ஸ்பெஷல்
Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திசை தெரியாத நிலை வரலாம்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திசை தெரியாத நிலை வரலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

திடீர் இறக்கம் வரக்கூடும் என்றும்; வெள்ளியன்று குளோஸிங் பாசிட்டிவ்வாக முடிவடைய வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஷார்ட் சைடு வியாபாரத்தை ஹைரிஸ்க் டிரேடர்கள் தவிர்க்கவேண்டும் என்றும் சொல்லியிருந்தோம்.

நான்கே டிரேடிங் தினங்களைக்கொண்ட வாரத்தில் மூன்று நாட்கள் கணிசமான அளவு இறங்கியும், வெள்ளியன்று கிட்டத்தட்ட இரண்டு பாயின்ட்கள் இறங்கியும் வாராந்திர அளவில் கிட்டத்தட்ட 87 பாயின்ட் இறக்கத்தில் முடிவடைந்தது நிஃப்டி.

வரும் வாரத்தில் திங்களன்று ஹெச்எஸ்பிசி இந்தியா சர்வீசஸ் பிஎம்ஐ டேட்டாவும்,  வெள்ளியன்று ஃபாரெக்ஸ் ரிசர்வ் டேட்டாவும் வெளிவர இருக்கிறது. அமெரிக்க டேட்டாக்களில் திங்களன்று ஐஎஸ்எம் - நான் மேனுபேக்ஸரிங் பிஎம்ஐ டேட்டாவும், செவ்வாயன்று பேலன்ஸ் ஆஃப் டிரேடும், வியாழனன்று கன்ஸ்யூமர் கிரெடிட் டேட்டாவும்  ஓரளவு சந்தையைப் பாதிக்கக்கூடிய முக்கிய டேட்டாக்களாகும்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திசை தெரியாத நிலை வரலாம்!

தேர்தல் முடிவுகளுக்கு ஒன்பது டிரேடிங் நாட்களே இருப்பதால், சிலகாலத்துக்கு டைரக்ஷன்லெஸ் நிலை வந்துவிடக்கூடும். சமீபத்தில் டைரக்ஷன்லெஸ் நிலைமை வரும்போது ஓப்பனிங்கில் பாசிட்டிவ் கேப்போ அல்லது நெகட்டிவ் கேப்போ வந்து பின்னர் டைரக்ஷன்லெஸ்ஸாக சந்தை நடக்கின்றது என்பதை டிரேடர்கள் கவனித்திருப்பீர்கள். இந்த நிலைமை மீண்டும் வரலாம். அப்படி வரும்போது ஓப்பனிங் கேப்பை நம்பி பொசிஷன்களை எடுத்தால் நாள் முழுவதற்கும் பொசிஷனை கைவசம் வைத்திருந்து பின்னர் வாய்ப்பு கிடைக்காவிட்டால் நஷ்டத்தை புக்செய்ய வேண்டியிருக்கும்.

எனவே, வரும் வாரத்தில் ஓப்பனிங்கில் கேப் வந்தால் ஒரு மணிநேரம் தாமதித்து பின்னரே டிரேடிங்கில் இறங்க வேண்டும். இது ஹைரிஸ்க் டிரேடர்களுக்கும் பொருந்தும்.

புதிய டிரேடர்களும், ஹைரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்களும் சிறிய அளவில் கூட ஓவர் நைட் பொசிஷன்களும், ஃப்யூச்சர்ஸ் பொசிஷன்களும் வைத்துக்கொள்ளக் கூடாத நேரமிது. கவனத்துடன் செயல்பட்டால் மட்டுமே உங்களுடைய டிரேடிங் கேப்பிட்டலை காப்பாற்ற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

02/05/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்-: ஹெச்சிசி(20.35), சுஸ்லான்(13.15), பிஎஃப்சி(187.30), ஹைடல் பெர்க் (47.10), என்எம்டிசி(152.20), அம்டெக் ஆட்டோ(184.85), ஜிபிபிஎல் (85.85), போலாரிஸ் (193.05), ஜிஎஸ்பிஎல்(73), டைம்டெக்னோ (40.30), கோல் இந்தியா (295.30), ஆர்இசி லிட் (239.65), மாரிக்கோ (217.40), மெர்கர்டர் (32.10), மங்களூர் ஃபெர்டிலைசர்(72.70), ஹெச்சிஎல் டெக்(1424.75) - குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திசை தெரியாத நிலை வரலாம்!

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்- வொக்பார்மா (764.85), ஆந்திரா பேங்க்(66.45), பேங்க் ஆஃப் பரோடா(801.25), ஜஸ்ட் டயல் (1102.80), ஸ்பார்க் (170.45), டிரைடன்ட்(17.95),  என்பிசிசி (210.35) - நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது):- அஸ்ட்ரா மைக்ரோ (77.95), டிவிஎஸ் மோட்டார் (101.30), சென்ச்சுரிப்ளை(40.70), அரோபிந்தோ பார்மா (601.15), ஓஎன்ஜிசி (329.30), ஹெச்எஸ்ஐஎல் (168.85), எஃப்எல்எஃப்எல்(97),  மாரிக்கோ(217.40), ஆர்த்தி ட்ரக் (412.75), ஆர்த்தி இண்ட்(138.50) -  டிரேடர்கள் மத்தியில் பாப்புலர் அல்லாத ஸ்டாக்குகள் சில இவற்றில் இருக்கின்றன. எனவே, குறைந்த எண்ணிக்கையிலும் மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): என்டிபிசி (114.45), லஷ்மி ஈஎஃப்எல் (21.90) - இதில் லாங் சைடு வியாபாரத்தை முழுமையாகத் தவிருங்கள்.

சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்:ஹெசிசி(20.35), ஹைடல் பெர்க் (47.10), டைம்டெக்னோ (40.30), எஃப்எல்எப்எல் (97), ஹிந்த் பெட்ரோ (329.45), மாரிக்கோ (217.40), ஓரியன்ட் சிமென்ட் (49.80)- இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளைத் தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள் : (ரிவர்ஸலுக்கு வாட்ச் செய்யலாம்): -பார்தி ஏர்டெல் (325.60), டிஷ் டிவி (46.30), ஐடிசி (340.25), ஐசிஐசிஐ பேங்க் (1252.40), பின் கேபிள்ஸ்(136.60), பேங்க் ஆஃப் பரோடா(801.25), ஹெச்டிஎஃப்சி பேங்க்(717.10), பிஎன்பி(776.05), கலிந்தீ(72.45), டிவிஸ் லேப்(1379.25)-இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: ஹெச்டிஐஎல் (70.15), ஹெச்சிசி (20.35), யூபிஎல் (279.95), ஐஓபி (60.10), பிஹெச்இஎல்(180.35), பிஎஃப்எஸ்(18.80), அஸ்ட்ரா மைக்ரோ (77.95), டிவிஎஸ் மோட்டார் (101.30), என்ஹெச்பிசி (19.15), டாடா ஸ்டீல் (390.05), கெய்ர்ன்(335), ஜிண்டால் ஸ்டீல் (239), டாடா பவர்(80.15), ஐடிபிஐ(69.10), செஞ்சுரிப்ளை(40.70), வொக் பார்மா (764.85), ரிலையன்ஸ் கேப்பிட்டல் (349.20), பார்தி ஏர்டெல்(325.60), பிஎஃப்சி(187.30), ஹைடல் பெர்க் (47.10), அரோபிந்தோ பார்மா (601.15), என்எம்டிசி (152.20), ஹெச்டிஎஃப்சி(910.95), அம்டெக் ஆட்டோ(184.85), பிடிசி (67.50), மாதர்சன் சுமி (263.95), இசட்இஇஎல்(269.50),  பெட்ரோநெட்(145.15), டாடா ஸ்பாஞ்ச் (601.80), ஜிபிபிஎல் (85.85) - தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டிற்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள்-(10நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): சுஸ்லான்(13.40), எஃப்ஆர்எல்(139.95), ஐபி ரியல் எஸ்டேட் (63.70), ஜிஎம்ஆர் இன்ஃப்ரா (25.15), ஹிண்டால்கோ (131.65), அதானி போர்ட்ஸ் (185.65), ஜெயின் இர்ரிக்கேஷன் (83.05), அதானிபவர்(48.05), ஹெச்சிஎல் இன்சிஸ்(45.45), ஐடிஎஃப்சி(110.55), ஐஎஃப்சிஐ (25.50), எஸ்எஸ்எல்டீ(180.55), ஐடியா(134.20), எல் அண்ட் டி எஃப்ஹெச்(63.75), செயில்(66.25), அசோக் லேலாண்ட்(22.50), ஜேபி பவர்(14.70)- இவற்றை வியாபாரத்திற்கு தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: ஹெச்சிசி (20.35), எஃப்ஆர்எல்(139.95),  பிஎஃப்எஸ்(18.80), அஸ்ட்ரா மைக்ரோ(77.95), டிவிஎஸ் மோட்டார்(101.30), செஞ்சுரிப்ளை (40.70),  ஹைடல் பெர்க்(47.10), அம்டெக் ஆட்டோ(184.85), டாடா ஸ்பாஞ்ச்(601.80), ஹெச்எஸ்ஐஎல்(168.85), டைம் டெக்னோ(40.30), யுனைடெட் பேங்க்(33.40), எஃப்எல்எஃப்எல்(97), மாரிக்கோ(217.40), அல்கெமிஸ்ட் (63.75), பென்னார் அலுமினியம் (30.60), ஆர்த்தி ட்ரக்(412.75) -இவை வியாபார எண்ணிக்கையிலும், விலையிலும் நன்கு அதிகரித்த ஷேர்கள்.

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.

எச்சரிக்கை: டெக்னிக்கல் இண்டிக்கேட்டர்கள் மற்றும் டேட்டாக்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள அத்தனை பங்குகளுமே இந்த வாரத்தில் இருந்த நான்கு டிரேடிங் தினங்களின் டேட்டாக்களைக் கொண்டு கணிக்கப்பட்டவை. எனவே, இந்த கணிப்புகள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.