இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதன்பிறகு கூட்டணிகள் வேகமாக இறுதியாகிவிடும். தேர்தலுக்கு முந்தைய இந்தச் சமயத்தில் இந்திய பங்குச் சந்தைகள் ஏறுமா, இறக்குமா அல்லது ஏற்றஇறக்கம் அதிகமாக இருக்குமா, பங்குகளை சரியான விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டா எனப் பல கேள்விகளைப் பங்குச் சந்தை நிபுணர்களிடம் கேட்டோம். நாம் முதலில் சந்தித்தது சென்னையைச் சேர்ந்த முன்னணி பங்குச் சந்தை நிபுணர் பி.ஸ்ரீராமை.

''நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகள், சந்தையைப் பெரிய அளவில் பாதிக்காது. சந்தையின் ஏற்றஇறக்கத்துக்குத் தேர்தலும் ஒரு காரணமாக இருக்கும். அதனால் முதலீட்டு தொகையை 3 அல்லது 4 பிரிவாக முதலீடு செய்து லாபம் பார்க்கலாம். மத்தியில் நிலையான ஆட்சி அல்லது மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால்கூட நிஃப்டி புள்ளிகள் ஒரே நாளில் 10000-க்குப் போய்விடாது. அது 300 முதல் 400 புள்ளிகள், அதாவது 5 முதல் 6% இறங்கி, ஏறிதான் அந்த நிலைக்குச் செல்லும். அப்படிக் குறையும்போதெல்லாம் பங்குகளை வாங்கிச் சேர்க்கலாம்.

இந்திய பங்குச் சந்தை குறுகியகாலத்தில் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தாலும், நீண்டகாலத்தில் நல்ல வருமானம் தரும். அண்மைக்காலத்தில் நிஃப்டி புள்ளிகள் ஏறக்குறைய 6200 என்கிற நிலையிலேயே வர்த்தகமாகி வருகிறது. 6100 என்பது தற்போதைய நிலையில் சப்போர்ட் நிலையாக உள்ளது. அது, 6500-6600 புள்ளிகளுக்கு ஏறி அதன்பிறகு சின்ன கரெக்ஷனை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.

2016-ல் நிஃப்டி புள்ளிகள் 10000-ஆக உயர அதிக வாய்ப்புகள் உள்ளன. அரசியல் சூழ்நிலைகள் சரியில்லை என்றால், 5200-க்கு இறங்கக்கூடும். அதற்குக் கீழே இறங்க இப்போதைக்கு வாய்ப்பில்லை. இதைத்தான் சார்ட் பேட்டர்ன் களும் சொல்கின்றன'' என்றவர், முதலீட்டுக்கான ஆறு பங்குகளைக் குறிப்பிட்டார்.

''ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், அரோபிந்தோ பார்மா, டாடா எலெக்ஸி, விம்டா லேப்ஸ் (Vimta labs),, எஃப்எஸ்எல் (Firstsource solutions) ஆகிய பங்குகளில் முதலீடு செய்தால் நீண்டகாலத்தில் பல மடங்கு லாபம் பார்க்கலாம். இந்தப் பங்குகளின் விலை 40% இறங்கும் வரையில், அதாவது ஒவ்வொரு 10% இறக்கத்தின்போதும் ஆவரேஜ் செய்துவரலாம். இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு, கடந்த ஐந்தாண்டு காலமாக சைடுவேஸில் வர்த்தகமாகி வருகிறது. இதன் விலை 950 ரூபாயைத் தாண்டினால், அது பல மடங்கு லாபம் தரும் மல்டிபேக்கராக மாற வாய்ப்புள்ளது.

