத் தர முன்வருகிறார்கள். எனவே அவர்களுடன் போட்டியிட்டு ஆர்டரைத் தக்கவைக்க இந்திய நிறுவனங்கள் மிகக்குறைந்த லாபத்திலாவது ஆர்டரைப் பெறுவதில் முனைப்பாக உள்ளன. இதனால் இவ்வகை பெயின்ட் விற்பனை அதிகமான லாபத்தைத் தருவதில்லை என்பது இத்துறையினரது பிரச்னை.

இந்தக் காரணங்களால் பெரும்பாலான முன்னணி பெயின்ட் உற்பத்தி நிறுவனங்கள், மற்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. ஆனால், இதையும் தாண்டி பல பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் நேரடியாக கால் பதிப்பதில் ஆர்வத்துடன் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் - தொடர்ந்து அதிகரித்து வரும் மார்க்கெட் தேவை.

பெயின்ட் துறை, வண்ணக் கனவுகளின் வழிகாட்டி!

இந்திய பெயிண்ட் துறையின் நடப்புகள்

பெ யின்ட்ஸ் துறை மார்க்கெட் லீடரான ஏசியன் பெயின்ட்ஸ், டெக்கரட்டீவ்ஸ் பெயின்ட் சந்தையில் 49%ஐ தன்வசம் கொண்டுள்ளது. ஆட்டோமொபைல் சந்தையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள இது அமெரிக்காவின் பி.பி.ஜி இண்டஸ்ட்ரிஸ் என்ற கம்பெனியோடு 50:50 அடிப்படையில் கூட்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டுள்ளது. இதன்மூலம் சர்வதேச அளவில் வாய்ப்புகளைப் பெறும் முயற்சியில் இது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் உலகின் ஐந்தாவது பெரிய பெயின்ட் நிறுவனமாக வளர வேண்டும் என்பது ஏசியனின் இலக்கு!

ந்தியாவின் இரண்டாவது பெரிய பெயின்ட் நிறுவனம் என்றாலும், இண்டஸ்ட்ரியல் பெயின்ட் உற்பத்தியில் முதலிடம் குட்லஸ் நேரோலக் பெயின்டுக்குத்தான். மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்கள் பலவற்றுக்கு பெயின்ட் சப்ளை செய்வது நேரோலக்தான். ஜப்பான் நாட்டின் கன்சய் பெயின்ட்ஸ் கம்பெனி, குட்லஸ் நேரோலக் பெயின்ட்ஸின் 64 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்குகளை வாங்கி, அதை தனது துணைநிறுவனம் போல ஆக்கிவிட்டது. நேரோலக், கார்களுக்கான அதிநவீன கோட்டிங் தொழில்நுட்பத்துக்காக அமெரிக்காவின் எல் டூ பாண்ட் டி நிமர்ஸ் என்ற கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

மூ ன்றாவது இடத்தில் உள்ள பெர்ஜர் பெயின்ட்ஸின் மொத்த விற்பனையில் மூன்றில் இரு மடங்கு டெக்கரேட்டீவ்ஸ் பெயின்ட் மூலமானது. பெட்ரோலிய மூலப்பொருட்கள் விலை உயர்வால் இது தண்ணீர் அடிப்படையிலான பெயின்ட் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்துகிறது. ஆட்டோ துறைக்கான பிளாஸ்டிக் பெயின்ட் கோட்டிங்ஸ் பணிகளில் ஈடுபட அண்மையில் குர்கானில் ஒரு புதிய தொழிற்கூடத்தை அமைத்துள்ளது. ஜம்மு உற்பத்தி கூடமும் விரைவில் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.

இண்டஸ்ட்ரி - பெயின்ட் பங்குகள்.. நம்பி வாங்கலாமா?

