‘‘ஆண்டுக்கு 7% வட்டியில் நகைக் கடன் கிடைக்கிறது. அதனை வாங்கி மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வது லாபகரமானதா?’’

\ நந்தகுமார், ஆரணி.

‘‘அ  திக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றாலும், கடன் வாங்கி முதலீடு செய்வது நல்ல பழக்கம் இல்லை. எதிர்பாராத விதமாக மூலதனத்தை இழக்க நேரிட்டால் சமாளிப்பது கடினம். எப்போதுமே சேமிப்பு அல்லது சிக்கனத்தின் மூலமாகக் கிடைக்கும் தொகையைத்தான் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யவேண்டும். இது முதலீட்டாளர்களுக்கான பால பாடம்.’’

‘‘குளோஸ்ட் எண்டட் திட்டங்களில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யமுடியுமா?’

\ சுரேஷ், மதுரை.

‘‘பொ  துவாக இல்லை. வரிச் சேமிப்புக்கு உதவும் இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் மட்டும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.’’

‘‘பங்குச் சந்தை தற்போது ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. இப்போது நான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாமா? அல்லது காத்திருக்கலமா?’’

\ சுந்தர், புதுச்சேரி.

‘‘மி  யூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நீண்டகால அடிப்படையில்தான் பார்க்க வேண்டும். இன்றைக்கு வாங்கி நாளைக்கு விற்பதல்ல முதலீடு என்பது! மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு இப்போது நல்ல நேரமே!’’

‘‘பல புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் (என்.எஃப்.ஓ.) வருகின்றன. இதில் நல்ல திட்டத்தை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுப்பது?’’

\ எ.கவிதா, காரைக்குடி.

‘‘எ  ன்.எஃப்.ஓ\வின் போதுதான் முதலீடு செய்யவேண்டும் என்ற அவசியமில்லை. பங்குச் சந்தையை எடுத்துக் கொண்டாலும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை எடுத்துக் கொண்டாலும் பல அவற்றின் வெளியீட்டு விலை மற்றும் பட்டியலிடப்பட்ட விலைக்குக் கீழேதான், வர்த்தகமாகி வருகின்றன. இவற்றில் எதிர்கால வளர்ச்சியுள்ள நல்ல திட்டங்களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம். உதாரணத்துக்கு, ‘ஃபிடிலிட்டி ஸ்பெஷல் சிச்சுவேஷன் ஃபண்ட்’ அதன் வெளியீட்டு விலையை விட குறைந்த தொகைக்குச் சென்று தற்போது நல்ல அளவில் வர்த்தகமாகி வருகிறது.

இந்தத் திட்டத்தின் யூனிட்டுகள், 2006 ஏப்ரலில் பத்து ரூபாய் முக மதிப்பில் விற்பனை செய்யப்பட்டன. இது, அதே ஆண்டு ஜூன் மாதம் எட்டு ரூபாய் அளவுக்குக் குறைந்து போனது. தற்போது 12 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இந்தத் திட்டத்தில் என்.எஃப்.ஓ\வின் போது வாங்கியவரை விட சந்தையில் அதன் என்.ஏ.வி. குறைந்தபோது வாங்கியவருக்கு அதிக லாபம். பங்குச் சந்தையில் நல்ல பங்குகள் குறைவான விலையில் கிடைக்கும்போது வாங்கிப்போடுவது போல, நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களையும் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.’’

‘‘சோஷியலி ரெஸ்பான்சிபிள் ஃபண்ட் (எஸ்.ஆர்.ஐ \Socially Responsible Investment  ) என்பது என்ன?’’

\ சி.சுசீலா, நாகப்பட்டினம்.

‘‘மி  யூச்சுவல் ஃபண்ட்டில் இது ஒருவகை! சமூகம் மற்றும் சுற்றுச் சூழல் மேம்பாடு சார்ந்த துறை நிறுவனப் பங்குகளில் முதலீடும் செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமே எஸ்.ஆர்.ஐ. ஃபண்ட். ஆயுதம், சிகரெட், மதுபானம் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனப் பங்குகளைத் தவிர்த்து இதர நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது இதன் போர்ட்ஃபோலியோவாக இருக்கிறது.

