Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

சே.புகழரசி.

அக்ரி கமாடிட்டி!

சே.புகழரசி.

Published:Updated:

மஞ்சள்! (Turmeric)

##~##

கடந்த வாரம் உள்நாட்டுத் தேவை மற்றும் சர்வதேச அளவில் தேவை அதிகரித்ததன் காரணமாக மஞ்சள் விலை உயர்ந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆந்திரப்பிரதேசத்தில் அறுவடை நடந்து கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் தரம் மிகுந்த மஞ்சள் வரத்து குறைந்துள்ளது. அதேசமயம் ஏற்றுமதிக்கான விசாரணைகள் இருப்பதும் விலையிறக்கத்தைத் தடுக்கலாம். முந்தைய வருடத்தோடு ஒப்பிடும்போது, மஞ்சள் ஏற்றுமதிக் கடந்த ஆண்டு ஏப்ரல் - நவம்பர்  வரையிலான காலத்தில் 11%  அதிகரித்து 50,500 டன்னாக ஏற்றுமதி ஆனதாக ஸ்பைசஸ் போர்டு ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

சமீபத்திய சந்தை அறிக்கையின்படி, 2013-14-ல் ஆந்திராவில் மஞ்சள் உற்பத்தி 4,24,000 டன்னாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே, கடந்த வருடம் 4,39,000 டன்னாக இருந்தது. ஆக, வரும் வாரத்தில் தேவைக் காரணமாக மஞ்சள் விலை அதிகரிக்கலாம்.

அக்ரி கமாடிட்டி!

ஏலக்காய்! (Cardamom)

கடந்த வாரம் ஏலக்காய் தேவை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இதன் விலை சற்றுக் குறைந்தது. விலை குறைந்து காணப்பட்டதால், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் தேவை அதிகரித்தது. அதேசமயம், ஸ்பாட் சந்தைக்கு வரும் தினவரத்தும் சற்றுக் குறைய ஆரம்பித்துள்ளது விலை யேற்றத்துக்கு வழிவகுத்தது.

கடந்த வியாழக்கிழமையன்று ஏலக்காய் ஏலமிடும் ஸ்பாட் சந்தைக்கு வரத்து 84 டன்கள் இருந்தது. விலை அதிகபட்சமாகச் சுமார் ரூ.924-க்கு வர்த்தகமாகியது.

அக்ரி கமாடிட்டி!

சராசரி விலை ரூ.665-க்கு வர்த்தகமாகியது. ஏப்ரல் - நவம்பர் 2013 காலத்தில் ஏலக்காய் ஏற்றுமதி 38% அதிகரித்து, 1,805 டன்களாக இருந்ததாக ஸ்பைசஸ் போர்டு ஆஃப் இந்தியா சொல்லியிருக்கிறது. வரும் வாரத்தில் தேவைக் காரணமாக விலை அதிகரிக்கலாம்.

ஜீரகம்! (Jeera)

கடந்த வாரம் ஜீரகத்தின் விலை, புதிய பயிர்வரத்து அதிகரித்ததால் குறைந்தே வர்த்தகமாகியது. நடப்பு ஆண்டில் பருவமழைக் காரணமாக ஜீரகம் பயிரிடப்படும் பரப்பளவு, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்றும், இதனால் ஜீரக உற்பத்தியும் அதிகரிக்கும் என்றும் தெரிகிறது. இதனால் ஸ்பாட் சந்தைக்கு வரத்து அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி!

மேலும், முன்னர் அறுவடைச் செய்யப்பட்ட பழைய ஜீரகத்தின் இருப்பும் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக, குஜராத் வேளாண்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜீரகம் பயிரிடப்பட்டப் பரப்பளவு கடந்த வருடத்தைவிட 40% அதிகரித்து, 4,54,300 ஹெக்டேராக உள்ளது.

ஆக, வரும் வாரத்தில் வரத்து அதிகரிக்கும் காரணத்தால் இதன் விலை குறைய வாய்ப்புள்ளது. அதேசமயம், ஏற்றுமதிக்கான தேவை அதிகரித்தால் விலையேற்றம் சிறிது தடுக்கப்படும்.

கொத்துமல்லி! (Coriander)

ராஜஸ்தானில் கொத்துமல்லி பயிரிடப்பட்டசமயம்,தொடர்மழைக் காரணமாக, பயிர்கள் சேதமடைந்ததால் உற்பத்திக் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதேசமயம், தேவையும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

அக்ரி கமாடிட்டி!

நடப்பு ஆண்டில் ராஜஸ்தானில் கொத்துமல்லி உற்பத்திச் செய்யப்படும் பரப்பளவு 1,28,220 ஹெக்டேராக உள்ளது. இது 2012-13ல் 1,58,678 ஹெக்டேராக இருந்தது குறிப்பிடத்தக்கது. உற்பத்திக் குறைவு காரணமாகக் கொத்துமல்லிக் கையிருப்பும் குறைந்துள்ளது.

ஆந்திராவில் கடந்த ஆண்டு ஏப்ரல் - நவம்பரில்  47% அதிகரித்து 29,800 டன்னாக உள்ளது என ஸ்பைசஸ் போர்டு  கூறியுள்ளது. வரும் வாரத்தில் வரத்துக் குறைவு காரணமாகக் கொத்துமல்லி விலை அதிகரிக்கலாம்.

அக்ரி கமாடிட்டி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism