ஸ்பெஷல்
Published:Updated:

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

சே.புகழரசி

 காப்பர்:

கடந்த வாரம் காப்பர் கான்ட்ராக்ட் முடிவடைந்ததை யடுத்து டிரேடர்கள் தங்களது கையில் இருக்கும் ஆர்டர்களை விற்றதாலும், மேலும் காப்பரை அதிக அளவு உபயோகப்படுத்தும் சீனாவில் பொருளாதாரம் தொடர்ந்து மந்தநிலையிலேயே இருப்பதாலும், காப்பரின் விலை குறைந்தே வர்த்தகமானது. மேலும், தற்போது ஓவர் சோல்டு லெவலில் இருப்பதால், இந்த லெவலில் காப்பரை வாங்கலாம்.

பரிந்துரை: நீண்டகாலநோக்கில் வாங்கலாம். ரூ.405 - 409 லெவலில் வாங்கலாம். இலக்கு விலை- ரூ.414 - 420. கட்டாய ஸ்டாப்லாஸ்- ரூ. 401 - 402.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

அலுமினியம்

அலுமினியமும் தற்போது ஓவர் சோல்டு லெவலில் இருப்பதால் வாங்கலாம்.

பரிந்துரை: நீண்ட காலநோக்கில் வாங்கலாம். ரூ.104-107 லெவலில் வாங்கலாம். இலக்குவிலை- ரூ.109-114. ஸ்டாப்லாஸ்- ரூ.102.

ஜிங்க்

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

ஜிங்கை தற்போதுள்ள லெவலில் வாங்கக்கூடாது.  குறைந்த லெவலில் வாங்கலாம். தற்போது ரூ.122 நிலையில் உள்ளது. இது ரூ.118 என்ற லெவலுக்கு வரும்போது வாங்கலாம். ரூ.121 என்ற லெவலில் விற்றுவிட வேண்டும். இதற்கு ஸ்டாப்லாஸாக ரூ.116-ஐ வைத்துக்கொள்ளலாம்.

லெட்

லெட்டை தற்போதுள்ள லெவலில் வர்த்தகம் செய்யாமல் இருப்பது நல்லது. இதேபோல், நிக்கலிலும் வர்த்தகம் செய்யாமல் இருப்பது நல்லது. ஏனெனில், இந்தோனேஷியாவில் ஏற்றுமதியைத் தடைசெய்ததை யடுத்து, நிக்கல் விலை சுமார் ரூ.880 லெவலில் இருந்து, ரூ.1050 வரை சென்றது. ஆக, நிக்கலை தற்போது வாங்காமல் இருப்பது நல்லது. அதேசமயம், விற்காமலும் இருப்பது நல்லது.

தங்கம்!

தொடர்ந்து தங்கத்தின் விலையானது கடந்த வாரம் குறைந்தே வர்த்தகமானது. காரணம், அமெரிக்காவின் மிகப் பெரிய கோல்டு இ.டி.எஃப்-ஆன எஸ்.பி.டி.ஆர் கோல்டு இ.டி.எஃப்-பில் புதிய வெளியேற்றம் அதிகரித்ததே. தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து வெளியாகிவரும் பொருளாதாரம் சார்ந்த குறியீடுகள் சாதகமாக வந்துகொண் டிருப்பதையடுத்து, ஃபெடரல் வங்கி மாதாமாதம் வாங்கும் கடன் பத்திர அளவை குறைக்கலாம் என்று தெரிகிறது. குறிப்பாக, நுகர்வோருக்கான செலவு குறித்த குறியீடு கடந்த நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ளது.

மேலும், முக்கிய நுகர்வோரான சீனாவிலும் தொடர்ந்து பொருளாதாரம் மந்தநிலையில் இருந்து வருவதையடுத்து, தங்கத்தின் தேவையும் தொடர்ந்து குறைந்தே உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து வலுவடைந்த வண்ணம் இருப்பதால், இதனால் வரும்வாரத்தில் தங்கத்தின் விலையானது குறையவே வாய்ப்புகள் அதிகம்.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

கச்சா எண்ணெய்!

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் இருப்பு குறித்த குறியீடு கடந்த வாரம் வெளியானது. இதன்படி, அமெரிக்காவில் கச்சா எண்ணெய் இருப்பு இதுவரை இல்லாத அளவு அதிகரித் திருக்கிறது.

மேலும், லிபியாவில் தற்போது ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் இரண்டாவது முக்கிய நுகர்வோரான சீனாவில் தொழில் துறை  ஏற்றுமதி ஆர்டர் குறைந்துள்ளது. அதிகளவிலான இருப்பு மற்றும் லிபியா ஏற்றுமதி அதிகரிப்பு போன்ற காரணங்களால் வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்புகள் அதிகம்.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

இயற்கை எரிவாயு!

இயற்கை எரிவாயு இருப்பு எதிர்பார்க்கப் பட்டதைவிட அதிகரித்ததையடுத்து, கடந்த வாரம் இயற்கை எரிவாயு விலைகுறைந்தே வர்த்தகமானது. மேலும், அமெரிக்காவில் அடுத்த 15 நாட்களுக்கு மிதமான தட்பவெட்ப நிலை இருக்கும் என்பதால், இயற்கை எரிவாயுவுக்கான தேவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)