கொளுத்த லாபத்தில் இயங்கினாலும் மது, சிகரெட் தயாரிக்கும் நிறுவனப் பங்குகளில் சிலர் முதலீடு செய்யமாட்டார்கள். இதேபோல் சில பத்திரிகைகளும் தார்மீகப் பொறுப்புடன் இதுபோன்ற நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு பரிந்துரை செய்வதில்லை என்ற கொள்கையுடன் இயங்கி வருகின்றன. இந்தியாவின் முதல் எஸ்.ஆர்.ஐ. ஃபண்டை அண்மையில் ஏ.பி.என்.ஆம்ரோ மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம், இதுபோன்ற 24 திட்டங்களை ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, ஆசிய சந்தைகளில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.’’

‘‘பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஏற்ற சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் எது?’’

\ ராஜ்குமார், மதுரை.

‘‘பெ  ன்ஷன்தாரர்களுக்கு என்று மாதந்தோறும் வருமானம் அளிக்கும் ‘மன்த்லி இன்கம் பிளான்’ (எம்.ஐ.பி.) இருக்கிறது. இதில் ரிஸ்க் குறைவு என்பதோடு, மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் நிலையாக வந்துகொண்டிருக்கும். தற்போதைய நிலையில் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளதால், எதிர்பார்த்த வருமானம் இல்லை. எனவே, ஓரளவு ரிஸ்க் கொண்ட நடுத்தர அளவு வருமானம் தரும் பேலன்ஸ்ட் திட்டங் களைத் தேர்ந்தெடுப்பது பொருத்தமாக இருக்கும்.’’

‘‘என் வயது 30. மாதந்தோறும் 10 ஆயிரம் வீதம் நீண்டகால அடிப்படையில் 25 ஆண்டுகளுக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறேன். நான் எவ்வளவு பணத்தை பங்கு சார்ந்த மற்றும் பேலன்ஸ்ட் திட்டங்களில் பிரித்து முதலீடு செய்யவேண்டும்?’’

\ மகேஸ்வரி, தஞ்சாவூர்.

‘‘ஆ  ரம்பத்தில் பங்குத் திட்டங்களில் அதிக முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு வயதாக வயதாக அதனை குறைத்துக்கொண்டே வர வேண்டும். தற்போதைய நிலையில் 75% (7,500 ரூபாய்) பங்கு சார்ந்த திட்டங்கள், 25% (2,500 ரூபாய்) பேலன்ஸ்ட் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. இதுவே, உங்களுக்கு நாற்பது வயதுக்கு மேல் ஆகும்போது 50:50, ஐம்பது வயதுக்கு மேல் ஆகும்போது 25:75 என்ற விகிதத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

பணி ஓய்வு பெறும் சமயத்தில் முழுத்தொகையும் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில், இளவயது என்பதால் ரிஸ்க் எடுத்து பங்கு சார்ந்த திட்டங்களில் அதிக முதலீடு செய்து இருப்பதால், மூலதனம் நல்ல அளவில் பெருகி இருக்கும். அதனைப் பின்னர் பேலன்ஸ்ட் மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதால் முதலீட்டுக்குப் பாதுகாப்புக் கிடைப்பதோடு, மிதமான வருமானத் துக்கும் உத்தரவாதம் இருக்கும்.’’

‘‘ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துக்கு ஒரு ஃபண்ட் மேனேஜர்தான் இருப்பாரா? அவரால் சிறப்பாக முடிவெடுத்துச் செயல்பட முடியுமா?’’

\ எல்.ஆரோக்கியசாமி, கரூர்-2.

‘‘பொதுவாக ஒரு திட்டத்துக்கு ஒரு ஃபண்ட் மேனேஜர்தான் இருப்பார். லாபம் மற்றும் நஷ்டம் தன்னைச் சார்ந்தது என்பதால் அவர் முழுக் கவனம் செலுத்தி போர்ட்ஃபோலியோவைத் தேர்ந்தெடுப்பார். அரிதாக ஒரு திட்டத்துக்கு பல ஃபண்ட் மேனேஜர்கள் இருப்பது உண்டு! ஃபிடிலிட்டி மல்டி மேனேஜர் கேஷ், ஆப்டிமிக்ஸ் மல்டி மேனேஜர் ஈக்விட்டி ஃபண்ட் போன்ற ஃபண்ட்ஸ் ஆஃப் ஃபண்ட்ஸ் திட்டங்களில் பல ஃபண்ட் மேனேஜர்களின் பங்களிப்பு இருக்கிறது’’.