Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: பெரிய அளவில் திடீர் இறக்கம் வரக்கூடும்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: பெரிய அளவில் திடீர் இறக்கம் வரக்கூடும்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: பெரிய அளவில் திடீர் இறக்கம் வரக்கூடும்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: பெரிய அளவில் திடீர் இறக்கம் வரக்கூடும்!

Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

திடீரென்று வந்த ஏற்றம் டெக்னிக்கல்களைச் சற்றே சீர்குலைய வைத்துவிட்டது என்றும்; இந்தச் சூழலில் எக்ஸ்பைரியும் தொடர்ந்துவருவதால் நிஃப்டியில் ஏற்றம் இன்னமும் 50-60 பாயின்ட்கள் வரையிலும் தொடர வாய்ப்புள்ளது என்றும் சொல்லியிருந்தோம். திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் ஏற்றத்தைச் சந்தித்த நிஃப்டி வெள்ளியன்று 58 புள்ளி இறக்கத்தைச் சந்தித்து இறுதியாக வாராந்திர அளவில் மூன்றே புள்ளி ஏற்றத்தில் முடிவடைந்தது.

இந்திய டேட்டாக்களில் வரும் வாரத்தில் வெள்ளியன்று ஹெச்எஸ்பிசி மேனுபேக்ஸரிங் பிஎம்ஐ வெளிவர இருக்கிறது. அமெரிக்க டேட்டாக்களில் முக்கிய டேட்டாக்களாக செவ்வாயன்று கன்ஸ்யூமர் கான்ஃபிடன்ஸ் டேட்டாவும், புதனன்று ஏடிபி இன்ஸ்டிட்யூட் அன்எம்ப்ளாய்மென்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேஞ்ச் மற்றும் ஜிடிபி டேட்டாவும், கியூஇ டேட்டாவும், ஃபெடரல் வட்டி முடிவு களும், வியாழனன்று மேனுபேக்ஸரிங் பிஎம்ஐ டேட்டாவும், வெள்ளியன்று அன்எம்ப்ளாய்மென்ட் ரேட் டேட்டாவும் வெளிவரவுள்ளது. இவற்றில் கியூஇ, வட்டிவிகிதம் மற்றும் கன்ஸ்யூமர் கான்ஃபிடன்ஸ் போன்றவை இந்திய சந்தையில் மாற்றங்களைக் கொண்டுவர வாய்ப்புள்ளது. எனவே, இந்த டேட்டாக்களின் மீது கவனம் வைத்தே வியாபாரம் செய்யவேண்டும்.

டெக்னிக்கலாக வீக்னஸ் புதன்கிழமை வரை தொடரலாம் என்ற நிலைமையே வெள்ளியன்று குளோஸிங்கில் இருக்கிறது. இருந்தாலும் டேட்டா வெளியீடுகள் டெக்னிக்கல்களை வென்றுவிடலாம். டேட்டாக்களில் பெரிய மாறுதல் இல்லாதபட்சத்தில் வீக்னஸ் வியாழனன்று நின்றுவிடலாம். வெள்ளியன்று குளோஸிங் பாசிட்டிவ்வாக முடிவடைய வாய்ப்புகள் அதிகம் என்பதால் புதன் கிழமைக்கும் பின்னர் ஷார்ட் சைடு வியாபாரத்தை ஹைரிஸ்க் டிரேடர்கள் தவிர்க்க வேண்டும்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: பெரிய அளவில் திடீர் இறக்கம் வரக்கூடும்!

புதிய டிரேடர்களும்/ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் ஷார்ட் சைடு வியாபாரத்தைத் தவிர்த்து இறக்கத்தில் வரும் சின்னச் சின்ன டெக்னிக்கல் ரெக்கவரிகளில் சிறிய அளவில் லாங் சைடு வியாபாரம் மட்டுமே செய்யலாம்.

அதிக வாலட்டைலிட்டியை எதிர்பார்க்கலாம் என்பதால் எல்லாவகை டிரேடர்களுமே வியாபாரத்தின் அளவினை பாதியாகக் குறைத்துக்கொள்வது நல்லது.

25/04/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்-: ஹெச்டிஎஃப்சி (894.10), ஷ்னைடர் (96), ஹிந்த் சிங்க் (129.95), ஜிஎஸ்பிஎல் (73.40), ஹெச் டி மீடியா (93.45), பிபோகஸ் (29.25), பிரகாஷ் (73.60), டெக்ஸ்மோ பைப்ஸ் (8.30), டிபி ரியாலிட்டி (74.60), யுபிஎல் (230.35), டாடா ஸ்டீல் (426.90)-குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்- கெயில் (379.65), ஓரியன்ட் பேப்பர் (22), கோல் இந்தியா (299.95), எல் அண்ட் டி (1349.90), ஹிந்த் பெட்ரோ (315.10), நெக்லைஃப் (28.25), ஹெச்சிசி (19.40), எம்ஆர்பிஎல் (59.60), டிஷ்மேன் (89.55), அம்புஜா சிமென்ட் (209.05), பிபிசிஎல்(460.65), ஐஓசி (263.55), ஜெயின் இர்ரிகேஷன் (72.20), ஐசிஐசிஐ பேங்க் (1270.50)-நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது):- வாதிலால் இண்டஸ்ட்ரீஸ் (179.30), முத்தூட் ஃபைனான்ஸ் (172.85), சாந்தி கியர் (78.45), ஆயில் கன்ட்ரிட்யூப்லார் (48.65), பென்னார் அலுமினியம் (25.95)  டிரேடர்கள் மத்தியில் பாப்புலர் அல்லாத ஸ்டாக்குகள் பல இவற்றில் இருக்கின்றன. எனவே, குறைந்த எண்ணிக்கையிலும் மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: பெரிய அளவில் திடீர் இறக்கம் வரக்கூடும்!

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): ஐடிசி (343.45), கேசெராசெரா (12), ஐஎன்ஜி வைஸ்யா (557.75)-இதில் லாங் சைடு வியாபாரத்தை முழுமையாகத் தவிருங்கள்.

சற்று பாசிட்டிவ் டிரேண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: டிடிஎம்எல் (9), டிஷ் டிவி (48.40), எம் அண்ட் எம் ஃபைனான்ஸ் (254.50), ஸ்டார் (526.45), அரோபிந்தோ பார்மா (579.25), ஹெச்டி மீடியா (93.45), சென்னை பெட்ரோ (76.95), டிஹெச்எஃப்எல் (243.90), லூபின் (992.30)- இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: (ரிவர்ஸலுக்கு வாட்ச் செய்யலாம்): - கெர்ய்ன் (335), என்டிபிசி (118.50), எலெக்ட் காஸ்ட் (23), சன்பார்மா (622), ஹிந்த் பெட்ரோ (622), சுவென் (84.05), எஸ்ஜேவிஎன் (22.35), ஹெச்சிசி (19.40), பாம்பே டையிங் (63.50), எஸ்கேஎஸ் மைக்ரோ (253.65), டிஷ்மேன் (89.55), எஸ்ஸெல் பேக் (71.25), எஸ்கார்ட்ஸ் (123.80) -இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: கோத்தாரி சுகர் (9.50), ராம்கோ சிமென்ட் (213.20), சத்பாவ் (135.55), இன்ஃப்ராடெல் (211.40), ஹெச்டிஎஃப்சி (894.10), ஷ்னைடர் (96), கெர்ய்ன் (335), ஹிந்த் சிங்க் (129.95), என்டிபிசி (118.50), டிசிஎஸ் (2205.25), ஜிஎஸ்பிஎல் (73.40), அரவிந்த் ரெமடீஸ் (43.45), சிஇஎஸ்சி (488.80), எஸ்எஸ்எல்டீ (193.55), மார்க் (13.40) - தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டுக்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள்-(10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): நேஷனல் அலுமினியம் (40.25), பவர்கிரீட் (105.50), ஓஎன்ஜிசி (320.95), கெயில் (379.65), இன்பி (3175.60), ஓரியன்ட் பேப்பர் (22), சியூபி (58), கோல் இந்தியா (299.95), ஐடிசி(343.45), பிப்பவ் டாக் (47.85), ஐபி செக் (22.55), ஹெச்சி எல்டெக் (1449.40), ஜிவிகேபிஐஎல் (13.10), ஐவிஆர்சிஎல் இன்ஃப்ரா (15), சிப்லா (394.25), டெக் மஹிந்திரா (1804.75)- இவற்றை வியாபாரத்துக்குத் தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: யெஸ் பேங்க் (468.40), யூபிஎல் (230.35), எம்டிஎன்எல் (18.85), ஆயில் கன்ட்ரிட்யூப்லார் (48.65), பஜாஜ் எலெக்ட்ரிக்கல்ஸ் (305.65), மங்களூர் கெமிக்கல் (69.80), 20மைக்ரான்ஸ் (36.05), டெக்ஸ்மோபைப் (8.30), எஃப்எல்எஃப்எல் (80.30), மேக்ஸ்வெல் (21.30), ஹெச்டீமீடியா (93.45), ஷ்னைடர்(96.00)- இவை வியாபார எண்ணிக்கையிலும், விலையிலும் நன்கு அதிகரித்த ஷேர்கள்.

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.

எச்சரிக்கை:  மேலே கொடுக்கப்பட்டுள்ள அத்தனை பங்குகளுமே இந்த வாரத்தில் இருந்த நான்கு டிரேடிங் தினங்களின் டேட்டாக்களைக் கொண்டு கணிக்கப்பட்டவை. எனவே இந்த கணிப்புகள் உறுதியாய் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாது போகலாம். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.