Published:Updated:

கம்பெனி ஸ்கேன் - இண்டோகோ ரெமடீஸ்!

கம்பெனி ஸ்கேன் - இண்டோகோ ரெமடீஸ்!

கம்பெனி ஸ்கேன் - இண்டோகோ ரெமடீஸ்!

கம்பெனி ஸ்கேன் - இண்டோகோ ரெமடீஸ்!

Published:Updated:

நல்ல நிர்வாகம், சீரான வளர்ச்சி கொண்ட நிறுவனம் இது!

ப்ராண்டு அல்லாத ஜெனரிக் (சாதாரண) மருந்துகளை அமெரிக்கா அனுமதிக்க முடிவு செய்தவுடனேயே இந்திய மருந்து கம்பெனிகள் பலவும் தங்களுடைய தயாரிப்புகளை அமெரிக்காவில் விற்பனை செய்ய முனைந்தன. அமெரிக்காவில் மருந்துகளை விற்பதில் எஃப்டிஏ-ன் கெடுபிடிகள் கடுமையாக இருக்கும் என்றாலும், வியாபாரரீதியாக மருந்து தயாரிக்கும் கம்பெனிகளுக்கு இது மிக நல்ல லாபம் தரும் விஷயமாகும்.

எஃப்டிஏ-ன் கெடுபிடிகள் அதிகமாவதும் ஒருவகையில் நல்லதுதான். ஏனென்றால், இந்திய மருந்து கம்பெனிகள் சுதாரிப்பாகவும், உலகத் தரத்துடனும் செயல்பட ஆரம்பித்துவிட்டன. எப்போதெல்லாம் எஃப்டிஏ எச்சரிக்கைகளையும், திடீர் சோதனைகளையும் செய்கிறதோ, அப்போ தெல்லாம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பார்மா கம்பெனிகளின் பங்கு விலைகள் மேலும்கீழும் போக ஆரம்பித்து வாலட்டைலாக மாறலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கம்பெனி எப்படி?  

இண்டோகோ ரெமடீஸ் இந்தியாவின் உள்நாட்டு சந்தையிலும் ஏற்றுமதி சந்தையிலும் பங்கெடுக்கும் கம்பெனி. ஏற்றுமதி வர்த்தகத்தில் மிகக் குறைவான லாபமே வைக்க முடிந்தபோதும், இந்த கம்பெனி செய்யும் வியாபாரத்தின் தன்மையே இந்த கம்பெனியை வேறு படுத்திக் காண்பிக்கிறது. இண்டோகோ ரெமடீஸ் பெரும்பான்மையான ஏற்றுமதியை ஒப்பந்த அடிப்படையில் வெவ்வேறு அமெரிக்க நிறுவனங்களுக்காகச் செய்கிறது.

கம்பெனி ஸ்கேன் - இண்டோகோ ரெமடீஸ்!

என்ன பாசிட்டிவ்..?

இதில் என்ன சிறப்பு என்றால், அமெரிக்காவில் இதன் தயாரிப்புகளை இந்த கம்பெனி நேரடியாக விற்பதில்லை. லாபம் குறைவான இந்த பிசினஸ் மாடலைவிட்டு வெளியேவர கம்பெனி கொஞ்சம் கொஞ்சமாக முயற்சிகளை எடுத்துவருகிறது.

பெரிய கம்பெனிகளுடன் கூட்டு, வேகமாக வளரும் கண் மருத்துவத்துக்கான மருந்து தயாரித்தல், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற இடங்களில் அந்த ஊரில் இருக்கும் பார்ட்னரின் ப்ராண்டில் வியாபாரம், ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா, காமன்வெல்த் இண்டிபெண்டன்ட் ஸ்டேட்ஸ், தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளில் தன்னுடைய ப்ராண்டிலேயே மருந்துகளை விற்க முயற்சி எடுத்துவருகிறது இண்டோகோ ரெமடீஸ்.

இதுதவிர, ஐரோப்பாவுக்கு கண் தொடர்பான மருந்துகளை சப்ளை செய்வதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறது.  தற்சமயம் ஏறக்குறைய பன்னிரண்டு கண் மருந்துகளுக்கான பேடன்ட்களை ஃபைல் செய்திருக்கிறது. ஏறக்குறைய நாற்பதுக்கும் மேற்பட்ட ஏற்றுமதிக்கான கூட்டுறவு ப்ராஜெக்ட்களை தற்சமயம் முனைப்புடன் செய்துவருகிறது இண்டோகோ ரெமடீஸ்.

கம்பெனி ஸ்கேன் - இண்டோகோ ரெமடீஸ்!

உள்நாட்டில் வியாபார நிலைமை!

இந்தியாவில், தொற்றுநோயைத் தடுக்கும் மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்யும் இந்த கம்பெனி, அதிக மற்றும் தொடர் லாபம் தரக்கூடிய தொடர் சிகிச்சை தேவைப்படும் வியாதிகளுக்கான மருந்துகளைத் தயாரிக்கவும் முனைப்புடன் முயன்று வருகிறது.பெரிய அளவில் கடன் இல்லாத கம்பெனி இது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட காலத்தில் இருந்து பார்த்தால், ஏறக்குறைய 13 சதவிகிதம் ரிட்டர்ன் ஆன் நெட்வொர்த்-ம், 14 சதவிகிதம் முதலீட்டின் மீதான வருமானமும் தந்துவந்துள்ளது. படிப்படியாக லாபத்தை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கும் கம்பெனி இது.

பிரச்னைகள் ஏதும் உண்டா?

சமீபகாலமாகவே மருந்து கம்பெனிகள் கடுமையான ரெகுலேட்டரி சூழலைச் சந்தித்து வருகிறது. அதிலும் ஏற்றுமதி செய்யும் கம்பெனிகள் மிகவும் கடுமையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகளைச் சந்தித்துவருகிறது. நிறைய கம்பெனிகள் தரக்கட்டுப்பாட்டில் கோட்டைவிடுவதால் கட்டுப்பாடுகளும் தணிக்கைகளும் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்தச் சூழலிலும் இதுவரை இண்டோகோ ரெமடீஸின் ஃபேக்டரி களில் நடந்த தணிக்கைகளில் பெரியதொரு நெகட்டிவ்வான விஷயங்கள் ஏதுமில்லை என்பதால் இந்தநிலை தொடரலாம் என்ற நம்பிக்கை வைக்கலாம்.

உள்நாட்டு மருந்து விற்பனையில் எக்கச்சக்கமான போட்டி நிலவுகிறது. உள்நாட்டு விற்பனை இண்டோகோ ரெமடீஸின் விற்பனையில் பெரும்பங்கு வகிக்கிறது. அதேபோல், அமெரிக்க சந்தையிலும் கண் மருத்துவத்துவக்கான மருந்துகளில் நிறைய ஜெனரிக் கம்பெனிகள் போட்டிக்கு வர ஆரம்பித்துள்ளன.  

கம்பெனி ஸ்கேன் - இண்டோகோ ரெமடீஸ்!

நிர்வாகம் எப்படி?

மிகவும் கவனத்துடன் ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கும் கம்பெனி இது. இந்தத் துறை, அதிக   ரிஸ்க் மற்றும் போட்டி நிறைந்தது என்பதால், பெரிய ரிஸ்க்குகள் எடுக்க வாய்ப்பில்லை. ஏற்றுமதி வணிகத்தில் பெரிய அளவிலான இடத்தைப் பிடிக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த கம்பெனி செயல்பட்டு வருகிறது. ப்ரமோட்டர்களுடைய ஷேர் எதுவும் கடனுக்காக அடகில் இல்லை. இதையும் ஒரு நல்ல விஷயமாகவே கருதலாம்.

ஏன் இந்தப் பங்கை வாங்கவேண்டும்?

இன்றைய செயல்பாடுகளைவைத்துப் பார்த்தால், பெரிய அளவிலான வியாபாரத்தை இந்தியாவிலேயே செய்துவருகிறது என்றாலும், நாளடைவில் ஜெனரிக் மருந்துகள் ஏற்றுமதி விற்பனையில் பெரிய அளவில் முன்னேற்றத்தை அடைய வாய்ப்புகள் இருக்கிறது. உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம், கடன் மிகவும் குறைவாக இருப்பது, பேலன்ஸ்ஷீட்டும் ஒரு சீரான நிலைமையில் இருப்பது என பல நல்ல விஷயங்களால் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம்.  இப்படி பல நல்ல விஷயங்கள் இருப்பதால், இந்த கம்பெனியின் பங்குகள் விலை குறையும்போது, மூன்று ஆண்டுகால அடிப்படையில் முதலீட்டுக்கு ஃபாலோ செய்யலாம்.

                  - நாணயம் ஸ்கேனர்.

(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism