Published:Updated:

கமாடிட்டி- (மெட்டல் - ஆயில்)

சே.புகழரசி

கமாடிட்டி- (மெட்டல் - ஆயில்)

சே.புகழரசி

Published:Updated:
கமாடிட்டி- (மெட்டல் - ஆயில்)

தங்கம்!

''ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவிவரும் பிரச்னை காரணமாக கடந்த வாரம் தங்கத்தின் விலை அதிகரித்தே வர்த்தகமானது. உக்ரைன் ராணுவம் ஐந்து பிரிவினைவாதிகளைக் கொலை செய்துள்ளது பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. இதையடுத்து ரஷ்ய போராளிகளுக்கு எதிராக தாக்குதலை முடுக்கிவிடும் போக்கை உக்ரைன் நிறுத்தவேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்காவில் வெளியான வீட்டு உபயோகப் பொருட்கள் குறித்த குறியீடு 2.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஆனால், எதிர்பார்க்கப்பட்டதோ 2 சதவிகிதம்தான். மேலும், ஏப்ரல் 19-வுடன் முடிவடைந்த வாரத்தில் வேலையில்லாதோர் குறித்த குறியீடு 24,000-ஆக அதிகரித்து, 3,29,000-ஆக உயர்ந்துள்ளது. ஆனால், சந்தை நிபுணர்கள் எதிர்பார்த்ததோ வெறும் 5,000 மட்டுமே.

அமெரிக்காவில் பொருளாதாரம் சார்ந்த மற்ற குறியீடுகள் சாதகமாக வந்தாலும், வேலையின்மை குறித்த குறியீடு முதலீட்டாளர்களைக் கவனிக்க வைத்துள்ளது. மேலும், சீன பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் இருந்து வருவதையடுத்து தங்கத்தின் விலையில் இது எதிரொலிக்க லாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், வரும் வாரத்தில் இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பைப் பொறுத்தே தங்கத்தின் விலை அமையும்.

கமாடிட்டி- (மெட்டல் - ஆயில்)

டெக்னிக்கல்படி, முக்கோண பேட்டர்ன் உருவாகி யிருப்பதால் வாராந்திர சார்ட்படி புல்லிஷ்-ஆக உள்ளது. தற்போதைய  சப்போர்ட் லெவல் - ரூ.28,400, ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.29,200-ஆக உள்ளது.

மூன்று நாட்கள் தொடர் ஏற்றத்திலும் வார இறுதியில் தங்கத்தின் விலை ரூ.29,200-க்கு மேல் முடிவடையும்பட்சத்தில் ரூ.29,700- 30,000 வரை செல்லலாம். வார இறுதியில் ரூ.28,400 கீழ் வர்த்தகம் முடிவடையும்பட்சத்தில் மட்டுமே புதிதாக விற்கலாம். பரிந்துரை: ரூ.28,700 லெவலில் வாங்கலாம். கட்டாய ஸ்டாப்லாஸ் - ரூ.28,400. இலக்குவிலை - ரூ.29,050, 29,200.

வெள்ளி!

கமாடிட்டி- (மெட்டல் - ஆயில்)

கடந்த சில வாரங்களாகவே வெள்ளியின் விலைப்போக்கு, தங்கத்தின் விலைப்போக்குபோல இல்லாமல் வர்த்தகமாகி வருகிறது. மேலும், வெள்ளியின் விலை கடந்த சில வாரங்களாக குறுகிய அளவி லேயே வர்த்தகமாகி வருகிறது.

டெக்னிக்கல்படி, சப்போர்ட் லெவல் ரூ.42,000, ரூ.41,300.  ரெசிஸ்டன்ஸ் லெவல் ரூ. 43,800, ரூ.44,700. இந்த ரூ.41,300 லெவலை உடைக்கமுடியாவிட்டால் ரூ.43800 வரை சென்று அதன்பின் ரூ.44,700 வரை விலை ஏறலாம். மூன்று நாட்கள் தொடர் இறக்கத்தோடு வார இறுதியிலும் 41,300-க்கு கீழே சென்றால் 38500-37,000 வரை சரிவு ஏற்படலாம். பரிந்துரை: ரூ.42,000 லெவலில் வாங்க லாம். கட்டாய ஸ்டாப்லாஸ் - ரூ.41,300. இலக்குவிலை - ரூ.43,800 - 44,200.''

அடிப்படை உலோகம்!

கடந்த வாரம் அமெரிக்காவில் வெளியான வீட்டு உபயோகப் பொருட்கள் குறித்த சாதகமான குறியீடுகள் வெளியானதையடுத்து, அடிப்படை உலோகங்கள் விலை சற்றே அதிகரித்து வர்த்தகமானது. மேலும், ஜெர்மனியில் தொழில் துறை குறித்த குறியீடும் சாதகமாக வந்ததும் உலோகங்களின் விலையில் எதிரொலித்தது. அதேசமயம், ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவும் பிரச்னை காரணமாகவும், அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து அதிகளவு விலையேற்றம் தடுக்கப்பட்டது.

காப்பர்: காப்பரை அதிகளவு உபயோகப்படுத்தும் நுகர்வோரான சீனாவில் குறுகியகாலத்தில் தேவை அதிகரிக்கலாம் என்ற ஊகத்தால், காப்பரின் விலை கடந்த ஏழு வாரங்களில் இல்லாத அளவுக்கு கடந்த வியாழக்கிழமையன்று வர்த்தகமானது. சீனாவில் ஏப்ரல் - மே மாதங்களில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும். இதன்காரணமாக காப்பரின் தேவை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் கடந்த வியாழனன்று வெளியான வீட்டு உபயோகப் பொருட்கள் குறித்த சாதகமான குறியீடுகள் வந்ததையடுத்து, சிவப்பு உலோகங்களுக்கான தேவை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு குறையும்பட்சத்தில், காப்பரின் விலை மேலும் அதிகரிக்கலாம்.

கமாடிட்டி- (மெட்டல் - ஆயில்)

கச்சா எண்ணெய்!

அமெரிக்காவில் கடந்த வாரம் வெளியான வீட்டு உபயோகப் பொருட்கள் குறித்த சாதகமான குறியீடுகள் வெளியானதையடுத்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்தே வர்த்தகமானது.  எனினும், ரஷ்யா - உக்ரைன் இடையே தொடர்ந்து நிலவிவரும் பிரச்னை விலையேற்றத்துக்கு வழிவகுக்கும். அதேசமயம், அதிக சர்வதேச சப்ளை காரணமாக விலையேற்றம் தடுக்கப்படலாம். சர்வதேச சந்தையில் விலை அதிகரித்தாலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு குறையும்பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கலாம்.

கமாடிட்டி- (மெட்டல் - ஆயில்)

இயற்கை எரிவாயு!

கடந்த வாரம், இயற்கை எரிவாயு இருப்பு எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகரித்ததையடுத்து விலை குறைந்தே வர்த்தகமானது. மத்திய மற்றும் கிழக்கு அமெரிக்கப் பகுதிகளில் வரும் வாரத்தில் வெப்பநிலை சாதாரண வெப்பநிலைக்குக் கிழே நிலவும் என வானிலை கணிப்பு வெளியாகி இருக்கிறது. மத்திய மேற்கு மற்றும் அமெரிக்க கிழக்குப் பகுதிகளில் ஏப்ரல் இறுதிவரை குளிரை காண முடியும். ஆக, இந்த வெப்பநிலையைச் சமன்படுத்த இயற்கை எரிவாயு தேவை அதிகரிக்கலாம். எனினும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு இயற்கை எரிவாயு விலையில் எதிரொலிக்கலாம்.

கமாடிட்டி- (மெட்டல் - ஆயில்)