Published:Updated:

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

சே.புகழரசி

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

சே.புகழரசி

Published:Updated:
கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

கச்சா எண்ணெய்!

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லிபியாவில் முக்கிய ஏற்றுமதி துறைமுகங்களில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய, புதிய பிரதம மந்திரி ஒத்துழைக்காததை அடுத்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதை யடுத்து அதிக விலையிறக்கம் தடுக்கப்பட்டது. மேலும், அமெரிக்காவில் வெளியாகி வரும் குறியீடுகள், சாதகமாக இருப்பதால், அங்கு பொருளாதாரம் மேம்பட்டு வருவது தெரிகிறது. கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து வெளியான கச்சா எண்ணெய் இருப்பு குறித்த குறியீடு இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் அதிகளவு பயன் படுத்துவதில் இரண்டாவது நாடான சீனாவில் தொடர்ந்து பொருளாதார மந்தநிலை நீடித்து வருவதையடுத்து, கச்சா எண்ணெய் தேவை குறையலாம். இதையடுத்து வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை பக்கவாட்டில் வர்த்தகமாகவே வாய்ப்புகள் அதிகம். மேலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் விலை மேலும் குறைய வாய்ப்புகள் அதிகம்.

வரும் வாரத்தில் ரெசிஸ்டன்ஸ் லெவல் ரூ.6,075 - 6,200. சப்போர்ட் லெவல் ரூ.5,950 - 5,750.''

தங்கம்!

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

அமெரிக்கப் பொருளாதாரத் தில் ஏற்பட்டுவரும் முன்னேற்றத்தால், நடப்பு 2014-15ம் நிதியாண்டில் சர்வதேச சந்தைகளில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 1,150 - 1,250 டாலராகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 1,300 டாலராக உள்ளது. இதுவே, இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.25,500 - 27,500 வரை குறைய வாய்ப்பு அதிகம். இந்தியாவில் தற்போதுள்ள தங்கம் இறக்குமதி மீதுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் இந்தியாவில் தங்கம் விலை குறைய வாய்ப்புண்டு என ஃபிட்ச்  சொல்லியிருக்கிறது. 2014-ல் சீனாவில் தங்கத்துக்கான தேவை குறையலாம் எனவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்கப் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுவருவதும்,  ஐரோப்பிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் தற்போது வளர்ச்சிகாணத் தொடங்கி உள்ளது. தவிர, தற்போது இதர நாட்டு கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் வெளிமதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, டாலரில் முதலீடு அதிகரிக்கலாம். அதேசமயம், உலக அளவில் பணவீக்கம் குறைந்துள்ளதால் தங்கத்தில் முதலீடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்டல்ஸ் ஃபோகஸ் என்கிற நிறுவனம், சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1,100 டாலராகக் குறையும் என்று சொல்லியிருக்கிறது. இதையடுத்து, வரும் வாரத்தில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புகள் அதிகம். சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பும் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம்.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

வெள்ளி!

கடந்த வாரம் தங்கத்தின் விலை அதிகரித்தாலும், வெள்ளியின் விலை சுமார் 1% குறைந்தே வர்த்தகமானது. மேலும், தொடர்ந்து சீனாவின் பொருளாதாரமும் மந்தநிலை யில் இருப்பதையடுத்து வெள்ளி யின் தேவையும் குறையும் என்றும் தெரிகிறது.  வரும் வாரத்தில் வெள்ளியின் விலை யும் குறையவே வாய்ப்புகள் அதிகம்.

அடிப்படை உலோகங்கள்!

காப்பர்: அமெரிக்காவில் இருந்து வெளியான தொழிலாளர் சந்தை குறித்த குறியீடு சாதகமாக வந்ததை யடுத்தும், லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் காப்பர் இருப்பும் குறைவாக இருப்பதாலும் காப்பரின் விலை அதிகரித்தே வர்த்தகமானது. மேலும்,  ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவிவரும் பிரச்னையில், படைகளை வாபஸ் பெறுவது பற்றி ரஷ்யா முதன்முறையாக பேசியது காப்பரின் விலையேற்றத்துக்கு வழிவகுத்தது. ஆனால், சீனாவில் தொடர்ந்து பொருளாதாரம் மந்தநிலையிலேயே இருந்து வருவதையடுத்து காப்பரின் தேவை குறையலாம் எனவும், லண்டனிலிருந்து வெளியாகும் உற்பத்தி குறித்த குறியீடு குறையலாம் எனவும் மதிப்பிடப் பட்டுள்ளது. இதையடுத்து வரும் வாரத்தில் காப்பரின் விலை குறைய வாய்ப்பு அதிகம். இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில் மேலும் விலை குறையலாம்.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

நிக்கல்: நிக்கல் கடந்த வியாழக்கிழமையன்று சுமார் 6% விலை அதிகரித்து வர்த்தகமானது. எப்போது இந்தோனேஷியா ஏற்றுமதியை தடை செய்ததோ, அதிலிருந்தே நிக்கல் விலை அதிகரிக்க ஆரம்பித்தது. மேலும், முக்கிய நிக்கல் உற்பத்தியாளரான ரஷ்யாவில் நிலவிவந்த பிரச்னை காரணமாக உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. இதனால் வரும் வாரத்தில் நிக்கல் விலை உயர வாய்ப்புண்டு.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

இயற்கை எரிவாயு!

அமெரிக்காவிலிருந்து கடந்த புதன்கிழமையன்று வெளியான இயற்கை எரிவாயு குறித்த குறியீட்டின்படி, எரிவாயு இருப்பு அதிகரித்ததையடுத்து விலை குறைந்தே வர்த்தகமானது. அமெரிக்காவின் மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு, தென் பகுதிகளில் வெப்பநிலை சராசரி வெப்பநிலைக்கும் மேலே நிலவி வருவதையடுத்து இயற்கை எரிவாயு தேவை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism