Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

வரும் வாரத்தில் ஏற்றுமதி தேவை மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் விதைப்பு குறைவு மஞ்சள் விலையேற்றத்துக்கு வழி வகுக்கலாம்.

அக்ரி கமாடிட்டி!

கொண்டைக்கடலை!  (Chana)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

தேவைக் குறைவு மற்றும் அதிகப்படியான வரத்து காரணமாக  கடந்த வாரம் விலை குறைந்தே வர்த்தகமானது. அதேசமயம், போதுமான வரத்து மற்றும் அதிகப்படியான இறக்குமதி மேலும் விலையிறக்கத்துக்கு  காரணமாக அமைந்தது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் கொண்டைக்கடலை விதைப்பு முறையே 3.35 மில்லியன் ஹெக்டேர், 1.49 மில்லியன் ஹெக்டேர் மற்றும் 1.25 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவாக அதிகரித்துள்ளது. எனினும், விலை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது. மேலும், விவசாயத் துறை அறிக்கையின்படி (டிசம்பர் 31 நிலவரப்படி) கொண்டைக்கடலை 9.34 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவாக அதிகரித்துள்ளது. இது, கடந்த வருடம் இதேகாலத்தில் 8.69 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவாக இருந்தது. வரும் வாரத்தில் தேவை அதிகரித்தால் விலையில் மாற்றம் இருக்கலாம்.

அக்ரி கமாடிட்டி!

ஜீரகம்!  (Jeera)

கடந்த வாரம் ஜீரகத்தின் விலை ஏற்றுமதி குறித்த விசாரணையால் விலை அதிகரித்து காணப்பட்டது. மேலும், சிரியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் நிலவிவந்த அரசியல் பிரச்னை காரணமாக உற்பத்தி  குறைந்துள்ளதையடுத்து, ஏற்றுமதி ஆர்டர்கள் இந்தியாவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமையன்று உஞ்ஹா சந்தையில் வரத்து 2,500 பைகளாக இருந்தன.  ஏப்ரல்-செப்டம்பர் 2013 ஏற்றுமதி 67,500 டன்னாக இருந்தது. இதுவே, 2012-ல் இதேகாலத்தில் 35,018 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தைகளில் தேவை காரணமாக ஜீரகத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

அக்ரி கமாடிட்டி!
அக்ரி கமாடிட்டி!

மஞ்சள்!  (Turmeric)

அதிகப்படியான கேரி ஓவர் ஸ்டாக்ஸ் மற்றும் வர்த்தகர்கள் லாபத்தை புக் செய்ததால் கடந்த வாரம் விலை குறைந்து காணப்பட்டது. எனினும், வார இறுதியில் உள்நாட்டுத் தேவை அதிகரித்ததன் காரணமாக விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. கடந்த வியாழக்கிழமையன்று நிஜாமாபாத் மற்றும் ஈரோடு சந்தைகளில் வரத்து முறையே 2,000, 3,000 பைகளாக இருந்தது. மேலும், 2013-2014ல் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் மஞ்சள் விதைப்பு 0.53 லட்சம் ஹெக்டேராகும். இது, கடந்த வருடம் 0.68 லட்சம் ஹெக்டேராக இருந்தது குறிப்பிடத்தக்கது. சராசரி மஞ்சள் விதைப்பு அளவு 0.68 லட்சம் ஹெக்டேராகும். வரும் வாரத்தில் ஏற்றுமதி தேவை மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் விதைப்பு குறைவு விலையேற்றத்துக்கு வழி வகுக்கலாம்.

அக்ரி கமாடிட்டி!
அக்ரி கமாடிட்டி!

கடுகு!  (Mustard)

கடந்த வாரம் கடுகின் விலை ஷார்ட் கவரிங்  செய்யப்பட்ட காரணத்தினால் விலை அதிகரித்தது.  எனினும், கடந்த சில வாரங்களாக அதிகப்படியான இருப்பு மற்றும் விதைப்பு அதிகரிப்பின் காரணமாக விலை குறைந்தே காணப்பட்டது. இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் கடுகு விதைப்பு அதிகரித்துள்ளது. மேலும், கடுகு 6.69 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. இதுவே, கடந்த வருடம் 6.65 மில்லியன் ஹெக்டேராக இருந்தது.  பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கடுகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.3,000-லிருந்து ரூ3,050-ஆக அதிகரித்துள்ளது. தொடர்மழை மற்றும் அதிகப்படியான குளிர் காரணமாக அறுவடை பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், அதிகப்படியான விதைப்பு காரணத்தால் உற்பத்தி அதிகரிக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. ஆக, வரும் வாரத்தில் தேவை அதிகரிப்பின் காரணமாக விலையில் மாற்றம் இருக்கலாம்.  

- சே.புகழரசி.

அக்ரி கமாடிட்டி!