பங்குச் சந்தை தொடர்பான வாசகர் சந்தேகங்கள்...

‘‘சில நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் நல்ல லாபம் கொடுத்து வந்தாலும், காலாண்டு அறிக்கை வெளியானவுடன் அதன் விலை குறைந்துவிடுகிறதே ஏன்?’’

\ ஆர்.ரமேஷ், ஆரணி.

‘‘இ  தற்கு இரு காரணங்கள் இருக்கக்கூடும். காலாண்டு அறிக்கை வரும் முன்பே அந்த நிறுவனத்தின் பங்கு விலை மிகவும் உச்சத்துக்கு அதிகரித்திருக்கும். அல்லது, அடுத்துவரும் காலாண்டில் அதன் செயல்பாடு சுமாராக இருக்கும் என்ற கணிப்பாக இருக்கும். சில நிறுவனங்களின் செயல்பாடு அடுத்து வரும் காலாண்டில், சுமாராக இருக்கும் என்ற கணிப்பு ( Guidance  ) வெளியானதை அடுத்து அவற்றின் பங்குகளின் விலை குறையத் தொடங்குவதை அடிக்கடி காணலாம்.’’

‘‘புதிதாக ஐ.பி.ஓ. வெளியிடும் ஒரு நிறுவனத்தின் தரத்தை எவ்வாறு தெரிந்துகொள்வது?’’

\ கணேசன், தேனி.

‘‘உ  ங்களைப் போன்ற சிறு முதலீட்டாளர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான், ‘ஐ.பி.ஓ. வரும் நிறுவனம், கட்டாயம் தரக் குறியீடு பெறவேண்டும்’ என்று செபி அமைப்பு சட்டம் கொண்டு வந்திருக்கிறது. இதன்படி, இக்ரா, க்ரைசில் போன்ற தரக் குறியீட்டு நிறுவனம், பங்கு வெளியிடும் நிறுவனத்தின் அடிப்படை குறித்த விவரத்தைத் தெரிவிக்கும். இது பங்கை வாங்குவதா, வேண்டாமா என்று வெளிப்படையாகக் குறிப்பிடாது. பொதுவாக நிறுவனத்தின் நிறுவனர்கள், அது ஈடுபட்டுள்ள துறை வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதா என்பன போன்ற பலவற்றை கருத்தில் கொண்டுதான் முடிவு எடுக்க வேண்டும். மேலும் அதன் தற்போதைய செயல்பாட்டுக்கு ஏற்ப பங்கின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்து அதற்கு ஏற்ப முதலீடு செய்யவேண்டும்.’’

‘‘ஒரு நிறுவனம் பங்குப் பிரிப்பில் ( Stock Split  ) ஈடுபடுவதன் முக்கிய நோக்கம் என்ன?’’

\ சந்திரசேகரன், சென்னை\2.

‘‘நி  றுவனத்தின் பங்கு ஒன்றின் விலை மிகவும் அதிகரித்து சிறு முதலீட்டாளர்கள் வாங்க இயலாத நிலையில் இருக்கும்போது, நிறுவனங்கள் பங்கு பிரிப்பில் இறங்குவது உண்டு. இதன் நோக்கம் அந்நிறுவனப் பங்குகளில் அதிகம் பேர் முதலீடு செய்ய வேண்டும் என்பதாக இருக்கும். இந்நிலையில் சிறு முதலீட்டாளர்களுக்கு மதிப்பு கூடும். உதாரணத்துக்கு, இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கு ஒன்று, 99\ல் 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விலை போய் கொண்டிருந்தது. இந்நிலையில் 10 ரூபாய் முக மதிப்பு கொண்ட இதன் பங்குகள் 5 ரூபாய் முக மதிப்பு கொண்ட இரு பங்குகளாகப் பிரிக்கப்பட்டது. இதுகுறித்து இன்ஃபோசிஸ் தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி கூறும்போது, ‘எங்கள் நிறுவனப் பங்குகளில் அதிகம் பேர் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் பங்கு பிரிப்பை மேற்கொள்கிறோம்’ என்றார். இதன் மூலம் இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகளின் மொத்த எண்ணிக்கை 3.3 கோடியிலிருந்து 6.6 கோடியாக அதிகரித்தது.

சில நிறுவனங்கள் முக மதிப்புக்கு கீழே வர்த்தகமாகி வரும் நிலையிலும் பங்கு பிரிப்பில் ஈடுபடுகின்றன. இது போன்ற பங்குகளை பத்து ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது என்று வாங்கி போட்டவர்கள் நீண்ட காலமாகியும் விலை ஏறாததால் வாங்கிய விலைக்கும் குறைவாக விற்று அல்லது விற்க முடியாமல் நஷ்டப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், ஒரு பங்கின் விலை ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் மட்டுமே பங்குப் பிரிவில் ஈடுபட வேண்டும் என்று செபி சட்டம் கொண்டு வருவதன் மூலம் அதிக விவரம் தெரியாத சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாக்க முடியும்.’’

‘‘நான் என் மனைவி பெயரில் 80 ஆயிரம் ரூபாய் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறேன். தற்போது என் மனைவி வேலைக்குச் சென்று ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். இந்நிலையில், பங்குச் சந்தை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு யார் வரி கட்ட வேண்டும்? நானா, என் மனைவியா?’’

\ ஸ்ரீதரன், கோயம்புத்தூர்.

‘‘நீ  ங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்த தொகையை உங்களின் மனைவிக்கு அன்பளிப்பாக (கிஃப்ட்) கொடுத்திருக்கிறீர்களா, அல்லது கடனாகக் கொடுத்தீர்களா என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

அன்பளிப்பாகக் கொடுத்திருந்தால் அதற்கு வரி கிடையாது. ஆனால், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு நீங்கள்தான் வரி கட்ட வேண்டும். அதே நேரத்தில், அடுத்த ஆண்டில் ஈட்டும் வருமானத்துக்கு உங்கள் மனைவி வரி கட்ட வேண்டும்.

80 ஆயிரம் ரூபாயைக் கடனாகக் கொடுத்திருந்தால், வருமானத்துக்கு உங்கள் மனைவி வரிகட்ட வேண்டும். கடனுக்கு கொடுக்கும் வட்டியை வருமானத்தில் கழித்துக்கொள்ள வழியிருக்கிறது.’’

‘‘பங்குச் சந்தை புரோக்கரிடம், முதலீடு செய்வதற்கு முன் எந்தெந்த விவரங்களை கேட்க வேண்டும்?”

\ நாகராஜன்,

‘‘மு  தலில் அவர் செபி அமைப்பிடம் பதிவு செய்துள்ள புரோக்கரா அல்லது சப்- புரோக்கரா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், அவர் எந்த பங்குச் சந்தையில் (மும்பை, தேசிய பங்குச் சந்தை) உறுப்பினர் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதோடு, விண்ணப்பிக்கவும் பதிவு செய்யவும் கட்டணம் எவ்வளவு என்பதை முன்கூட்டியே கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. சிலர் இதற்கென சுமார் 250 ரூபாய் வாங்கிக் கொள்வார்கள்.

முதலீட்டுக்காக வாங்கும் பங்குகளுக்கான தரகு கட்டணம் எவ்வளவு, தினசரி வர்த்தகத்தில் ஈடுபடுவது என்றால் அதற்குக் கட்டணம் எவ்வளவு என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள். எக்காரணத்தை கொண்டும் எதற்கும் பணத்தை ரொக்கமாகக் கொடுக்காதீர்கள். காசோலைகளைப் பயன்படுத்துங்கள்.’’

ஷே    ர், மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் தொடர்பான சந்தேகங்களை  NAVQA  ( space  ) உங்கள் கேள்வி ( space  ) உங்கள் பெயரை டைப் செய்து 62636 எண்ணுக்கு   sms     அனுப்பவும்.