Published:Updated:

கம்பெனி ஸ்கேன் : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா!

கம்பெனி ஸ்கேன் : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா!

கம்பெனி ஸ்கேன் : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா!

கம்பெனி ஸ்கேன் : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா!

Published:Updated:
##~##

1991-ல் ஆரம்பிக்கப்பட்ட  பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், இந்திய மாநிலங்களின் இடையேயான மின்பகிர்மானத்தைச் செம்மைப் படுத்த மத்திய அரசால் உருவாக் கப்பட்டது.  நம் நாட்டின் மின் பகிர்மானத்தில் பெரும் பங்கினை இன்றும் வகித்துவரும் ஒரே நிறுவனம் இதுதான்!

 தொழில் எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மின்சாரத்தைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட உற்பத்தியைவிட 15% வரை தேவைத் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. மின் உற்பத்தியை அதிகரித்தால் மட்டும் இந்தத் தேவைத் தீர்ந்துவிடாது. உற்பத்திச் செய்யப்பட்ட மின்சாரத்தைப் பகிர்மானம் செய்து தேவையான இடத்துக்குக் கொண்டுசெல்லவும் வேண்டும். அதிலும், இந்தியாவில் மின்சார உற்பத்தி நடக்கும் இடங்கள் ஒருபுறமும், தேவையிருக்கும் இடம் இன்னொருபுறமுமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தநிலை இனிவரும் காலத்திலும் தொடரும் என்றே சொல்லலாம். எனவே, இந்தத் துறையில் தொடர்ந்து வளர்ச்சி என்பது இருந்துகொண்டேயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பகிர்மானத்துக்குத் தேவையான கட்டுமானம் என்பது அதிகச் செலவினம்கொண்டதாக இருந் தாலும் ஒருமுறை செய்யப்படும் முதலீடு பல ஆண்டுகளுக்கு லாபத்தினைத் தருவதாக இருக்கும். நமது ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்திலும் மின்கடத்தல் மற்றும் பகிர்மானத்துக்கான தொகை ஒதுக்கீடு அதிகரித்தபடி இருக்கிறது.  

கம்பெனி ஸ்கேன் : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா!

 கம்பெனி எப்படி?

இந்தியாவின் அனைத்துப் பிராந்தியங்களிலும் மின்சாரத்தைக் கொண்டுசெல்வதில் பெரும் பங்கு வகிக்கும் இந்த நிறுவனம், ஏறக்குறைய 95 சதவிகிதப் பங்களிப்பை இந்தத் துறையில் கொண்டுள்ளது. மின் கடத்தல் தொழிலில் இருந்துவரும் வருமானம் 90 சதவிகிதமாகும். மின் கடத்தலுக்கான தொகையை பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிர்ணயம் செய்வதில்லை. மத்திய அரசால் நிறுவப்பட்ட சென்ட்ரல் எலெக்ட்ரிசிட்டி ரெகுலேட்டரி கமிஷன் என்கிற கட்டுப்பாட்டு வாரியமே செய்கிறது.

தற்சமயம் பவர் கிரிட் கார்ப்பரேஷனின் மொத்த முதலீட்டுத் தொகையில் ஏறக்குறைய 15.5 - 16.5 வரையிலான தொகையைக் கட்டணமாகப் பெற்றுக்கொள்கிறது. தொடர்ந்து இதே அளவீட்டில் வியாபாரமும் வருமானமும் நிரந்தரமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்தத் துறையில் இருபது ஆண்டு களுக்கும் மேலான அனுபவத்தை இந்த நிறுவனம் கொண்டுள்ளது என்பது தனிச் சிறப்பு.

தொடர்ந்து மின்கடத்தலுக்கான தனது நெட்வொர்க்கை விரிவாக்கு வதற்காக முதலீடுகளைச் செய்து வருகிறது பவர் கிரிட். நாட்டின் மின் தேவை அதிகரிப்புக்கு ஏற்றாற்போல் கட்டுமானங்களை எதிர்காலத்தில் அதிகரித்துக்கொள்ளும்பொருட்டு அடுத்த நான்கு ஆண்டுகளில் வருடத்துக்கு 2,000  கோடி ரூபாய் வரையிலான தொகையைப் புதிய கட்டுமானத்துக்காகச் செலவிடப்போவதாகச் சொல்லி யுள்ளது பவர் கிரிட் கார்ப்பரேஷன்.

கம்பெனி ஸ்கேன் : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா!

முதலீட்டுத் தேவைகள் அதிகம் என்பதால் அதிகப்படியான கடனை வாங்கக்கூடிய அபாயம் ஓரளவு இருந்தாலும்கூடக் கடனைத் திருப்பிச் செலுத்தவும் வட்டியைச் சீராகக் கொடுக்கவும் தேவையான பணத்தை ஈட்டிக்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது.   அரசாங்கத்திலிருந்து கிடைக்க வாய்ப்பிருக்கும் குறைந்த வட்டியுடன்கூடிய கடன், நல்லதொரு கிரெடிட் ரேட்டிங் பெற்றிருப்பதால் வெளிச்சந்தையிலும் குறைந்த வட்டியில் கடன் வாங்கிக்கொள்ளக்கூடிய திறன் போன்ற சிறப்புகளையும் கொண்டுள்ளது.

 ரிஸ்க் ஏதும் உண்டா?

மின்சாரம் என்பது பொருளாதார நிலைக்கு ஏற்றாற்போல் தேவை உயரவும், குறையவும் செய்யும் ஒரு விஷயமாகும். ஏற்கெனவே சொன்னதைப்போல், அதிக முதலீடு தேவைப்படும் தொழிலில் இருக்கும் நிறுவனம் இது.

டெட்/ஈக்விட்டி ரேஷியோ கொஞ்சம் பலவீனமானதாகத் தோற்றமளிக்கும் நிறுவனமும்கூட எனலாம்.

கம்பெனி ஸ்கேன் : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா!

இரண்டாவதாக, இந்த நிறுவனத்துக்குப் பணம் வருவது மாநில எலெக்ட்ரிசிட்டி போர்டு களிடமிருந்துதான். ஏற்கெனவே மிகவும் பலவீனமான நிலையில் பல மாநில எலெக்ட்ரிசிட்டி போர்டு களிடமிருந்து பணம் பெறுதல் தாமதமாகலாம். கடனை வசூல் செய்யும் நேர்த்திச் சற்றுக் குறைந்தாலும் பலவிதமான சிக்கல்களை இந்த நிறுவனம் சந்திக்கக்கூடும்.

மூன்றாவதாக,  பவர் கிரிட்டின் வருமானத்தையும் லாபத்தையும் முடிவு செய்வது சென்ட்ரல் எலெக்ட்ரிசிட்டி ரெகுலேட்டரி அத்தாரிட்டி என்ற ரெகுலேட்டரேயாகும். இதில் ஏதாவது ஏடாகூடமாக நடந்தால் லாபம் பெரிய அளவில் பாதிக்கப்படலாம்.

இருபது வருடத்துக்கும் மேலான மின்சார மேலாண்மை அனுபவமும், மிகப் பெரிய புராஜெக்ட்களை நிறுவி மேலாண்மை செய்த வேகமும் இந்த நிறுவனத்தை ஒரு நம்பிக்கையான நிறுவனமாக முதலீட்டாளர்கள் பார்க்க சற்று உதவுகிறது.

அசாதாரணக் காரணங்களால் சந்தை இறங்கும்போது இந்தப் பங்கின் விலையும் வீழ்ச்சியடையலாம். அந்தச் சூழ்நிலையில் இந்தப் பங்கை டிராக் செய்து முதலீட்டாளர்கள் ஐந்தாண்டு மற்றும் அதைத் தாண்டிய முதலீட்டுத் திட்டத்துக்காக வாங்கிப்போடலாம்.

- நாணயம் ஸ்கேனர்.

(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism