Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:

வார இறுதியில் வேகமான இறக்கம் வரலாம்!

##~##

சென்ற வாரம் திடீர் இறக்கத்தைச் சந்தித்துவிட சிறிதளவு வாய்ப்பு இருக்கிறது என்றும்; செய்திகளும் புது வருடத்துக்கான சென்டிமென்டுமே சந்தையை எடுத்துச் செல்லும் என்றும்; பெரிய அளவில் ட்ரேடிங்குக்கான வாய்ப்பு கிடைக்காது என்றும் சொல்லியிருந்தோம்.

செவ்வாயன்று சற்று பாசிட்டிவ்வாக முடிவடைந்த நிஃப்டி மற்ற நாட்களில் சிறியதும் பெரியதுமாக இறங்கி வார இறுதியில் வாராந்திர அளவில் 102 பாயின்ட் இறக்கத்தில் முடிவடைந்திருந்தது. வரும் வாரத்தில் அமெரிக்க எஃப்ஓஎம்சி மினிட்ஸ் வெளியீடு, அமெரிக்கக் கிழமையில் வியாழனன்று இருக்கிறது. மற்ற நாட்களில் பெரிய பாதிப்பினைத் தரக்கூடிய டேட்டா வெளியீடுகள் ஏதும் இல்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நிஃப்டி பெரிய அளவிலான இறக்கத்தைச் சந்திக்க இன்னும் இரண்டு நாட்கள் வால்யூமுடனான நெகட்டிவ் க்ளோஸிங்கில் முடியவேண்டும். அதுவரை ஷார்ட் சைடு வியாபாரத்தை நினைத்துகூட பார்க்கக்கூடாது. ஏனெனில், திடீர் ஏற்றம் எந்த நிமிடமும் ஷார்ட் சைடு வியாபாரம் செய்தவர்கள் சுதாரிக்க முடியாத அளவுக்கு வந்துவிடும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

வெள்ளியன்று பெரியதொரு இறக்கம் வந்துவிடுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. புதிய ட்ரேடர்களும், ஹைரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் நிஃப்டி ட்ரேடிங்கைத் தவிருங்கள். ப்ரேக் அவுட்கள் நடக்கும்போது சிறிய அளவிலான ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரத்தை செய்வதே இந்த வாரத்துக்கு தகுந்த ஸ்ட்ராடஜியாக இருக்கும்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:

ஹைரிஸ்க் ட்ரேடர்கள் மட்டும், நிஃப்டி சற்று மேல்நோக்கி நகரும்போது கண்டிப்பான ஸ்டாப்லாஸுடன் சிறிய அளவில் ஷார்ட் சைடு வியாபாரத்தினை செய்யலாம். ஓவர் நைட் பொசிஷன்கள் ஏதும் வைத்துக்கொள்ளாதீர்கள்.

03/01/14 அன்று க்ளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் க்ராஸ் ஓவர் நடந்தவை: விஐபி இண்ட்(68.55), யெஸ் பேங்க்(369.80), ஐடியா (162.50), ரிலையன்ஸ் கேப்பிட்டல்(354.80), சொனாட்டா சாஃப்ட்(46.90), சுவென்(73.90), ஹெக்ஸாவேர்(135.05), டிசிஎஸ்(2222.20), இன்ஃபி(3565.15), பஜாஜ் ஹிந்த்(13.95), இன்டோகோ(154), லூபின் (932.90), ஜேபி கெம்பார்மா(137.45), மாருதி(1798.60), இன்ஃப்ராடெல்(174.80), மஹா பேங்க்(36.25) -குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்தவை: அர்விந்த்(144.60), ஆர்பிட் கார்ப்(19.85), யூபி ஹோல்டிங்ஸ்(38.30), ப்ரதீபா (29.15), டெக்ஸ்ரயில்(45.40), பல்ராம் சினி(44.85), உத்தம் ஸ்டீல் (70.10), எரிஸ்(58.45) - நிஃப்டியின் ட்ரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

உறுதியாய் வாராந்திர ட்ரெண்ட் ஏற்றத்தில் மாறியவை (ட்ரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): எம்சிஎக்ஸ்(573.10), டெல்டா கார்ப்(118), விஐபி இண்ட்(68.55), ரான்பாக்ஸி(478.65), பின்கேபிள்ஸ்(89.80), ஜிண்டால்சா(51.90), சொனாட்டா சாஃப்ட்(46.90), டிசிஎஸ்(2222.20), இன்டோகோ(154), போலாரிஸ்(140.20), மெக்டொவெல்(2699.65) குறைந்த எண்ணிக்கை யிலும், மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்.

உறுதியாய் வாராந்திர ட்ரெண்ட் இறக்கத்தில் மாறியவை (ட்ரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): என்டிபிசி(131.75), டாடா மோட்டார்ஸ்(362.70), அதானி பவர் (36.50), ஹிண்டால்கோ(118.75), எல் அண்டு டி (1012.05), கெய்ர்ன் (319.65), அதானி எண்ட்(248.35), ஹெச்டிஎஃப்சி பேங்க்(663.10) -வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகள் இவை. எனவே, ஹைரிஸ்க் விரும்பாதவர்கள் இவற்றில் வியாபாரத்தைத் தவிர்க்கவும்.

சற்று பாசிட்டிவ் ட்ரெண்டுக்கு மாறியவை: எம்சிஎக்ஸ்(573.10), டிசிஎஸ் (2222.20), இன்ஃபோசிஸ் (3565.15), மாதர்சன் சுமி(197), பிஆர்எஃப்எல்(187.15), ஆப்டெக் டெக்(197), ஜோதி லேப்(195.10), உஷர் அக்ரோ(45.15), சோபா (334.80), டிவிஸ் லேப் (1249.55), எவரெடி(36.05)- வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளைத் தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் ட்ரெண்டுக்கு மாறியவை: (ஷார்ட் சைடுக்கும் ரிவர்ஸலுக்கும் வாட்ச் செய்யலாம்):- அம்புஜா சிமென்ட்(177.80), அபன் (368.55), என்சிசி(31.70), இன்டோரமா (18.85), கோவா கார்பன் (76), இந்தியன் பேங்க் (114.55) -இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:

டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து ட்ரேடிங் நடந்தவை (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): அசோக் லேலாண்டு (18.90), ஜேபி அஸோஸியேட் (52.40), டாடா பவர் (84.05), சின்டெக்ஸ்(36.80), எம்சிஎக்ஸ் (573.10), ஐடிசி(314.75), என்டிபிசி (131.75), டிஎல்எஃப் (168.90), அரோபிந்தோ பார்மா (395.15), ஆர்காம்(131.80), ஜேபி பவர் (18.85), டெல்டா கார்ப் (118), யூகோ பேங்க்(77.60), அர்விந்த் (144.60), ஃபைனான் டெக் (223), ஐபி ரியல் எஸ்டேட் (68.15), ஆர்பவர்(71.30), டாடா மோட்டார்ஸ்(362.70), ரேணுகா(19) -தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் ட்ரெண்டுக்கு ஏற்றாற்போல் ட்ரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து ட்ரேடிங் நடந்தவை-(10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): யுனிடெக்(15.25), ஹெச்டிஐஎல்(53.55), அப்போலோ டயர்(105), ஐஎஃப்சிஐ(25.50), சுஸ்லான்(10.85), ஐடிஎஃப்சி (105.45), பவர்கிரீட்(100.70), ஜிஎம்ஆர் இன்ஃப்ரா(23.70), அதானி பவர்(36.50), கேடிகே பேங்க் (110.85), ஹிண்டால்கோ (118.75), புஞ்ச் லாயிட்(118.75) இவற்றை வியாபாரத்துக்கு தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்:  அசோக் லேலாண்டு(18.90), எம்சிஎக்ஸ்(573.10), டிடிஎம்எல்(8.35), டெல்டா கார்ப்(118), ஃபைனான்டெக்(223), காக்ஸ் அண்டு கிங்ஸ்(136.15), விஐபி இண்ட்(68.55), கேட்டி(49.05), பயோகான்(483.60), டாடா எலெக்சி(411.65), ஆன்மொபைல்(33.25), பின்கேபிள்ஸ்(89.80), சொனாட்டா சாஃப்ட்(46.90) - இவை வியாபார எண்ணிக்கையிலும், விலையிலும் நன்கு அதிகரித்த ஷேர்கள். பாப்புலரில்லாத ஸ்டாக்குகள் சில இவற்றில் இருக்கின்றன. எனவே, கவனம் தேவை.

மேற்கண்ட ஸ்டாக்குகளை ட்ராக் செய்து ட்ரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.