Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

சே.புகழரசி

அக்ரி கமாடிட்டி!

சே.புகழரசி

Published:Updated:

சோயாபீன்! (Soyabean)

''சோயாபீன் விலை கடந்த ஜனவரியிலிருந்து சுமார் 25% அதிகரித்து, கடந்த இரண்டு வருடத்தில் இல்லாத அளவு உயரத்தை தொட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் ரூ.3,500-ஆக இருந்த விலை கடந்த வாரத்தில் ரூ.4,350-ஐ தொட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், தென் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் உள்நாட்டில் சீசன் முடிவினால் வரத்து குறைவதே.

2013-14-ல் சந்தை அறிக்கையின்படி, மோசமான பருவநிலை காரணமாக சோயாபீன் உற்பத்தி 90-95 லட்சம் டன்களாக குறையலாமென்றும், இது முந்தைய ஆண்டு 110 லட்சம் டன்களாக இருந்தது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலும் உற்பத்தி குறையலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்ரி கமாடிட்டி!

சர்வதேச அளவில் சோயாபீன் இருப்பு குறைவாகவே உள்ளநிலையில், சீனாவின் அதிகப்படியான தேவை காரணமாகக் கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தையில் விலை 16% அதிகரித்துள்ளது. ஆக, வரும் வாரத்தில் சப்போர்ட் லெவல் ரூ.4,150, ரெசிஸ்டன்ஸ் லெவல் ரூ.4,350 - ரூ.4,390.''

மஞ்சள்! (Turmeric)

அக்ரி கமாடிட்டி!

கடந்த வாரம் அதிகளவு வரத்துக் காரணமாக மஞ்சள் விலை குறைந்தே வர்த்தகமானது. மேலும், தரம் குறைந்த மஞ்சள் வரத்தும் விலை குறைவுக்கு ஒரு காரணமாகும். வரும் நாட்களில் அதிகளவு வரத்து இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டில் 40-45 லட்சம் பைகள் உற்பத்தி இருக்கலாம் (1 பை என்பது 70 கிலோ) என்று தெரிகிறது. இது கடந்த ஆண்டைவிட 10-15%  குறைவாக இருக்கலாம். வரும் வாரத்தில் டெக்னிக்கலாக மஞ்சள் விலை குறைய வாய்ப்புள்ளது.

கொத்துமல்லி!(Coriander )

கடந்த வார தொடக்கத்தில் கொத்துமல்லி, வரத்து குறைந்ததன் காரணமாக விலை சற்று அதிகரித்தே வர்த்தகமானது. குறிப்பாக, ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்களில் தொடர் மழை காரணமாக உற்பத்தி குறைந்துள்ளது. எனினும் முக்கிய ஸ்பாட் சந்தைகளில், தேவை குறைவு, அதிகளவு ஈரப்பதம் உள்ள கொத்துமல்லி வரத்தின் காரணமாக அதிகளவு விலையேற்றம் தடுக்கப்பட்டது. மேலும் சந்தை அறிக்கையின்படி, ராஜஸ்தானில் உள்ள பாரன் மாவட்டத்தில் 26,722 ஹெக்டேருக்கும் கீழ் பயிர்கள் சேதமடையலாம் என்றும், ஜலவாரில் 52,400 ஹெக்டேர் பரப்பளவில் 25,296 ஹெக்டேர் பரப்பளவு சேதமடைந்துள்ளதாகவும், கோட்டாவில் 23,495 ஹெக்டேர் சேதமடைந்துள்ளதாகவும் தெரிகிறது. வரும் வாரத்தில் தேவை குறைவு காரணமாக அதிக விலையேற்றம் தடுக்கப்படும்.

அக்ரி கமாடிட்டி!

கொண்டைக்கடலை! (Chana)

கடந்த வாரம் தேவை குறைவின் காரணமாகக் கொண்டைக்கடலை விலை குறைந்தே வர்த்தகமானது. வரும் வாரத்தில் தெளிவான வானிலை காரணமாக ஸ்பாட் சந்தைகளுக்கு வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மஹாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களில் பருவம் அல்லாத மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்ததால் உற்பத்தி குறையலாம் என்று தெரிகிறது.

கொண்டைக்கடலை அறுவடை ஜனவரி மாதத்திலேயே தொடங்கியது. ஆனால், பருவம் அல்லாத மழை காரணமாக கடந்த சில வாரங்களாக வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தேவை குறைவின் காரணமாக விலை குறையலாம். அதேசமயம் வானிலை சீரடைந்து வருவதால் அதிகளவு விலையேற்றம் தடுக்கப்படும். வானிலை சீரடையும் பட்சத்தில் வரத்து அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம் கொள்முதல் செய்யும்பட்சத்தில் அதிக விலையிறக்கம் தடுக்கப்படும். ஆக, வரும் வாரத்தில் கொண்டைக்கடலையின் தேவை அதிகரிக்கும்பட்சத்தில் விலை அதிகரிக்கலாம்.

படம்:  ர.சதானந்த்

அக்ரி கமாடிட்டி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism