Published:Updated:

கமாடிட்டி- மெட்டல் & ஆயில்

கமாடிட்டி- மெட்டல் & ஆயில்

இந்த வாரம் கச்சா எண்ணெய் விலைப்போக்கு பற்றி விரிவாகச் சொல்கிறார் ஐஃபின் நிறுவனத்தின் ரிசர்ச் அனலிஸ்ட் ஹெச்.ரங்கராஜன்.

கச்சா எண்ணெய்!

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''அமெரிக்க ஃபெடரல் மானிட்டரி கொள்கையாலும், அதேசமயம் லிபியாவில் உற்பத்தி அதிகரித்து வருவதையடுத்தும் கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்தே காணப்படுகிறது.

கடந்த பல மாதங்களாகவே லிபியாவில் முக்கிய ஆயில் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், உற்பத்தி குறைந்திருந்தது. தற்போது இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டதால் லிபியன் நேஷனல் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் இன்னும் சில நாட்களில் உற்பத்தியை மீண்டும் தொடங்கப்போகிறது. இதனால், கச்சா எண்ணெய் உற்பத்தி நாளன்றுக்கு 3,30,000 பேரல்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

அமெரிக்கத் தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரம்ப வேலையில்லாதோர்  எண்ணிக்கை 2,000 குறைந்து 3,39,000 அளவில் உள்ளது. அதேசமயம், கடந்த டிசம்பர் மாதத்தில் ஐஎஸ்எம் உற்பத்தி குறியீடு -0.3% குறைந்து 57 புள்ளிகளாக உள்ளன.

கமாடிட்டி- மெட்டல் & ஆயில்

மேலும், டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதாலும், அதேசமயம் லிபியாவில் உற்பத்தி அதிகரித்து வருவதாலும் வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது அதிக விலையிறக்கத்தைத் தடுக்கும்.

மேலும், எம்சிஎக்ஸ்-ல் ஷார்ட் டேர்ம் ட்ரேடிங்கில் சப்போர்ட் லெவல் ரூ.5,950 ஆகும். இந்த லெவலை உடைத்து செல்லும்பட்சத்தில் ரூ.5,870 / 5,820 வரை செல்லலாம். மேலே செல்லும்பட்சத்தில் ரெசிஸ்டன்ஸ் லெவல் ரூ.6,100-ஐ தாண்டி சென்றால், ரூ.6,225 / 6,270 வரை செல்லலாம்.

விற்கும் விலை (ஜனவரி கான்ட்ராக்ட்): ரூ.6,040 - 6,050 இலக்கு விலை: ரூ.5,950 - 5,820 ஸ்டாப் லாஸ்: ரூ.6,100."

தங்கம்!

கமாடிட்டி- மெட்டல் & ஆயில்

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் ஊக்குவிப்பு நடவடிக்கைகளையடுத்து, தங்கத்தின் விலை சரிந்தது. மேலும், 2014-ல் இந்த ஊக்குவிப்புத் திட்டம் தொடரும் என்ற கருத்துகளால் கடந்த வாரம் ஆசிய சந்தைகளிலும் தங்கத்தின் விலை குறைந்தது. மேலும், அமெரிக்கப் பங்குகளின் பலவீனமான போக்கால், அந்த முதலீடுகள் விலைமதிப்பற்ற உலோகங்களில் முதலீடு செய்வதற்காக திரும்பியபோதும் விலை சரிந்தே காணப்பட்டது. எனினும், வியாழக்கிழமை அன்று ஆசிய சந்தையில் உருவான திடீர் தேவை காரணமாக தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸுக்கு 25 டாலருக்கு அதிகமாக உயர்ந்தது. அதேசமயம், ஆசியாவில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, வரும் வாரத்தில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பைப் பொறுத்து தங்கத்தின் விலை அதிகரிக்கலாம்.  

வெள்ளி!

அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்திருந்தாலும், ஆசியாவில் வெள்ளியின் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரும் வாரத்தில் வெள்ளியின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். அதேசமயம், ரூபாயின் சரிவு மேலும் விலையேற்றத்துக்கு வழி வகுக்கலாம்.