ஹிந்துஸ்தான் யுனிலீவர் அடுத்த 4-5 ஆண்டுகளில் 1,200-1,500 ரூபாய்க்குச் செல்லும். அரோபிந்தோ பார்மா பங்கின் விலை 2-3 மடங்கு விலை ஏற வாய்ப்பிருக்கிறது. டாடா எலெக்ஸி, டாடா குழுமத்தைச் சேர்ந்தது. இந்த நிறுவனப் பங்கின் விலை 2000-ம் ஆண்டுக்குப் பிறகு இறங்கிக்கொண்டே வந்தது. இதன் விலை 360 ரூபாயைத் தாண்டினால், 1,000 ரூபாய்க்கு உயர வாய்ப்பிருக்கிறது. எஃப்எஸ்எல் பங்கின் விலை தொடர்ந்து இறங்கிவந்த நிலை மாறி, மேலேறத் தொடங்கியிருக்கிறது. நீண்டகாலத்தில், இந்தப் பங்கும் 3 முதல் 4 மடங்கு வருமானத்தைக் கொடுக்கும்'' என்றார்.

ஏறக்குறைய ஸ்ரீராமின் கருத்தைதான் மும்பையைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகரும் பிரதிபலித்தார்.

''நாடாளுமன்ற தேர்தலால் பங்குச் சந்தையில் பெரிய மாற்றம் இருக்காது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சிக்கு வந்தால், சந்தை காளையின் பிடிக்கு வரும். என்னைக் கேட்டால், 2013 ஆகஸ்ட் 28-ம் தேதி சென்செக்ஸ் 17448 புள்ளிகளுக்கு கீழ் இறங்கி, மேலே ஏறத் தொடங்கியபோதே சந்தை ஏறத் தொடங்கிவிட்டது என்பேன். இதன்பிறகு கேப்பிட்டல் கூட்ஸ், மெட்டல், பேங்க், ஆட்டோ போன்ற துறை நிறுவனப் பங்குகள் நல்ல ஏற்றம்

கண்டிருக்கின்றன. 2016-ம் ஆண்டு இறுதிக்குள் சென்செக்ஸ் 45000-50000-க்கு போகும் என 2009-ம் ஆண்டில் நாணயம் விகடன் கட்டுரையில் சொல்லியிருந்தேன். அதேநிலைதான் இப்போதும் நீடிக்கிறது. சென்செக்ஸ் 22500 புள்ளிகளைத் தாண்டினால், அது மிக முக்கிய உறுதிநிலையாக அமையும். அதன்பிறகு சந்தை சடசடவென மேலேறத் தொடங்கிவிடும்'' என்ற ஏ.கே.பிரபாகர் சற்று நிறுத்திவிட்டு, பங்குகள் பக்கம் திரும்பினார்.

''என்.டி.ஏ ஆட்சிக்கு வந்தால் பொதுத்துறை நிறுவனப் பங்குகள், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை மேம்படத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் ஐ.டி மற்றும் பார்மா நிறுவனப் பங்குகளில் செய்யும் முதலீடு லாபகரமாக இருக்கும்.

அடுத்த ஓராண்டு காலத்தில் நல்ல லாபம் பார்க்கக்கூடிய முக்கியப் பங்குகளை இலக்கு விலையுடன் தருகிறேன். விப்ரோ (இலக்கு விலை ரூ.850), டெக் மஹிந்திரா (ரூ.2,700), இன்ஃபோசிஸ் (ரூ.4,500), என்ஐஐடி டெக் (ரூ.700), ஹெக்ஸாவேர் (ரூ.210), லூபின் (ரூ.1200), கெடிலா (ரூ.1800) போன்ற பங்குகள் இப்போதும் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கின்றன.

தேர்தல் முடிந்தபின் எல் அண்டு டி (ரூ.2,000), வோல்டாஸ் (ரூ.170), கிராம்ப்டன் கிரீவ்ஸ் (ரூ.155), ஹேவல்ஸ் (ரூ.1,150), பாரத் ஃபோர்ஜ் (ரூ.500), சீமென்ஸ் (ரூ.1,150) போன்ற பங்குகள் சிறப்பாகச் செயல்படக்கூடும்'' என்றார்.

தேர்தல் சூழ்நிலையில், சந்தை இறக்கத்தில் வரும்போது முதலீட்டாளர் கள் வாய்ப்பைப் பயன்படுத்தி நல்ல லாபம் அடையத் தவறக்கூடாது.