Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

சே.புகழரசி

அக்ரி கமாடிட்டி!

சே.புகழரசி

Published:Updated:

ஏலக்காய்! (Cardamom)

வரத்துக் குறைவு; வலுவான தேவை காரணமாக கடந்த வாரம் ஏலக்காய் விலை சற்று அதிகரித்தே வர்த்தகமானது. கடந்த புதன்கிழமையன்று ஏலக்காய் ஏலமிடும் சந்தைக்கு மொத்த வரத்து 50 டன்களாக இருந்தது. ஸ்பாட் சந்தையில் அதிகபட்சமாக ஒரு கிலோவுக்கு ரூ.1,193 வரை வர்த்தகமானது.

அண்மையில் ஸ்பைசஸ் போர்டு ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தகவல்படி, 2014 ஏப்ரல் 14-வுடன் முடிவடைந்த காலத்தில், இந்தியாவில் ஏலக்காய் ஏலமிடும் சந்தைகளில் 18,794.07 டன்  ஏலமிடப்பட்டுள்ளதாகவும், இதன் சராசரி விலை கிலோவுக்கு ரூ.620.30 எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் 10,499.65 டன்கள் ஏலமிடப்பட்டதாகவும், இதன் சராசரி விலை கிலோவுக்கு ரூ.770.12-ஆகவும் வர்த்தமாகியது. வரும் வாரத்தில் தேவை காரணமாக ஏலக்காய் விலை அதிகரிக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்ரி கமாடிட்டி!

கொண்டைக்கடலை! (Chana)

கொண்டைக்கடலை புதிய வரத்து அதிகரிப்பு மற்றும் எக்ஸ்சேஞ்ச்களின் சேமிப்புக் கிடங்குகளில் இருக்கும் இருப்பு அதிகமாக இருந்ததால் விலை சற்று குறைந்து காணப்பட்டது. மேலும், தேவை குறைவாகக் காணப்பட்டதையடுத்து கொண்டைக்கடலை விலை கடந்த வாரம் குறைந்தே வர்த்தகமானது.

ராஜஸ்தானில் புதிய அறுவடை காரணமாக வரத்து அதிகரித்துள்ளது. அதேசமயம், மத்தியப்பிரதேசத்தில் வரத்து குறைந்துள்ளது. பருவம் அல்லாத மழை காரணமாக மத்தியப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா மற்றும் ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொண்டைக்கடலை பயிர்கள் சேதமடைந்துள்ளதையடுத்து அறுவடை பாதிப்படைந்துள்ளது.இதையடுத்து உற்பத்தி குறையலாம் என்று தெரிகிறது.

வரும் வாரத்தில் தேவை குறைவு, வரத்து அதிகரிப்பு காரணமாக விலை குறையலாம். எல்நினோ காரணமாக பருவமழை குறையலாம் என்பதாலும், இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு நிலையம் கொள்முதல் செய்யும்பட்சத்திலும் அதிக விலையிறக்கம் தடுக்கப்படலாம்.

அக்ரி கமாடிட்டி!

சோயாபீன்! (Soybean)

வரத்துக் குறைவு, அதேசமயம் சோயா மீலுக்குள்ள தேவை காரணமாகக் கடந்த வாரம் சோயாபீன் விலை அதிகரித்தே வர்த்தகமானது. சர்வதேச அளவில் சோயாபீன் இருப்பு குறைவாகவே உள்ள நிலையில், சோயாபீன் விலை கடந்த ஜனவரியிலிருந்து ஏறுமுகமாகவே காணப்படுகிறது. மேலும்,  பருவமழை சராசரி மழையைவிட குறைவு; எல்நினோவால் காரீஃப் பருவத்தில் உற்பத்தி குறையலாம் என்ற காரணத்தால் ஏற்கெனவே விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2013-14ல் சோயாபீன் உற்பத்தி 12.45 மில்லியன் டன்னாக (கடந்த ஆண்டு 14.76 மில்லியன் டன்) இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக, வரும் வாரத்தில் சோயாபீன் விலை அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.  சர்வதேச சந்தையில் தேவை குறைவால் அதிக விலையேற்றம் தடுக்கப்படலாம்.

அக்ரி கமாடிட்டி!

மஞ்சள்! (Turmeric)

கடந்த சில வாரங்களில் உள்நாட்டிலும், சர்வதேச சந்தை களிலும் மஞ்சள் தேவை காரணமாக விலை அதிகரித்தே வர்த்தகமானது. எனினும், கடந்த வாரம் அதிகப்படியான இருப்பு, புதிய மஞ்சள் வரத்து அதிகரிப்பின் காரணமாக

மஞ்சள் விலை குறைந்தே வர்த்தகமானது. கடந்த வியாழக்கிழமை நிஜாமாபாத் சந்தைக்கு மஞ்சள் வரத்து 18,000 பைகளாக இருந்தது. சந்தை அறிக்கையின்படி, ஆந்திரப்பிரதேசத்தில் 2013-14-ல் மஞ்சள் பயிரிடப்படும் பரப்பளவு 0.53 லட்சம் ஹெக்டேராக (கடந்த ஆண்டு 0.68 லட்சம் ஹெக்டேர்) இருக்கலாம் என்று தெரிகிறது.  தரமான மஞ்சள் தட்டுப்பாட்டால் விலை குறையாது என எதிர்பார்க்கலாம். வரும் வாரத்தில் தேவை காரணமாக மஞ்சள் விலை அதிகரிக்கலாம்.