கமாடிட்டி- மெட்டல் & ஆயில்

அடிப்படை உலோகங்கள்!

காப்பர்: அதிகளவில் காப்பரை  பயன்படுத்தும் நுகர்வோரான சீனாவில் பணப்புழக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக, குறுகியகால பணச் சந்தை விகிதங்கள் 6 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்தது. இருப்பினும் லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சுகளில் காப்பர் இருப்பு கடந்த இரு மாதங்களாக 90,000 மெட்ரிக் டன் குறைந்துள்ளது. இதனால், அதிக விலையிறக்கம் தடுக்கப்பட்டு, காப்பர் விலை அதிக ஏற்றஇறக்கம் இல்லாமல் காணப்படுகிறது. ஆக, வரும் வாரத்தில் காப்பரின் விலை குறைய வாய்ப்புகள் அதிகம்.

லெட்: அமெரிக்காவில் கார் விற்பனை அதிகரிக்கும்பட்சத்தில் லெட் விலை உயர வாய்ப்புகள் அதிகம். அதேசமயம், பேட்டரிகளில் பயன்படும் உலோகங்களின் தேவை குறைவாக இருப்பதால் விலை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிங்க்: லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் ஜிங்க் இருப்பு, எதிர்கால நோக்கில் குறையலாம். இதனால் சப்ளை குறையும் என்பதால் நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கலாம். எனினும், ஒரு ட்ரேடிங் நாளில் மட்டும் ஜிங்க் சப்ளை 44,000 மெட்ரிக் டன் அதிகரித்ததால் வரும் வாரத்தில் ஜிங்க் விலை குறைய வாய்ப்புகள் அதிகம்.

நிக்கல்: அதிகப்படியான இருப்பு காரணமாக நிக்கல் விலை குறையவே வாய்ப்புகள் அதிகம். எனினும், இந்தோனேஷியா நிக்கலுக்கான ஏற்றுமதியை தடை செய்துள்ளதால், நிக்கல் விலை உயரும்போது விற்கலாம்.

கமாடிட்டி- மெட்டல் & ஆயில்

இயற்கை எரிவாயு!

அமெரிக்காவின் கிழக்கு பகுதிகளில் சக்தி வாய்ந்த குளிர்கால புயலால் குளிர் அதிகமாகியதால், வெப்பநிலையை சமன்படுத்த இயற்கை எரிவாயு தேவை அதிகரித்தது. இதனால், கடந்த வாரம் இயற்கை எரிவாயு அதிகரித்தே வர்த்தகமானது. மேலும், அமெரிக்காவில் நவம்பர் முதல் மார்ச் வரையில் குளிர்காலம் தொடர்வதால், வீடு மற்றும் தொழிற்துறைகளில் வெப்பமேற்ற பயன்படுவதால் இந்தக் காலகட்டங்களில் இயற்கை எரிவாயுவின் தேவை அதிகரிக்கும். இதனால், வரும் வாரத்தில் இயற்கை எரிவாயு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

- சே.புகழரசி,

படங்கள்: ப.சரவணக்குமார், ஜெ.வேங்கடராஜ்.

ரூபாயின் விலையில் மாற்றம் இருக்காது!

கமாடிட்டி- மெட்டல் & ஆயில்

கே.சுரேஷ், சிஇஓ,

இந்தியா சிமென்ட்ஸ் கேப்பிட்டல்.

''கடந்த வாரம் ஏற்கெனவே சொல்லியபடியே ரூபாயின் மதிப்பு ரூ.61.50 - 62.50-ஆக இருந்தது. வரும் வாரத்தில் அந்நிய முதலீடுகள் அதிகளவில் இல்லாத காரணத்தாலும், அதேசமயம் டாலரின் தேவை அதிகமாக இருப்பதாலும் ரூபாயின் மதிப்பு சரியவே வாய்ப்புகள் அதிகம். எனவே, ரூபாயின் மதிப்பு கடந்த வாரத்தைப்போலவே இருக்கும். பெரிய அளவில் மாற்றம் இருக்காது.''

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 04466802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!