Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: ட்ரேடர்ஸ் பக்கங்கள்

தெளிவில்லா நிலை தொடரும்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: ட்ரேடர்ஸ் பக்கங்கள்
##~##

வெளிவரும் டேட்டாக்களே சந்தையின் போக்கை வரும் வாரத்தில் நிர்ணயம் செய்வதாக இருக்கும் என்றும்; குழப்பமான சூழல் இந்த வாரமும் தொடரலாம் என்றும்; செய்திகள் மற்றும் ரிசல்ட்களின் போக்குக்கேற்ப மூவ்மென்ட்கள் இருக்கும் என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யவேண்டியிருக்கும் என்றும் சொல்லியிருந்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இரண்டு நாள் நல்லதொரு ஏற்றத்தையும், மூன்று நாட்கள் சுமாரான இறக்கத்தையும் சந்தித்த சந்தை, வெள்ளியன்று வாராந்திர அளவில் 90 புள்ளிகள் அதிகரித்து முடிவடைந்தது.  வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் காலாண்டு முடிவுகளே சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும். முக்கிய இந்திய டேட்டா வெளியீடுகள் எதுவும் இல்லாத வாரம். அமெரிக்காவிலிருந்து டேட்டா வெளியீடுகள் வரும் வாரத்தில் நிறைய இருந்தபோதிலும் வியாழனன்று வெளிவர உள்ள முக்கிய டேட்டாவான ஜாப்லெஸ் க்ளைம் டேட்டாவின் இம்பேக்ட் இந்திய சந்தையில் வெள்ளியன்று தெரிய வாய்ப்புள்ளது.

நிஃப்டியில் பெரிய ட்ரேடிங் வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பில்லை. ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி, ஓப்பனிங்கிலேயே மாற்றங்கள் வந்து முடிந்துவிடும் நிலைமைத் தொடரவே வாய்ப்புள்ளது. சிறந்த அனுபவஸ்தர்களும், ஹைரிஸ்க் எடுக்க விரும்புபவர்களும் மட்டுமே நிஃப்டியில் ட்ரேடிங் செய்ய முயலலாம். அதிலும், ஓவர்நைட் பொசிஷன்கள் கூடவே கூடாது. மற்ற ட்ரேடர்கள் புதியதாக ப்ரேக் அவுட்கள் ஸ்டாக்குகளில் சிறிய அளவில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும்.

ஒவ்வொரு பொசிஷனின் மீதும் அதீத கவனம் வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ள தருணம் இது.

17/01/14 அன்று க்ளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: ட்ரேடர்ஸ் பக்கங்கள்

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் க்ராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்:- கிராம்ப்டன் கிரீவ்ஸ் (114.30), கிராவிட்டா (50), எஆர்எஸ் இன்ஃப்ரா (25.30), இன்ஜினீயர்ஸ் இந்தியா (157.45), பஜாஜ் ஆட்டோ (1933.45), மாரிக்கோ (214.95), கிளென் மார்க் (508.10), கோத்ரெஜ் சிபி (770.55), காமன் இந்தியா (14.90), பிடிலைட் இண்ட் (282.05)-குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் க்ராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்- ஹெச்டிஎஃப்சி பேங்க் (665), ஆக்ஸிஸ் பேங்க் (1152.95), ஹெச்டிஎஃப்சி (840.05), கீதாஞ்சலி (67.40), இன்ஃபி (3729.75), எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் (208.70), ஐபி ரியல் எஸ்டேட் (63.65), ஹிந்த் சிங்க் (129.45), அதானி எண்ட் (239.85), ஆர்இசி லிட் (192.80), செஞ்சுரிடெக்ஸ் (300.35), பஜாஜ் ஹிந்த் (13.85), பிஎன்பி (596.90), இந்தியா சிமென்ட் (54.45), டிசிடபிள்யூ (11.80), சுந்தரம் (18.60), ரேமண்டு (285.15), சீமென்ஸ் (590.75)- நிஃப்டியின் ட்ரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

உறுதியாய் வாராந்திர ட்ரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (ட்ரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): ஐஓசி (225.10), பிஹெச்இஎல் (171.85), கிராவிட்டா (50), எஆர்எஸ்எஸ் இன்ஃப்ரா (25.30), டால்மியா பாரத் (196.95), மங்களம் சிமென்ட் (108.80) - குறைந்த எண்ணிக்கையிலும் மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்.

உறுதியாய் வாராந்திர ட்ரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (ட்ரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): ஐடியா(151), பிடிசி(57.50), ரான்பாக்ஸி(406.35), ஜேபி பவர்(16.65), ஆர்இசி லிட்(192.80), பாம்பே டையிங்(62.20), அனந்தராஜ்(51.15), பூர்வா(71.25), ஓரியன்ட் பேங்க்(196.55), ஜெயின் இர்ரிகேஷன்(67.75), ஜெட் ஏர்வேய்ஸ்(264.45), எஸ்கார்ட்ஸ்(115.70), ஸ்பார்க்(152.80), இன்ஃப்ராடெல்(171.90), சன் டிவி (357.80), டிவி டுடே(104.65), குளோபஸ் ஸ்பிரிட்(76.85)- வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகள் இவை. எனவே, ஹைரிஸ்க் விரும்பாதவர்கள் இவற்றில் வியாபாரத்தைத் தவிர்க்கவும்.

சற்று பாசிட்டிவ் ட்ரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: ஐஓசி(225.10), சிட்டி கேபிள்(18.40), ஹிந்த் பெட்ரோ(236.80), ஹிந்த் யுனிலீவர் (558.90), எம் அண்டு எம் (899.55), டிசிபி லிட்(513.80), ஷில்பாமெட்(281.05)- வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளைத் தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் ட்ரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள் : (ஷார்ட் சைடுக்கும் ரிவர்ஸலுக்கும் வாட்ச் செய்யலாம்):-  ஹெச்டிஎஃப்சி பேங்க் (665), எஃப்ஆர்எல் (84.35), டிசிஎஸ் (2213.05), அர்விந்த் (142), ஹெச்சிஎல் இன்சிஸ் (26.35), கேட்டி (56.60), சிப்லா (417.60), டாபர் (167.20), ஹெக்ஸாவேர் (134), டெக் மஹிந்திரா (1775.25), எஸ்ஆர்இஐ இன்ஃப்ரா (22.50), டிவிஎஸ் மோட்டார் (70.85), குவாலிட்டி (31.30), மெக்டொவெல் (2663.40), மிர்சா இண்ட் (32.30)- இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து ட்ரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: ஜேபி அஸோஸியேட் (47.25), ஐடியா (151), ஆர்.காம் (125.25), ஹெச்டிஎஃப்சி பேங்க் (665), என்டிபிசி (131.60), ஃபெடரல் பேங்க் (79.45), எஃப்ஆர்எல் (84.35), ஐடிசி (324.85), டிஎல்எஃப் (155.35), பார்தி ஏர்டெல் (310.90), ஐஎஃப்சிஐ (23.85), பிடிசி (57.50), ஹிண்டால்கோ (111.30), எஸ்எஸ்எல்டி (200.60), டாடா மோட்டார்ஸ் (369.70), ரான்பாக்ஸி (406.35), அரோபிந்தோ பார்மா (384.90), ஓஎன்ஜிசி (287.50), ஐஆர்பி (81.50), ஆக்ஸிஸ் பேங்க் (1152.95), டிசிஎஸ் (2213.05), ஹெச்டிஎஃப்சி (840.05), கீதாஞ்சலி (67.40), கேஆர்பிஎல் (40.90), ரிலையன்ஸ் (884.75), என்எம்டிசி (145.50), ஐஓசி (225.10), பிஹெச்இஎல் (171.85), இன்ஃபி (3729.75), என்ஐஐடி லிட் (27.55) தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டுக்கேற்றாற்போல் ட்ரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாகக் குறைந்து ட்ரேடிங் நடந்த ஷேர்கள்-(10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): ஹெச்டிஐஎல் (48.60), பவர் கிரீட் (97.25), ஐடிஎஃப்சி (100.05), ஜிவிகேபிஐஎல் (9.65), ஜிஎம்ஆர் இன்ஃப்ரா (22.95), அப்போலோ டயர் (113.85), ரேணுகா(21.15), சுஸ்லான் (10.50), யெஸ்பேங்க் (351.15), அசோக் லேலாண்டு (16.85), டாடா ஸ்டீல்(377.65), சின்டெக்ஸ் (35.55), அர்விந்த் (142), ஹெச்சிஎல் இன்சிஸ் (26.35), எஃப்எஸ்எல்(25), ஆர்பவர் (67.60), எஎல்பிகே (92.70) -இவற்றை வியாபாரத்துக்குத் தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்:  ஐஓசி (225.10), ருஷில்(61.20), அக்ஷ்ஆப்டிபைபர் (15.80), கிராவிட்டா (50), நௌக்ரி(571.80), டால்மியா பாரத் (196.95), காமன் இந்தியா (14.90), சைகாஜென் இந்தியா (14.20)

இவை வியாபார எண்ணிக்கையிலும், விலையிலும் நன்கு அதிகரித்த ஷேர்கள். கவனமாகவும் இருக்கவேண்டும். பாப்புலரில்லாத ஸ்டாக்குகள் சில இவற்றில் இருக்கின்றன. எனவே, கவனம் தேவை.

மேற்கண்ட ஸ்டாக்குகளை ட்ராக் செய்து ட்ரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.