இந்த வாரம் சோயாபீனின் விலைப்போக்கு குறித்து விரிவாகச் சொல்கிறார் இந்தியா நிவேஷ் நிறுவனத்தின் கமாடிட்டி மற்றும் ஃபாரக்ஸ் பிரிவின் தலைவர் மனோஜ்குமார் ஜெயின்.

சோயாபீன்! (Soybean)

"நடப்பாண்டில் வழக்கமான பருவநிலைக் காணப்பட்டது. எனினும், இந்தியாவில் கடந்த பருவத்தில் அறுவடைச் சமயத்தில் ஏற்பட்ட பருவமழைக் காரணமாக சோயாபீன் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் உற்பத்திக் குறைந்துள்ளது. முன்னர் இந்திய அரசு சோயாவிதை உற்பத்தி 14.5 மில்லியன் மெட்ரிக் டன் இருக்கும் என்று மதிப்பிட்டிருந்தது. ஆனால், பின்னர் 12.5 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது. மேலும், சர்வதேச அளவில் சோயாபீன் உற்பத்தி 286.8 மில்லியன் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க மற்றும் பிரேசிலின் அதிக உற்பத்தியால் 1.9 மில்லியன் டன் அதிகமாக உள்ளது.

பிரேசிலில் சோயாபீன் பயிர் 89 மில்லியன் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வறட்சியான சூழ்நிலைக் காரணமாக அர்ஜென்டினாவில் சோயாபீன் பயிர்களின் தரம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வருடம் சர்வதேச உற்பத்தி அதிகமாக உள்ளது.

இந்தியாவில் வியாபாரிகள் அதிக விலையை எதிர்பார்த்துக் கையிருப்பைச் சந்தைக்குக் கொண்டு வராமல் வைத்துள்ளனர். சர்வதேச உற்பத்தி அதிகமாக இருப்பதால், பெரிய அளவில் விலையேற்றம் இருக்காது. சீனாவில் சோயாவிதை தேவை அதிகமாக உள்ளதால், விலையிறக்கம் தடுக்கப்படும். எனினும், இந்திய சந்தைகளில் ரூபாயின் மதிப்பு அதிகரித்தால் சோயாபீன் விலையில் அழுத்தம் இருக்கலாம். என்சிடிஇஎக்ஸ்-ல் வரும் வாரத்தில் சோயாபீன் பிப்ரவரி கான்ட்ராக்ட் ரூ.3,580-3,740 வரை வர்த்தகமாகலாம்.

சோயாபீன் விலைக்கு முக்கிய ரெசிஸ்டன்ஸ் ரூ.3,800-ஆக உள்ளது. அதேசமயம், முக்கிய சப்போர்ட் ரூ.3,580 ஆகும். விலை ரூ.3,800ஐ தாண்டி செல்லும்பட்சத்தில் வாங்கலாம். ரெசிஸ்டன்ஸ்: ரூ.3,880- 3,950. வார இறுதியில் ரூ.3,580-க்கு கீழ் வர்த்தகம் முடிவடையுமானால் அடுத்த சப்போர்ட் லெவல் ரூ.3,520 - 3,450.

பிப்ரவரி கான்ட்ராக்ட் பரிந்துரை: விலை ஏறும்போது ரூ.3,720-3,750 விலையில் விற்கலாம். முடிவு விலை ஸ்டாப் லாஸ்- ரூ.3,800 (strict stop loss), டார்கெட்- ரூ.3,660-3,580.'

