Published:Updated:

அதிக லாபம் தருமா?

டைரக்ட் மியூச்சுவல் ஃபண்டு:

நாம் செய்யும் முதலீடு அதிக லாபத்தைப் பெற்று தரவேண்டும் என்பதுதான் அனைவரின் குறிக்கோளாக இருக்கும்! வழக்கமாக கிடைக்கும் லாபத்தைவிட கூடுதலாக 1% கிடைத்தால் சந்தோஷம்தானே!

##~##

ந்த 1% என்பது 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு தொடரும்போது லட்சக்கணக்கான ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் இல்லையா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டில் ஏஜென்ட்கள் மூலம் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால், டைரக்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் நாமே நேரடியாக முதலீடு செய்யும்போது இந்தக் கூடுதல் லாபத்தை அறுவடை செய்ய முடியும்.

அதிக லாபம் தருமா?

நேரடி முதலீடு: எப்படி செய்வது?

ஏஜென்ட்கள் மூலம் இல்லாமல், நாமே நேரடியாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் டைரக்ட் மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டு முறையைக் கடந்த 2013 ஜனவரியில் செபி அறிமுகம் செய்தது.

பொதுவாக ஃபண்டுகளில் ஏஜென்ட் மூலம் முதலீடு  செய்யும் போது நிர்வாகக் கட்டணம் சுமார் 2 சதவிகிதமாக இருக்கும். இதுவே, டைரக்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது அதன் நிர்வாகக் கட்டணம் 1.25 சதவிகிதமாக மட்டுமே இருக்கும். அதாவது, ஏஜென்ட்களுக்கு கமிஷன் தரவேண்டிய தேவை இல்லை என்பதால் இந்த வித்தியாசம்.

அதிக லாபம் தருமா?

டைரக்ட் மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் சாதகங்கள் என்ன, பாதகங்கள் என்ன என்று வேல்யூ இன்வெஸ்ட் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைவர் பி.வி.ஆர். வெங்கடேஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

''டைரக்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் நிர்வாகச் செலவு சற்று குறைவாக இருக்கும். நீண்டகாலத்தில் பார்க்கும்போது, அது மிகப் பெரிய லாபமாக இருக்கும்.

அதிக லாபம் தருமா?

இந்த டைரக்ட் மியூச்சுவல் ஃபண்டில் நேரடியாகச் சென்று முதலீடு செய்யும்போது, எந்த ஃபண்டு சிறந்தது என்பதை பலரால் சரியாக கணிக்க முடிவதில்லை. ஒரு ஃபண்டை தேர்ந்தெடுக்கும்போது, அது யாருக்கு சிறந்தது, அதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா என்று தெரிந்தால் மட்டுமே நேரடியாக முதலீடு செய்யவேண்டும்.

அதிக லாபம் தருமா?

மேலும், ஃபண்டு சம்பந்தமான எந்த சேவையும் ஏஜென்டிடமிருந்து கிடைக்காது. சந்தை மிகவும் மோசமான செயல்பாட்டுக்கு போகும் நிலை இருந்தால், ஏஜென்ட்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்டு ஆலோசகர்கள் ஃபண்டை ஈக்விட்டி ஆப்ஷனிலிருந்து கடன் ஆப்ஷனுக்கு மாற்றவோ அல்லது சந்தை நன்றாகச் செயல்படும்போது கடன் ஆப்ஷனிலிருந்து ஈக்விட்டி ஆப்ஷனுக்கு முதலீட்டை மாற்றவோ ஆலோசனை வழங்க வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆலோசனைகள் நேரடி முதலீட்டுத் திட்டத்தில் கிடைக்காது'' என்றவர், இதில் லாபம் என்பது எப்படி இருக்கும் என்பதை ஓர் உதாரணம் மூலம் குறிப்பிட்டார்.

அதிக லாபம் தருமா?

''ஒருவர் 1 லட்சம் ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார். 20 ஆண்டு காலத்தில் வழக்கமான திட்டத்தில் 15%, நேரடி திட்டத்தில் 15.75% வருமானம் கிடைத்தால், நேரடித் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொகை சுமார் ரூ.2.30 லட்சம் கூடுதலாக இருக்கும்'' என்றார்.  

சரியான ஃபண்டுகளைத் தேர்வு செய்வதைத் தெரிந்துகொண்டு, அந்த ஃபண்டுகளின் செயல்பாட்டை அடிக்கடி கண்காணிக்கும் திறமையும் பெற்றுவிட்டால், நீண்டகால நோக்கில் டைரக்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்கலாம்.

- சே.புகழரசி,

படம்: வீ.நாகமணி.

நேரடித் திட்டத்துக்கு மாறுவது எப்படி?

ஏற்கெனவே ஏஜென்ட் மூலம் முதலீடு செய்துள்ளேன். இந்த முதலீட்டை நேரடித் திட்டத்துக்கு எப்படி மாற்றிக்கொள்வது என்பது பலரின் சந்தேகமாக இருக்கிறது. இதற்கு குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டின் யூனிட்களை விற்றுவிட்டு, புதிதாக நேரடி ப்ளானின் கீழ் முதலீடு செய்யவேண்டும். இப்படி மாறும்போது, வெளியேறும் கட்டணம் இருக்கிறதா, லாபத்துக்கு வருமான வரி கட்டவேண்டி வருமா என்பதைக் கவனித்து செயல்படவேண்டும். ஒரு வருடத்துக்குள் மாறுவது அவ்வளவு லாபகரமாக இருக்க வாய்ப்பில்லை.