Published:Updated:

கமாடிட்டி-மெட்டல் & ஆயில்

கமாடிட்டி-மெட்டல் & ஆயில்

கமாடிட்டி-மெட்டல் & ஆயில்
##~##

இந்த வாரம், கச்சா எண்ணெய் விலைப்போக்குக் குறித்து அம்பாலால் நிறுவனத்தின் ரிசர்ச் ஹெட் எம்.விஜயபாபு விரிவாகச் சொல்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''கடந்த வாரம் அமெரிக்கப் பொருளாதாரம் நன்றாக இருப்பதாக வந்த புள்ளிவிவரத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. ஆனால், அமெரிக்கா மற்றும் கனடாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு என்ற நேர்மறையான செய்தியால் விலை மேலும் உயராமல் தடுக்கப்பட்டது. கடந்த வாரம் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி 8.16 மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவைத் தொட்டது. இது கடந்த 25 ஆண்டுகளில் அதிகமான அளவு உற்பத்தியாகும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி, ஜனவரி 20-ம் தேதி முதல் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படும். அதற்கு ஈடாக, ஈரான் அணுசக்தித் திட்டம் குறித்த மேம்பாடுகளைக் குறைக்கவேண்டும் என்று உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கைக் காரணமாக, வரும் வாரங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கமாடிட்டி-மெட்டல் & ஆயில்

ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவை மற்றும் உற்பத்தி நிலைமையைப் பார்க்கும்போது, வரும் வாரங்களில் விலை குறையவே வாய்ப்பு அதிகம். குறுகிய காலத்தில் ஷார்ட் செல்லிங் (short selling) செய்வதற்கு 6,050 ரூபாய் உகந்த விலையாகும். மேலும், வரும் வாரங்களில் கச்சா எண்ணெய் விலை 5,400 ரூபாய் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், 6,300 ரூபாய் லெவலுக்கு மேலே சென்றால் மட்டுமே விலை அதிகரிக்க வாய்ப்புண்டு. இதற்கிடையில் வரும் ஏற்றத்தில் விற்று லாபம் பார்க்கலாம்.''

தங்கம்!

அமெரிக்கப் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருவதை யடுத்துப் பணவீக்கம் குறைந்து வருகிறது. இதையடுத்து ஃபெடரல் ரிசர்வ் வங்கி 2% இலக்கு வைத்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருவதால், வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கலாம். அதேசமயம், மாதா மாதம் வழங்கும் கடன் பத்திர அளவில் வரும் 28-29-ம் தேதி ஃபெடரல் மீட்டிங்கில் குறைப்பதைப் பற்றி முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வியாழன் அன்று டாலர் சிறிது பலமிழந்து காணப்பட்டது. மேலும், அமெரிக்காவின் எஸ்பிடிஆர் கோல்டு ஃபண்டின் கையிருப்பு 2009 ஜனவரிக்குப் பிறகு அதிக அளவில் குறைந்துள்ளது. வரும் வாரத்தில் டாலரின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். இதையடுத்து தங்கத்தின் விலை குறையலாம். இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில் தங்கத்தின் விலை மேலும் விலை குறையும்.

கமாடிட்டி-மெட்டல் & ஆயில்

வெள்ளி!

அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துவரும் நிலையில், வெள்ளியின் விலை குறையவே வாய்ப்புகள் அதிகம். ஐஷேர்ஸ் சில்வர் ட்ரஸ்டின் வெள்ளி கையிருப்பு குறைந்து வருவதும் விலை குறைய காரணமாகும். மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் நிலையில் வெள்ளியின் விலை மேலும் குறைய வாய்ப்புகள் அதிகம்.

அடிப்படை உலோகங்கள்!

காப்பர்: காப்பரை அதிகளவில் உபயோகப்படுத்தும் நாடான சீனாவில், பொருளாதார முன்னேற்றம் குறித்த சீனாவின் உற்பத்தி மற்றும் உற்பத்தி அல்லாத பிஎம்ஐ மற்றும் பிபிஐ குறியீடுகள் எதிர்பார்த்ததைவிடக் குறைந்துள்ள தால், சீனாவின் பொருளாதாரத்தில் மெதுவான வளர்ச்சியைக் காண முடிகிறது. மேலும், ஐபிஓ மூலம் மீண்டும் நிதித் திரட்ட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதால் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். இதையடுத்து வரும் வாரத்தில் காப்பரின் விலை குறைய வாய்ப்புகள் அதிகம்.

ஜிங்க்: கடந்த 10 ட்ரேடிங் சீஸன்களிலும் ஜிங்க் இருப்பு குறைவாகவே உள்ளது. மேலும், ஜிங்கின் தேவை 30,400 டன்னை தாண்டியுள்ளது என்று ஐஎல்இசட்எஸ்ஜி மதிப்பிட்டுள்ளது. இதனால், ஜிங்கின் விலை நடுத்தரக் காலத்தில் அதிகரிக்கும். வரும் வாரத்தில் விலையில் பெரிய மாற்றம் இருக்காது.

கமாடிட்டி-மெட்டல் & ஆயில்

லெட்: அண்மையில் ஐரோப்பிய நாடுகளில் கார் விற்பனையின் தேவை அதிகரிக்கலாம் என்றும், இதனால் பேட்டரிகளில் உபயோகப்படுத்தும் மெட்டல்களின் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் வாரத்தில் லெட் விலை அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.

நிக்கல்: லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் அதிகப்படியான இருப்பும், சீனத் துறைமுகங்களில் 30 மில்லியன் டன் தரம் குறைந்த தாதுக்கள் இருப்பதும் விலைகுறைவுக்கு வழிவகுக்கும்.

இயற்கை எரிவாயு!

அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளில் குளிர்காற்று காரணமாக வீடுகள் மற்றும் வர்த்தக மையங்களில் வெப்பமூட்டும் தேவை உயர்ந்துள்ளதால், இயற்கை எரிவாயுவின் தேவை அதிகரித்துள்ளது. ஆக, வரும் வாரத்தில் இயற்கை எரிவாயு விலை அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.                              

- சே.புகழரசி

ரூபாயின் மதிப்பு அதிகரிக்கலாம்!

கமாடிட்டி-மெட்டல் & ஆயில்

புரிசை இரா.சுந்தர், தலைவர், ஈக்விட்டி ரிசர்ச், ஏ.டி.எஸ்.

''கடந்த இரண்டு வாரங்களாக அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு குறைந்தே காணப்பட்டது. ஆனால், கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அந்நிய நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பும் 61.39 ரூபாய் வரை சென்றது.

மேலும், ஃபெடரல் மானிட்டரி கொள்கையில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அண்மையில் வெளிவந்த வேலைவாய்ப்பு விகிதம் மிக மோசமாக வந்ததால், இந்த மானிட்டரி கொள்கையில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரத்தில் ரூபாயின் மதிப்பு ரூ.61- 62.50 என்கிற ரேஞ்சுக்குள் வர்த்தகமாக வாய்ப்பிருக்கிறது.''

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 04466802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!