பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி!
##~##

•  தங்கம்!

"அமெரிக்கப் பொருளாதாரம் வலுவடைந்து வருவதையடுத்து, புத்தாண்டுக்குப் பிறகு ஃபெடரல் மானிட்டரி கொள்கையில் நிச்சயம்  மாற்றம் இருக்கலாம் என்று வர்த்தகர்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.

மேலும், வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக விடுமுறை தினங்கள் வருவதால், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வர்த்தகர்கள் ஏற்கெனவே வாங்கிய தங்கத்தை  விற்பதால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த வாரம் குறைந்தது.

இதன் தாக்கம் இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் இருந்தது. இதனால் கடந்த வாரம் 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 28,800 வரை சென்றது. ஆனால், வார இறுதியில் சுமார் 29,100 ரூபாய் வர்த்தகமானது.

இந்த விலைகுறைவின் காரணமாக சீனாவில் தங்க நுகர்வோர்கள் அதிக அளவு தங்கத்தை வாங்கினார்கள். வரும் வாரங்களில் சீன மக்கள் இதேபோல் தங்கம் வாங்கினால், தங்கத்தின் விலை உயர வாய்ப்பிருக்கிறது.

கமாடிட்டி!

ஏற்கெனவே பல நெகட்டிவ் செய்திகளால் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துவிட்டது. இதற்கு மேலும் விலை குறையவேண்டுமெனில், வேறு ஏதேனும் முக்கிய நெகட்டிவ் செய்திகள் வந்தால் மட்டுமே அது  சாத்தியமாகும்.

வரும் வாரங்களில் தங்கம் விலை இறங்குவதற்கு வாய்ப்புகள் குறைவு. எம்.சி.எக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தை 28,500-ஐ ஸ்டாப் லாஸ் ஆக வைத்துகொண்டு வாங்கலாம். 30,000 ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளது.

வெள்ளி!

கடந்த திங்கட்கிழமை ஓரு கிலோ ரூ.45,731-ல் தொடங்கிய வெள்ளியின் விலை 2,000 ரூபாய் குறைந்து ரூ.43,650-ஐ தொட்டது. வரும் வாரத்தில் விலை சரிந்தால் வாங்குவது நல்லது. ரூ.43,000 வரை வாங்குவதற்கான நல்ல லெவல் ஆகும்."

கமாடிட்டி!

அடிப்படை உலோகம்!

காப்பர்:

அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்தின் விளைவாக,  ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் மானிட்டரி கொள்கையில் எதிர்பார்த்ததுக்கு முன்பே மாற்றம் வரலாம் என்று வர்த்தகர்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது".

மேலும், அமெரிக்காவின் புதிய வீடு விற்பனை குறித்த குறியீடு சாதகமாக வந்ததால் கடந்த வாரம் காப்பரின் விலை அதிகரித்தது. உலோக நுகர்வோரில் இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்காவில் தேவை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்.எம்.இ கையிருப்பு குறைந்துள்ளதும் விலை ஏற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.  மேலும், இந்தோனேஷியாவில் ஏற்றுமதியைத் தடை செய்யப் போவதாகத் தெரிகிறது. இதையடுத்து காப்பர் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 443.60 ரூபாயில் இருந்த காப்பரின் விலை வார இறுதியில் சுமார் 450 ரூபாய் வரை வர்த்தகமானது. ரூபாயின் மதிப்பு இன்னும் உயர்ந்தால் காப்பர் விலையேற்றம் தடுக்கப்படும்.

கச்சா எண்ணெய்!

அமெரிக்காவின் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துக்கு வழி வகுத்தது.

ஐரோப்பாவின் வடகடல் பகுதியில் உள்ள எண்ணெய் உற்பத்தியாளர்கள், பெரிய புயல் எச்சரிக்கை காரணமாக எண்ணெய் உற்பத்தியை நிறுத்தி இருக்கிறார்கள். இதையடுத்து கச்சா என்ணெய் உற்பத்தி குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எதிர்பார்த்ததைவிட அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கையிருப்பு குறைந்துள்ளது. வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

கமாடிட்டி!

இயற்கை எரிவாயு!

அமெரிக்காவில் வெப்பநிலை சராசரியைவிட குறைந்து குளிர் அதிகரித்துள்ளதால், வரும் வாரத்தில் இயற்கை எரிவாயு தேவை அதிகரிக்கும். இதனால் வரும் வாரத்தில் இயற்கை எரிவாயு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 - சே.புகழரசி,

படம்: ச.வெங்கடேசன். 

 ரூபாய் மதிப்பு 61 வரை

செல்ல வாய்ப்பு!

கமாடிட்டி!

இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த சில வாரங்களாக பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் இல்லாத நிலையில், கடந்த வாரம்  சுமார் 61.50 வரை அதிகரித்தது. இதையடுத்து வரும் வாரத்தில் ரூபாயின் மதிப்பு எவ்வாறு இருக்கும் என்று இந்திய சிமென்ட்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கே.சுரேஷ் கூறுகிறார்.

''நடப்புக் கணக்கு காரணமாக ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்திருந்தது. ஆனால், மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கை காரணமாக ரூபாயின் மதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. மேலும், வரும் வாரத்தில் எஃப்.ஐ.ஐ-க்களின் வருகை காரணமாக 61 வரை செல்லலாம்.

'' கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  04466802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு