Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:

மீண்டும் காளைகள் பலம் பெறலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

ரிசர்வ் வங்கியின்  வட்டிவிகித முடிவு சந்தையின் டெக்னிக்கல் நிலைமையை முற்றிலுமாக மாற்றிவிடும் வல்லமை கொண்டது என்பதை நினைவில்கொண்டு வியாபாரம் செய்யுங்கள் என்றும்; செய்திகள் மட்டுமே இனி சந்தையை எடுத்துச்செல்லும் வாய்ப்பு இருக்கிறது என்றும்; டெக்னிக்கல் பிரேக் அவுட்கள் நடக்கிறதே என நினைத்து எல்லா ஸ்டாக்குகளிலும் வியாபாரம் செய்ய முயலாதீர்கள் என்றும் சொல்லியிருந்தோம்.

திங்கள் முதல் புதன் வரை சிறிய அளவிலான ஏற்றத்தைச் சந்தித்த நிஃப்டி வியாழன் மற்றும் வெள்ளியில் இறக்கத்தினை சந்தித்து இறுதியில் வாராந்திர ரீதியாக ஒரு பாயின்ட் இறக்கத்தில் முடிவடைந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அடுத்த வாரத்தில் மூன்றுகட்ட லோக்சபா தேர்தல்களும் நடக்கவிருக்கிறது. இந்திய டேட்டாக்களில் வெள்ளியன்று பேலன்ஸ் ஆஃப் டிரேடும், இண்டஸ்ட்ரியல் மற்றும் மேனுபேக்ஸரிங் புரொடக்ஷன் (வருடாந்திர அளவில்) டேட்டாவும் வெளிவர இருக்கிறது. அமெரிக்க டேட்டா வெளியீடுகளில் முக்கியமாக புதனன்று எஃப்ஓஎம்சி மினிட்ஸிம் வெள்ளியன்று கன்ஸ்யூமர் சென்டிமென்ட் டேட்டாவும் வெளிவர இருக்கிறது.

டெக்னிக்கலாக இந்தவாரம் வந்த இறக்கம் ஆரோக்கியமானதாகவே  கருதப்படவேண்டும். இண்டிகேட்டர்கள் பலவும் சந்தையில் காளைகளின் பலத்தையே நன்கு காண்பிப்பதாய் இருக்கிறது. தற்போதைய ஓவர் பாட்-ஆன ஸ்டாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மட்டுமே சற்று கவலையளிப்பதாய் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் டெக்னிக்கலாக மீண்டும் சந்தை எந்த நேரத்திலும் சற்றே மேலே போக வாய்ப்பிருக்கிறது என்றே சொல்லலாம்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:

வரும் வாரத்தில் செய்திகள் நெகட்டிவ்வாக வந்தால் மட்டுமே சந்தையின் போக்கில் பெரிய அளவிலான இறக்கம் வர வாய்ப்புள்ளது. செய்திகள் நியூட்ரலாகவோ பாசிட்டிவ்வாகவோ இருந்துவிட்டால் வேகமான ஏற்றம் எந்த நிமிடமும் வந்துவிடக்கூடும். எனவே, ஷார்ட் சைடு வியாபாரத்தில் இறங்கவே செய்யாதீர்கள். ஸ்டாக் ஸ்பெசிபிக்காக பிரேக் அவுட்கள் நடக்கும் ஸ்டாக்குகளில் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் வியாபாரம் செய்யுங்கள். முழு எச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய நேரமிது என்பதை நினைவில்கொண்டு செயல்படுங்கள்.

04/04/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்-: அதானி பவர் (54.05), டிஎல்எஃப் (176.05), ஐஓசி (281.60), அதானி என்ட் (371.30), டாரன்ட் பவர் (96.20), ஹிந்த் பெட்ரோ (314.35), பிஎஸ் லிமிடெட் (14.20), டாடா எலெக்ஸி (567), போர்ட்டிஸ் (97.90), செஞ்சுரி டெக்ஸ் (375.30), அம்டெக் ஆட்டோ (154.45), ஹெச்எம்டி (30.50), அதுனிக் (45.75), ஓரியன்ட் சிமென்ட் (47.10)-குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்- ஐடிஎஃப்சி (124.95), எஸ்எஸ்எல்டீ (190.10), என்டிபிசி (120.30), ஹெச்டிஎஃப்சி (895.10), டாடா மோட்டார்ஸ் (405.50), என்எம்டிசி (140.40), அரோபிந்தோ பார்மா (564.90), எல்ஐசி ஹவுஸிங் (243), வொக்பார்மா (607.15), ஜெட் ஏர்வேய்ஸ் (278.15), எக்ஸைடு இண்ட் (122.90), அபன் (544.50), இந்தியா சிமென்ட் (65.60), ஹெச்சிஎல் டெக் (1397.90), விப்ரோ (553.40), எஜுகாம்ப் (30.15)- நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது):- ரேணுகா (22.75), எம்எம்டிசி (59.30), பஜாஜ் ஹிந்துஸ்தான் (19.60), ஜிவிகேபிஐஎல் (12.05), ஹெச்சிஎல் இன்சிஸ் (42.65), எஸ்ஸார் ஆயில் (54.70), ஐஆர்பி (112.45), ஹிந்த் காப்பர் (72.90), ரிலையன்ஸ் இன்ஃப்ரா (455.95), எஸ்டிசி இந்தியா (194.50), எஸ்கார்ட்ஸ் (123.20), அனந்த்ராஜ் (59.50), மெர்கர்டார் (29), பிஇஎம்எல் (334.15), சிப்லா (404.10), ஆர்பிட் கார்ப் (19.25), கோல்டே பாட்டில் (110.95) -குறைந்த எண்ணிக்கையிலும், மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): இந்த வகையில் குறிப்பிடும்படியான ஸ்டாக்குகள் ஏதும் இல்லை.

சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: டிஎல்எஃப் (176.05), எம்எம்டிசி (59.30), ஹெச்சிஎல் இன்சிஸ் (42.65), ஜிஎம்ஆர் இன்ஃப்ரா (23.20), ஹிந்த் காப்பர் (72.90), பட்டேல் இன்ஜினீயரிங் (66.40), எஸ்டிசி இந்தியா (194.50), ஜோதி ஸ்ட்ரக்சர் (36.25), சிப்லா (404.10), பர்ஸ்வந்த் (25.20), கன்கார் (909.80), எல்டர் பார்மா (228.90), சிட்டிகேபிள் (22.05), நொய்டா டூல் (26.80), நெல்கோ (46) இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளைத் தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள் : (ஷார்ட் சைடுக்கும் ரிவர்ஸலுக்கும் வாட்ச் செய்யலாம்):-  ஐஎஃப்சிஐ (25.35), அதானி போர்ட்ஸ் (179.85), பல்ராம்சினி (57.75), ஓரியன்ட் பேங்க் (225.45), ஹெக்ஸாவேர் (161.10), வோல்டாஸ் (160.80), என்சிசி (36.55), பிடிசி (68.10), ஏசியன் பெயின்ட் (530.70), அலெம்பிக் லிட் (18.15) -இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: யுனிடெக் (15.35), ஹெச்டிஐஎல் (69.65), சுஸ்லான் (12.45), ரேணுகா (22.75), அதானி பவர் (54.05), டிஎல்எஃப் (176.05), ஐபி ரியல் எஸ்டேட் (60.05), ரான்பாக்ஸி (459.55), ஓஎன்ஜிசி (325.65), எல்ஐடிஎல் (7.55), எம்எம்டிசி (59.30), கோல் இந்தியா (281.70), பஜாஜ் ஹிந்த் (19.60),  ஜிவிகேபிஐஎல் (12.05), பிரகாஷ் (69), ஐவிஆர்சிஎல் இன்ஃப்ரா (14.35), ஹெச்சிஎல் இன்சிஸ் (42.65) - தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டுக்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள்-(10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): ஜேபி அசோசியேட் (52.80), ஐடிஎஃப்சி (124.95), எல்டிஎஃப்ஹெச் (69.30), அசோக் லேலாண்ட் (23.45), ஐஎஃப்சிஐ (25.35), ஜேபி பவர் (15.45), ஐடிசி (344.75), செயில் (71.30), யெஸ் பேங்க் (423.15), ஜிம்ஆர் இன்ஃப்ரா (23.20),  ஹிண்டால்கோ (137.65), எஸ்எஸ்எல்டீ (190.10), என்டிபிசி (120.30), டாடா ஸ்டீல் (402), யூனியன் பேங்க் (141.75), பிஹெச்இஎல் (183.50), பவர்கிரிட் (106.60), ஆர்காம் (129.10), டிவி18ப்ராட்காஸ்ட் (27.15), என்ஹெச்பிசி (19.15) -இவற்றை வியாபாரத்துக்கு தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்:  யுனிடெக் (15.35), ஹெச்டிஐஎல் (69.65), சுஸ்லான் (12.45), ஐபி ரியல் எஸ்டேட் (60.05), ரான்பாக்ஸி (459.55), எல்ஐடிஎல் (7.55), எம்எம்டிசி (59.30), பஜாஜ் ஹிந்த் (19.60), ஜிவிகேபிஐஎல் (12.05), பிரகாஷ் (69),  ஐவிஆர்சிஎல் இன்ஃப்ரா (14.35), ஹெச்ச்இஎல் இன்சிஸ் (42.65), எஸ்ஸார் ஆயில் (54.70), ஐஆர்பி (112.45), டிசிடபிள்யூ (14), ஹிந்த் காப்பர் (72.90), எஃப்ஆர்எல் (89.80), அதானி என்ட் (371.30), பட்டேல் இன்ஜினீயரிங் (66.40), எஸ்டிசி இந்தியா (194.50), பாம்பே டையிங் (63.65), மெர்கர்டர் (29), பிஇஎம்எல் (334.15), ஜோதி ஸ்ட்ரக்சர் (36.25), அன்சல்பிஐ (19.15), பிஎஸ் லிமிடெட் (14.20), ஸ்டெர் டெக் (24.70), ஆர்பிட் கார்ப் (19.25), நோசில் (17.05), நெய்வேலி லிக்னைட் (68.45), எல்டெர் பார்மா (228.90), ஐவிசி (14.30), கோல்டே பாட்டில் (110.95), காபிரியேல் (32.35)-இவை

வியாபார எண்ணிக்கையிலும், விலையிலும் நன்கு அதிகரித்த ஷேர்கள்.  

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.