கொண்டைக்கடலை! (Chana)

கடந்த வாரம் உள்நாட்டு தேவை இருந்ததால் விலை சற்று அதிகரித்தே வர்த்தகமானது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் விதைப்பு முறையே 3.48 மில்லியன் ஹெக்டேராகவும், 1.75 மில்லியன் ஹெக்டேராகவும் மற்றும் 1.74 மில்லியன் ஹெக்டேராகவும் உள்ளது. அதேசமயம், கர்நாடகாவில் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது ஜனவரி 9 நிலவரப்படி, 1.01 மில்லியன் ஹெக்டேராக விதைப்பு குறைந்துள்ளது. மேலும், வேளாண் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொண்டைக்கடலை விதைப்புப் பரப்பளவு 9.27 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவிலிருந்து 10.18 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவாக அதிகரித்துள்ளது. தவிர, கேபினட் கமிட்டி கொண்டைக்கடலையின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ3,000-லிருந்து ரூ.3,100- ஆக அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக, கொண்டைக்கடலை விலை ஏற்றஇறக்கத்துடனே காணப்படும். வடஇந்திய மாநிலங்களில் தேவை அதிகரிக்கும்பட்சத்தில் விலையில் மாற்றம் இருக்கலாம். அதேசமயம், அதிகளவு விதைப்பு மற்றும் போதுமான வரத்துக் காரணமாக அதிக விலையேற்றம் தடுக்கப்படலாம்.

ஜீரகம்! (Jeera)

கடந்த வாரம் ஜீரகத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டது. எனினும், புதிய ஏற்றுமதி ஆர்டர் விசாரணைகள் அதிகளவு விலையிறக்கத்தைத் தடுத்தது. கடந்த வியாழக்கிழமையன்று உஞ்ஹா சந்தைக்கு வரத்து 3,000 பைகளாக இருந்தது.

மேலும், ஸ்பைசஸ் போர்டு ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏப்ரல்-செப்டம்பர் 2012-ல் 35,018-ஆக இருந்த ஜீரக ஏற்றுமதி ஏப்ரல்-செப்டம்பர் 2013-ல் 67,500 டன்னாக அதிகரித்துள்ளது. ஜீரகம் உற்பத்தி 2012-13-ல் 40-45 லட்சம் பைகளாக (1 பை - 55 கிலோ) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே, கடந்தாண்டு 40 லட்சம் பைகளாகும். மேலும், 2011-12-ல் அறுவடை செய்யப்பட்ட ஜீரகத்தில் 8-9 லட்சம் பைகள் கையிருப்பு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக விதைப்புக் காரணமாக ஜீரகத்தின் விலை குறையலாம். அதேசமயம், சர்வதேச சந்தைகளில் தேவை அதிகரிக்கும்பட்சத்தில் விலையில் மாற்றம் இருக்கலாம்.

மஞ்சள்! (Turmeric)

மஞ்சளின் விலை கடந்த சில நாட்களில் நிலை பெற்று உயர்ந்து காணப்படுகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு தேவை அதிகரிப்பு மற்றும் ஆந்திராவின் குறைந்த உற்பத்தியே இதற்கு முக்கிய காரணமாகும். அதேசமயம், அதிக கையிருப்பும் புதிய வரத்தும் விலை ஏற்றத்தைச் சற்று தடுத்து நிறுத்தியது.

கடந்த வியாழக்கிழமையன்று நிஜாமாபாத் சந்தைக்கு வரத்து 5,000 பைகளாக இருந்தது. மேலும், ஆந்திராவில் 2013-14 பருவத்தில்

மஞ்சள் விதைப்பு 0.68 லட்சம் ஹெக்டேரிலிருந்து குறைந்து 0.53 லட்சம் ஹெக்டேராக உள்ளது. சராசரி விதைப்புப் பரப்பளவு 0.68 லட்சம் ஹெக்டேர் ஆகும். 2012-13ல் உற்பத்தி 45 லட்சம் பைகளாகும். இது சராசரி உற்பத்தியில் 40-50 சதவிகிதம் குறைவாகும். மேலும், நடப்பாண்டில் மஞ்சள் கையிருப்பு 10 லட்சம் பைகளாக இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது (1 பை - 75 கிலோ).

தேவை மற்றும் ஆந்திராவின் உற்பத்திக் குறைவு விலையேற்றத்துக்கு வழிவகுக்கலாம். அதேசமயம், புதிய வரத்து மற்றும் அதிகப்படியான இருப்பு அதிக ஏற்றத்தைத் தடுக்கலாம்.

- சே.புகழரசி.