மிழகத்தில் 45 ஆண்டுகளுக்கு மேல் பெயின்ட் துறையில் இருப்பவர் சேகர். இவர் இந்திய சிறுபெயின்ட் உற்பத்தியாளர் சங்கத்தின் தேசியத் தலைவராகவும் இருந்தவர். ‘வெஸ்டன் இந்தியா பெயின்ட் அண்ட் கலர் கம்பெனி’ நடத்தி வந்தார். ஆண்டுக்கு சராசரியாக 3 கோடி ரூபாய்க்கு பெயின்ட் உற்பத்தி செய்யும் இவர் இத்துறைக்கான வாய்ப்புகள் பற்றி பேசினார்.

‘‘இன்றைக்கு அடிப்படை கட்டமைப்புத் துறை, ஆட்டோமெபைல் துறை, குடியிருப்பு கட்டுமானம் என பெயின்ட் பயன்படுத்தும் எல்லாத்துறைகளும் மிக வேகமான வளர்ச்சி பெற்று வருகிறது. வரும் நாட்களிலும் இதன் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அரசின் கொள்கைகள் அமைந்திருப்பது முக்கியமான விஷயம். வங்கிகள் பலவும் தொடர்ந்து கடன் வழங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. இது பெயின்ட் துறைக்குத் தொடர்ந்து அதிகரிக்கும் தேவையை விளக்குகிறது.

இந்தத் தேவையை ஈடுகட்டுவதற்கு ஏற்ப நாம் நம்மை மேம்படுத்திக் கொள்கிறோமா என்றால் இல்லை. இந்திய பெயின்ட் நிறுவனங்கள் பொதுவாக லேட்டஸ்ட் தொழில் நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு இந்தியாவில் நிலவும் தட்பவெப்ப நிலையை காரணம் காட்டுகிறார்கள். ஆனால் நம்மைவிட கடுமையான குளிர், வெப்பம் இரண்டும் நிலவும் மத்திய கிழக்கு நாடுகளில் கூட பல முன்னேறிய தொழில் நுட்பங் கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய பெயின்ட் நிறுவனங்கள் உட்பட இந்திய உற்பத்தியாளர்கள் இவ்விஷயத்தில் தங்கள் மனப்போக்கை மாற்றிக் கொண்டால், இத்தொழிலை இன்னும் லாபகரமாக நடத்த முடியும். மக்களுக்கும் தரமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்புகள் உருவாகும். இதைச் செய்ய நாம் முன்வராவிட்டால், பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக இதில் இறங்கும். இத்தொழிலையே நாம் அவர்களிடம் இழக்கவேண்டி வரும்.

அடுத்து, பெயின்ட் தொழிலுக்கான மூலப் பொருட்களில் சுமார் 70% வரை உள்நாட்டிலேயே கிடைக்கிறது. அவற்றில் சால்வன்ட் ரகம் ஒன்றை சென்னையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமே தயாரிக்கிறது. ஆனால் அதை இங்குள்ள பெயின்ட் உற்பத்தியாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதில்லை. அதனால் இங்கிருக்கும் பலரும் கொச்சி, மும்பை மற்றும் விசாகப்பட்டினம் போன்ற நகரங்களிலிருந்துதான் அவற்றை வாங்கி வருகிறோம். தொடர்ந்து நாங்கள் அமைப்பு ரீதியாக வைத்த கோரிக்கைகளுக்கும் பலன் இல்லை. இதனால் அருகில் கிடைக்கும் பொருளை தொலைதூரத்திலிருந்து வாங்கி அதற்கான கூடுதல் போக்குவரத்து செலவுகளையும் ஏற்கிறோம். இதுபோன்ற செலவுகள் பெயின்ட் நுகர்வோ ருக்கோ, அல்லது அந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கோ... யாராவது ஒருவருக்குத் தேவையில்லாத இழப்புதான். நான் அறிந்தவரையில் தமிழகத்தில் உள்ள ஏசியன் பெயின்ட் (ஸ்ரீபெரும்புதூர்), குட்லஸ் நேரோலக் (சென்னை - பெருங்குடி), பெர்ஜர் பெயின்ட் (பாண்டிச்சேரி) போன்ற பெருநிறுவனங்களுக்கும் இதுதான் நிலை’’ என்றார்.

படம்: கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism