Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எந்த நேரமும் காளைகள் பலம் இழக்கலாம்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எந்த நேரமும் காளைகள் பலம் இழக்கலாம்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எந்த நேரமும் காளைகள் பலம் இழக்கலாம்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எந்த நேரமும் காளைகள் பலம் இழக்கலாம்!

Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

##~##

பெரிய அளவிலான டிரேடிங் வாய்ப்புகளைத் தராத வாரமாகவே வரும் வாரமும் இருக்க வாய்ப்புள்ளது என்றும்; டெக்னிக்கலாக அதிக அளவிலான இறக்கம் சாத்தியம் என்ற நிலையே இருக்கிறபோதிலும் ஷார்ட் சைடில் வியாபாரம் செய்ய முனையாதீர்கள் என்றும்; திடீர் ஏமாற்றங்களைச் சந்தை தந்துவிடலாம் என்பதை மனதில்கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திங்கள் முதல் புதன் வரை பெரிய டிரேடிங் வாய்ப்புகளைத் தராத நிஃப்டி வியாழனன்று பெரிய அளவில் இறங்கி வெள்ளியன்று இறுதியில் வேகமான ஏற்றத்துடன் முடிந்து வாராந்திர அளவில் 14 புள்ளி இறக்கத்தில் முடிவடைந்தது.  

இந்தியாவில் குறுகிய காலத்துக்கான இன்டரிம் பட்ஜெட் தாக்கல் (வோட்-ஆன்-அக்கவுன்ட்) திங்களன்று இருக்கிறது. பெரிய மாறுதல்கள் எதுவும் செய்யப்பட வாய்ப்பில்லை என்றாலும் இதில் ஏதேனும் சந்தையைப் பாதிக்கும் செய்திகள் இருந்தால் சந்தையின் போக்கு பெரிய அளவில் மாறக்கூடும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

அமெரிக்காவில் வரும் வியாழனன்று இன்ப்ளேஷன் டேட்டாவும், வெள்ளியன்று எஃப்ஓஎம்சி மினிட்ஸும் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களாகும். பெரிய டிரேடிங் வாய்ப்புகள் ஏதும் தராத மற்றொரு வாரமாகவே வரும் வாரத்தையும் எதிர்பார்க்கலாம். டெக்னிக்கல்கள் இறக்கம் வரலாம் என்பதைப்போன்ற நிலைமையே தொடர்ந்தாலும் வேகமான ரெக்கவரி எந்த நிமிடத்திலும் வந்துவிடலாம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு செயல்படவேண்டும்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எந்த நேரமும் காளைகள் பலம் இழக்கலாம்!

ஹைரிஸ்க் டிரேடர்களைத் தவிர்த்து அனைவருமே நிஃப்டியில் வியாபாரத்தைத் தவிருங்கள். சிறிய எண்ணிக்கையில் பிரேக் அவுட் ஆகும் ஸ்டாக்குகளில் மட்டுமே வியாபாரம் செய்ய முயற்சி செய்யுங்கள். லாபம் வருகிறதோ இல்லையோ, டிரேடிங்குக்காக நாம் வைத்திருக்கும் கேப்பிட்டலைத் தொடர்ந்து காப்பாற்றிக்கொண்டே இருக்கவேண்டிய நேரமிது. ஓவர்நைட் பொசிஷன் எதையும் வைத்துக்கொள்ளாதீர்கள். எச்சரிக்கையுடன் டிரேட் செய்யுங்கள்.

14/02/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்-: ஆர்காம் (121.30), என்டிபிசி (132.25), எம்சிஎக்ஸ் (489.80), காக்ஸ் அண்டு கிங்ஸ் (139.30), விப்ரோ (563.80), கேசெராசெரா (12.05), ஹெச்சிஎல்இன்சிஸ் (23.95), ஜஸ்ட் டயல் (1483.40) - குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: - யுனிடெக் (12.65), ஜேபி அசோசியேட் (39.10), டிஎல்எஃப் (145), சன் பார்மா (609.05), டிவி18 பிராட்காஸ்ட் (20.70), பெட்ரோநெட் (115.75), ரெடிங்டன் (67.85), ஐஆர்பி (73.05), பஜாஜ் ஹிந்த் (12.65), ஆந்திரா பேங்க் (54.90), லவ்வபிள் (317.25) - நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): டாடா எலெக்ஸி (444.85), அம்டெக் ஆட்டோ (81.00), அம்டெக் இந்தியா (66.15), டாபர் (173.65) - குறைந்த எண்ணிக்கையிலும் மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): மெக்டொவெல் (2334.90), எம்டிஎன்எல் (14.00), ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் (556.90), பஜாஜ் ஆட்டோ (1839.60), ஜூப்லியன்ட் (117.75) - வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகள் இவை. எனவே, ஹைரிஸ்க் விரும்பாதவர்கள் இவற்றில் வியாபாரத்தைத் தவிர்க்கவும்.

சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: சின்டெக்ஸ் (32.60), ஹெச்டிஎஃப்சி (770.70), எஸ்எஸ்எல்டீ (189.60), அம்டெக் ஆட்டோ(81.00), அம்டெக் இந்தியா(66.15), இகர்ஷி(96.55), ஸ்பிக் (11.40), டிலிங்க் இந்தியா (27.15), பை இண்ட் (236.10)- வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளைத் தவிர்க்கவும். சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள் : (ஷார்ட் சைடுக்கும் ரிவர்ஸலுக்கும் வாட்ச் செய்யலாம்):-  ஐஎஃப்சிஐ (22.65) - இவை வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: யுனிடெக் (12.65), எஃப்ஆர்எல் (82.50), ஹெச்டிஐஎல் (40.45), பார்தி ஏர்டெல் (305.40), ஐடியா (132.60), டிஎல்எஃப் (145), பவர்கிரிட் (95.25), எஃப்எஸ்எல் (29.05), டாடா எலெக்சி (444.85), ஆர்காம் (121.30), எஸ்பிஐ (1475), சின்டெக்ஸ் (32.60), செயில் (61.30), ஹெச்டிஎஃப்சி (770.70), சிப்லா (373.35), யூனியன் பேங்க் (102.50) - தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டிற்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள்-(10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): ஜேபி அசோசியேட் (39.10), ஹிண்டால்கோ (99.90), டாடா ஸ்டீல் (370.80), அப்போலோ டயர் (117.65), ஐடிஎஃப்சி (95.35), ஐஎஃப்சிஐ (22.65), பிஹெச்இஎல் (148.50), ஐபி ரியல் எஸ்டேட் (47.25), பேங்க் ஆஃப் இந்தியா (173.70), ஐடிசி (319.80), அசோக் லேலாண்டு (15.60), ஜேபி பவர் (13.55) -இவற்றை வியாபாரத்திற்கு தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்:  டாடா எலெக்ஸி (444.85), அம்டெக் ஆட்டோ (81), அம்டெக் இந்தியா (66.15), அலெம்பிக் லிட் (12.95), இகரிஷி (96.55), யுனிஎன்டர் (21.70) இவை வியாபார எண்ணிக்கையிலும், விலையிலும் நன்கு அதிகரித்த ஷேர்கள். கவனமாகவும் இருக்கவேண்டும். டிரேடர்களிடையே பாப்புலரில்லாத ஸ்டாக்குகள் சில இவற்றில் இருக்கின்றன. எனவே, கவனம் தேவை.

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism