Published:Updated:

கம்பெனி ஸ்கேன்

இன்ஃப்னிட் கம்ப்யூட்டர் சொல்யூஷன்ஸ் (இந்தியா) லிமிடெட்!

கம்பெனி ஸ்கேன்

இன்ஃப்னிட் கம்ப்யூட்டர் சொல்யூஷன்ஸ் (இந்தியா) லிமிடெட்!

Published:Updated:

உலகத்தின் இன்றைய பொருளாதாரச் சூழலில் பல தொழில் நிறுவனங்கள், தங்களுடைய பிராசஸ்களை முன்னேற்றவும், நடப்பு செலவைக் குறைக்கவும், பிசினஸ் ரீதியாகத் தங்கள் தகுதிகளை உயர்த்திக்கொள்ளவும் உதவும் ஒரு பார்ட்னரை தேடுகின்றன.  

இந்தவகைத் தேடுதல்களுக்கு ஈடுதந்து உலகளாவிய அளவில் டெலிகாம், ஹெல்த்கேர், எனர்ஜி மற்றும் யுட்டிலிட்டி, மீடியா மற்றும் கன்டன்ட், பேங்கிங் மற்றும் ஃபைனான்ஸ் தொழில்களில் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களுக்கு உதவும் நிறுவனமான இன்ஃப்னிட் கம்ப்யூட்டர் சொல்யூஷன்ஸ் (இந்தியா) லிமிடெட் எனும் நிறுவனத்தையே இந்த வார கம்பெனி ஸ்கேனிங்கில் நாம் பார்க்கப் போகிறோம்.

தொழில் எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் சர்வீஸ் துறையில் இருக்கும் ஒரு சிக்கல் என்னவென்றால், வாடிக்கையாளர்களுக்கு ஏற்றாற்போல் சாஃப்ட்வேரை வடிவமைத்துக் கொடுக்க வேண்டும்.

கம்பெனி ஸ்கேன்

இதை புராஜெக்ட் வழியில் செயல்படும் நிறுவனங்கள் எனலாம். இதுமாதிரியான நிறுவனங்கள் தொடர்ந்து பிசினஸை திரட்டுவதுடன், பணியாளர்களையும் தொடர்ந்து  நியமிக்க வேண்டும். இது சாஃப்ட்வேர் சர்வீஸ் கம்பெனிகளுக்கு ஒரு தலைவலி எனலாம்.

கம்ப்யூட்டர் துறையில் மற்றுமொரு வகையான தொழில் இருக்கிறது. புராடக்ட் கம்பெனிகள் என அழைக்கப் படும் இந்த நிறுவனங்கள், பல்வேறு தொழில்களுக்கு உதவும் வகையில் சாஃப்ட்வேர்களை எழுதி விற்பவை. இந்தவகை

நிறுவனங்களுக்குப் பணியாளர் கள் சாஃப்ட்வேர் சர்வீஸ் நிறுவனம்போல அதிகமாகத் தேவைப்பட மாட்டார்கள் என்பதால்,  இந்தவகை கம்பெனிகள்    நல்லதொரு அனுகூலத்துடன் திகழ்கிறது.  

மேலும், விற்கப்பட்ட சாஃப்ட்வேர்களுக்கு வரும் பராமரிப்புத் தொகையே சம்பளத்துக்குப் போதுமானதாக இருக்கும். எனவே, நஷ்டம் வரும் வாய்ப்புகள் சற்றே குறைவுதான்.  சாஃப்ட்வேர் துறையில் இந்த வகை நிறுவனங்கள் கொஞ்சம் மாத்தியோசிக்கும் வகையறா நிறுவனங்கள் என்றால் அது மிகையாகாது.

கம்பெனி ஸ்கேன்

  கம்பெனி எப்படி?

1999-ம் ஆண்டு புதுடெல்லி யில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், ஆரம்பம் முதலேயே சாஃப்ட்வேர் சர்வீசஸ் துறையில் கான்ட்ராக்ட்களைப் பெறுவது மற்றும் புராஜெக்ட் மட்டுமே தொழில் என்றில்லாமல் புராடக்ட் டெவலப்மென்ட் என்பதையும் கோட்பாடாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தது குறிப்பிடத்தக்க ஒருவிஷயம்.

புராஜெக்ட் வருமானம் இன்ஃப்னிட் கம்ப்யூட்டர் நிறுவனத்துக்குக் கணிசமான அளவு இருந்தபோதிலும், கடந்த சில ஆண்டுகளாகக் கணிசமான அளவுக்கு புராடக்ட் வருமானத்தை அதிகரித்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஏடீ அண்ட் டீ, எரிக்ஸன், ஐபிஎம், பேனாசோனிக், வெரிசோன், மோட்டரோலா, நோக்கியா, ஹூவெய், வெஸ்டர்ன்யூனியன் போன்ற ஃபார்ச்சுன் 500 நிறுவனங்களின் கான்ட்ராக்ட்டை பெறுவதி லேயே தொடர்ந்து குறிவைத்துச் செயல்பட்டுவந்தது இன்ஃப்னிட் கம்ப்யூட்டர்.

சின்னச் சின்னக் கான்ட்ராக்ட்களைத் தவிர்த்து பெரிய நிறுவனங்களின் பெரிய கான்ட்ராக்ட்டை பெறுவதில் முழுக்கவனத்தையும் தொடர்ந்து செலுத்திவந்துள்ளது இந்த நிறுவனம். ஏறக்குறைய 99 சதவிகித அளவுக்கான வியாபாரம் ஏற்கெனவே ஆர்டர் தந்த நிறுவனங்களிடம் இருந்தே  கிடைக்கிறது.

ஆரம்பித்து ஏறத்தாழ 15 வருடங்கள் நிறைவுற்ற இந்த நிறுவனத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக பெரிய பல ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் வாடிக்கையாள ராக இருந்து வருகின்றன.

ஐ.டி சர்வீஸ் துறையில் இருந்து வெளியேவந்து ஒரு புராடக்ட் நிறுவனமாக மாற வேண்டும் என்பதை தொடர்ந்து தனது கொள்கையாக வைத்திருக்கும் இந்த நிறுவனம் தற்சமயம் ஏறத்தாழ 30 சதவிகித அளவு வருமானத்தை புராடக்ட் டிவிஷனில் இருந்தே பெற்று வருகிறது.

கம்பெனி ஸ்கேன்

இந்த வருமானத்தின் அளவை 50 சதவிகிதத்துக்கு  உயர்த்துவது என நிர்வாகம் திட்டங்களைத் தீட்டிவருகிறது. தற்சமயம் 12 புராடக்ட்களைத் தன்வசம் வைத்துள்ளது இந்த நிறுவனம். இவற்றில் பெரும்பான்மையானவை டெலிகாம் நிறுவனங்களுக்காகத் தயாரிக்கப்பட்டவை.

ரிஸ்க்குகள் என்னென்ன?

டெக்னாலஜி என்றாலே தொடர் மாறுதல்கள்தான். அதிலும் புராடக்ட் கம்பெனி என்றால் இன்னமும் மாறுதல் களையும்  புத்தாக்கத்தையும் (மிஸீஸீஷீஸ்ணீtவீஷீஸீ) அடிப்படையில் கொண்டிருக்க வேண்டும். தொடர்ந்து இவை மூன்றையும் தக்கவைத்துகொள்வது பெரியதொரு சவாலாகவே இருக்கும்.

இரண்டாவது ரிஸ்க் என்னவெனில்,  பெரும்பான்மையான பிசினஸ் அமெரிக்காவிலிருந்தும், அதிலும் அறுதிப்பெரும்பான்மை பிசினஸ் மிகப் பெரிதான ஏறத்தாழ 10 நிறுவனங்களிடம் இருந்துமே வருகிறது.

என்னதான் தொடர்ந்து வாடிக்கையாளராக இருந்தாலும் பெரும் பணம் சில வாடிக்கையாளர்களிடம் இருந்து மட்டுமே வருகிறது என்றால், அந்த வாடிக்கையாளர்களுடன் பிரச்னை ஏதும் வந்தால் லாபம் பாதிக்கப்படலாம். அதேபோல், அமெரிக்கப் பொருளாதாரம் சிக்கல்களுக்கு உட்பட்டால் இன்ஃப்னிட்டின் வருமானமும் பாதிக்கப்படலாம்.

ஏன் முதலீட்டுக்கு பரிசீலனை செய்யலாம்?

நீண்டகாலமாக இருந்து ஆதரவு அளித்துவரும் பெரிய வாடிக்கையாளர்களின் பட்டியல், வேகமாக அதிகரித்து வரும் புராடக்ட் கம்பெனி என்ற நிலைமை மற்றும் தொடர்ந்து கிடைக்கும் கணிசமான லாபம் போன்றவையே இன்ஃப்னிட் கம்ப்யூட்டர் சொல்யூஷன்ஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தை முதலீட்டுக்காக பரிசீலனை செய்யச் செய்கிறது எனலாம்.

சாஃப்ட்வேர் துறை என்பதால் ரிஸ்க்கை குறைக்கும் பொருட்டு சாதாரணச் சூழலில் இந்த நிறுவனத்தின் பங்கை வாங்காமல் ஓர் அசாதாரணச் சூழலில் சந்தை நல்லதொரு இறக்கத்தைச் சந்திக்கும்போது குறைந்த அளவில் 3 - 5 ஆண்டு கால அளவுக்கான முதலீடாக இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம்.

குறிப்பு: இந்த நிறுவனத்தின் பைபேக் திட்டமொன்று சமீபத்தில் முடிவுக்கு வருகிறது என்பதையும் முதலீட்டாளர்கள் கருத்தில்கொண்டே தங்கள் முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும்!

- நாணயம் ஸ்கேனர்

(குறிப்பு: இந்தப் விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism